பதிவு திருடர்களுக்கு ஒரு எச்சரிக்கை (பாகம்-2)
(பதிவு
திருடர்களும் திருட்டுகளின் வகைகளும்:)
கடந்த பதிவில் பதிவு திருட்டு என்றால் என்ன என்று
குறிப்பிட்டிருந்தேன்.பதிவு திருடர்களின் வகைகளை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1.காப்பி பேஸ்ட் பதிவர்கள் (Copy & Paste Plagiarism):
நம் பதிவுலக நன்பர்கள் மத்தியில் இவ்வகை
பதிவர்கள் பெரும்பாலும் பற்றி அனைவருக்கும் தெரியும்.அச்சு பிசகாமல் அப்படியே நமது
பதிவுகளை காப்பி செய்து தன் வலைப்பூவில் அல்லது தங்களின் வலைத்தளத்தில்
வைத்துக்கொண்டு அதை எழுதியது தான் தான் என்பது மாதிரி சீன் போடும் நபர்கள்
இவ்வகையை சார்ந்தவர்கள்.
2.வார்த்தை மாற்றும் பதிவர்கள்( Word Switch Plagiarism):
ஒருவர் தன்
உழைப்பையும்,நேரத்தையும்,சிந்தனையையும் செலவழித்து எழுதும் பதிவை காப்பி செய்து
ஒரு சில இடங்களில் மற்றும் மாற்றம் செய்து(டச் அப்) தங்கள் பதிவாக
வெளியிடுபவர்கள்.இப்படி செய்வதும் பதிவு திருட்டுத்தான் என்பதை பலர் அறிவதில்லை.
சில நல்ல உள்ளங்கள் பதிவின் உண்மையான உரிமையாளர் சொல்லத்தவறிய விசயங்களை,அவர்
சொன்ன அதே விசயத்தை தெளிவாக குறிப்பிட விரும்பி இது போல செய்வதுண்டு.இது போன்ற
நல்ல நோக்கமுடைய நன்பர்கள் பதிவின் உரிமையாளரையோ அல்லது பதிவு எடுக்கப்பட்ட இணைய
முகவரியையோ குறிப்பிட வேண்டும்.அப்படி செய்ய தவறும் பட்சத்தில் அதுவும் திருட்டு
வகையில் தான் சேரும்.
இந்த
வகை திருட்டுக்கு உதாரண பதிவு என் வலைப்பூவில்:
3.எழுத்து நடை திருடர்கள்(Style Plagiarism):
ஒருவர் எழுதிய பதிவை வார்த்தைக்கு வார்த்தை
பின்பற்றி,அதே பதிவை வேறு மாதிரி சொல்வது.காப்பி பேஸ்ட் செய்யாமல் எழுதிய பதிவு
தான் என்ற போதிலும்.இதுவும் ஒரு வகையான பதிவு திருட்டு தான்.
இவ்வகை
திருட்டு பதிவின் உரிமையாளருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை.ஆனால்
காப்பி அடிக்கும் நபரின் புகழை இது குறைக்கும்.பெரும்பாலும் பதிவுலகத்திற்கு
புதிதாக வரும் பதிவர்கள் பிரபல பதிவராகும் முயற்சியில் பிரபல பதிவர் போலவே
எழுதுவது உண்டு.
4.உருவகத்திருட்டு (Metaphor Plagiarism):
சொல்லுகிற கருத்தை தெளிவாக புரிய வைக்க சில
விளக்கங்கள் அல்லது
உருவகங்களை
பயன் படுத்துவதுண்டு.இப்படி பிறர் கூறிய விளக்கங்களையோ உருவகங்களையோ சொல்லும்போது
அதன் உரிமையாளர் பற்றி கட்டாயம் குறிப்பிட வேண்டும்.அப்படி குறிப்பிடாமல் விடுபவர்
உருவக திருடர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.
5.கருத்து திருடர்கள்(Idea Plagiarism):
ஒரு
பதிவர் சொந்தமாக யோசித்து ஒரு கருத்தையோ,அல்லது ஒரு பிரச்சனைக்கு தீர்வையோ
சொல்லியிருப்பார்.அதை நோகாமல் தன் கருத்தை போல சிலர் காட்டிக்கொண்டு தன்னை ஒரு
அறிவாளி என சொல்லிக்கொள்வது உண்டு.
சொந்தமாக யோசிக்க வக்கில்லாத,அதே சமயம் சிறந்த
சிந்தனையாளர் என்று அழைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிற சில பதிவர்கள் இது போல
செய்வதுண்டு.
விதிவிலக்கு:
Public domain information என்று அழைக்கப்படும்
பொதுப்படையான விசயங்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் இது பொது அறிவு
வகேராவை சேர்ந்தது.பிறருடைய தனிப்பட்ட கருத்தை சொல்லும் போது "இதை இவர்
சொல்லியிருக்கிறார்" என்று குறிப்பிட வேண்டும்.
தகவல் உபயம்:
Five Types of Plagiarism Taken From:
Barnbaum, C. “Plagiarism: A
Student's Guide to Recognizing It and Avoiding It.”
Valdosta State
University
பதிவு திருடு போவதை எப்படி தடுக்கலாம் என்றும் பதிவு திருடு
போனதை கண்டறிவது எப்படி என்றும் அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம் படிக்க
தவறாதீர்கள்...
வாசகர்கள் மற்றும் பதிவுலக நன்பர்களின் கருத்துக்களும்
ஆதரவும் வரவேற்கப்படுகிறது.
Labels: தொடர்பதிவு, தொழில் நுட்பம், பதிவு திருட்டு
14 Comments:
பதிவு திருடர்களை வகைப்படுத்தியது அருமை. தங்களது அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன் நண்பரே! நன்றி.
நல்ல பதிவு நண்பரே!! http://saamuraaii.blogspot.com/2011/01/blog-post.html இந்த பதிவு நான் பதிவுலகத்துக்கு வந்து எழுதின மூண்டவதோ நாலாவது பதிவு. பேந்து கோப்பி பேஸ்ட் திருடர்களால் எழுதுறது இல்ல. இப்ப திரும்ப எழுத ஆசையா இருக்கு,, lets see :)
reply@வே.சுப்ரமணியன். said...
வாருங்கள் நன்பரே,தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
reply@ Saamuraai said...
//நல்ல பதிவு நண்பரே!! //
நன்றி நன்பரே
//நல்ல பதிவு நண்பரே!! http://saamuraaii.blogspot.com/2011/01/blog-post.html இந்த பதிவு நான் பதிவுலகத்துக்கு வந்து எழுதின மூண்டவதோ நாலாவது பதிவு. பேந்து கோப்பி பேஸ்ட் திருடர்களால் எழுதுறது இல்ல. இப்ப திரும்ப எழுத ஆசையா இருக்கு,, lets see :)//
படித்துவிடுகிறேன்..
காப்பி/பேஸ்ட் வகைகள் ஓகே.
நீங்க சொல்ற மாதிரி ஒரிஜினல் பதிவின் லிங்க்/பதிவர் பெயர் போட்டாலும் காப்பி/பேஸ்ட் தான்.
அந்த பதிவரிடம் முன்னமே தெரிவித்து அனுமதி வாங்கி பகிர்ந்தால் அது காப்பி/பேஸ்ட் ஆகாது என்பது என் கருத்து
reply@தமிழ்வாசி பிரகாஷ் said...
//காப்பி/பேஸ்ட் வகைகள் ஓகே.
நீங்க சொல்ற மாதிரி ஒரிஜினல் பதிவின் லிங்க்/பதிவர் பெயர் போட்டாலும் காப்பி/பேஸ்ட் தான்.
அந்த பதிவரிடம் முன்னமே தெரிவித்து அனுமதி வாங்கி பகிர்ந்தால் அது காப்பி/பேஸ்ட் ஆகாது என்பது என் கருத்து //
நீங்க சொல்வது நூத்துக்கு நூறு சரிதான்,அப்படியே பதிவுகளை காப்பி செய்து தம் பதிவுகள் போல தம்பட்டம் அடிக்கும் நபர்கள் atleast அந்த பதிவு திருடப்பட்ட இடத்தையாவது குறிப்பிடலாம் என்பது என் வேண்டுகோள்.
காப்பி பேஸ்ட் பண்ணுகிறவரக்ள்
எங்கே இருந்து எடுத்து போட்டோமுன்னு லின்கையும் கொடுத்தாலாவது பரவாயில்ல
அட்டு பிசகாமல் அவர்கள் சொந்த பதிவு போல் திருடி கொள்கிறார்கள்.
உண்மையானவர்களின் உழைப்பு வீனாகுது
காப்பி பேஸ்ட் பண்ணுகிறவரக்ள்
எங்கே இருந்து எடுத்து போட்டோமுன்னு லின்கையும் கொடுத்தாலாவது பரவாயில்ல
அட்டு பிசகாமல் அவர்கள் சொந்த பதிவு போல் திருடி கொள்கிறார்கள்.
உண்மையானவர்களின் உழைப்பு வீனாகுது
rely @ Jaleela Kamal said...
//காப்பி பேஸ்ட் பண்ணுகிறவரக்ள்
எங்கே இருந்து எடுத்து போட்டோமுன்னு லின்கையும் கொடுத்தாலாவது பரவாயில்ல
அட்டு பிசகாமல் அவர்கள் சொந்த பதிவு போல் திருடி கொள்கிறார்கள்.
உண்மையானவர்களின் உழைப்பு வீனாகுது//
உண்மை தான் நன்பரே.,திருட்டு பதிவுக்கு மக்கள் மத்தியில் மதிப்பு குறைவு தான் நன்பரே.தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நன்பரே.
பதிவு திருட்டு கேடிகளுக்கு இது ஓர் பாடப்பதிவு அண்ணா. எல்லோரும் அறிய வேண்டியதே....
Reply@ Esther sabi said...
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி சகோதரி.
www.tamilcc.co.cc இந்த தளத்தில் எதையும் பிரதி எடுக்க முடியவில்லை. யாராவது உதவுங்களேன்
javaவை நிறுத்திவிட்டு முயற்சி செய்யுங்கள்.
reply@ POWER Thaz said...
தகவலுக்கு நன்றி
Post a Comment
கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....
Subscribe to Post Comments [Atom]
<< Home