Wednesday, August 28, 2013

முதல் கணினி அனுபவங்கள் (ரிலே ரேஸ் )


ஒரு குட்டி அறிமுகம்:

சில தினங்களுக்கு முன்  பதிவுலகில் "எனது கணினி அனுபங்கள் " என்கிற தலைப்பில் தங்களின் கன்னி கணினி அனுபவங்களை பத்தி பதிவெழுத சொல்லி பதிவர்கள் தங்களுக்குள் ஒரு ரிலே ரேஸ் நடத்தி வருவது யாவரும் அறிந்ததே!

இந்த ரிலே ரேஸ் 

ராஜி அக்கா -->  (துவக்கி வைத்தவர்)
தமிழ்வாசி பிரகாஷ் அண்ணன்  --->                                                                       
நாஞ்சில் மனோ அண்ணன்---> 
கே.ஆர்.விஜயன் அண்ணன் --->
செல்வி அக்கா --->
ஸ்கூல் பையன் சரவணன் சார் 


என்று பயணப்பட்ட இந்த ரேஸில் நம்ம ஸ்.பை சரவணன் சார் 




இவர்களுடன் என்னையும் எழுத சொல்லி அழைப்பு விடுத்திருந்தார், ஒரு மாதம் ஆகிவிட்டது அழைப்பு வந்து !!

இந்த ரிலே ரேஸில் நானும் பங்கேற்பதில் மகிழ்ச்சி !! 

எனது முதல் கணினி அனுபவம்:

பள்ளிக்கால கணினி அனுபவம்

ஆரம்ப பள்ளி படிப்பு ஆங்கில வழியில் படித்த காரணத்தால் சிறு வயதிலேயே கம்ப்யூட்டரை புத்தகத்தில் பார்த்திருந்தேன் , கன்னி கணினி என் கண்ணில் பட்டபோது எனக்கு 8 வயது, எங்கள் பள்ளி ஆபிஸ் ரூமில் இருந்த அதை நான் டி.வி. பெட்டி என்றுதான் அதுவரையில் நினைத்திருந்தேன்., 
நான்காம் வகுப்பிலிருந்து  எங்கள் பள்ளியில் கம்ப்யூட்டர் பிராக்டிக்கல் என்று ஒரு பாடவேலை இருந்தது, அப்படி ஒரு வகுப்பின் போது ஒட்டு மொத்த வகுப்பையும் (எங்க க்ளாஸ்-ல மொத்தம் 10 பேரு) கூட்டமாக கூட்டிசென்று அந்த ஒற்றை கணினி முன் அமரவைத்தனர்.முதன்முதலில் எனக்கு அறிமுகமான கணினி அதுதான்.

(கருப்பு வெள்ளை மானிட்டர், MS-DOS ஆபரேட்டிங்க் சிஸ்டம்,எந்த தகவல் வேண்டுமானாலும் தட்டச்சு மூலம் தான் கேட்க வேண்டும் ,ஐகான், க்ளிக் போன்ற வின்டோ தனமான கணினி கிடையாது அது. மவுஸ் என்ற ஒரு உறுப்பே அந்த கணினியில் இல்லை  ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு கட்டளைகள், )

எங்கள் ஆசிரியர் கம்ப்யூட்டர் பிராக்டிக்கல் வகுப்பில் எங்களுக்கு கம்ப்யூட்டர் பற்றி எதுவும் சொல்லித்தர வில்லை (ரொம்ப நல்லதா போச்சுங்க !) , பிளாப்பி டிஸ்கை செருகி, விசைப்பலகையில் ஏதேதோ தட்டி "கார்-ரேஸ்", "டேஞ்சரஸ் டேவ்"  போன்ற விளையாட்டுக்களை வைத்து தருவார்., ஒவ்வொருவராக விளையாட ஆரம்பிக்க , க்ளாஸ் முடிய சரியாக இருக்கும் ! ஆனால் மவுஸ் கூட இல்லாத அந்த கணினிக்கு எங்கள் மத்தியில் மவுசு ரொம்ப அதிகம் போட்டி போட்டு கேம் விளையாடுவோம் !

விளையாட்டுக்கருவி

கணினி என்பது ஒருவகை விளையாட்டு சாதனம் போல என்றுதான் என் அப்போதைய அறிவு அடையாளம் காட்டியது !

ஆறாம் வகுப்பிற்கு பிறகு தமிழ் மீடிய பள்ளிக்கு தாவிய காரணத்தால் அதன்பிறகு கணினிக்கும் எனக்கும் சுத்தமாக எந்தவித தொடர்பும்  இல்லை, 

10- ஆம் வகுப்பு பள்ளி விடுமுறையில் எங்கள் ஊரில் இலவசமாக கணினி கற்றுக்கொடுத்த ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியில் Word, Excel,Powerpoint,Paint போன்ற வைகளை பயன்படுத்தும் வழிமுறையும், அடிப்படை கணினி அறிவும் கிடைத்தது...
இதன் பிறகு நான் தினமலரின் இலவச இணைப்பாக வந்த கம்ப்யூட்டர் மலர் வாசிக்க துவங்கினேன் ,அவ்வப்போது  தமிழ் கம்ப்யூட்டர் மற்றும்  Pc Magazine போன்ற புத்தகங்களை வாங்கி அவற்றுடன் இலவசமாக கிடைத்த சி.டி களை சேகரித்து வைத்திருந்தேன்.

உயர்நிலை படிப்பில் உயிரியல் என்பதால் கணினி சகவாசம் கிடைக்காமல் போனது., உயர்நிலை படிப்பு முடிந்தவுடன் பொறியியல் படிப்பில் சேர தீர்மானித்து பொறியியல் கலந்தாய்வுக்கு காலியிட நிலவரம் அறிய நன்பர்களுடன்  பிரவுசிங்க் சென்டர் சென்று காலியிட நிலவரம் அறிகிறேன்... அப்போது தான் இன்டர்நெட் டை  முதன்முதலில் பார்க்கிறேன் நான்.

கல்லூரிக்கால கணினி அனுபவம்

கல்லூரியில் சேர்ந்த பிறகு கல்லூரி நிர்வாகம் மடிக்கணினி கொடுத்தது(அதற்கும் சேர்த்து பணம் வாங்கிக் கொண்டது) .வாங்கிய புதிதில் அந்த மடிக்கணினியை 
எப்படி ஆன் செய்ய வேண்டும்.சார்ஜர் எங்கு செருக வேண்டும் என்று கூட எனக்கு தெரியவில்லை. லேப்டாப்- ன் Manual பார்த்து பயந்துகொண்டே சார்ஜரை செருகி ஆன் செய்து அந்த நாள் ஞாபகம் எனக்குள் இன்றும் இருக்கிறது .,அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நிறைய கற்றுக்கொண்டேன். கணினி இயக்க கற்றுக்கொடுத்த எனது முதல் முழுமையான  வாத்தியார் எனது லேப்டாப் தான்.( என் முதல் கம்ப்யூட்டர் குரு இப்போது என்னிடம் இல்லை  களவு போய் விட்டான் அவன் :( )
                                                                     கணினி குரு


எங்கள் கல்லூரியில் Wi-Fi இணைப்பு இருந்தது, கல்லூரி வளாகத்திற்குள் சென்றால் இன்டர்நெட் கனெக்ட் ஆகும், ஜிமெயில், ஆர்குட் , என்று நகர்புற மாணவர்கள் புண்ணியத்தில் நானும் அவர்கள் கணினியில் செய்யும் விசயங்களை வேடிக்கைப்பார்த்து கணினியில் இன்டர்நெட் பயன்படுத்த கற்றுக்கொண்டேன்.

கல்லூரியில் தருகிற அசைன்மென்ட் வேலைகள், படிப்பு சந்தேகங்கள் போன்றவற்றிற்கு  கம்ப்யூட்டர் ரொம்பவே உதவியது ...

சமுதாயம் வரையறுத்து வைத்திருக்கிற நல்லது கெட்டது பேதமின்றி எல்லா விசயங்களையும் என் தேடல்களின் தேவைக்கேற்ப இணையம் கொடுத்தது,  
இணையம் உதவியுடனேயே இணையம் பற்றியும் கணினி பயன்படுத்துவது பற்றியும் நிறைய கற்றுக்கொண்டேன்..

நான் கற்றுக்கொண்டதை பிலாக் மூலம் பகிரவும் கற்றுக்கொண்டேன் !!

தமிழ் பதிவுலகம் எனக்கு எப்படி அறிமுகமானது என்று வலைச்சரத்தில் எனது முதல் தினத்தில் எழுதியிருந்தேன் !!


நேரம் கிடைத்தால் வாசித்துப்பாருங்கள்..

டிஸ்கி :  ரொம்ப மொக்கை போட்டுட்டேனு நினைக்கிறேன், திட்டுறதா இருந்தா நீங்க ஸ்.பை. சரவணன் சார  தான் திட்டனும் !!



Labels: , ,

Wednesday, August 29, 2012

சாதனை பதிவர்கள் (பதிவுலக சாதனையாளர்களின் அறிமுகம்))


   பதிவுலகம் முழுக்க ஆக:26 ல் சென்னையில் நடந்த பதிவர் திருவிழா பற்றிய பதிவுகள் தான் பெறும்பாலும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.அவரவர் பங்குக்கு ஒவ்வொருவரும் பதிவர்கள் சந்திப்புகள்,அனுபவங்கள் என எழுதி குவிக்கிறார்கள்....
 பதிவர் திருவிழாவில் நானும் பங்கெடுத்து கொண்டேன் என்று நினைக்கும் போது சந்தோசமாக உள்ளது.இந்த திருவிழாவை நடத்த காரணமாக அமைந்த மற்றும் நடத்திய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் நன்றிகள்.
 பதிவர்கள் திருவிழா மூலம் சில பிரபல பதிவர்களின் முகங்களை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது..சில அறியாத முகங்களின் அறிமுகம் கிடைத்தது.அறிந்த முகங்களின் நேர்முகம் கிடைத்தது.

 பதிவுலகில் பல சாதனை பதிவர்கள் பவ்யமாக வலம் வருகிறார்கள் என்கிற விவரம் எனக்கு அந்த பதிவர் விழாவில் கலந்து கொண்ட பிறகே தெரிய வந்தது. இது போன்ற பதிவர்களை அறிமுகப்படுத்தும் விதமாக பதிவு ஒன்று போடலாம் என்று தோன்றியது...எனக்கு தெரிந்த சாதனை பதிவர்களை ஒவ்வொருவராக  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...உங்களுக்கு தெரிந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள்.

முதலில் நாம் பார்க்க போகும் பதிவர் K.ராஜா: 

 
இவர் அப்படி என்ன சாதனை செய்தார்??
  நம் பதிவுலகில் பதிவர்கள் தங்கள் பதிவை டைப் செய்து எழுதுவதற்காக நம் பொன்னான நேரத்தில் பெரும்பான்மையான நேரத்தை செலவிடுகிறோம்.கணினி உதவியுடன் டைப் செய்யவே கஷ்டபடும் நமக்கு இந்த பதிவர் பற்றி கேள்விபடும் போது மிகுந்த ஆச்சரியம் ஏற்படுகிறது. காரணம் இவர் தன் பதிவுகள் அனைத்தையும் மொபைல் போன் உதவியுடன் டைப் செய்து வலைப்பூவில் ஏற்றியுள்ளார்.
  மொபைல் போனில் தமிழில் டைப் செய்வது எளிய காரியமல்ல.அது மட்டுமின்றி இவர் பயன்படுத்தும் செல்போன் அப்படி ஒன்றும் சிறந்த தொழில்நுட்பம் கொண்ட புதிய ரக(New model) மொபைல் போன் கிடையாது. இவர் பான்படுத்துவது "நோக்கியாவின் எக்ஸ்பிரஸ் மியூசிக் ".
   பதிவர் அறிமுகத்தின் போது இவர் தன் வலைப்பூவைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டார்.பதிவர் திருவிழாவின் முடிவின் போது இவரை நான் நேரடியாக சந்தித்தேன்...

அப்போது அவர் கூறியவை...(அவர் பேச்சு என் எழுத்துக்களில்)

"நான் பதிவெழுதுவதற்கு முன்பு இணைய தளங்களை பார்வையிட  பிரவுசிங்க் சென்டர் செல்வதுண்டு.அப்போது தான் பதிவுலகின் அறிமுகம் எனக்கு கிடைத்தது.அதன் பிறகு நான் எனக்கு தெரிந்த டேலி (Tally ) பற்றி வலைப் பூவில் எழுதலாம் என்று ஒரு வலைப்பூவை துவங்கினேன்.முதலில் பிரவுசிங்க சென்டரில் சென்று வலைப்பூவை எழுத முயற்சித்தேன் ஆனால் அது கொஞ்சம் சிரமமாக இருந்தது.இது வேலைக்கு ஆகாது என்று முடிவு செய்து என் செல் போன் உதவியுடன் பதிவுகளை எழுத ஆரம்பித்தேன்." இவருடன் வந்திருந்த M.K.பழனி என்கிற நன்பர் இவருக்கு பதிவுகள் எழுத உதவி செய்வதாகவும்  சொன்னார்.

இப்படி மொபைல் மூலம் எழுதுவதில் உங்களுக்கு சிரமமாக இல்லையா? என்று நான் கேட்டேன்.

 சிரமமாகத்தான் இருக்கிறது என்று சொன்னார்..(கம்ப்யூட்டர்ல டைப் அடிக்கிற  நமக்கே கடுப்பாகுது.இவருக்கு இருக்காதா?). திரட்டிகளின் ஓட்டு பட்டைகள் இணைப்பது,கேட்ஜட் சேர்ப்பது போன்ற விசயங்களை செய்வது மொபைல் போனில் இயலவில்லை .இதை மட்டும் இவர் பிரவுசிங்க் சென்டரில் கணினி உதவியுடன் செய்துள்ளார்.வரும் மறுமொழிகளுக்கு பதில் கூற இயலவில்லை .அது மட்டுமின்றி லிங்க் (Hypher link) கொடுக்கும் வேலையையும் மொபைல் உதவியுடன் இவரால் செய்ய முடியவில்லையாம்.ஹைப்பர் லிங்க் கொடுக்கும் வேலைக்கு மட்டும் இவர் கணினி தற்போது கணினி துணை நாடுகிறார் மற்றபடி எழுதும் வேலை அத்தனையையும் மொபைல் போன் உதவியுடனேயே டைப் செய்து இணையதளத்தில் பதிவிடுகிறார்..

இவர் வலைப்பூ முகவரி:

ராஜா அண்ணா யூ ஆர் கிரேட் !

இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா.. ஓட்டு போடுங்க இன்னும் சில நல்லிதயங்களை இது சென்றடையும்...
ஏதாவது சொல்லனும்னா கமென்ட் -ல சொல்லுங்க..

Labels: , , , , , ,

Saturday, July 28, 2012

நாம் எழுதியிருக்கும் பதிவு திருடு போகாமல் தடுப்பது எப்படி??

பதிவு திருடர்களுக்கு ஒரு எச்சரிக்கை (பாகம்-4)    
நாம் எழுதியிருக்கும் பதிவு திருடு போகாமல் தடுப்பது எப்படி??

                                         
பதிவு திருட்டை தடுக்க பயன்படும் மூன்று முக்கிய  முறைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

1.காப்பி பேஸ்ட் தடுப்பு :


                  
நம் பதிவுகள் காப்பி அடிக்கப்படுவதை தடுக்க பலர் Copy paste,Javascript,right-click போன்றவற்றை Disable செய்கிறார்கள் இது வாசகர்கள் நம் பதிவுகளில் இருந்து பின்னூட்டங்களில் மேற்கோள் காட்டுவதை தடுக்கும்,அது மட்டுமில்லாமல் நாம் தரும் தகவல்களை அவர்களின் தேவைக்காக (காப்பி அடிக்க அல்ல) பயன்படுத்திக்கொள்வதையும் தடுக்கும்.ஆகவே தான் என் தளத்தில் இந்த முறையை செயல்படுத்த வில்லை.

 Copy செய்யும் முறையை முடக்க (Disable Copy and Paste):


1. முதலில் Blogger Dashboard => Template => Backup/Restore Template என்ற பகுதிக்கு சென்று, Download Full Template என்பதை க்ளிக் செய்து உங்கள் டெம்ப்ளேட்டை பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள்.

2. பிறகு அதே பக்கத்தில் Edit Html பகுதிக்கு சென்று, அங்கு

<body>
என்ற Code-ஐ தேடி, அதனை பின்வருமாறு மாற்றவும். 
<body bgcolor="#FFFFFF" ondragstart="return false" onselectstart="return false">



3. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.


குறிப்பு: சில டெம்ப்ளேட்களில் Body Tag-ல் வேறு சிலவும் சேர்ந்திருக்கும்.
 உதாரணத்திற்கு, 
<body expr:class='&quot;loading&quot; + data:blog.mobileClass'>

அது போன்று இருந்தால், அந்த code-ல் இறுதியில் > என்பதற்கு முன் ஒரு இடைவெளி விட்டு 
bgcolor="#FFFFFF" ondragstart="return false" onselectstart="return false"

ரைட் க்ளிக்கை முடக்க:
  Edit Html பகுதிக்கு சென்று ADD NEW gadget  கொடுத்து   ADD HTML/JAVASCRIPT பகுதியை தேர்ந்தெடுக்கவும் ,கீழுள்ள கோடிங்கை காப்பி பேஸ்ட் (??) செய்யவும் 
save changes   செய்யுங்கள்.....

<SCRIPT language="javascript">
var message="vi]giu";
function clickIE() {if (document.all) {(message);return false;}}
function clickNS(e) {if
(document.layers||(document.getElementById&&!document.all)) {
if (e.which==2||e.which==3) {(message);return false;}}}
if (document.layers)
{document.captureEvents(Event.MOUSEDOWN);document.onmousedown=clickNS;}
else{document.onmouseup=clickNS;document.oncontextmenu=clickIE;}

document.oncontextmenu=new Function("return false")
</SCRIPT>


2.காப்புரிமை வாங்குதல் :

   நம் படைப்புகளுக்கு காப்புரிமை வாங்கி வைத்து கொள்வதன் மூலம் பதிவுகள் திருடப்படுவதை தடுக்க முடியாது. ஆனால் நம் பதிவை பிறர் காப்பி அடித்து அதை அவர்களுடையது என்று சொல்லிக்கொள்ள முடியாமல் தடுக்க முடியும்.நீங்களும் உங்க தளத்துக்கு ஒரு காப்புரிமையை கட்டாயம் பதிவு செய்து கொள்ளுங்கள்.இந்த காப்புரிமை சேவையை சில இணையத்தளங்கள் இலவசமாகவே வழங்குகின்றன.

3.கூகிளிடம் புகார் செய்தல் :

  உங்கள் பதிவை வேறு ஒருவர் தன் வலைத்தளத்தில் காப்பி அடித்து வைத்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம்,அப்போது நீங்கள் அந்த பதிவு திருட்டு பற்றிய உங்கள் புகாரை கூகிளிடம் பதிவு செய்ய இயலும்.நீங்கள் கொடுத்த புகாரை பரீசிலிக்க கூகுள் ஓரிரு நாட்கள் எடுத்துக்கொள்ளும்.
கூகிள் எடுக்கும் நடவடிக்கை: இணைய உலகிலிருந்து காப்பி-பேஸ்ட் செய்யப்பட்ட பதிவு நீக்கப்படும்.


பதிவு திருட்டை பற்றிய என் தொடர் பதிவை இத்துடன் முடிக்கிறேன் ...இந்த பகுதிக்கு ஆதரவு தந்த நல்லுள்ளங்களுக்கு என் நன்றிகள். 
அடுத்த பதிவில் சந்திப்போம்...


Labels: , , , , , , , ,

Monday, April 02, 2012

பதிவர்களுக்கு ஒரு பாராட்டு விழா

பதிவுலகில் நான் நடைபயில ஆரம்பித்த ஆரம்ப காலத்தில் பதிவுலகம் பற்றி எனக்கு அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை,பதிவை எழுதி வைத்துவிட்டு "யாருமேயில்லாத கடைல யாருக்குடா டீ ஆத்துற" என்பது மாதிரி கடை விரித்து வைத்துவிட்டு ஈ ஓட்டிக்கொண்டிருந்தேன்.பதிவுலகின் ரகசியங்களை தெரிந்துகொள்ள எனக்கு சில காலம் எடுத்து கொண்டது.
பதிவுலகின் நுணுக்கங்களையும்,பதிவுகள் சம்பந்தப்பட்ட விசயங்களையும் கற்றுக்கொடுத்த  சக பதிவர்களுக்கும்,
நான் எழுதும் பதிவுகளுக்கு பின்னூட்டம் தந்து எனக்கு "முன்" ஊட்டமளித்த நன்பர்களுக்கும்,வாசகர்களுக்கும்,என்னை தொடரும் உறவுகளுக்கும் (Followers) என் மனமார்ந்த நன்றிகள்.

தண்ணீர்பந்தலை சேர்ந்த நன்பர் வெ.சுப்பிரமணி அவர்கள் தன் மனம் கவர்ந்த பதிவர்களில் 5 பேர்களில் ஒருவராக என்னைத் தேர்ந்தெடுத்து எனக்கு "versatile blogger award" என்ற மகுடத்தை சூட்டி கௌரவித்திருந்தார்.

இந்த விருது பின்வரும் நிபந்தனைகளை உள்ளடக்கியது:

  • இந்த விருது சுழல் விருது,அதாவது இதை பெற்றவர் தன் கவர்ந்த 5 பதிவர்களுக்கு இதை வழங்க வேண்டும்,
  • அது மட்டுமின்றி தனக்கு பிடித்த ஏழு விசயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த விருதை நான் என் மனம் கவர்ந்த ஐந்து பதிவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்னர் எனக்குப் பிடித்த 7 விசயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

1.என்னை புதுப்பிக்க புத்தகங்களை படிப்பது .
2.என்ன தகவல் கேட்டாலும் சளைக்காமல் தரும் இணைய உலகில் உலா வருவது.
3.கடலோரம் அலை தீண்டி நடப்பது.
4.என்னை இழந்து கவிதை செய்வது.
5.மனதை திருடும் கவிதைகளை வாசித்து சுவாசிப்பது.
6.வாக்கியமும்,வாத்தியமும் சரியான விகிதத்தில் கலந்து செய்த பாடல்களை  ரசிப்பது.
7.ரசிகனாக இருப்பது

இப்பொழுது விருது வழங்க
 வேண்டிய தருணம்...



                    இது தாங்க அந்த விருது

விருதின் பெயர்: Versatile Blogger Award

இந்த விருதுக்கு தமிழில் என்னபெயர்??
"Versatile Blogger" என்ற ஆங்கில வார்த்தையை "சகலக்கலா பதிவர்" என்று சொல்லலாம்.

விருது பெறுபவர்கள் பட்டியல்.

   ஹுஸைனம்மா அவர்கள் என்னை மிகவும் கவர்ந்த பதிவர்களில் ஒருவர், அவரது சிந்தனைகள்,கோணங்கள்,பார்வைகள் வித்தியாசனமானவை,பரந்து விரிந்தவை .பொதுவாக அவர் தனது அனுபவங்களையும்,தான் பெற்ற படிப்பினைகளையும்,தன் கருத்துக்களையும் தன் வலைப்பூவில் பகிர்ந்துள்ளார். பதினேழாம்வாய்ப்பாடு என்னும் தலைப்பில் தோனி திரைப்படத்திற்கு அவர் எழுதியிருக்கும் விமர்சனம் மிக வித்தியாசமானதாக இருந்தது ,மேலும் "தமிழ் எனும் மெஷின்லாங்குவேஜ்" என்கிற தலைப்பில் அவர் பகிர்ந்துள்ள கட்டுரை என்னை வெகுவாக கவர்ந்த மற்றும் சிந்திக்க வைத்த கட்டுரைகளில் ஒன்று. ஹுஸைனம்மாவுக்கு என் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்,விருதும்.

 நம் தமிழ் பதிவுலகின் இளம் பதிவர்களில் ஒருவர் தொழில் நுட்பம்,சினிமா,பிளாக்கர் டிப்ஸ் என பல விசயங்களை தன் வலைப்பூவில் பதிந்துள்ளார்.இவர் வழங்கும் "டிப்ஸ் மற்றும் டிரிக்ஸ்" கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.சதிஷ் -க்கு என் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்,விருதும்.

     கவிஞர் கௌரமி அவர்கள் தன் கவிதைகளை சிதறல்களாக தன் வலைப்பூவில் பதிந்து வருகிறார்,அவரது கவிதைகள் சமூக விழிப்புணர்வு,காதல்,இயற்கை...என சகலமும் பேசும். மாற்றம் (லிங்க்) என்கிற தலைப்பில் அவர் படைத்த கவி, என்னை பாடய் படுத்திய கவிதைகளில் ஒன்று. எல்லைகள் இல்லாத கற்பனை வெளியில் கவிதைகளை பெற்று வந்து வாசகர்களுக்கு விருந்தளிக்கும் அவரது முயற்சிக்கு பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்,விருதும்.

    இவரது பதிவுகள் நம்மை நிச்சயம் சிந்திக்க வைக்கும்,தன் கருத்துக்களை,சிந்தனைகளை கவி வடிவில் படைத்து,படிப்பவர்களை செதுக்கும் முயற்சியில் உள்ள மாலதி அக்காவுக்கு பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்,விருதும்.

  நான் ஒரு மின் மற்றும் மின்னணு பொறியியல் மாணவன்,"மின்னியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தமிழ் வலைப்பூக்கள் இல்லையே !!" என்ற என் தேடலின் பயனாக கிடைத்த வலைப்பூ இது..எந்த வொரு விஷயமானாலும் நாம் தாய் மொழி வாயிலாக சிந்திக்கும் போது நமக்கு சிறந்த தீர்வுகள் கிடைக்கும் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.தமிழ் வழி மின் கல்வியை சொல்லி தரும் அண்ணனுக்கு என் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்,விருதும்.


நன்பர்களை விருதுகளை ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.மேலும்  இதை தங்கள் மனம் கவர்ந்த ஐந்து பதிவருக்கு பரிசளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

Labels: