Saturday, March 16, 2013

கடல் மீன்கள்

(ராமேசுவரம் மீனவர்களின் வாழ்க்கைப் பதிவு)



                                               "ஒரு நாள் போவார்
ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்"


  அது ஒரு ஞாயிற்றுக்கிழமை...
நம்மில் பெரும்பாலோருக்கு ஓய்வு நாளாக மட்டுமே பழகிப்போன வாரத்தின் இறுதி நாள், இராமேசுவர மீன்பிடி கடற்கரைப் பகுதி ஒரு திருவிழா போல மனித கூட்டத்தை நிறைத்துக்கொண்டு அந்த கடலோர உழைப்பாளர்களின் உழைப்பில் குதூகளித்துக் கொண்டிருந்தது.

  குவியல் குவியலாக,கூடை கூடையாக ,பெட்டிப் பெட்டியாக கடற்கரை ஓரமெங்கும் இறந்த மீன்களின் இறுதிஊர்வலம் மிக விமரிசையாக,மீனவர்களின் ஆதரவுடன் சந்தோசமாக நடந்து கொண்டிருந்தது.

  இந்த இறந்து போன மீன்கள்தான் ,லட்சக்கணக்கான அந்த மீனவ மக்களின் உயிர் வளர்க்கும் ஆதாரமாக உள்ளது.
நம் உணவாக உருமாற்றம் அடைந்த இந்த இறந்த மீன்களுக்காக நாம் அதிகம் கவலைபடுவதில்லை , இருந்தாலும் இந்த மீன்களை நம் உண்வாக மாற்றித்தர மீனவர்கள் மிகுந்த சிரமப் படுகிறார்கள் கடலில் அவர்கள் படுகிற கஷ்டங்கள் நம்மில் பலருக்கு தெரிவதில்லை

மீனவர்கள் எப்படி மீன் பிடிக்கிறார்கள்?,அவர்கள் படுகிற கஷ்டங்கள் என்ன?

இந்த பதிவில் அவைகளை பதிகிறேன்….

    வாரத்தில் திங்கள்,புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டுமே கடலுக்கு மீன் பிடிக்க செல்ல அனுமதி உண்டு,மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் முன் மீன் வளத்துறையினரிடமிருந்து டோக்கன் என அழைக்கப்படுகிற அனுமதிச்சீட்டை பெற வேண்டும் காலை ஆறு மணிக்கு டோக்கன் விநியோகம் துவங்குகிறது இந்த அனுமதிச்சீட்டு 24 மணி நேரம் மீன் பிடிக்க அனுமதி தருகிறது, அதாவது இந்த அனுமதிச்சீட்டு  24 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும், இந்த சீட்டு இன்றி மீன்பிடிப்பது குற்றமாகும்.மீன்பிடி தொழிலுக்கு டீசல் விசைப்படகுகள்(fishing boats) பயன்படுத்தப் படுகின்றன.

அனுமதிச்சீட்டினை பெற்ற பிறகு...

   மீன்பிடி வலை,விசைப்படகை இயக்க தேவையான டீசல் அடங்கிய பேரல்கள்,பிடிக்கிற மீன்களை கெட்டு போகமல் பராமரிக்க தேவையான ஐஸ்கட்டிகள் போன்ற பொருட்களுடன் தயாராக இருக்கிற விசைபடகுகள் மீனவர்களுடன் கடலலைகளைக் கிழித்துக் கொண்டு கடலுக்குள் பாய்கிறது.

[காலை 6 மணிக்கு கடலுக்குள் சீறிப்பாய்கிற படகுகள் மறுநாள் காலையில் தான் கரைக்குத் திரும்புகின்றன.]

   கடலுக்குள் சென்றவுடன் மீனவர்கள் கரைக்கும் தங்களுக்குமான உறவை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் துவங்குகிறார்கள்…ஆழ்கடல் பகுதிகளில் தொலை தொடர்புக்கு பயன்படுத்தப்படும் செல் பேசிகள் செயல் படுவதில்லை.கடலுக்குள் உயிரை பணயம் வைத்து செல்கிற மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதலுக்கு உட்ப்பட்டு உயிரிழந்தாலோ… படகில் ஏற்படும் பிரச்சனை அல்லது இயற்கை சீற்றங்களுக்கு இரையாகினாலோ...
அவர்களுக்கு உடனடியாக உதவ அங்கு யாரும் இல்லை.

   கடலுக்குள் குறிப்பிட்ட தூரம் சென்றவுடன் கயிறு மூலம் வலையை கடலுக்குள் இறக்கிக் கொண்டே செல்கிறார்கள்,வலையை கடலுக்குள் விடும் போது படகின் வேகம் பாதுகாப்பு கருதி குறைக்கப்படுகிறது.

  கடல் நீரின் ஆழத்தைப் பொறுத்து 60 முதல் 70 பாகம் [ஒரு பாகம் =ஐந்தரை அடி] வலையை கடலுக்குள் இறக்குகின்றனர்

  இறக்கி விடப்பட்ட வலை இரண்டு முதல் மூன்று மணி நேரம் அப்படியே விடப்படுகிறது ,இந்த நேர இடைவெளியில் கடல் மீன்கள் வலைக்குள் சிக்கி கொள்கின்றன.
சில சமயங்களில் ஒரு படகின் வலை மற்ற படகுகளின் வலைகளுடன் சிக்கிக்கொள்ளும்.அப்படி வலைகள் சிக்கி கொள்ள நேரிட்டால் மீன்கள் வலைகளில் சிக்காது,எனவே ஒரு படகுக்கும் இன்னொரு படகுக்கும் இடையே 100 மீட்டர் இடைவெளி விட்டு மீன்பிடிக்கிறார்கள்.

  பின்பு கடலுக்குள் வீசியெறியப்பட்ட மீன்பிடி வலை மீனவர்களின் பெரும் முயற்சியால் மேலே இழுக்கப்படுகிறது.

  வலையை மேலே இழுக்க கயிறு மற்றும் வின்ச் (winch) எனப்படும் கயிறு சுழற்றும் கருவியும் பயன் படுத்தப்படுகிறது, வின்ச்சை சுழற்றி வலையை மேலே இழுக்கிறார்கள்

வின்ச்


  வலையை படகின் உள்ளே இழுத்த பின்பு வலையில் சிக்கி இருக்கிற மீன்கள் வகை வாரியாக தரம் பிரிக்கப் படுகிறது(வலையில் மீன்கள் மட்டுமல்லாமல்,கடற்சிப்பிகள்,சங்குகள் போன்றவைகளும் சிக்குகின்றன அவைகளும் பிரித்து வைக்க படுகின்றன)

  வலையை கடலுக்குள் வீசுதல்,வீசிய வலையை மேலே எடுத்தல்,வலையில் சிக்கிய மீன்களை பிரித்து பெட்டிக்குள் அடைத்தல் ஆகிய இந்த செயல் முறை "பாடு" என அழைக்கப்படுகிறது.

சராசரியாக ஒரு நாளில் 8 முதல் 10 "பாடு" வரை மீன் பிடிக்கிறார்கள்.

  மீனவர்கள் தங்களுக்கான காலை சாப்பாட்டை கடலுக்குள் கிளம்புவதர்க்கு முன்னரே வீட்டிலிருந்து எடுத்து வந்து விடுகிறார்கள், விசைப் படகுகளில் சமையலரை தனியாக உள்ளது, இங்கு அவர்களுக்கு தேவையான சாப்பாடு சமைக்கப்படுகிறது (மீனுடன்...)மீனவர்களுக்கு தேவையான டீ, காபி போன்ற தேவைகளையும் இந்த சமையலறை நிறைவு செய்கிறது.

மீனவர்கள் பொழுதுபோக்கிற்காக ரேடியோ எடுத்து செல்வதுண்டு. தற்போதைய கால கட்டத்தில் செல் பேசியிலேயே பொழுது போக்கு அம்சங்கள் வந்து விட்டதால் ரேடியோக்கள் காலாவதியாகி விட்டன

  இரவு நேரங்களில் கூட "பாடு" நடந்து கொண்டு தான் இருக்கும்.இரவுகளில் பாட்டரி விளக்குகள் விசைப் படகுகளை ஒளியூட்டுகின்றன..
கடல் நாள் என்று அழைக்கப்படும் மீன்பிடி நடைபெறும் நாட்களில் எல்லாம் நட்சத்திரங்களுக்கு போட்டியாக  மீன் பிடி படகுகள் கடலுக்குள் ஒளி வீசிக்கொண்டிருக்கும்…

காலையில் மீன்பிடி பணிக்கு செல்கிற மீனவர்கள்…
வெயில், மழை,காற்று என் எந்த பிரச்சனையையும் பொருட்படுத்தாமல் நாளின் 24 மணி நேரமும் தொடர்ந்து வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்…

கடல் நாட்களின் போது அவர்களின் கண்கள் தூக்கதை இழந்து விடுகிறது, அவர்களது உடல் ஓய்வை மறந்து விடுகிறது.
பல சமயங்களில் எல்லை தாண்டி மீன் பிடித்தாக காரணம் சாட்டப்பட்டு இலங்கை கடல் பாதுகாப்புப் படை வீரர்களால் (வீரர்?) சுட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்ட நேரம் முடிவடைந்தவுடன்(மீன் பிடித்து முடித்தவுடன் இல்லை?) விசைப்படகுகள் கரையை நோக்கி த் திரும்புகின்றன

மீனவர்கள் பாடுபட்டு பிடித்த மீன்கள் மீன்பிடி விசை படகின் உரிமையாளருக்குத்தான் சொந்தம்…

 மீன்கள் கடற்கரைக்கு அருகாமையில் உள்ள விசைப்படகின் உரிமையாளருக்கு சொந்தமான மீன் கம்பேனி என அழைக்கப்படுகிற இடங்களில் எடை போடப்பட்டு விநியோகஸ்தர்களுக்கும்,மீன் வியாபாரிகளுக்கும்  விற்பனை செய்யப் படுகின்றன.

கரைக்குத்திரும்பிய மீனவர்கள் மீன்களை உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட்டு தங்கள் கூலிகளை ப் பெற்றுக்கொண்டு வீடுகளுக்குத் திரும்புகிறார்கள்…

அடுத்த நாள் மீண்டும் மீன்பிடிக்க தயாராவதற்க்காக…
  லேபில்கள்: kadakarai,kadarkarai pathivukal,rameswaram patriya katturai,இராமேஸ்வரம் மீனவர்கள்,இலங்கைப் படை மீனவர் தாக்குதல்,வலை,மீன்,கடல்,விஜயன்,vijayan durai,விஜயந்துரை,கடற்கரை,கடற்கரை,கடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரை, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan

Labels: , , , ,

Monday, September 10, 2012

ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம் -2

ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம்-2


இணையத்தின் வரலாறு -பாகம்-2

முதல் பாகம் படிக்க: இணைப்பை க்ளிக் செய்யவும்


கடந்த பதிவில் இணையத்திற்கு துவக்கப்புள்ளி வைத்த அமெரிக்காவின் அச்சம் பற்றியும்,இன்று நம்மிடையே மாபெரும் ஊடகமாக (media) அவதாரம் எடுத்திருக்கிற இந்த இணையத்தின் தாத்தா ஆர்பாநெட் பற்றிய அறிமுகத்தையும் பார்த்தோம்...
அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே நடந்த பனிப்போர் காரணமாக அமெரிக்க பாதுகாப்பு துறையால்(D.O.D) ஆர்பாவின் கையில் ஒரு செயற்திட்டம் கொடுக்கப்பட்டது என்று கடந்த பதிவிலேயே கூறி இருந்தேன்.

D.O.D(அமெரிக்க பாதுகாப்பு துறை)

சில நன்பர்கள் பனிப்போர் என்றால் என்ன என்று என்னிடம் வினவியிருந்தார்கள்,அவர்களுக்காகவும்.,பனிப்போர் பற்றிய வினா மனதிற்குள் எழுந்த இன்ன பிற வாசகர்களுக்காகவும் அது பற்றி ஓரிரு வரிகளில் அடுத்த தலைப்பில் பார்த்துவிடுவோம்.. பனிப்போர் விவரம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் அடுத்த தலைப்பிற்கு தாவி விடலாம்.

பனிப்போர் (Cold War):


பொதுவாக போர்களை ஆங்கிலத்தில் மூன்று வகையாக பிரிக்கின்றனர்.
1.Hot War(ரத்த களமாக,ஆயுத பிரயோகங்களுடன் நடக்கும் போர்.)
2.Warm War(இரு நாடுகளிடையேயும் பேச்சுவார்த்தை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது ஆனாலும்,இரு நாடுகளின் தரப்பும் போரிட தயார் நிலையில் இருக்கின்றன,இவர்களிடையே எந்த நேரத்திலும் போர் நடக்கலாம் என்கிற நிலை.)
3.Cold War (இரு நாடுகளுக்கிடையேயும் நேரடியாக சண்டை நடக்காது,ஆனால் இரண்டும் தங்கள் எதிர்ப்பையும் ,ராணுவ முன்னேற்றங்களையும் காட்டி தங்களை பலமான நாடாக காட்டிக்கொள்ளும்.தங்களுக்கு பிடித்த நாடுகளுக்கு உதவியாகவும் ,பிடிக்காத நாடுகளுக்கு எதிரணியாகவும் நின்று பிற நாடுகளுக்கு உதவும்(??) .தங்கள் போரை பிற நாடுகளில் நிகழ்த்தும்,நேரடி சண்டை இருக்காது).

அமெரிக்க-ரஷ்ய பனிப்போர்:


இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இணைந்துதான் செயல்பட்டன அப்போதே இவைகளிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்தன,இரண்டாம் உலகப்போரின் முடிவில் கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்தன இவ்விரு நாடுகள் இடையே நடந்த அரசியல் மற்றும் ராணுவம் சார்ந்த முன்னேற்றங்கள் மற்றும் சாதனைகள் போன்றவற்றில் நடந்த நெறுக்கடிகள்,போட்டாப்போட்டிகள்,அணு ஆயுத சோதனைகள் போன்றவையே அமெரிக்க-ரஷ்யப் பனிப்போர் .இரண்டாம் உலகப்போரின் முடிவு தொடங்கியதிலிருந்தே அமெரிக்க-ரஷ்ய பனிப்போரும் துவங்கியிருந்த்து. 1945 முதல் 1980 வரை இது தொடர்ந்தது.
ரஷ்யா 1957-ல் ரஷ்யா தனது முதல் செயற்கைகோளை செலுத்தியது,கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை சோதனை செய்தது,அமெரிக்கா அணு அயுதங்கள் தயாரித்தது, விண்வெளி ஆராய்ச்சி செய்தது, நிலவுக்கு மனிதனை அனுப்பியது,இவை எல்லாமே பனிப்போரின் பாகமே...இணையமும் இந்த பனிப்போர் பெற்று தந்த பரிசு தான்.பனிப்போருக்கு நம் நன்றிகளை தெறிவித்துக்கொள்வோம்...

ஆர்பா:

பனிப்போர் போரின் முன்னோடியாக அமைய முடியும் என்பதை நாம் அறிவோம்.இதனால் அமெரிக்க அரசாங்கம் ரஷ்யா செய்த ஒவ்வொரு நடவடிக்கையையும் எச்சரிக்கை உணர்வுடன் கண்காணித்தது. ரஷ்யா தனது ரானுவத் தகவல் தொடர்பை துண்டித்து விட்டால் என்ன செய்வது.போர் திட்டத்தை செயல்படுத்தும் சிக்கலை எப்படி நிவர்த்தி செய்வது ,தகவல் தொடர்பு அறுபடாமல் இருக்க புதிய வழிமுறை உள்ளதா? என்கிற ஆராய்ச்சியில் ஈடுபட்டு ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்துமாறு ஆர்பா(ARPA) வை கேட்டுக்கொண்டது.ஆர்பா சில பல வருடங்களாக ஆராய்ச்சி செய்து1969-ல் ஆர்பாநெட் எனும் ஒரு திட்ட அறிக்கையை சமர்ப்பித்தது.

இணையத்தின் தாத்தா – ஆர்பாநெட்:


துண்டிப்பிலாத தகவல் தொடர்பை தருவதற்காக ஆர்பாநெட் Packet Switching எனும் கருத்துருவை (Concept)பயன்படுத்தியது.உலகின் முதல் தகவல் துணுக்கு பரிமாற்றம் [த.து.பரிமாற்றம்] (packet switching) ஆர்பா இணையத்தில் தான் நிகழ்ந்தது. Packet Switching பற்றி பிரிதொரு பதிவில் விளக்கமாக சொல்கிறேன்,தங்களை குழப்பிக்கொள்ள வேண்டாம்...
முன்னிருந்த தொழில்நுட்ப கருவிகள் மின்சுற்று விசை அமைவை (Circuit Switching) அடிப்படையாக கொண்டு இயங்கியவை தொலைபேசி,தந்தி போன்றவை. த.து பரிமாற்றத்தின் அடிப்படையில் தான் இன்றைய இணையமும் செயல் பட்டு கொண்டிருக்கிறது.இதனால் தான் ஆர்பா-நெட்டை இணையத்தின் தாத்தா என்று செல்லமாக அழைக்கிறார்கள்.

இணையத்தின் வளர்ச்சியை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்...
மின்னஞ்சல் முகவரி:vijayandurairaj30@gmail.com

Labels: , , , , ,

Thursday, May 24, 2012

பொறியியல் கல்வி-வழிகாட்டல்


என்ன படிக்கலாம்?,எங்கு படிக்கலாம்?-(கல்வி சந்தை ஒரு அலசல்)

 +2 தேர்வு முடிவுகள் வந்து விட்டன என்ன படிப்பு படிக்கலாம்,எந்த கல்லூரியில் படிக்கலாம் போன்ற அலசல்கள் மாணவர்களிடையே அதிகம் அலைமோதும் நேரம் இது... தேர்வு முடிவுகள் மாணவர்களை அதிகம் பாதிக்கிறதோ இல்லையோ பெற்றோர்களை அதிகமாகவே பாதித்து விடுகிறது, தன் பிள்ளை அதிக மதிப்பெண் வாங்கியிருக்கிறான்  (அ) வாங்கியிருக்கிறாள்,என்று சொல்லிக்கொள்வது பெற்றோர்களுக்கு ஒரு கௌரவமாக இருக்கிறது...மதிப்பெண் குறைவை அவர்கள் கௌரவ குறைச்சலாக கருதுகிறார்கள்.சமீப காலமாக மக்களிடையே இந்த எண்ண ஓட்டம் அதிகரித்துள்ளது.

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள்:

  பெரும்பான்மையான மாணவர்களும் பெற்றோர்களும் மருத்துவம் மற்றும் பொறியயல் படிப்பை மட்டுமே சிறந்த படிப்புகளாக கருதுகிறார்கள்.இவை அதிகம் சம்பாதிக்க துணை செய்யும் படிப்புகள் என்கிற மோகம் மக்களிடையே பரவலாக உள்ளது.
மருத்துவப்படிப்பிற்கான "கட்-ஆப்" மதிப்பெண் மற்றும் மருத்துவப்படிப்பிற்கான இடங்கள் (mere 1,653 (excluding 635 additional seats surrendered by self-financing colleges)  
மருத்துவத்துறையை நாடும் மாணவர்களை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மெயின்டைன் செய்கிறது.



            மெடிக்கல் கட்-ஆப் ஒரு ஒப்பீடு: நன்றி THE HINDU

பொறியியல் படிப்பில் சேர தகுதிகள் அதிகம் தேவைப்படுவதில்லை,பன்னிரென்டாம் வகுப்பு தேர்வாகி இருந்தால் மட்டும் போதும் கட் ஆப் மதிப்பெண் குறைவாக இருந்தால் பணம் கொடுத்து சீட் வாங்கி விட முடியும்,என்ஜினியரிங்க் கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகம்.ஆக என்ஜினீயரிங்க் துறையை மாணவர்கள் தேர்வு செய்கின்றனர்.

தற்போது தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்பங்கள் விற்பனை துவங்கிய ஒரே வாரத்தில், 2 லட்சம் விண்ணப்பங்கள் விற்று தீர்ந்துவிட்டன. 


பொறியியல் படிப்பின் தற்போதைய நிலை:

உண்மையான ஆர்வம் காரணமாக பொறியியல் படிப்பை தேர்வு செய்யும் மாணவர்களை விட ஆர்வக்கோளாராக,தெளிவான சிந்தனையின்றி பொறியியலை நாடும் மாணவர்கள் அதிகம்,இது மட்டுமில்லாமல் சில மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் விருப்பம் இல்லாமல் இருந்த போதிலும் அவர்களின் பெற்றோர் வற்புறுத்தல் காரணமாக இந்த படிப்பில்ல் வந்து மாட்டிக்கொள்ளும் மாணவர்களும் அதிகம்.(எங்கள் கல்லூரியிலேயே இது போன்ற நன்பர்களை நான் சந்தித்து இருக்கிறேன்).
இப்படி ஆர்வமில்லாமல் ஒரு படிப்பில் நுழையும் போது அந்த படிப்பில் பிடிப்பு இல்லாமல் போகிறது,பாடங்களை படிக்க முடியாமல்,புரிந்துகொள்ள முடியாமல் மாணவர்கள் திணருகிறார்கள்,மன அழுத்தம் அதிகரித்து படிப்பை தொடர முடியாமல் பாதியிலேயே கை விடுகிறார்கள்.சில மாணவர்கள் தற்கொலை வரை கூட செல்லத்துணிகிறார்கள்.

 1997 ம் ஆண்டில் வெறும் 90ஆக இருந்த, தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை, கடந்தாண்டு நிலவரப்படி, 535ஆக உயர்ந்தது. கடந்த 2007ம் ஆண்டில் கூட, 277 இன்ஜினியரிங் கல்லூரிகள் தான் இருந்தன. நான்கு ஆண்டுகளில் இருமடங்காக, இன்ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டில் புதியதாக மேலும், 15 இன்ஜினியரிங் கல்லூரிகள் துவங்கப்பட உள்ளன.

தமிழகத்தில் உள்ள அத்தனை கல்லூரிகளும் சிறந்த கல்லூரிகள் என்று கூறி விட முடியாது.சரியான அடிப்படை வசதிகள் இல்லாமல் கூட பல கல்லூரிகள் தங்களை சிறந்த கல்லூரிகள் என்று மார்தட்டிக்கொண்டு வலம் வந்து கொண்டு இருக்கின்றன.


                              படம்:நன்றி:ஜூ.வி

பல கல்லூரிகள் தகுதி குறைவான ஆசிரியர்களை நியமித்துக்கொண்டு தன் கல்லூரிகளில் பாடம் கற்பித்து வருகின்றன,தகுதி குறைவான ஆசிரியர்கள் அதிக சம்பலம் எதிர்பார்பதில்லை இதன் மூலம் கல்லூரி நிர்வாகம் கனிசமான தொகையை சேமிக்க முடியும் என்பதால் பெரும்பான்பை கல்வி நிறுவனங்கள் இப்படிப்பட்ட ஆசிரியர்களை நியமித்து மாணவர்களின் வாழ்வில் விளையாடுகின்றன.
ஆண்டுதோறும் நாடுமுழுவதும், 15 லட்சம் மாணவர்கள் இன்ஜினியரிங் படித்து வெளிவரும் நிலையில், இதன் எண்ணிக்கை தமிழகத்தில் மட்டும், 2.25 லட்சமாக உள்ளது.இதில் வேலைக்கு தகுதியானவர்கள் 10 முதல் 14 % மட்டுமே என்கிறது ஓர் ஆய்வு. 

 "மிகச் சிறந்த கல்லூரிகளில் வேலைவாய்ப்பு விகிதம் 95 ஆகவும், மூன்றாம் மற்றும் நான்காம் தர கல்லூரிகளில் வேலைவாய்ப்பு விகிதம், 30 முதல் 50 சதவீதமாகவும் இருக்கிறது. எனினும், 30 சதவீதம் பேர் தான் படிப்பிற்கேற்ற துறையில் வேலை பெறுகின்றனர்; 20 சதவீதம் பேர் உயர்கல்விக்கும், 30 சதவீதம் பேர் சம்பந்தமே இல்லாத வேலைக்கும் சென்று விடுகின்றனர். படிப்பை நிறைவு செய்யாமலும், வேலை கிடைக்காதவர்களும், மீதமுள்ள 20 சதவீதத்தினர்'' என்கிறார், கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி.
 
படிப்பை தேர்வு செய்யும் முன்னர் இந்த படிப்பு நமக்கு ஏற்றதுதானா?? என்று ஒருமுறை சிந்தியுங்கள்,சிந்திக்க முடியாத பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் உதவுங்கள்,என்ஜினியரிங்க் மருத்துவம் ஆகிய இரண்டு படிப்புகள் மட்டுமே நல்லது என்கிற மோகத்திலிருந்து மீண்டு மாணவர்கள் தங்களின் தகுதி,திறமை,ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் படிப்புகளை தேர்வு செய்யுங்கள்.என் ஜினியரிங்க் படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள் தயவு செய்து தாங்கள் தேர்வு செய்யும் துறை சார்ந்த தகவல்கள்,தாங்கள் தேர்வு செய்யப்போகும் கல்லூரியி தரம் போன்றவற்றை தீர்க்க்மாக ஆராய்ந்து விட்டு தேர்வு செய்யவும்.

படிப்பு முக்கியம் தான் ஆனால் வாழ்க்கை அதை விட முக்கியம்.

புள்ளி விவர உபயம்:
THEHINDU

Labels: , , , , , , , , ,

Thursday, May 10, 2012

நாம் எழுதிய பதிவு திருட்டு போயிருக்கிறதா என கண்டறிவது எப்படி?


பதிவு திருடர்களுக்கு ஒரு எச்சரிக்கை (பாகம்-3)

 பதிவு திருட்டுப் பற்றி கடந்த இரு பதிவுகளில் பார்த்தோம்,நாம் எழுதியிருக்கும் பதிவு திருட்டு போய் இருக்கிறது என்பதை எப்படி கண்டுபிடிப்பது?என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்..

பதிவு திருட்டை கண்டுபிடிப்பது எப்படி?
   இதை கண்டுபிடிக்க பல வழிகள் உள்ளது, (பல இணையதளங்கள் உள்ளன). நம்பகமான,அதே சமயம் எளிதான வழிகளை மட்டும் இவ்விடத்தில் கூறுகிறேன். தலைப்புகளில் குறிப்பிட்ட இணையத் தளத்தின் முகவரிக்கு லிங்க் கொடுத்துளேன்.குறிப்பிட்ட தளத்திற்கு செல்ல தலைப்பை க்ளிக் செய்யவும்.

 பதிவு திருடர்கள் உங்கள் பதிவை திருடியிருந்தால்…
அதை மக்களின் பார்வைக்கு இணையதளத்தில் (internet) வைத்திருந்தால்... கூகுளிடமிருந்து அவரால் தப்ப முடியாது.இணையத்தின் எந்த மூலையில் எது ஒளிந்திருந்தாலும் பெரும்பாலும் கூகுள் நமக்கு தேடித்தரும். உங்கள் பதிவின் தலைப்பை கொடுத்து தேடிப்பாருங்கள்,அல்லது பதிவில் நீங்கள் பயன்படுத்தியிருக்கும் பிரத்யேக வார்த்தைகளை (Key-Words) கொடுத்து தேடிப்பாருங்கள்.

 இது ஒரு அருமையான தளம்.நாம் தேடவேண்டிய பதிவின் முகவரியை அளித்தால் இணையத்தில் அது வேறு எங்காவது காப்பி பேஸ்ட் செய்யப்பட்டுள்ளதா என தேடி விரைவாக நம்மிடம் சொல்லும்.இது இலவச சேவைதான் ஆனால் premium சேவையையும் Copy scape தளம் வளங்குகிறது.

 இதுவும் Copyscape தளத்தினைப்போலவே செயல்படுகிறது.ஆனால் இது இலவச,முடிவிலா சேவையை தருகிறது (free, unlimited service). Plagium தளம் யாகூ சேர்ச் எஞ்சினை பயன்படுத்தி இயங்குகிறது. எனவே இதன் தேடல் முடிவுகள் வித்தியாசமானவையாக கிடைக்கும். Copyscape மற்றும் Google சேர்ச் முடிவுகளை காட்டிலும் Plagium தேடித்தரும் விசயங்கள் மாறுபட்டவையாக இருக்கும்.

 உங்கள் பதிவுகள் திருடுபோவதை கண்டறிவதை அட்டோமேட் செய்ய நீங்கள் கூகுள் அலெர்ட்ஸ் ஐ பயன்படுத்தலாம்.இதன் மூலம்உங்கள் பதிவுகள் இணையத்தில் திருடுபோய் இருக்கிறதா?? என்று தேடச்சொல்லி தேடல் முடிவுகளை உங்களுக்கு இமெயில் அனுப்புமாறு செய்ய முடியும்.இது இலவச சேவை.

 RSS FEED வழியாக நம் பதிவு காப்பி அடிக்கப்படுவதை (RSS scraping)கண்டுபிடிக்க FAIRSHARE தளம் நமக்கு உதவுகிறது.அது மட்டுமில்லாமல் நம் பதிவுகள் காப்பி பேஸ்ட் செய்யப்படுவதையும் இத்தளம் மூலம் கண்டுபிடிக்க முடியும்.இதுவும் இலவச சேவையே.

 இந்த தளத்தில் நாம் உறுப்பினர் ஆகிக்கொண்டு,அவர்கள் தருகிற Java Script ஐ நம் பிலாக்கில் நிறுவிக் கொள்ளவேண்டும். நம் பிளாகில் யாராவது  காப்பி செய்தால், எந்த பகுதி காப்பி செய்யப்பட்டது,எப்போது செய்யப்பட்டது.போன்ற தகவல்களை இந்த தளம் இலவசமாக Trace செய்து நமக்கு தெரிவிக்கும். 

  நாம் பதிவுகளில் பயன்படுத்தும் படங்களுக்கு தனிப்பெயர் கொடுக்க வேண்டும், பதிவை திருடுபவர்கள் படங்களின் பெயர்களை பெரும்பாலும் மாற்றுவதில்லை,அப்படி அவர்கள் மாற்றினால் அவை சில சிக்கல்களை தரும்.கூகுள் இமேஜ் செர்ச்"சில் நம் பதிவுகளில் பயன்படுத்தியிருக்கும் படங்களின் தலைப்புகளை கொடுத்து தேடலாம்.அல்லது நாம் பயன்படுத்தியிருக்கும் படங்களை கொடுத்தும் தேடலாம்.
கூகுள் இமேஜ் சர்ச் போலவே செயல்படும் இன்னொரு தளம் Tineye.

திருட்டுப்போன என் பதிவுகள்:
என் பதிவுகளில் முதலில் திருட்டுப்போனது  பதிவுலகில் என் இரண்டாவது பதிவான கூகுளின் பரிணாம வளர்ச்சி , நான் பதிவை எழுதிய அடுத்த நாளே அச்சு பிசகாமல் இந்த பதிவு வேறு ஒருவரின் வலைத்தளத்தில் எடுத்தாளப்பட்டது.கூகுளிடம் கொடுத்த புகாரின் பெயரில் அந்த பதிவு பிற்பாடு நீக்கப்பட்டுவிட்டது.மீண்டும் இந்த பதிவு கீழுள்ள முகவரியில் காப்பி பேஸ்ட் செய்யப்பட்டுள்ளது !!

திருட்டுப்போனவைகளில் மேலும் சில...

ஜிமெயில் ரகசியங்கள் -1                                         திருடப்பட்ட இடங்கள்
  1. http://jaffnapc.blogspot.com/2011/09/gmail-id.html மற்றும்
  2. http://www.kananiulakam.com/?p=961

இதில் ஒரு காமெடி என்னவென்றால் ஒருவர் என் வலைப்பூவில் இருந்து திருடியிருக்கிறார்,இன்னொருவர் அதை திருடியவரிடமிருந்து திருடியிருக்கிறார்.

திருடப்பட்ட இடம்:

குறிப்பு:
நம் பதிவுகள் காப்பி அடிக்கப்படுவதை தடுக்க பலர் Copy paste,Javascript,right-click போன்றவற்றை Disable செய்கிறார்கள் இது வாசகர்கள் நம் பதிவுகளில் இருந்து பின்னூட்டங்களில் மேற்கோள் காட்டுவதை தடுக்கும்,அது மட்டுமில்லாமல் நாம் தரும் தகவல்களை அவர்களின் தேவைக்காக (காப்பி அடிக்க அல்ல) பயன்படுத்திக்கொள்வதையும் தடுக்கும்.

பதிவு திருட்டை தடுக்க என்ன செய்யலாம் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
வாசகர்கள் மற்றும் பதிவுலக நன்பர்களின் கருத்துக்களும் ஆதரவும் வரவேற்கப்படுகிறது.

Labels: , , , , , ,