Friday, August 30, 2013

பேஸ்புக்கும் பெண்களும் -(பாகம்-5)

பேஸ்புக்கால் தற்கொலை செய்து கொண்ட பெண் !!!

( இது ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை...)

அனு மற்றும் ரமேஷ், இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக கை கோர்த்து  ஒரு மாதமும்  10 நாட்களும் மட்டுமே கழிந்திருந்தது .,இருவருமே படித்தவர்கள், நவயுக ஆண் பெண் பெரும்பான்மையானவர்கள் அனைவருக்கும் இருக்கும் அந்த ஆன்லைன் அக்கவுன்ட் அவர்கள் இருவருக்குமே இருந்தது. ,கணவன் ரமேஷ் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார்  நிறுவனத்தில் இஞ்சினியர், இவள்  திருமணத்திற்கு முன்பு ஈ.சி.ஆர் ரோட்டில் உள்ள தனியார் கம்பேனியில் சூப்பர்வைசராக பணி செய்தவள், திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்வதை நிறுத்திக்கொண்டாள் !!

அந்த சம்பவம் நடக்கும் வரையில் அவர்களது வாழ்க்கை சுமூகமாகத்தான் சென்று கொண்டிருந்தது
ஆணாதிக்கம் என்கிற விசயத்தின் நாகரிக வடிவமாக சில ஆண்கள் தங்கள் மனைவியின் ஆன்லைன் அக்கவுன்ட் அத்தனைக்குமான பாஸ்வேர்டை வாங்கி வைத்துக்கொள்ளும் நடைமுறை தற்காலத்தில் வழக்கத்தில் உள்ளது,ரமேஷ் தன் மனைவியின் பேஸ்புக் பாஸ்வேர்ட் மற்றும் மெயில் பாஸ்வேர்ட் போன்றவைகளை அறிந்து வைத்திருந்தான்,அவ்வப்போது அவள் ஆன்லைன் கணக்குகளில் நுழைந்து அவளை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான் !
அனுவின் பேஸ்புக் அக்கவுன்டிற்குள் நுழைந்து அவளது டைம்லைனை பார்வையால் மேய்ந்து கொண்டிருந்தான் ரமேஷ்

வளரா மனம் கொண்ட வளர்ந்த ஆண்கள் பட்டியலில் ரமேஷ் பெயரும் இருந்திருக்க வேண்டும் ,அன்று அவன் அனுவின் பேஸ்புக் டைம்லைனில் அந்த புகைப்படத்தை பார்த்தபோது  அவன் கண்களில் அப்படி ஒரு குரூரம், மனம் முழுக்க கோப நெருப்பு, சந்தேக ராட்சசனிடம் சரண் புகுந்தான் ரமேஷ்.

அந்த புகைப்படத்தில் அனு ஒரு ஆண் நன்பருடன் இணைந்து சிரித்துக்கொண்டிருந்தாள்...

ரமேஷ் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்தான் .

வீடு திரும்பிய ரமேஷ் அனுவிடம் அந்த புகைப்படத்தை காட்டி விசாரிக்கிறான் !!

ரமேஷ்: யாருடி இவன் ??

அனு     : இவரு எங்க ஆபீஸ்ல என் கூட வேலை பாத்தவர்

ர: ஆபீஸ்ல வேல பாத்தவரா? என்னடி அவரு

அ: இல்லைங்க அவரு எங்க  ஹெட் சூபர்வைசர்

ர: கூட வேலை பாக்குறவன் னா கூட போயி ஒரசிட்டு நிப்பியா

அ: இல்லைங்க எங்க ஆபிஸ்ல பங்க்சன்-அப்ப எடுத்த போட்டோ அதான் எல்லாரும் சேர்ந்து நின்னு போட்டோ எடுத்துக்கிட்டோம் !

ர:எல்லோரும் சேர்ந்து நின்னு எடுத்தீங்க சரி, அதென்ன இவன் கூட மட்டும் தனியா சேர்ந்து ....ம்ம்ம்ம் சொல்டி

அ: அவர் என் ஃப்ரன்ட் ங்க !! அதான் 

ர: ஃப்ரண்ட் னா... *****

அ:  இத பாருங்க இப்டி எல்லாம் பேசாதீங்க..

ர: அப்டி தான்டி பேசுவேன் **** ****

அ:  ...(அழத் துவங்குகிறாள் அனு)

இந்த விவாதத்திற்கு பிறகு ரமேஷ் அனுவின் அம்மா மற்றும் அப்பாவிற்கு போன் செய்து அவர்கள் மகள் பற்றி தவறாக கூறி வைக்கிறான்.

ஆவடி அருகிலுள்ள அனுவின் தாத்தா வீட்டில் சமரச பேச்சுவார்த்தை என்கிற பெயரில் சண்டையை துவங்கி வைக்கிறான் ரமேஷ் !! அனு அழுவதை தவிர எதுவும் செய்ய முடியாமல் அழுதுகொண்டே இருக்கிறாள்.

யார் சொல்லும் சமாதானத்தையும் கேட்க தயாராய் இல்லாத ரமேஷ் அனுவை திட்டியபடியே இருக்கிறான். "இனிமே இவ கூட ஒரு நிமிசம் கூட என்னால வாழ முடியாது..."

எல்லோரும் சேர்ந்து சமாதானம் பேசி அனுவை அவனுடன் அனுப்பி வைக்கிறார்கள்..

அன்று இரவு...

அவள் மனம் முழுக்க ஆயிரமாயிரம் கேள்விகள், ஒரு பெண்ணுக்கு ஆண் நன்பர்கள் இருப்பது தவறா?, அலுவலகத்தில் கூட வேலை செய்யும் ஒருவருடன் சேர்ந்து படம் எடுத்துக்கொள்வது தவறா?...
அழுகைக்குள் தன்னை அழுத்திக்கொண்டு  கண்ணீரை கன்னத்தில் வழித்துக்கொண்டு சுவரில் சாய்ந்து அமர்ந்திருக்கிறாள் அனு..

அடுத்தநாள் காலையில் நீயூஸ் பேப்பரில் இப்படி ஒரு செய்தி வெளியாகி இருந்தது!!



இது போன்ற பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி... அடுத்தப்பதிவில் சொல்கிறேன்...

.முந்தைய பதிவுகளை வாசிக்க தலைப்பை க்ளிக் செய்யுங்கள்                                                           
1. பாகம்-1 பாதுகாப்பு அடிப்படைகள்
2.பாகம்-2  Sharing செய்யும் போது கவனிக்க வேண்டியவை
3.பாகம்-3  பேஸ்புக்கில் உங்கள் படங்கள் திருடப்படுகினறன
4.பாகம்-4  நன்பர்கள் ஜாக்கிரதை

வாசகர்களின் கேள்விகள், சந்தேகங்கள்,கருத்துக்கள்,தகவல்கள் வரவேற்க படுகின்றன ., vijayandurairaj30@gmail.com என்ற முகவரிக்கு மெயிலாகவோ, அல்லது கமென்ட் பெட்டியிலோ கேளுங்கள்

 

Post Comment

Wednesday, August 28, 2013

முதல் கணினி அனுபவங்கள் (ரிலே ரேஸ் )


ஒரு குட்டி அறிமுகம்:

சில தினங்களுக்கு முன்  பதிவுலகில் "எனது கணினி அனுபங்கள் " என்கிற தலைப்பில் தங்களின் கன்னி கணினி அனுபவங்களை பத்தி பதிவெழுத சொல்லி பதிவர்கள் தங்களுக்குள் ஒரு ரிலே ரேஸ் நடத்தி வருவது யாவரும் அறிந்ததே!

இந்த ரிலே ரேஸ் 

ராஜி அக்கா -->  (துவக்கி வைத்தவர்)
தமிழ்வாசி பிரகாஷ் அண்ணன்  --->                                                                       
நாஞ்சில் மனோ அண்ணன்---> 
கே.ஆர்.விஜயன் அண்ணன் --->
செல்வி அக்கா --->
ஸ்கூல் பையன் சரவணன் சார் 


என்று பயணப்பட்ட இந்த ரேஸில் நம்ம ஸ்.பை சரவணன் சார் 




இவர்களுடன் என்னையும் எழுத சொல்லி அழைப்பு விடுத்திருந்தார், ஒரு மாதம் ஆகிவிட்டது அழைப்பு வந்து !!

இந்த ரிலே ரேஸில் நானும் பங்கேற்பதில் மகிழ்ச்சி !! 

எனது முதல் கணினி அனுபவம்:

பள்ளிக்கால கணினி அனுபவம்

ஆரம்ப பள்ளி படிப்பு ஆங்கில வழியில் படித்த காரணத்தால் சிறு வயதிலேயே கம்ப்யூட்டரை புத்தகத்தில் பார்த்திருந்தேன் , கன்னி கணினி என் கண்ணில் பட்டபோது எனக்கு 8 வயது, எங்கள் பள்ளி ஆபிஸ் ரூமில் இருந்த அதை நான் டி.வி. பெட்டி என்றுதான் அதுவரையில் நினைத்திருந்தேன்., 
நான்காம் வகுப்பிலிருந்து  எங்கள் பள்ளியில் கம்ப்யூட்டர் பிராக்டிக்கல் என்று ஒரு பாடவேலை இருந்தது, அப்படி ஒரு வகுப்பின் போது ஒட்டு மொத்த வகுப்பையும் (எங்க க்ளாஸ்-ல மொத்தம் 10 பேரு) கூட்டமாக கூட்டிசென்று அந்த ஒற்றை கணினி முன் அமரவைத்தனர்.முதன்முதலில் எனக்கு அறிமுகமான கணினி அதுதான்.

(கருப்பு வெள்ளை மானிட்டர், MS-DOS ஆபரேட்டிங்க் சிஸ்டம்,எந்த தகவல் வேண்டுமானாலும் தட்டச்சு மூலம் தான் கேட்க வேண்டும் ,ஐகான், க்ளிக் போன்ற வின்டோ தனமான கணினி கிடையாது அது. மவுஸ் என்ற ஒரு உறுப்பே அந்த கணினியில் இல்லை  ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு கட்டளைகள், )

எங்கள் ஆசிரியர் கம்ப்யூட்டர் பிராக்டிக்கல் வகுப்பில் எங்களுக்கு கம்ப்யூட்டர் பற்றி எதுவும் சொல்லித்தர வில்லை (ரொம்ப நல்லதா போச்சுங்க !) , பிளாப்பி டிஸ்கை செருகி, விசைப்பலகையில் ஏதேதோ தட்டி "கார்-ரேஸ்", "டேஞ்சரஸ் டேவ்"  போன்ற விளையாட்டுக்களை வைத்து தருவார்., ஒவ்வொருவராக விளையாட ஆரம்பிக்க , க்ளாஸ் முடிய சரியாக இருக்கும் ! ஆனால் மவுஸ் கூட இல்லாத அந்த கணினிக்கு எங்கள் மத்தியில் மவுசு ரொம்ப அதிகம் போட்டி போட்டு கேம் விளையாடுவோம் !

விளையாட்டுக்கருவி

கணினி என்பது ஒருவகை விளையாட்டு சாதனம் போல என்றுதான் என் அப்போதைய அறிவு அடையாளம் காட்டியது !

ஆறாம் வகுப்பிற்கு பிறகு தமிழ் மீடிய பள்ளிக்கு தாவிய காரணத்தால் அதன்பிறகு கணினிக்கும் எனக்கும் சுத்தமாக எந்தவித தொடர்பும்  இல்லை, 

10- ஆம் வகுப்பு பள்ளி விடுமுறையில் எங்கள் ஊரில் இலவசமாக கணினி கற்றுக்கொடுத்த ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியில் Word, Excel,Powerpoint,Paint போன்ற வைகளை பயன்படுத்தும் வழிமுறையும், அடிப்படை கணினி அறிவும் கிடைத்தது...
இதன் பிறகு நான் தினமலரின் இலவச இணைப்பாக வந்த கம்ப்யூட்டர் மலர் வாசிக்க துவங்கினேன் ,அவ்வப்போது  தமிழ் கம்ப்யூட்டர் மற்றும்  Pc Magazine போன்ற புத்தகங்களை வாங்கி அவற்றுடன் இலவசமாக கிடைத்த சி.டி களை சேகரித்து வைத்திருந்தேன்.

உயர்நிலை படிப்பில் உயிரியல் என்பதால் கணினி சகவாசம் கிடைக்காமல் போனது., உயர்நிலை படிப்பு முடிந்தவுடன் பொறியியல் படிப்பில் சேர தீர்மானித்து பொறியியல் கலந்தாய்வுக்கு காலியிட நிலவரம் அறிய நன்பர்களுடன்  பிரவுசிங்க் சென்டர் சென்று காலியிட நிலவரம் அறிகிறேன்... அப்போது தான் இன்டர்நெட் டை  முதன்முதலில் பார்க்கிறேன் நான்.

கல்லூரிக்கால கணினி அனுபவம்

கல்லூரியில் சேர்ந்த பிறகு கல்லூரி நிர்வாகம் மடிக்கணினி கொடுத்தது(அதற்கும் சேர்த்து பணம் வாங்கிக் கொண்டது) .வாங்கிய புதிதில் அந்த மடிக்கணினியை 
எப்படி ஆன் செய்ய வேண்டும்.சார்ஜர் எங்கு செருக வேண்டும் என்று கூட எனக்கு தெரியவில்லை. லேப்டாப்- ன் Manual பார்த்து பயந்துகொண்டே சார்ஜரை செருகி ஆன் செய்து அந்த நாள் ஞாபகம் எனக்குள் இன்றும் இருக்கிறது .,அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நிறைய கற்றுக்கொண்டேன். கணினி இயக்க கற்றுக்கொடுத்த எனது முதல் முழுமையான  வாத்தியார் எனது லேப்டாப் தான்.( என் முதல் கம்ப்யூட்டர் குரு இப்போது என்னிடம் இல்லை  களவு போய் விட்டான் அவன் :( )
                                                                     கணினி குரு


எங்கள் கல்லூரியில் Wi-Fi இணைப்பு இருந்தது, கல்லூரி வளாகத்திற்குள் சென்றால் இன்டர்நெட் கனெக்ட் ஆகும், ஜிமெயில், ஆர்குட் , என்று நகர்புற மாணவர்கள் புண்ணியத்தில் நானும் அவர்கள் கணினியில் செய்யும் விசயங்களை வேடிக்கைப்பார்த்து கணினியில் இன்டர்நெட் பயன்படுத்த கற்றுக்கொண்டேன்.

கல்லூரியில் தருகிற அசைன்மென்ட் வேலைகள், படிப்பு சந்தேகங்கள் போன்றவற்றிற்கு  கம்ப்யூட்டர் ரொம்பவே உதவியது ...

சமுதாயம் வரையறுத்து வைத்திருக்கிற நல்லது கெட்டது பேதமின்றி எல்லா விசயங்களையும் என் தேடல்களின் தேவைக்கேற்ப இணையம் கொடுத்தது,  
இணையம் உதவியுடனேயே இணையம் பற்றியும் கணினி பயன்படுத்துவது பற்றியும் நிறைய கற்றுக்கொண்டேன்..

நான் கற்றுக்கொண்டதை பிலாக் மூலம் பகிரவும் கற்றுக்கொண்டேன் !!

தமிழ் பதிவுலகம் எனக்கு எப்படி அறிமுகமானது என்று வலைச்சரத்தில் எனது முதல் தினத்தில் எழுதியிருந்தேன் !!


நேரம் கிடைத்தால் வாசித்துப்பாருங்கள்..

டிஸ்கி :  ரொம்ப மொக்கை போட்டுட்டேனு நினைக்கிறேன், திட்டுறதா இருந்தா நீங்க ஸ்.பை. சரவணன் சார  தான் திட்டனும் !!




 

Post Comment

Saturday, August 24, 2013

பேஸ்புக்கும் பெண்களும் (பாகம்-4)

நன்பர்கள் ஜாக்கிரதை


இந்த பதிவில் ஒரு முக்கியமான விசயம் பற்றிப் பார்க்கலாம் , இது உங்கள் நன்பர்களை (Facebook Friends) பற்றியது

 பேஸ்புக் பயன்படுத்தும் நபர்கள் எல்லோரும் பேஸ்புக்கை ஒரே மாதிரியாக பயன்படுத்துவது கிடையாது, ஒவ்வொருவரின் உளவியல் சார்ந்து அது மாறுபடுகிறது, சில நபர்கள் பேஸ்புக்கை நட்பிற்காகவும், சிலர் வர்த்தக விசயங்களுக்காகவும், சிலர் பிரபலமாவதற்காகவும் சிலர் கவிதை,கட்டுரை,ஓவியம்,தனித்திறமை போன்றவற்றை வெளிக்காட்டவும்.., 
இப்படியாக பட்டியல் நீண்டு கொண்டு போகிறது
அட இதெல்லாம் நமக்கு தெரிஞ்ச விசயம் தானே, என்று நீங்கள் நினைக்கலாம்.

ஒவ்வொருவரின் மனதினை பொறுத்து psychological லாக பேஸ்புக் பயன்பாடு இருக்கிறது, திருடர்கள்,அயோக்கியர்கள், கீழ்த்தர எண்ணக்கார்ர்கள் என நிஜ உலகில் நடமாடும் மனிதர்ள் பலர் தங்களின் டிஜிட்டல் அவதாரங்களை பேஸ்புக்கில் எடுத்துக்கொண்டு உலா வருகிறார்கள்

இவர்கள் அடுத்தவர்களை வேவு பார்ப்பது, தெரியாத பெண்களின் பேஸ்புக் புரோபைல்களை நோட்டம் விடுவது, உங்கள் டைம்லைனில் அல்லது பேஸ்புக் Wall- ல் கண்ட கண்ட விசயங்களை டேக் (tag) செய்வது,உங்கள் நன்பர்கள் பட்டியலை மோப்பம் பிடிப்பது, உங்கள் Friend list-ல் உள்ள பெண்களுக்கு நட்பு அழைப்பு விடுப்பது என்று டிஜிட்டல் உலக அயோக்கியத்தனங்கள் மூலம் உங்களுக்கு தொந்தரவுகள் தரக்கூடலாம். இவர்களிடமிருந்து தற்காப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகள் பற்றியும் இவர்கள் தரும் தொந்தரவுகள் பற்றியும் ஒவொன்றாக பார்க்கலாம்.


#  பேஸ்புக் மோசடிகள் :  (டேமேஜர்கள் )

உங்களுக்குத் தெரியுமா? உங்கள் புரோபைலில் நீங்கள் பகிரும் உங்களது  புகைப்படத்தைத்  திருடி ,அதே பெயரில் (சில மாற்றங்கள் செய்து) இன்னுமொரு பேஸ்புக் புரோபைலை ஓபன் செய்து, உங்கள் நன்பர்கள் பட்டியலில் உள்ள நன்பர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள் இவர்கள்,உங்கள் நன்பர்களும் நீங்கள் தான் என்று நம்பி Friend Request ஐ ஏற்றுக்கொள்வார்கள் பின் உங்கள் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் தகவல்களை பரிமாறி  உங்கள் நன்பர்களிடமும், பிற நபர்களிடமும் உங்கள் பெயரை டேமேஜ் செய்கிறார்கள்



உங்கள் நன்பர்களை மறைப்பது எப்படி??

பேஸ்புக்கில் உங்களுக்கு இருக்கும் நன்பர்கள் பட்டியலை நோட்டம் விட்டு, உங்கள் பெண் நன்பர்களுக்கு நட்பு அழைப்போ, தொந்தரவோ தர சில நபர்கள் இருக்கிறார்கள்,உங்கள் நேசமானவர்களை இந்த நாசமா போனவர்களிடமிருந்து காக்க நீங்கள் உங்கள் Friend list ஐ உங்களுக்கு மட்டும் தெரியும் வகையில் மறைத்து வைக்க வேண்டும்.

படி 1 : உங்கள் டைலைனிற்குள் சென்று கொள்ளுங்கள் (டைம்லைனிற்கு செல்ல உங்கள் பெயரினை க்ளிக் செய்க





படி2 : Friends என்பதை க்ளிக் செய்க ( நீங்கள் இப்போது உங்கள் நன்பர்கள் பட்டியலுக்கு இழுத்து செல்லப்படுவீர்கள்)





படி 3 : இங்கு வலது புறம் (Right side) Find friends ஆப்சன் அருகே உள்ள பென்சில் பட்த்தை க்ளிக்கவும்


படி 4 :இரண்டு ஆப்சன் கள் கொடுக்கப்படும் அதில் edit privacy என்பதை க்ளிக் செய்யவும்



படி 5: கீழே உள்ள மாதிரி ஒரு பெட்டி ஓபன் ஆகும். இங்கு நீங்கள் உங்கள் நன்பர்கள், நீங்கள் Follow செய்யும் நபர்கள், உங்களை Follow செய்யும் நபர்கள் போன்ற முத்தரப்பு நபர்களை உங்கள் தேவைக்கேற்ப மறைத்து வைக்கும் ஆப்சன் கள் உள்ளன , அதில் Only me செலக்ட் செய்து கொள்வதன் மூலம் முத்தரப்பு மக்களை அனைவரிடமிருந்தும் மறைத்து வைக்க முடியும்.


 



எச்சரிக்கைகள்  தொடரும்......

வாசகர்களின் கேள்விகள், சந்தேகங்கள்,கருத்துக்கள்,தகவல்கள் வரவேற்க படுகின்றன ., vijayandurairaj30@gmail.com என்ற முகவரிக்கு மெயிலாகவோ, அல்லது கமென்ட் பெட்டியிலோ கேளுங்கள்                                                            


 

Post Comment

Tuesday, August 06, 2013

வாழ்க்கையை வெறுத்தவர்களுக்கான கதை



                     கடவுளை சந்தித்தேன்..

(வாழ்க்கையை வெறுத்தவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கதை:)


கதைக்குள் பயணிக்கும் முன்...
(முன்னெச்சரிக்கை:)

  ந்த கதை நான் எழுதும் கதையாக புதிதாக உங்களுக்கு அறிமுகமாகலாம்.,அல்லது நீங்கள் இந்த கதையை முன்பே சந்தித்திருக்கலாம்..எது எப்படி இருந்தாலும் இதை நீங்கள் ஒருமுறை படித்து விடுங்கள்.இது உங்களுக்கு ஏதாவதொரு வகையில் உதவும்..நான் ஆங்கிலத்தில் வாசித்த ஒரு கதையின் தாக்கமே இக்கதை...இக்கதையின் மூலம் என்னுடையது அல்ல...மூலக்கதையில் சிற்சில மாற்றங்கள் செய்து எனது நடையில் சொல்லி இருக்கிறேன் ...

கடவுளை சந்தித்தேன்..

(வாழ்க்கையை வெறுத்தவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கதை:)


     னக்கு வாழ்க்கையே பிடிக்க வில்லைஎன்னுடன் யாருமே சரியா பேசமாட்டேன்-கிறார்கள்,எனக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி எல்லாம் நடக்கிறது,எனக்கு ராசியே இல்லை,நான் துவங்கும் காரியங்கள் வெற்றி அடைவதே கிடையாது...பேசாமல் செத்து போய் விடலாம்... என்று
வார்த்தைகளை மனதிற்குள் கூறிய படியே ,புலம்பல்களுடன் நடந்து கொண்டிருந்தேன்.
   ப்படி சாகலாம் என்று யோசித்த எனக்கு தன்னை அறிமுகபடுத்திக்கொண்டது எங்கள் வீட்டிற்கு அருகே இருந்த அந்த பெரிய மலை .மலையின் மீது ஏறி அங்கிருந்து குதித்து செத்து விடலாம் என்று என் வாழ்க்கையிலேயே முதன்முறையாக நம்பிக்கையுடன் மலையின் மீது ஏற துவங்கினேன்....
   அது உயரமான மலை,மலை மீது ஏறும் போது தான் என் மனம் இப்படி சிந்திக்க துவங்கியது."சாவதற்கு எத்தனையோ எளிய வழிகள் இருக்கும் போது நான் ஏன் இதை தேர்வு செய்தேன்"(உங்கள் மனதில் "விண்ணை தாண்டி வருவாயா சிம்பு பேசும் வசனம் நினைவுக்கு வரலாம்).என்று நினைத்து கொண்டேன்.சாவிற்கு நான் எடுத்த முயற்சி கூட தோற்றுவிடுமோ என்கிற அச்சத்தில் "கடவுளே!" என்று அழுது புலம்பினேன்...
 இடி சத்தம்..... பயங்கர வெளிச்சம்......ஒரு சிறு நடுக்கம்.....நான் மலையிலிருந்து கீழே விழுந்து விட்டேன்.சில வினாடிகள் கடந்திருக்கும் புவி ஈர்ப்பின் வேகம் என்னை கீழே இழுத்த்து...நான் கீழே விழுந்து கொண்டிருந்தேன்... சாவை நெருங்கும் போது தான் சாவின் பயம் தெரிகிறது...
"நான் சாக விரும்ப வில்லை ,வாழ வேண்டும்...எனக்கு பயமா இருக்கு கடவுளே என்னை காப்பாத்து..."
கீழே விழுந்து விட்டேன்..

"மலையிலிருந்து கீழே விழுந்தும் நான் ஏன் சாகவில்லை?".

என் அருகே ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்,ஆஜானபாகுவான உருவம்,அழகான தோற்றம்,அவரிடம் நான் மெல்ல கேட்டேன்  "நீங்க யாரு?"
 ஹா...ஹா... இது அந்த புது ஆசாமியின் சிரிப்பு...

சிரித்து முடித்து விட்டு பேச துவங்கினார்.... "நீ கீழே விழும் போது என்னை கூப்பிட்டாய் அதனால் தான் வந்தேன்..."
 "நான் உங்களை கூப்பிட வில்லையே..." இது நான்

"கடவுளே என்னை காப்பாத்து என்று என்னை அழைத்தாய் அதனால் தான் உன்னை காப்பாற்றினேன்...நீ இன்னும் சாகாமல் இருக்க நான் தான் காரணம்."

ஹா...ஹா... இது என் சிரிப்பு..

மதங்கள் எனக்கு கற்பித்த கடவுளுக்கும் இவருக்கும் ஆயிரம் வித்தியாசங்கள்...மிக சாதரணமாக இருந்தார்...கையில் ஆயுதங்கள் இல்லை..என் மதத்தில் சேர்ந்து கொள் என்று என்னிடம் அவர் சொல்லவே இல்லை...

திரைப்பட பாணியில் "நீங்கள் கடவுள் தான் என்பதற்கு ஆதாரம் என்ன...ஏதாவது மாயாஜாலங்கள் செய்து காட்டுங்கள் " என்று எனக்கு கேட்க தோன்றவில்லை..

அவர் கடவுள் தானா என்ற தர்க்க ஆராய்ச்சி செய்ய என் மனதில் சக்தி இல்லை.என்னை சாவிலிருந்து காப்பாற்றிய அவர் எனக்கு கடவுளாகாவே தெரிந்தார் "என் சாவிற்கு காரணமான சங்கதிகளை கண்ணீர் துளிகளுடன்  அவரிடம் கொட்டி வைத்தேன்...,


அந்த மலைக்கு அருகிலிருந்த காட்டிற்குள் என்னை அழைத்து சென்றார்...மூங்கில் காடு அது...தரையெங்கும் புற்கள்...  சரசர சத்தத்துடன் நானும் கடவுளும் காட்டிற்குள் நடந்து கொண்டிருந்தோம்....

கடவுள் பேச துவங்கினார்....

"நான் இந்த காட்டில் புல்லையும் ,மூங்கிலையும் ஒரே நேரத்தில் தான் விதைத்திருந்தேன்....சில நாட்கள் கடந்திருந்தன..புல் மெல்ல தலை நீட்ட துவங்கியிருந்தது...மூங்கில் விதைக்கப்பட்ட இடத்திலிருந்து ஒரு சுவடும் இல்லை,சில மாதங்கள் சென்றனபுல் செழித்து வளர்ந்து தரை முழுக்க பசுமையாக பரவி இருந்தது..மூங்கில் இருந்த இடத்தில் வளர்ச்சிக்கான சிறு தடம் கூட இல்லை
ஒரு வருடம் கடந்திருக்கும் சிறு முளையாக தரையை முட்டிக்கொண்டிருந்தது மூங்கில்.புல்லை விட அது சிறியதாக தான் இருந்தது.அருகில் இருந்த புல்லுடன் அது தன்னை ஒப்பிட்டு பார்க்கவில்லை.
இரண்டாம் வருடம் புல்லை விட வலிமையாகவும் ,உயரமாகவும் வளரத்துவங்கியிருந்ததுமூன்று வருடங்கள் கடந்திருக்கும் உயர...உயர... உயர்ந்து கொண்டிருந்தது மூங்கில்... காட்டின் மிக உயர்ந்த மரமாக அது சில வருடங்களில் வளர்ந்திருந்தது.
புல் முளைக்க ஆரம்பித்திருந்த தருணங்களில் புதைந்திருந்ததாக நம் கண்களுக்கு தெரிந்த அந்த மூங்கில் கீழே தன் வேர்களை பரப்பி கொண்டிருந்தது.எவ்வளவு உயர்ந்து வளர வேண்டுமோ அவ்வளவு கீழே நம் வேர் இருக்க வேண்டும்.புல் வெளியே தலை காட்ட துவங்கியிருந்த பொழுதுகளில் மறைவாக மண்ணிற்குள் புதையுண்டு,தன் வேர்களை கீழே செலுத்தி கொண்டிருந்தது மூங்கில் மேலே உயர்வதற்காக..."


நான் கடவுளை இடைமறித்தேன் என் மனதில் இருந்த்தை அவரிடம் கேட்டு விட்டேன்.."என்னை நீ ஏன் கஷ்டப்படுத்த வேண்டும்??,என் வாழ்வில் தொடர் தோல்விகள் ஏன் வர வேண்டும்.??"


"சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்க கவலைகள் அவசியம்...வெற்றி இனிமை நிறைந்ததாக இருக்க தோல்விகள் அவசியம்உயரமாக வளர...ஆழமாக வேர் செலுத்துதல் அவசியம்...."

" கடவுள் இருக்கிறாராஇல்லையாஎன்கிற கேள்வியில் இப்போது எனக்கு நம்பிக்கை இல்லை எனக்கு புது வாழ்வு தந்த அந்த நபர் கடவுளாக தான் காட்சி அளித்தார்"
கண் விழித்து பார்த்தேன் என் எதிரே கம்பீரமாக உயர்ந்து நின்று கொண்டிருந்தன காடு முழுவதும் மூங்கில் மரங்கள்... 

மறக்காமல் கருத்து சொல்லிட்டு போங்க...!



லேபில்கள்: விஜயன் துரை,கடற்கரை ,கடற்கரை,vijayan durai,vijayandurai,vijayan, கடற்கரை,vijayan durai,vijayandurai,vijayan, கடற்கரை,vijayan durai,vijayandurai,vijayan, 

 

Post Comment