Monday, August 15, 2011

இரண்டாவது சுதந்திரப் போராட்டம்



யாயிரம்  ஆண்டுகளுக்கு முன்பு உலகின் பல நாடுகள் காட்டுமிராண்டி மனிதர்களாக நாகரிகம் இல்லா வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த அந்த காலக்கட்டத்திலேயே உலகின் தலைசிறந்த நாகரிக வளர்ச்சியை கொண்டிருந்த நாடு நம் இந்தியா.

னோ
பல ஆயிரமாண்டு பரம்பரியம் அந்நியர்கள் பிடியில் அநியாயமாக சிறைபட்டு கிடந்தது.
கிரேக்கர்கள்,டச்சுக்காரர்கள்,துர்க்கியர்கள்,மொகலாயர்கள்,போர்துகீசியர்கள்,
ஆங்கிலேயர்கள்,பிரஞ்சுக்காரர்கள் என நம் நாட்டை உரிமை கொண்டாடி
 நம்மை அடிமை செய்தவர்கள் ஏராளம்.

யிரமாயிரம் ஆண்டுகள் அடிமைகளாய் கிடந்ததால் தானோ என்னவோ நம்மவர்களுக்கு "சுதந்திர தாகம்"  சுதந்திரப் போராளிகளின் ரத்தத்தால் தீர்த்து வைக்கப்பட்ட போதிலும் "அந்நிய மோகம்" மட்டும் மாயவே இல்லை. (இன்றளவும் பிரிட்டிஷ் காரர்களின் புகழ்பாடும் புண்ணியவான்கள் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.)


லகின் முதன்முதலில் நாகரிக வளர்ச்சி தோன்றிய இடங்களில் இந்தியாவும் ஒன்று

  • சிந்து சமவெளி நாகரிகம் தோன்றிய காலம் கி.மு 3250 முதல் 2750 வரை

  • உலகின் முதல் பல்கலைகழகம் இந்தியாவில் தான் துவங்கப்பட்டது.
           (காலம்: கி.மு 700
            இடம்:தட்சசீலம்
           கல்வி பயிற்றுவிக்கப்பட்ட துறைகள்: 60
           கல்வி பயின்ற மாணவர்கள்: 10000 க்கு மேல்).

  • உலகின் மிகப்பழமையான மருத்துவமுறையான ஆயுர்வேதத்தின் தாயகம் இந்தியா. மனித மனத்தின் எல்லையில்லா சக்தியை பயன்படுத்தும் வித்தைகளை (யோகக்கலை)கண்டுபிடித்த நாடு.

  • கி.மு 1000 -ல் எழுதப்பட்ட "சூரிய சித்தாந்தம்" என்கிற வானசாஸ்திர நூலில்

பூமியின் விட்டம் 7840 மைல்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது (தற்கால அறிவியலின் கணக்குப்படி 7,926.7 மைல்கள்).
பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தூரம் 2,53,000 மைல்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.(தற்கால அறிவியலின் கணக்குப்படி 2,52,710 மைல்கள்).

  • கணிததுறையில் அல்ஜீப்ரா,திரிகோணமிதி,கால்குலஸ்,நெகடிவ் நம்பர்களின் பயன்பாடு,பூச்சியம்,"பை" -யின் மதிப்பு என ஏகப்பட்ட விசயங்களை உலகிற்கு இந்தியா வளங்கியுள்ளது.


விஞ்ஞானி ஐன்ஸ்டீன் இந்தியா பற்றி இப்படி சொல்கிறார்:

"உலகத்திற்கு எண் முறையை கற்றுக்கொடுத்ததற்காக இந்தியர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம் ஏனென்றால் அது இல்லையென்றால் அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏதும் இல்லை"

ணிதம்,விஞ்ஞானம்,கலை,பண்பாடு என சகல துறைகளிலும் சகல கலா வல்லவர்களாக விளங்கியவர்கள் நாம்.

வீட்டின் மூலையில் தூசி மண்டி,சிதிலமடைந்து,அசுத்தமாக இருக்கிற ஒரு பழைய தட்டை எடுத்து கொண்டு .
இந்த தட்டில் எங்கள் தாத்தா காலத்தில் பல ரக விலையுயர்ந்த பலகாரங்கள் இருந்தன ,என் அப்பா காலத்தில் அறுசுவை உணவுகள் பரிமாரப்பட்டன,நேற்றுவரை இந்த தட்டு சுத்தமாக அழகாக இருந்தது. என்று கூறுவது போன்றது தான் இந்தியாவின் பழம்பெறுமைகளைப் பற்றி பேசுவது.பழம்பெறுமைகளை பேசுவதால் மட்டும் தட்டு சுத்தம் ஆகிவிடப்போவதில்லை.
ஆனால் இத்தனை பெறுமைகளுக்கு சொந்தமான தட்டு இப்படி மூலையில் முடங்கி கிடக்கிறதே என்று வருத்தப்படுவதோடு அதை சுத்தம் செய்யும் பணியில் இறங்கினால்  அதை சுத்தம் செய்ய முடியும்.(இது கொஞ்சம் சிரமமான பணி தான்)
அன்னா ஹசாரே போன்ற அறப்போராளிகள் மற்றும் நல்லுள்ளங்கள் அவ்வப்போது சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் ஆனால் ஊழல் பெருச்சாளிகள் அந்த பணியை செய்ய அவர்களை விடுவதில்லை.

 இந்தியா எப்போது வல்லரசு ஆகும்??


ந்திய திருநாட்டின் எதிரிகளின் பட்டியலில் முதலில் இருப்பது வறுமையும்,கல்வி அறிவின்மையுமே ( குறிப்பு: கல்வி அறிவு என்பது படித்தவர்களின் எண்ணிக்கை அல்ல) .இந்த எதிரிகள் முழுமையாக அழிக்கப்பட்டால் தான் இந்தியாவின் வளர்ச்சி பயணத்தை நாம் முழுமூச்சுடன் துவக்க முடியும்.

(உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்று என் தன்னை பிரகடணப்படுத்திக்கொண்ட அமெரிக்காவிலேயே 12% மக்கள் வறுமையின் பிடியில் உள்ளனர்).

அரசியல் வாதிகளின் எண்ணிக்கை இந்தியாவின் மக்கள் தொகையில் 1 சதவீதம் கூட இருக்காது ஆனால் அவர்களிடம் தான் இந்தியாவின் 99 சதவீத பணம் முடங்கி கிடக்கிறது.அவர்கள் வசம் உள்ள பணம் விநியோகிக்கப்பட்டால் இந்தியாவின் வறுமையை ஒரே நாளில் போக்கிவிடலாம்.

 வெள்ளைக்காரர்களிடமிருந்து நாம் விடுதலை அடைந்து 65 ஆண்டுகள் கடந்து விட்டன….
கொள்ளைக்காரர்களுக்கு எதிராக இன்னொரு சுதந்திரப்போராட்டம் தேவை…!

வாருங்கள் இன்னொரு காந்தியாய் இந்தியாவில் அவதரித்து இருக்கும் அன்னா ஹசரே க்கு ஆதரவாக அணிதிரள்வோம்



அன்னா ஹசாரே இந்த போராட்டம் பற்றி கூறியுள்ளதாவது:
 "இந்தப் போராட்டம் தனிநபர்களுக்கு எதிராகவோ, அரசியல் கட்சிகளுக்கு எதிராகவோ நடத்தப்படவில்லை. தனிநபர் ஒருவர், ஊழலால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே, இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. ஊழல் முறைகேடுகள் காரணமாக, நாட்டில் பண வீக்கமும், விலைவாசி உயர்வும் அதிகரிக்கிறது. ஊழலை முற்றிலுமாக ஒழித்துவிட முடியாது. ஆனால், அதனை 80 முதல் 90 சதவீதம் வரை, குறைக்க முடியும். ஊழலுக்கு எதிரான இந்தப் போராட்டம், இரண்டாவது சுதந்திரப் போராட்டம் போல உள்ளது. ஊழல் செய்தவர்களுக்கு, கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு ஏன் ஆயுள் தண்டனை விதிக்கக் கூடாது? என்னைக் கேட்டால், அவர்களுக்குத் தூக்குத் தண்டனை கூட விதிக்கலாம் என்பேன். அதுமட்டுமல்லாமல், ஊழலில் ஈடுபட்டவர்களிடமிருந்து, அரசின் பணம் மீட்கப்பட வேண்டும். அதன் பின்னரே, அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும். அப்போதுதான், அந்த தண்டனை முழு நிறைவு பெறும்."




சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்.

உரிமைக்கு குரல் கொடுப்போம்.
உறவுக்கு கரம் கொடுப்போம்.

வாய்மையே வெல்லும் !!

Labels:

8 Comments:

At Mon Aug 15, 11:19:00 am , Blogger Vijayan Durai said...

மறக்காம கருத்து சொல்லுங்க,பதிவு பிடிச்சிருந்தால் ஓட்டு போடுங்க

 
At Mon Aug 15, 05:54:00 pm , Blogger கவிதை வீதி... // சௌந்தர் // said...

அனைத்திடமிருந்து நாம் விடுதலை அடைவோம்....

காத்திருப்போம் விடியும் ஒருநாள்...

 
At Mon Aug 15, 05:54:00 pm , Blogger கவிதை வீதி... // சௌந்தர் // said...

சுவாரஸ்யமான தொகுப்பு...

சுதந்திரதின வாழ்த்துக்கள்...

 
At Mon Aug 15, 07:17:00 pm , Blogger ம.ஞானகுரு said...

ithu varai naan ariatha pala thagavalgalai intha pathivin moolam arinthu konden mikka nandri nanbaaaaaaaaaaaaaaaaaaaaa

 
At Sat Aug 20, 12:59:00 pm , Anonymous Anonymous said...

அருமையான கட்டுரை நண்பா

 
At Tue Sept 13, 06:18:00 pm , Anonymous Anonymous said...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் ....
பதிவுக்கு நன்றி

 
At Sun Sept 18, 08:19:00 am , Blogger stalin wesley said...

சூப்பர் .......

 
At Tue Sept 25, 08:32:00 pm , Blogger Thozhirkalam Channel said...

மிக அருமையான பதிவு..

வாழ்த்துக்கள் சகோ..

 

Post a Comment

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....

Subscribe to Post Comments [Atom]

<< Home