Friday, December 09, 2011

ஜிமெயில் ரகசியங்கள்-7

மெயிலை டெலிட் செய்யும் முன் ஒரு நிமிடம்....
 நமக்கு வருகிற இமெயில்களை அவ்வப்போது நாம் செக் செய்து தேவையில்லாதவை,தேவையுள்ளவை என பிரிப்பது வழக்கம்.

 தேவையில்லாத இமெய்ல்களை டெலிட் செய்யலாம்...
தேவையுள்ள இமெயில்களை லேபிள்கள் போட்டு தனியே வைக்கலாம்...
அல்லது இன்பாக்ஸ் -லேயே வைத்திருக்கலாம்.
இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட இமெயில்களை என்ன செய்வது?? இதற்கு தீர்வாகத்தான் ஜிமெயிலின் ஆர்கைவிங்க் சேவை உள்ளது..


ஆர்கைவிங்கா?? அப்டீனா என்ன??
   
ஜிமெயிலின் முக்கியமான சிறப்பாம்சங்களில் ஒன்று ஆர்கைவிங்க்(Archiving) சேவை
Archive என்ற ஆங்கில சொல்லுக்கு குறைவாக பயன்படக்கூடிய தகவல்களின் மொத்த தொகுப்பு என்று அர்த்தம்.
இதை ஒரு ஒப்பீடு மூலம் எளிதாக புரிந்து கொள்ளலாம். தேவையில்லை...ஆனால் தேவைப்படும் என்று சொல்லி நம் வீடுகளில் சில பொருட்களை, புத்தகங்க்களை அல்லது சில கோப்புகளை பரண் மீது (அல்லது) Store Room-ல் போட்டு வைப்பதுண்டு.ஆர்கைவிங்க் சேவையும் கிட்ட்த்தட்ட அப்படித்தான்.
Store Room
ஆர்கைவிங்க் செய்வது எப்படி??

நீங்கள் தேவையான (ஆர்கைவ் செய்யப்போகிற) மெயில்களை செலக்ட் செய்துவிட்டு  Archive என்று கொடுத்தால் போதும்



ஆர்கைவிங்க் செய்த இமெயில் என்னாகும்??

ஆர்கைவிங்க் சேவை நாம் செலக்ட் செய்த மெயில்களை இன்பாக்ஸ்-ல் இருந்து நீக்கிவிட்டு "All mail" எனும் பகுதிக்கு மாற்றம் செகிறது. நாம் Archive செய்த மெயில்கள் அனைத்தும் All mail என்ற store Room பகுதியில் பத்திரமாக இருக்கும்.
நாம் Store room-ல் கட்டித் தூக்கிப்போட்ட அந்த மெயில்கள் நம்க்கு தேவைப்படுமாயின் Store room (All mail)க்கு சென்று அவற்றை தேடி எடுத்து கொள்ளலாம்.

All mail-ல் இருக்கும் மெயில்களுக்கு தனித்தனியே லேபில்கள் இருக்கும்... இது நம் தேடலை எளிமைப்படுத்தும்...

ஆர்கைவ் செய்த மெயில்களுக்கு லேபில் இருக்காது...



எவ்வளவு மெயில்களைத்தான் நாம் Store Room-ல் போட்டு வைக்க முடியும்??


கவலையே வேண்டாம் ஜிமெயில் நமக்கு மெயில்களை Store செய்ய நிறையவே (7655 MB  அதாவது 7.4 GB) இடம் தருகிறது.வருடக்கணக்கில் நமக்கு வரும் மெயில்களை பதிவு செய்ய முடியும்.(இடத்தை மிச்சப்படுத்துகிறேன் பேர்வழி என்று தினம் தினம் Delete செய்து கொண்டு இருக்காதீர்கள்.தேவையே கிடையாது என்று நினைக்கிற மெயில்களை மற்றும் Delete செய்யுங்கள்... )
குறிப்பு: ஜிமெயிலில் Spam மற்றும் Trash பகுதிகளில் உள்ள மெயில்கள் 30 நாட்களுக்கு ஒருமுறை Automatic - காக டெலிட் ஆகும் 

(மறக்காமல் உங்கள் கருத்துக்களை கமென்ட் பெட்டியில் பதிவு செய்யவும்...
அடுத்த பதிவில் ஒரு புதிய ரகசியத்துடன் சந்திக்கிறேன்.....)

முந்தைய ரகசியங்கள்:


 

Post Comment

1 comment:

  1. நல்ல தகவல்... பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....