Wednesday, August 29, 2012

சாதனை பதிவர்கள் (பதிவுலக சாதனையாளர்களின் அறிமுகம்))


   பதிவுலகம் முழுக்க ஆக:26 ல் சென்னையில் நடந்த பதிவர் திருவிழா பற்றிய பதிவுகள் தான் பெறும்பாலும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.அவரவர் பங்குக்கு ஒவ்வொருவரும் பதிவர்கள் சந்திப்புகள்,அனுபவங்கள் என எழுதி குவிக்கிறார்கள்....
 திவர் திருவிழாவில் நானும் பங்கெடுத்து கொண்டேன் என்று நினைக்கும் போது சந்தோசமாக உள்ளது.இந்த திருவிழாவை நடத்த காரணமாக அமைந்த மற்றும் நடத்திய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் நன்றிகள்.
 திவர்கள் திருவிழா மூலம் சில பிரபல பதிவர்களின் முகங்களை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது..சில அறியாத முகங்களின் அறிமுகம் கிடைத்தது.அறிந்த முகங்களின் நேர்முகம் கிடைத்தது.

 பதிவுலகில் பல சாதனை பதிவர்கள் பவ்யமாக வலம் வருகிறார்கள் என்கிற விவரம் எனக்கு அந்த பதிவர் விழாவில் கலந்து கொண்ட பிறகே தெரிய வந்தது. இது போன்ற பதிவர்களை அறிமுகப்படுத்தும் விதமாக பதிவு ஒன்று போடலாம் என்று தோன்றியது...எனக்கு தெரிந்த சாதனை பதிவர்களை ஒவ்வொருவராக  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...உங்களுக்கு தெரிந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள்.

முதலில் நாம் பார்க்க போகும் பதிவர் K.ராஜா: 

 
இவர் அப்படி என்ன சாதனை செய்தார்??
  ம் பதிவுலகில் பதிவர்கள் தங்கள் பதிவை டைப் செய்து எழுதுவதற்காக நம் பொன்னான நேரத்தில் பெரும்பான்மையான நேரத்தை செலவிடுகிறோம்.கணினி உதவியுடன் டைப் செய்யவே கஷ்டபடும் நமக்கு இந்த பதிவர் பற்றி கேள்விபடும் போது மிகுந்த ஆச்சரியம் ஏற்படுகிறது. காரணம் இவர் தன் பதிவுகள் அனைத்தையும் மொபைல் போன் உதவியுடன் டைப் செய்து வலைப்பூவில் ஏற்றியுள்ளார்.
  மொபைல் போனில் தமிழில் டைப் செய்வது எளிய காரியமல்ல.அது மட்டுமின்றி இவர் பயன்படுத்தும் செல்போன் அப்படி ஒன்றும் சிறந்த தொழில்நுட்பம் கொண்ட புதிய ரக(New model) மொபைல் போன் கிடையாது. இவர் பான்படுத்துவது "நோக்கியாவின் எக்ஸ்பிரஸ் மியூசிக் ".
   திவர் அறிமுகத்தின் போது இவர் தன் வலைப்பூவைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டார்.பதிவர் திருவிழாவின் முடிவின் போது இவரை நான் நேரடியாக சந்தித்தேன்...

அப்போது அவர் கூறியவை...(அவர் பேச்சு என் எழுத்துக்களில்)

"நான் பதிவெழுதுவதற்கு முன்பு இணைய தளங்களை பார்வையிட  பிரவுசிங்க் சென்டர் செல்வதுண்டு.அப்போது தான் பதிவுலகின் அறிமுகம் எனக்கு கிடைத்தது.அதன் பிறகு நான் எனக்கு தெரிந்த டேலி (Tally ) பற்றி வலைப் பூவில் எழுதலாம் என்று ஒரு வலைப்பூவை துவங்கினேன்.முதலில் பிரவுசிங்க சென்டரில் சென்று வலைப்பூவை எழுத முயற்சித்தேன் ஆனால் அது கொஞ்சம் சிரமமாக இருந்தது.இது வேலைக்கு ஆகாது என்று முடிவு செய்து என் செல் போன் உதவியுடன் பதிவுகளை எழுத ஆரம்பித்தேன்." இவருடன் வந்திருந்த M.K.பழனி என்கிற நன்பர் இவருக்கு பதிவுகள் எழுத உதவி செய்வதாகவும்  சொன்னார்.

இப்படி மொபைல் மூலம் எழுதுவதில் உங்களுக்கு சிரமமாக இல்லையா? என்று நான் கேட்டேன்.

 சிரமமாகத்தான் இருக்கிறது என்று சொன்னார்..(கம்ப்யூட்டர்ல டைப் அடிக்கிற  நமக்கே கடுப்பாகுது.இவருக்கு இருக்காதா?). திரட்டிகளின் ஓட்டு பட்டைகள் இணைப்பது,கேட்ஜட் சேர்ப்பது போன்ற விசயங்களை செய்வது மொபைல் போனில் இயலவில்லை .இதை மட்டும் இவர் பிரவுசிங்க் சென்டரில் கணினி உதவியுடன் செய்துள்ளார்.வரும் மறுமொழிகளுக்கு பதில் கூற இயலவில்லை .அது மட்டுமின்றி லிங்க் (Hypher link) கொடுக்கும் வேலையையும் மொபைல் உதவியுடன் இவரால் செய்ய முடியவில்லையாம்.ஹைப்பர் லிங்க் கொடுக்கும் வேலைக்கு மட்டும் இவர் கணினி தற்போது கணினி துணை நாடுகிறார் மற்றபடி எழுதும் வேலை அத்தனையையும் மொபைல் போன் உதவியுடனேயே டைப் செய்து இணையதளத்தில் பதிவிடுகிறார்..

இவர் வலைப்பூ முகவரி:

ராஜா அண்ணா யூ ஆர் கிரேட் !

இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா.. ஓட்டு போடுங்க இன்னும் சில நல்லிதயங்களை இது சென்றடையும்...
ஏதாவது சொல்லனும்னா கமென்ட் -ல சொல்லுங்க..

Labels: , , , , , ,

33 Comments:

At Wed Aug 29, 03:38:00 am , Blogger துளசி கோபால் said...

அட!

மொபைலில் ஒரு டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்பவே நான் தலையாலே தண்ணி குடிச்சுருவேன்:(

ராஜாவுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

அறியச்செய்த உமக்கும்தான்!

 
At Wed Aug 29, 07:11:00 am , Blogger Yaathoramani.blogspot.com said...

தங்கள் தகவல் ஆச்சரியப்படுத்துகிறது
துளசி கோபால் அவர்கள் குறிப்பிட்டுள்ளதைப்போல
செல்லில் சிறு மெச்சேஜ் அனுப்பவே ரொம்பச்
சிரமப்படும் இனத்தைச் சேர்ந்தவந்தான் நானும்
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

 
At Wed Aug 29, 09:42:00 am , Blogger Subramanian said...

கடின உழைப்பில் உருவாகும் வலைப்பூவை பெருமைப்படுத்தியதற்கு நன்றியும் வாழ்த்துக்களும்!..

 
At Wed Aug 29, 09:46:00 am , Blogger டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அவருடைய ஆர்வத்தை பார்த்து பிரமிப்பு ஏற்படுகிறது.நல்ல அறிமுகன் விஜயன்

 
At Wed Aug 29, 10:22:00 am , Blogger Vijayan Durai said...

reply @ துளசி கோபால் said...
//மொபைலில் ஒரு டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்பவே நான் தலையாலே தண்ணி குடிச்சுருவேன்:(//

வாருங்கள் அண்ணா.. :) வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி அண்ணா

 
At Wed Aug 29, 10:24:00 am , Blogger Vijayan Durai said...

Reply @ Ramani said..
//தங்கள் தகவல் ஆச்சரியப்படுத்துகிறது//
ஆச்சரிய பட்டு போனதால் தான் இந்த பதிவை நான் எழுத திர்மானித்தேன்.நன்றி ரமணி அண்ணா

 
At Wed Aug 29, 10:27:00 am , Blogger Vijayan Durai said...

Reply @ வே.சுப்ரமணியன். said...
//கடின உழைப்பில் உருவாகும் வலைப்பூவை பெருமைப்படுத்தியதற்கு நன்றியும் வாழ்த்துக்களும்//
நன்றி நன்பா.

 
At Wed Aug 29, 10:29:00 am , Blogger Vijayan Durai said...

Reply @ T.N.MURALIDHARAN said...
//அவருடைய ஆர்வத்தை பார்த்து பிரமிப்பு ஏற்படுகிறது.நல்ல அறிமுகம் விஜயன்//
நன்றி சார்!தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

 
At Wed Aug 29, 12:15:00 pm , Blogger Thozhirkalam Channel said...

நல்லது.. தொடருங்கள் தோழரே!!!

தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி

 
At Wed Aug 29, 03:45:00 pm , Blogger Vijayan Durai said...

Reply @ தொழிற்களம் குழு said...
//நல்லது.. தொடருங்கள் தோழரே!!!//

தங்களின் தொடர் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.தொடர்கிறேன்.நன்றி அண்ணா

 
At Wed Aug 29, 03:45:00 pm , Blogger சசிகலா said...

ஆச்சரியப்படும் பதிவு தான் நன்றிங்க.

 
At Wed Aug 29, 03:46:00 pm , Blogger Vijayan Durai said...

Reply Sasi Kala said...
//ஆச்சரியப்படும் பதிவு தான் நன்றிங்க.//
வாருங்கள் அக்கா..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

 
At Wed Aug 29, 07:11:00 pm , Anonymous ஆட்டோமொபைல் said...

மிக அருமை...

 
At Wed Aug 29, 08:39:00 pm , Blogger உழவன் said...

நல்ல அறிமுகம்..ஆச்சரியப்படும் பதிவுதான்..நன்றி நண்பரே..

 
At Wed Aug 29, 11:50:00 pm , Blogger ம.ஞானகுரு said...

pathivargal santhippil kalanthu kollathathu varuthamalikkirathu...

hardwork ku raja oru example...

 
At Thu Aug 30, 03:09:00 am , Blogger Vijayan Durai said...

reply @ ஆட்டோமொபைல் said...
//மிக அருமை.//
நன்றிங்க

 
At Thu Aug 30, 03:11:00 am , Blogger Vijayan Durai said...

reply @ Uzhavan Raja said...
//நல்ல அறிமுகம்..ஆச்சரியப்படும் பதிவுதான்..நன்றி நண்பரே../
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி நன்பரே...

 
At Thu Aug 30, 03:13:00 am , Blogger Vijayan Durai said...

reply @ ஞானகுரு said...
//hardwork ku raja oru example...//
ஆம் ! தான் கற்றதை பிறரை அறிய செய்வதில் இவருக்குள்ள ஆர்வம் பாராட்டத்தக்கது.

 
At Thu Aug 30, 10:52:00 am , Blogger சீனு said...

அருமையான முயற்சி நண்பா.. தங்கள் தளத்தின் கட்டம்னைப்பு எனக்கு மிகவும் பிடித்துள்ளது... தங்களைத் தொடர்பவர்களில் என்னையும் இணைத்துக் கொண்டேன்

 
At Thu Aug 30, 03:19:00 pm , Blogger Vijayan Durai said...

reply @ சீனு said...
//அருமையான முயற்சி நண்பா.. தங்கள் தளத்தின் கட்டம்னைப்பு எனக்கு மிகவும் பிடித்துள்ளது... தங்களைத் தொடர்பவர்களில் என்னையும் இணைத்துக் கொண்டேன்//
தங்களின் வரவுக்கும் அன்புக்கும் நன்றி நன்பா.

 
At Thu Aug 30, 03:30:00 pm , Blogger Vijayan Durai said...

reply @ ஆட்டோமொபைல் said.
நன்றிங்க..

 
At Thu Aug 30, 03:32:00 pm , Blogger Vijayan Durai said...

Reply @ zhavan Raja said...
//நல்ல அறிமுகம்..ஆச்சரியப்படும் பதிவுதான்..நன்றி நண்பரே..//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நன்பரே

 
At Fri Aug 31, 04:42:00 pm , Blogger Unknown said...

Nice Article Sago.....
Keep in touch with my Blog.
Sago Rajavukku Vaalthugal

 
At Fri Aug 31, 04:50:00 pm , Blogger Unknown said...

எனது தளத்தில்
http://varikudhirai.blogspot.com/2012/08/they-planted-tea-on-hills.html மலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்....

 
At Sat Sept 01, 10:10:00 am , Blogger JR Benedict II said...

நண்பா உங்க கூகிள் ப்ளஸ் முகவரி சரியாக இல்லை சரி செய்யுங்க தொடர வாய்ப்பு இல்லாம போகுது

 
At Sat Sept 01, 09:46:00 pm , Blogger Vijayan Durai said...

Reply @அருண்பிரசாத் வரிக்குதிரை said...
//Nice Article Sago.....
Keep in touch with my Blog.
Sago Rajavukku Vaalthugal//
sure sago...

 
At Sat Sept 01, 10:06:00 pm , Blogger Vijayan Durai said...

Reply @ ஹாரி பாட்டர் said...
//நண்பா உங்க கூகிள் ப்ளஸ் முகவரி சரியாக இல்லை// சரி செய்து விட்டேன் நன்பா! தகவலுக்கு நன்றி

 
At Sun Sept 02, 11:01:00 am , Anonymous Anonymous said...

உண்மையிலேயே இவர் "கிரேட்" தான்.

 
At Sun Sept 02, 11:01:00 am , Anonymous Anonymous said...

உண்மையிலேயே இவர் "கிரேட்" தான்.

 
At Sun Sept 02, 04:41:00 pm , Blogger Vijayan Durai said...

reply @ kanmani-anbodu said...
வாருங்கள் தோழி.,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.

 
At Mon Sept 03, 06:58:00 pm , Blogger Ranjani Narayanan said...

அன்பு விஜயன், பதிவர் சந்திப்பில் உங்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். இப்போது உங்கள் பதிவில் ஒரு வித்தியாசமான முறையில் பதிவு செய்யும் திரு ராஜாவை அறிமுகப்படுத்தி அசத்தி இருக்கிறீர்கள். திரு ராஜாவுக்கும், அவரை அறிமுகப்படுத்திய உங்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள்!
எனது வலைத்தளம்:
ranjaninarayanan.wordpress.com

 
At Mon Sept 03, 10:02:00 pm , Blogger Vijayan Durai said...

Reply @ Ranjani Narayanan said...
//அன்பு விஜயன், பதிவர் சந்திப்பில் உங்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். இப்போது உங்கள் பதிவில் ஒரு வித்தியாசமான முறையில் பதிவு செய்யும் திரு ராஜாவை அறிமுகப்படுத்தி அசத்தி இருக்கிறீர்கள். திரு ராஜாவுக்கும், அவரை அறிமுகப்படுத்திய உங்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள்!//
வாருங்கள் அம்மா,நான் பட்ட ஆச்சரியம் பெருக இப்பதிவுலகம் என்கிற சின்ன ஆசைதான் இந்த பதிவு.தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அம்மா.

 
At Thu Oct 11, 08:20:00 am , Blogger cheena (சீனா) said...

அன்பின் விஜயன் - அறிமுகத்திற்கு நன்றி - ராஜா மிகக் கடினமாக உழைத்து - மற்றவர்களுக்கு ”டாலி” பர்ரி விளக்கமாகக் கற்றுக் கொடுக்கிறார். அதுவும் மொபிஅல் அலைபேசியின் உதவியால் - கணினியில் மக்கள் எழுதுவதற்கும் படங்கல் போடுவதற்கும் சுட்டிகள் கொடுப்பதற்கும் விட்ஜெட் போடுவதற்குமே கஷ்டப்படும் போது இவர் எப்படிச் செய்கிறார் என்பது ஆச்சரியமாக உள்ளது - ஆமாம் ஏன் ஒரு கணினி - இணையத் தொடர்புடன் வாங்கி விடலாமே - அவருடன் பேச வேண்டும் - மின்னஞ்சல் முகவரி / அலைபேசி எண் தர இயலுமா ? நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

 

Post a Comment

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....

Subscribe to Post Comments [Atom]

<< Home