Sunday, October 21, 2012

நகர (நரக) மழை

           மழைநீரில் தன்னை முழுவதும் நனைத்திருக்கும் மின் கம்பி:         இடம்:சென்னை கோயம்பேடு


மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்த மழை


(மழையை ரசிப்பதற்கும்,மழையில் நனைவதற்கும் நம் அன்றாட பணிகள் மற்றும் அலுவல்களுக்கிடையில் நேரம் இருப்பதில்லை,அன்பின் ஊற்றாக வானம் பூமி மீது ஊற்றும் மழை மீது நமக்கு பெறும்பாலும் வெறுப்பு தான் வருகிறது,நகர வாழ்வில் மழை என்பது நரகமாக தான் இருக்கிறது)

அன்றைக்கு மழையின் வீச்சு பூமி மீது கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது.மழையை திட்டிய படியே என் அலுவலக பணிக்கு பேருந்து பிடிக்க சாலையில் நடந்து போய் கொண்டிருந்தேன்...சரசர ஓசையில் மெல்லிய குரல் ஒன்று கேட்டது... அது வெறும் மழையின் சரசரப்பு தான் யாரோ பேசுவது போலவே என் காதுகளுக்கு கேட்டது.துளித்துளியாக பூமி வரும் மழையில் ஒரு துளி மெல்ல என் காதருகே வந்து என்னோடு பேச துவங்கிற்று...

இப்பொழுதெல்லாம்...
எங்களை ஏன் யாரும் ரசிப்பதே இல்லை?
எங்களின் வாழ்வின் அதாரம் "நீர்" என்று
எப்போதும் எங்களை வாயார புகழ்வீர்களே!
எங்கே போனீர் எங்களை வரவேற்காமல்...

நித்தமும் நீங்கள் வேண்டுகிறவர்கள்
மொத்தமாய் வந்திருக்கிறோம்
வரவேற்க வில்லை என்றாலும் பரவாயில்லை
கொட்டித்தீர்க்கும் எங்களை திட்டி தீர்க்காதீர்கள்

சாலைகளை சிதைத்து
சாக்கடைகளை நிறைத்து
தொல்லை தர பூமி வந்த 
தொல்லை கும்பல்
இல்லை நாங்கள் !

மரங்களின் கையசைப்பில் மனமிரங்கி
தரை இறங்கி தரணி வந்தவர்கள்
வற்றிக்கொண்டிருக்கும் உயிர்த்துளியை
துளித்துளியாய் நிறைக்க வந்தவர்கள்

வேலைகளை முடக்க வந்த 
முட்டாள் மழையென்று
முனுமுனுப்பு செய்பவர்களே !

அன்றாட வாழ்வை பாதிக்க வந்த
படுபாவி மழையென்று
பல்லவி பாடுபவர்களே !

கொஞ்சம் கவனியுங்கள்

ஓய்வின்றி சுற்றும் பூமி
காய்ந்து விடாதிருக்க
கடவுள் அனுப்பிவைத்த
கருணை மனுக்கள் நாங்கள்

பால் வற்றிப்போன 
பூமியின் தனங்களில்
மீண்டும் பால் சுரக்க
மருந்தாய் வந்தவர்கள்

எம்மை சேமிக்க சொல்லி 
விளம்பரங்கள் செய்கிறீரே !

நாங்கள் நகரக்கூட
இந்த நகரத்தில் இடமில்லை
வரவுக்கே "வழி"யில்லை
எம்மை எங்கே சென்று சேமிப்பீர்

பாராட்ட சொல்லியோ!
வசைபாட சொல்லியோ!
உங்களை ஒருபோதும்
நாங்கள் கேட்டதில்லை !

எங்களுக்கும் அரசியல் தெரியும்
அதிகம் பெய்து அழிக்கவும் செய்வோம் !
அளவாய் பெய்து காக்கவும் செய்வோம் !
பெய்யாதிருந்து வதைக்கவும் செய்வோம் !

நீங்கள் வசிக்கும் உலகை
வளர்த்து விட்டவர்கள் நாங்கள்
உறுதியாய் கூறுவோம்
உங்களுக்கு உயிர் தந்தவர்கள் நாங்கள்

பூமி காப்பது உங்களுக்கு கடமை
பூமி காப்பது எங்களுக்கு உரிமை
                                                                                           -விஜயன்



இது எனது 50 வது பதிவு.நான் கவிதைகளை தனியாக வானம்பாடி என்ற தளத்தில் எழுதி வருகிறேன்,இனி கடற்கரையிலும் எழுத தீர்மானித்துள்ளேன்,கவி வானில் சுற்றி திரியும் வானம்பாடி இனி என் எண்ண அலைகள் சங்கமிக்கும் கடற்கரையிலும் பறக்கும்.





 

Post Comment

Monday, October 15, 2012

ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம் -7



கடந்த பதிவுகளில் நாம் ஆர்பா-நெட் பற்றிய வரலாற்று பின்னனியையும்,ஆர்பா-நெட் பற்றியும் ஓரளவு புரிந்து கொண்டோம்,இந்த பதிவில் ஆர்பா-நெட் தற்கால இணையமாக வளர்ந்த கதையை பார்ப்போம்..

ஆர்பாவின் உண்மையான நோக்கம் :


 ர்பாவின் நோக்கம் கால பங்கீடு (Time Sharing).இதை தெளிவாக பார்க்கலாம்.ஆரம்ப கால ஆர்பாவில் நான்கு நிறுவனங்கள் இணைந்தன என்று முன்பே பார்த்தோம் .அந்த நான்கு நிறுவனங்களின் கணினிகளும் மைய கணினிகளாக (Host Computers) செயல்பட்டன.


ஆர்பாவின் கட்டுமான மாதிரி

  கால பங்கீடு எனப்படும் Time Sharing முறை மூலமாக ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினியை பார்வையிடுவது ,பல கணினிகள் மூலம் ஒரே கணினியை பார்வையிடுவது மற்றும் எங்கோ ஒரு மூலையில் உள்ள கணினியின் தகவல்களை பார்வையிடுவது,அல்லது அந்த கணினியை பயன்படுத்துவது போன்ற விசயங்கள் சாத்தியப்பட்டன.இது தான் ஆர்பா நெட் டின் உண்மையான நோக்கம்.

இதை எதற்காக செய்ய வேண்டும்:

ஆரம்பத்தில் ஆர்பாவில் இணைந்த நிறுவனங்கள் ராணுவத்திற்கு தேவையான ஆராய்ச்சிகளை செய்து கொடுக்கும் நிறுவனங்கள் என்று முந்தைய கேள்வி-பதில் பகுதியில் பார்த்தோம்.அந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் கணினிகளை இணைப்பதன் மூலம் அந்த நிறுவனங்கள் தங்கள் ஆராய்ச்சி முடிவுகளை பகிர்ந்து கொள்ளவும்,ஆராய்ச்சிகளை பகிர்ந்து செய்யவும் முடியும். 

ர்பா நெட் பற்றிய புராணத்தை வரலாற்று பார்வையில் இருந்து விடைபெற்று கொண்டு  இனி அறிவியல் கண்ணோட்டத்தில் காணலாம்....


அறிவியலை எளிய முறையில் சொல்லும் போது தப்பர்த்தம் செய்து கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்று எழுத்தாளர் சுஜாதா சொல்வதுண்டு.ஒரு விசயத்தை தவறாக புரிந்து கொள்வதை விட அதை புரிந்து கொள்ளாமலேயே இருப்பது மேல் என்பது என் கருத்து ஆகவே வாசக நன்பர்கள் சந்தேகங்கள் ,நான் கூறு விசயங்கள் தவறாக இருப்பின் இருப்பின் தாராளமாக கேளுங்கள்.தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இனி ஆர்பா செயல் பட்ட விதம்....

1969 -ல் ஆர்பாவில் இணைந்த இரு கணினிகள் தங்களுக்குள் "LOGIN" எனும் வார்த்தையை பரிமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு "LO" என்று இரண்டு எழுத்தை மட்டும் பரிமாறிக்கொண்டு படுத்து விட்டன என்று இத்தொடரின்  பாகம்-4 ல் பார்த்தோம்.

இரு எழுத்தை மட்டுமே பரிமாறிக்கொண்ட அந்த நிகழ்வை ஆர்பா தன் வெற்றியின் தொடக்கமாக கொண்டாடியது,ஆர்பாவின் விஞ்ஞானிகள் அதை ஒரு புரட்சியின் துவக்கம் என்று தீர்க்கதரிசனம் சொன்னார்கள்..

ஆரம்ப கால ஆர்பா:

எப்படி சாத்தியமானது இணைப்பு:

 1
         2
                3

கணினிகளை இணைக்க மூன்று முக்கிய விசயங்கள் தேவை..

1.கணினிகள் (இணைப்பை ஆதரிக்கும் கணினிகள்)
2.இணைப்பு கருவிகள் மற்றும் இணைப்பு கம்பிகள்
3.இணைப்பை நிர்வகிக்கும் வழிமுறைகள் (protocols)



1.ஆர்பாவில் இணைந்த கணினிகள் :

                                                                                   ஆரம்ப கால ஆர்பா





ரம்ப கால ஆர்பாவில் நான்கு நிறுவனங்கள் இணைந்திருந்தன...
அவற்றின் பெயர்களையும் அவைகளின் இயங்கு தளத்தின் (OS platform) பெயர்களும் கீழே

  • UCLA பல்கலை; கணினி , இது SDS Sigma 7 எனும் ரகம் Sigma Experimental operating system எனும் இயங்கு செயலியை (OS) கொண்டிருந்தது
  • Stanford Research Institute கணினி SDS-90 எனும் வகை கணினி, இது Genie operating system எனும் இயங்கு செயலியால் இயங்கியது.
  •  சான்டா பார்பராவில் இருந்த கலிபோர்னியா பல்கலை; IBM 360/75 எனும் கணினி அதன் இயங்கு தளம் OS/MVT operating system.
  • UTAH ல் DEC PDP-10 ரக கணினி Tenex operating system -த்தால் இயங்கியது.


ர்பா வெவ்வேறு OS உள்ள கணினிகளையும்,வெவ்வேறு ரக கணினிகளையும் இணைத்தது ,ஆர்பாவை கணினி சாரா (Machine Independent) மற்றும் இயங்குதளம் சாரா (OS independent) என்றும் சொல்லலாம்.தற்கால இணையமும் இதே அடிப்படையில் தான் செயல் படுகிறது.

2.இணைப்பு கருவிகள்:

ஆர்பா-நெட் கணினிகளை ஏற்கனவே அமெரிக்க நகரங்களின் தொலைபேசி இணைப்பிற்காக போடப்பட்ட கம்பிகள் மூலமாக IMP எனப்படும் கருவியின் உதவியுடன் மேற்குறிப்பிட்ட நான்கு கணினிகளை இணைத்தது,பிற்பாடு நிறைய கணினிகள் இணைக்கப்பட்டன.

3.இணைப்பு நெறிமுறைகள் (protocols):





கணினிகள் எப்படி தங்களுக்குள் 

தகவல்களை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று கூறும் வழிமுறைகளே Protocols .











இதை நாம் ஒரு ஒப்பீடு மூலம் எளிதில் புரிந்து கொள்ளலாம்,சந்திப்பு சாலைகளில் நிற்கும் வண்டிகளை ஒழுங்குபடுத்தி அனுப்ப சிக்னல் தேவைபடுகிறது அல்லது போக்குவரத்து காவலர் தேவைப்படுகிறார்.


இல்லையென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது.





தை போலவே கணினிகளில் பரிமாறிக்கொள்ளப்படும் தகவல்கள் எவ்வாறு செல்ல வேண்டும்,எந்த முறையில் இருக்க வேண்டும் என்றெல்லாம் நெறிமுறைகளை (protocols).வகுத்திருக்கிறார்கள்.

அடுத்த பதிவில் இன்னும் சுவரசியாமான  விசயங்களுடன் உங்களை சந்திக்கிறேன்..

 

Post Comment

Sunday, October 07, 2012

ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம்-6



இந்த தொடருக்கு தொடர் ஆதரவு தரும் அன்பு நெஞ்சங்களுக்கு என் நன்றிகள் !

ந்த வாரம் வாசக நன்பர்களிடமிருந்து கேட்கப்பட்ட சில கேள்விகளை ஆராய்வோம்.


கேள்விகள்:

1.ராணுவத்தின் பகுதியாக உருவான ஆர்பா ஏன் பல்கலைகழகங்களின் கணினிகளை இணைக்க வேண்டும்?.
2.இணையத்தில் கணினிகளை இணைக்க ஏன் IMP எனப்படும் இடைமுக கருவியை  பயன் படுத்த  வேண்டும்,நேரடியாக கணினிகளை இணைக்க முடியாதா?
3.போர்கள் தாண்டி பிழைத்திருக்க தானே இணையம் ஏற்படுத்தப்பட்டது பின் ஏன் அது போர் தாங்கும் சக்தியற்று இருக்கிறது?


கேள்விகளுக்குள் செல்லும் முன் சில வரிகள்.. :
  
 ர்பாநெட் தன் பயணத்தை துவக்கியிருந்தது 1960 களில், அன்றைய காலகட்டத்தில் கணினிகள் நாம் பயன்படுத்தும் கணினிகள் போல் இல்லை (காண்க:படம்).


உலகின் முதல் கணினி " ENIAC " 1946 இது உருவாகவும் போர் தான் காரணம்!


1960 களில் கணினிகள்...

Burroughs 205

 இதன் விலை ஒரு மில்லியன் அமெரிக்கன் டாலர் !! (அப்போதைய டாலர்)

  Burroughs B55000  விலை 5 மில்லியன் டாலர் !


IBM 7090

 அளவு,பயன்படுத்தும் மின்சக்தி போன்ற பல விசயங்களில் இவை பெரியவைகளாக இருந்தன (விலை !) .ஒரு கணினியே அறை முழுவதையும் ஆக்கிரமிக்கும் வல்லமை படைத்திருந்தது.(சிறு சிறு வேலைகளை செய்யும் சில சின்ன (!!) கணினிகளும் அப்போது இருந்தன.நம் தற்கால கால்குலேட்டர்கள் செய்யும் வேலையை கூட இவற்றால் செய்ய முடியாது J )
ஆர்பா பிறந்த 1960 ஆம் வருடம் அமெரிக்காவில் 2000 கணினிகள் இருந்ததாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

பதில்கள்....



கேள்வி1:


ராணுவத்தின் பகுதியாக உருவான ஆர்பா ஏன் பல்கலைகழகங்களின் கணினிகளை இணைக்க வேண்டும்?.


 ணினிகளின் விலை அவைகளின் அளவு போன்ற விசயங்கள்  பொது மக்களை கணினிகள் அருகே நெறுங்க முடியாமல் தடுத்தன.காலப்போக்கில் டிரான்சிஸ்டர்,நுண் செயலிகள் என்று விஞ்ஞான முன்னேற்றங்கள் வளர வளர ... அறை முழுதும் ஆக்கிரமிப்பு செய்திருந்த கணினிகளை விரல்களில் தவழ ஆரம்பித்திருக்கின்றன.
கணினிகள் பெரிய வணிக நிறுவனங்கள்,அரசாங்கம்,அறிவியல் ஆராய்ச்சி நிலையங்கள், மற்றும் அரசு சார் நிறுவனங்கள் போன்ற இடங்களில் மட்டுமே இருந்தன.
அமெரிக்க அரசுக்கும்,ராணுவத்திற்கும் உபகரணங்களை தயாரித்து கொடுக்கவும்,அவை சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட நிறுவனங்களின் கணினிகளையுமே ஆர்பா-நெட் இணைத்தது.
இதற்கான முக்கிய காரணம் கால பங்கீடு (Time Sharing).ஆராய்ச்சி நிறுவனங்கள் அத்தனையும் தங்கள் ஆராய்ச்சி முடிவுகளையும்,வேறு இடத்தில் உள்ள கணினிகளில் உள்ள தகவல்களை பங்கீட்டு கொள்ளவும் உதவியாக இருக்கும் படிக்கு ராணுவத்திற்கு உதவியாக இருந்த நிறுவனங்களின் கணினிகள் இணைக்கப்பட்டன.

கேள்வி-2

இணையத்தில் கணினிகளை இணைக்க ஏன் IMP எனப்படும் இடைமுக கருவியை  பயன் படுத்த  வேண்டும்,நேரடியாக கணினிகளை இணைக்க முடியாதா?

 ணையம் மூலம் தகவல் தொடர்பு ஆரம்பிப்பதற்கு முன்பே தொலைபேசி தொடர்புகள் செயல் பாட்டில் இருந்தன, இவை அனலாக் (Analog) வகையில் தகவல்களை பரிமாறிக்கொள்வன.ஆனால் கணிப்பொறிகளில் உள்ள தகவல்கள் டிஜிட்டல் முறையில் இருப்பவை.ஆர்பாநெட் கணினிகளை தொலைபேசி இணைப்பு மூலமாகவே இணைத்தது.தொலைபேசி இணைப்புகள் மூலம் அனலாக் தகவல்களையே அனுப்ப இயலும்.டிஜிட்டல் தகவல்களை பரிமாற்றும் தகுதி அவற்றுக்கு கிடையாது. இந்த டிஜிட்டல் தகவல்களை அனலாக் ஆக மாற்றி கம்பி வழி அனுப்பவும்,அவற்றை மீண்டும் கணிகளிடையே டிஜிட்டலாக பரிமாறவும் ஒரு கருவி தேவை,அவை தான் IMP .இந்த காலத்தில் இதே வேலையை மோடம் (MO-DEM) எனும் கருவி செய்கிறது.Modulator -Demodulator எனும் விர்வின் சுருக்கமே மோடம், Modulator-அனலாக் தகவலை டிஜிட்டலில் மாற்றும்,Demodulator-டிஜிட்டலை அனலாக் காக மாற்றும். (இந்த பதில் சிலருக்கு குழப்புவது போல் இருக்கலாம்.இது பற்றி விரிவாக பின்வரும் பகுதிகளில் பார்க்கலாம்) 

கேள்வி -3

போர்கள் தாண்டி பிழைத்திருக்க தானே இணையம் ஏற்படுத்தப்பட்டது பின் ஏன் அது போர் தாங்கும் சக்தியற்று இருக்கிறது?


 ஆர்பா உருவாகவும் இணையம் உருவாகவும் காரணமாக போர் இருந்தது.உருவாக்கப்பட்ட காலத்தில் போர்களை தாங்கும் வல்லமையுள்ள ஒரு இணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தோன்றியது ,ஆனால் அவை உருவாக்கப்பட்ட நோக்கமும் அவை அடைந்த நோக்கமும் வேறு தான் அறிவியலின் வரலாற்றில் இந்த "நோக்கம் நிறைவேற்றாமை" புதிதல்ல ஒரு நோக்கத்துடன் துவங்கி வேறு வழியில் சென்று வேறொன்றை கண்டறிவது அறிவியல் வரலாற்றில் அடிக்கடி நிகழ்வது.உதாரணத்திற்கு இரும்பு போன்ற எளிதில் கிடைக்கும் பிற உலோகங்களை தங்கமாக மாற்ற வேண்டும் என்கிற நோக்கத்துடன் துவங்கிய ஆராய்ச்சி வேதியியல் என்கிற புதிய துறை ஒன்றின் அச்சாரமாக அமைந்தது,இன்னமும் ரசவாத வித்தையை விஞ்ஞானம் கண்டுபிடிக்கவில்லை .அதே மாதிரி ரான்ட்ஜென் எனும் விஞ்ஞானி கதிரியக்கம் பற்றி ஏதோ ஒரு விசயத்தை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது எதேச்சையாக  சில கதிர்கள் வெளிப்பட்டன அவற்றை அவர் பின்பு பார்த்து கொள்ளலாம் என்று " X " என்று குறித்து வைத்தார் பெயர் வைக்காமல் அவர் விட்டுப்போன அந்த கதிர்கள் தான் நம் எழும்புகளையும்,உடல் உள்ளுருப்புகளையும் எக்ஸ்-ரே படம் பிடித்து தருகின்றன.
 இணையமும் கூட இப்படித்தான் எதற்கோ துவங்கி இப்படி அவதாரம் எடுத்திருக்கிறது....


மாயங்கள் தொடரும்...







 

Post Comment

Tuesday, October 02, 2012

மகான் ! காந்தி மகான் !



காந்தி மகானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ன்று தேசத் தந்தை காந்தியடிகளின் 141வது பிறந்த நாள். அவரை சிலருக்கு பிடிக்கும் ,சிலருக்கு பிடிக்காது.அவர் நல்லவரா? கெட்டவரா? என்று என் நன்பர்கள் பலருடன் நான் விவாதித்திருக்கிறேன் 
அவர் நல்லவரா ? கெட்டவரா ? என்று எனக்கு தெரியாது....
ஆனால் அவர் நிச்சயம் மகாத்மா என்பதை நான் உறுதியாக கூறுவேன்.

அவரை பற்றிய சில தகவல்களை இன்று நாம் தெரிந்து கொள்வோம்.இத்தொகுப்பு ஆனந்த விகடன் வெளியிட்டது.,இன்று இதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.


மகாத்மா காந்தி - 25


  • காந்திஅரிச்சந்திரனின் ரசிகர்சத்திய சோதனையாளர்அரையாடைப் பக்கிரிஅகிம்சைப் போராளி!
  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக 1869 அக்டோபர் 2-ல் பிறந்தார்மகாத்மா காந்தியாக 1948 ஜனவரி 30-ல் மறைந்தார்காந்தியின் பிறந்தநாள் உலகம் எங்கும் சர்வதேச அகிம்சை தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது!
  • காந்தி பிறந்த அக்டோபர் 2-ம் தேதி நாட்டின் மூன்றாவது மற்றும் இறுதி தேசிய விடுமுறைகுடியரசு தினம்சுதந்திரம் தினம் ஆகியவை மற்ற இரண்டு விடுமுறைகள்!
  •     முதன்முதலில் `தேசத் தந்தை’ என்று காந்தியை அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், `மகாத்மா’ என்று அழைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்!
  •     காந்தி தொடங்கிய `இந்தியன் ஒப்பீனியன்’ குஜராத்திஇந்திதமிழ் மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வெளியானது!
  •     தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இவர் வைத்த பெயர்தான் `ஹரிஜன்’ என்பது அதன் பொருள், `கடவுளின் குழந்தைள்’!
  •     `உடற் பயிற்சியின் அரசன் நடைப் பயிற்சி’ என்று சொன்ன காந்திலண்டனில் சட்டம் பயிலும்போதுஒரு நாளைக்கு 10 மைல்கள் நடந்தே சென்று காசை மிச்சப்படுத்திப் படித்தார்!
  •     காந்தி ஒரு துறவியைப் போன்றவர்தான்அனால்அவரிடம் நகைச்சுவை உணர்வுக்குப் பஞ்சமே இருந்தது இல்லை. 1931-ல் லண்டனுக்குச் சென்றபோதுபிரிட்டிஷ் அரசரை முதலும் கடைசியுமாகச் சந்தித்தார் காந்திஆறாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்துவிட்டு பக்கிங்ஹாம் அரண்மனையைவிட்டு அவர் வெளியில் வந்தபோதுஅவரைப் பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டனர்அதில் ஒருவர்இவ்வளவு குறைவான ஆடையுடன் வந்திருக்கிறீர்களே குளிரவில்லையா’ என்று கேட்டார். `எங்கள் இருவருக்கும் தேவையான அளவு ஆடைகளையும் சேர்த்து மன்னரே அணிந்திருந்தார்’ என்று பதில் அளித்தார் காந்தி!
  •     வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போதுகாந்தி சொன்ன வாக்கியம்தான்..... `செய் அல்லது செத்து மடி!’
  •     கொள்கை இல்லாத அரசியல் வேலை செய்யாமல் வரும் செல்வம்மனசாட்சியை ஏமாற்றி வரும் இன்பம்பண்பு இல்லாத அறிவுநியாயம் இல்லாத வணிகம்மனிதம் மறந்த அறிவியல்தியாகம் இல்லாத வழிபாடு’இவை காந்தி குறிப்பிட்ட ஏழு சமூகப் பாவச் செயல்கள்!
  •     தபால் அட்டைகள்தான் உள்ளதிலேயே மிகவும் சிக்கனமான தகவல் தொடர்புச் சாதனம் என்று கருதியவர் காந்தி’!
  •     கடிதங்கள் மிக நேர்த்தியாக மடிக்கப்பட்ட பின்பே உறையில் இட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருப்பார்காரணம்கடிதம் மடிக்கப்பட்டு இருக்கும் முறையிலேயே உங்களைப்பற்றிய அபிப்ராயம் தோன்றிவிடும் என்பார்!’
  •     யாருக்குக் கடிதம் எழுதினாலும் `தங்களின் கீழ்ப்படிந்த சேவகன்’ என்று எழுதியே கடிதத்தை முடிப்பார்!
  •     கிழிந்த துணிகளைத் தானே தைத்துக்கொள்வார்எவ்வளவுதான் வறுமையில் ஒருவர் இருந்தாலும்உடுத்துகின்ற உடைகள் மிகத் தூய்மையாக இருக்க வேண்டும் என்பார்அதை அவரும் கடைப்பிடித்தார்!
  •     ஒவ்வொரு இரவும் நாட்குறிப்பு எழுதும் பழக்கம்கொண்டவராக இருந்தார்அதுதான் பின்னாளில் அவரின் சுயசரிதையாகவும் மலர்ந்தது!.
  •     `சட்ட மறுப்பு இயக்கப் போராட்டத்தைக் கைவிடுங்கள்’ என்று வெள்ளையர்கள் சொன்னபோதுஅதற்கு காந்திதன் 11 அம்சத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால்போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார்அதில் 11-வதாக இருந்த திட்டம், `சுய பாதுகாப்புக்குத் தேவையான வெடி பொருட்களையும் ஆயுதங்களையும் தயாரித்துக்கொள்வதற்கான உரிமம் வழங்குதல்.’ அகிம்சையைப் போதித்தவருக்குள் எப்படி இந்த எண்ணம் உதித்தது என்பது இன்று வரை பலரின் கேள்வி!
  •     எந்த நிலையிலும் ஆங்கிலேயரை உடல் அளவில் காயப்படுத்துவதை அவர் அனுமதிக்கவில்லை. `நாம் அவர்களை எதிர்த்துப் போராடவில்லைஅவர்கள் நம் மீது திணிக்கும் அதிகாரத்தைத்தான் எதிர்க்கிறோம்’ என்று அதற்கு விளக்கமும் அளித்தார்!.
  •     தான் தவறு செய்தால்அதற்காக மெளன விரதம் ஏற்பதும்... பிறர் தவறு செய்தால்அந்தத் தவறு செய்தவர் அதை உணர தான் உண்ணாவிரதம் இருப்பதையும் வாடிக்கையாகக்கொண்டு இருந்தார்இந்த குணம்அவர் தாய் புத்தலிபாயிடம் இருந்து வந்ததாகும்!.
  •     ஆரம்ப காலங்களில்ஆசிரமத்தில் நடக்கும் தினசரி பிராத்தனைக் கூட்டங்களில், `கடவுள் உண்மையானவர்!’ என்று சொல்லிவந்தார்விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, `உண்மையே கடவுள்’ என்று மாற்றிக்கொண்டார்!.
  •     இந்தியாவுக்கு வெளியே முதன்முதலில் காந்தியின் தபால் தலையை வெளியிட்ட நாடு எது தெரியுமாஅவர் தன் வாழ்நாளியில் மிதிக்காத நாடான அமெரிக்காதான் அதுஇது நடந்தது 1961 ஜனவரி 26-ல்!.
  •     ராட்டைச் சக்கரத்துக்கு முன் காந்தி அமர்ந்து இருப்பதுபோல இருக்கும் புகழ்பெற்ற புகைப்படம்மார்கேட் பூர்க் ஒயிட் என்பவரால் பிரபல லைஃப் இதழுக்காக எடுக்கப்பட்டது!.
  •  `என்னிடம் சீடனாக வந்து சேர்ந்த குரு’ என்று காந்தி அழைத்து வினோபா பாவேவைத்தான்!.
  •     மார்டின் லூதர்கிங்தலாய் லாமாஆங் சான் சூகிநெல்சன் மண்டேலா,அடால்ஃபோ பெரேஸ் எஸ்க்யூவெல் ஆகிய ஐந்து உலகத் தலைவர்கள் நோபல் பரிசு பெற்றதற்கு முக்கியக் காரணம்காந்திய வழியைப் பின்பற்றியதுதான் என்று ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்.ஆனால்காந்திக்கு நோபல் பரிசு தரவில்லை!.
  •     இந்தியா சுகந்திரம் அடைந்தபோதுஅதைக் கொண்டாட மறுத்தவர்கள் இரண்டு பேர்ஒருவர் காந்திஇன்னொருவர் தந்தை பெரியார்!.
  •     போர்பந்தரில் பிறந்த காந்தி ஆரம்பித்த சபர்மதி ஆஸ்ரமத்தின் நினைவாகத்தான் `சபர்மதி எக்ஸ்பிரஸ்’ ரயில் விடப்பட்டது.ஆனால், 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்தில் இந்த ரயில் எரிக்கப்பட்டுகுஜராத் கலவரத்துக்கு வித்திடப்பட்டது.காலத்தின் முரண்களில் இதுவும் ஒன்று!.
  •     `கனவில் இருந்து நிஜத்துக்குஇருளில் இருந்து வெளிச்சத்துக்குமரணத்தில் இருந்து அமரத்துவத்துக்கு!’- காந்தி நினைவு மண்டபத்தில் எழுதிவைக்கப்பட்டு இருக்கும் வாசகம் இது!.

பிதாவே! உமக்கு எம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

 

Post Comment