Wednesday, March 14, 2012

உலகின் மாபெரும் திருட்டு

பதிவு திருடர்களுக்கு ஒரு எச்சரிக்கை (பாகம்-1)
 திருட்டுக்களில் மிகவும் மோசமானது மற்றும் தலையாயது ,பிறரது கற்பனையை திருடுவது தான்.மேலோட்டமாக பார்க்கும் போது இதெல்லாம் திருட்டா?? என்று எண்ணத்தோன்றும்.
பொதுவாகவே ஒரு விசயம் நமக்கு நடக்கும் போது தான் அதன் பாதிப்புகள் என்னவென்று புரிய வருகிறது.மற்றபடி ஒரு வேடிக்கைக்கான விசயமாகவே அது இருக்கிறது. பதிவுலகத்திற்கு நான் இளையவன்.,நான் எழுதிய பதிவுகள் திருடப்படும் போது தான் பதிவுத்திருட்டின் பாதிப்புகள் எனக்கு உரைக்க ஆரம்பித்தன.அந்த பாதிப்பின் விளைவு இந்த தொடர் பதிவு...


  திவு திருட்டைப் பற்றி பல பதிவர்கள் எழுதியுள்ளனர் ஆனால் அது அவர்களின் மனக் குமுறலாகவே இருக்கும்.என் பதிவுகள் திருடப்பட்டதை கூகுள் உதவியுடன் அறிந்த போது என் நேரத்தையும்,கற்பனையையும்,உழைப்பையும் (மின்வெட்டுக்கு நடுவே பதிவு எழுதுவது மிக சிரமம்) எளிதாக காப்பி பேஸ்ட் செய்து தங்களின் பதிவு போல முகமூடி போர்த்தி காட்சிக்கு வைத்திருந்த அந்த அன்பர்களை நினைத்த போது கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது.அதே சமயம் "என் பதிவை ஒரு நபர் கவர்கிறார் என்றால் என் பதிவு அவரை கவர்ந்திருக்கிறது என்று தானே அர்த்தம்" என்று சந்தோசமாகவும் இருந்தது. பதிவுதிருட்டை மையமாக வைத்து பதிவு எழுதினால் என்ன என்று தோன்றியது...


பதிவு திருட்டு என்றால் என்ன?
      ற்பனை திருட்டு,அல்லது அறிவுத்திருட்டின் ஒரு வகை.ஆங்கிலத்தில் இதனை "Plagiarism" என்று அழைக்கிறார்கள்.

கற்பனை திருட்டா??
     ருவரின் கற்பனையை அல்லது அறிவை இன்னொருவர் எப்படி திருட முடியும்..என்று நம் மனம் சிறிது சந்தேகம் கொள்ளலாம்.ஒருவரின் கருத்துக்களை தன்னுடையவை என்று இன்னொருவர் சொல்லி கொள்ள முடியுமல்லவா? இதை தான் கற்பனை திருட்டு என்று சொல்கிறார்கள்.(தமிழ் அகராதியை புரட்டிய போது இலக்கிய திருட்டு என்று மொழி பெயர்ப்பு கிடைத்தது).

இது எப்படி திருட்டாகும்?
    வ்வொரு படைப்பின் பின்னாலும் ஒரு படைப்பாளியின் உழைப்பு இருக்கிறது.சிந்தனை,நேரம்,கற்பனை என்று பல விசயங்களை செலவு செய்து தான் படைப்புகள் உருவாக்கப்படுகின்றன.உடல் மற்றும் உள்ளம் சார்ந்த உழைப்புகளின் சாரமாக இருக்கும் படைப்பை நோகாமல் தன்னுடையது என்று சொல்லிக்கொள்பர்கள் திருடர்கள் தான்

அது சரி எதெல்லாம் பதிவு திருட்டு??
  திவு திருட்டு என்பது வெறும் காப்பி பேஸ்ட் சமாச்சாரம் மட்டுமல்ல

       1.பிறருடைய கருத்துக்களை,கற்பனைகளை,படைப்புகளை       தன்னுடையது என்று அறிவிப்பது
       2.தகவல் எடுக்கப்பட்ட இடத்தை குறிப்பிடாமல் விடுவது.
       3.ஏற்கனவே கூறப்பட்ட விசயத்தை தன் கருத்தை போல திரித்துக் கூறுவது
       4.மேற்கோள் காட்டும் போது மேற்கோளை பற்றி குறிப்பிடாமல் இருப்பது
       5.மேற்கோள் காட்டியதற்கும் விளக்கத்திற்கும் சம்பந்தமில்லாமல் இருப்பது.
       6.மேற்கோள் காட்டிய கருத்திற்கு தவறான பொருள் கூறுவது
       7.பிறரின் படைப்புகளில் மாற்றம் செய்தல்
       8.அச்சு பிசகாமல் காப்பி பேஸ்ட் செய்தல்

அடுத்த பதிவு  பதிவு திருட்டு மற்றும் பதிவு திருடர்களின் வகைகளை பற்றியது படிக்கத்தவறாதீர்கள்...


தகவலுக்கு உதவியவை:
    1.dictionary.com
    2.wikipedia
    3.பால்ஸ் தமிழ் மின் அகராதி
    4.plagiarism.org
  
 வாசகர்கள் மற்றும் பதிவுலக நன்பர்களின் கருத்துக்களும் ஆதரவும் வரவேற்கப்படுகிறது.
       

 

Post Comment