Saturday, December 10, 2011

என்றும் அழியா பாரதி ....



"இன்று புதிதாய் பிறந்தோம் என்று நீவிர் -
எண்ணமதை திண்ணமுற இசைத்துக்கொண்டு
தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்
தீமையெல்லாம் ஓடிப்போம் திரும்பி வாரா.."
                                         -பாரதி

 " பாரதி ஒரு அற்புதமான கவிஞன்,வித்தியசமான மனிதன் ! ",
அவன் வரலாற்றை படிக்கிற எவரும் சட்டென்று இந்த உணர்வு நிலையில் தான் கட்டுண்டாவோம் .


பாரதி....
விஞன், எழுத்தாளன், பத்திரிக்கையாளன், சமூக சீர்திருத்தவாதி,விடுதலை வீரன்,  என  பல்வேறு தலங்களில் புரட்சி ஒளி வீசிய புது ஞாயிறு அவன் .

இலக்கணமுறை சிரிதும் பிறழாமல் (பாமர ஜனங்களுக்கு புரியாத மாதிரி) கவி 
செய்த  அக்கால கவிகளுக்கு மத்தியில்...
"புரிகிற வடிவில் கவியை எளிதாக்கி,
புரட்சி விதையை கவியுள் பதுக்கி 
புரட்சி செய்த புதுக்கவிஞன்"

மூட நம்பிக்கையில் மூழ்கி கிடந்த மக்களை கரையேற்ற வந்த கடவுள்.

தமிழ் மொழியை புது நடையில் பேசவைத்தவன்

"கவிதை எழுதுபவன் கவியன்று.
கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன்,
அவனே கவி "   
                                    - பாரதி.


நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்  என்று கூறி வாழ்வையே கவிதையாக வாழ்ந்த மகாகவி

பாரதியார் பல கவிஞர்களுக்கு மானசீக குருவாக இன்றளவும் இருக்கிறார். என் மனம் அவரது பாடல்களை கேட்கிற போதும், உச்சரிக்கிற போதும் புது உணர்வு பெற்று உற்சாகம் அடைய தவறியதே இல்லை.

என் மனம் சோர்வு அடைகிற வேளைகளில் எல்லாம்

"நல்லதோர் வீணை செய்தே........."

"தேடிச் சோறுநிதந் தின்று......."

"நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா..."

"அச்சமில்லை அச்சமில்லை...."

போன்ற பாடல்களில் என்னை பாரதி உர்ச்சாகமூட்டுகிறான்,


வருமையின் பிடியில் இருந்த பொழுதும் கூட 
"ஜெயமுண்டு பயமில்லை மனமே..." 
-என அவனால் எப்படி பாட முடிந்து,
மரணம் அவனை தழுவ வந்த அந்திமக் காலதிலும் கூட
" காலா எந்தன் காலருகே வாடா, சற்றே எந்தன் காலால் மிதிக்கிறேன்" 
-என்று அவனால் எப்படிக் கூற முடிந்தது -என நான் அடிக்கடி யோசிப்பதுண்டு...

'தனக்கென்று மட்டும் வாழ்கிற மனிதர்கள் இருக்கும் போதே இறந்தவர்களுக்கு ஒப்பானவர்கள், ஆனால் பிறர்க்கென்று வாழ்கிற உயர்ந்த உள்ளங்கள் இறந்தும் கூட இருக்கின்றார்கள்.'-என்று நாம் படித்திருக்கிறோம்...

தனக்கு அழிவில்லை, தனக்கு மரணமில்லை என்று தன் பாடல்களில் பாரதி கூறியிருக்கிறான்.
நிச்சயம் அது உண்மை தான்.
அவன் இன்னும் உயிரோடு தான் இருக்கிறான்
பாரதியின் பெயரை உச்சரிக்கிற போது....
பாரதியின் பாடல்களை கேட்கிற போது....
பாரதியின் எழுத்துக்களை வாசிக்கிற போது....

உச்சரிக்கிறவனிடம்
கேட்கிறவனிடம்
வாசிக்கிறவனிடம் அவன் தன்னை புதுப்பித்துக் கொண்டு இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறான்....

என்றும் புதிதாய் பிறந்து கொண்டு இருக்கிறான் பாரதி 

                                                                                                                                                                    

மகாகவியே உன் பாதம் பணிகிறேன்.... 


பாரதியாருக்காக தொடுக்கப்பட்ட சில வலைப் பூக்கள்:


(பிறவிக்கவிஞர் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை கவிதைவடிவில்)



(கவிதைகளின் தொகுப்பு)

3. 






                                                                                                                                                              -விஜயன்

 

Post Comment

7 comments:

  1. பாரதிக்கு சூட்டியிருக்கும் மணிமாலையாக இதை கருதுகிறேன். அழகான எழுத்துநடை. அருமை. தொடருங்கள்.

    ReplyDelete
  2. மகாகவி பிறந்த மானமுள்ள தமிழ்மண்ணில் நானும் பிறந்ததற்காய் பெருமை அடைகிறேன்...நல்ல தொகுப்பு ..அருமை நண்பா!

    ReplyDelete
  3. வ‍ருகைக்கும் கருத்துக்கும் நன்றி படைப்பாளி,வெ.சுப்ரமணி

    ReplyDelete
  4. யுவராணி தமிழரசன் எனக்கு வழங்கிய விருதை, நான் தங்களுக்கும் வழங்க விரும்புகிறேன். ஆகவே தாங்கள் தயவு செய்து கீழுள்ள இணைப்பின் மூலம் வருகைதந்து விருதினை ஏற்றுக்கொள்ள, தங்களை அன்புடன் அழைக்கிறேன். நன்றி!
    http://vstamilan.blogspot.in/2012/02/blog-post.html

    ReplyDelete
  5. உச்சரிக்கிறவனிடம்
    கேட்கிறவனிடம்
    வாசிக்கிறவனிடம் அவன் தன்னை புதுப்பித்துக் கொண்டு இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறான்....

    என்றும் புதிதாய் பிறந்து கொண்டு இருக்கிறான் பாரதி

    ///
    அருமையான பதிவு!
    எத்தனை முறை படித்தாலும்
    ஆர்ப்பரிக்கும் இதயத்திற்கு
    அமைதி கொடுத்து ஊக்கப்படுத்தும்
    பாரதியின் வரிகள்!!

    ReplyDelete
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.

    ReplyDelete
  7. //உச்சரிக்கிறவனிடம்
    கேட்கிறவனிடம்
    வாசிக்கிறவனிடம் அவன் தன்னை புதுப்பித்துக் கொண்டு இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறான்....

    என்றும் புதிதாய் பிறந்து கொண்டு இருக்கிறான் பாரதி /// உண்மை உண்மை...

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....