இந்த தொடருக்கு தொடர் ஆதரவு தரும் அன்பு நெஞ்சங்களுக்கு என் நன்றிகள் !
இந்த வாரம் வாசக நன்பர்களிடமிருந்து கேட்கப்பட்ட சில கேள்விகளை ஆராய்வோம்.
கேள்விகள்:
1.ராணுவத்தின் பகுதியாக உருவான ஆர்பா ஏன் பல்கலைகழகங்களின் கணினிகளை இணைக்க வேண்டும்?.
2.இணையத்தில் கணினிகளை இணைக்க ஏன் IMP எனப்படும் இடைமுக கருவியை பயன் படுத்த வேண்டும்,நேரடியாக கணினிகளை இணைக்க முடியாதா?
3.போர்கள் தாண்டி பிழைத்திருக்க தானே இணையம் ஏற்படுத்தப்பட்டது பின் ஏன் அது போர் தாங்கும் சக்தியற்று இருக்கிறது?
கேள்விகளுக்குள் செல்லும் முன் சில வரிகள்.. :
ஆர்பாநெட் தன் பயணத்தை துவக்கியிருந்தது 1960 களில், அன்றைய காலகட்டத்தில் கணினிகள் நாம் பயன்படுத்தும் கணினிகள் போல் இல்லை (காண்க:படம்).
உலகின் முதல் கணினி " ENIAC " 1946 இது உருவாகவும் போர் தான் காரணம்!
1960 களில் கணினிகள்...
Burroughs 205
இதன் விலை ஒரு மில்லியன் அமெரிக்கன் டாலர் !! (அப்போதைய டாலர்)
Burroughs B55000 விலை 5 மில்லியன் டாலர் !
IBM 7090
அளவு,பயன்படுத்தும் மின்சக்தி போன்ற பல விசயங்களில் இவை பெரியவைகளாக இருந்தன (விலை !) .ஒரு கணினியே அறை முழுவதையும் ஆக்கிரமிக்கும் வல்லமை படைத்திருந்தது.(சிறு சிறு வேலைகளை செய்யும் சில சின்ன (!!) கணினிகளும் அப்போது இருந்தன.நம் தற்கால கால்குலேட்டர்கள் செய்யும் வேலையை கூட இவற்றால் செய்ய முடியாது J )
ஆர்பா பிறந்த 1960 ஆம் வருடம் அமெரிக்காவில் 2000 கணினிகள் இருந்ததாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
பதில்கள்....
கேள்வி1:
ராணுவத்தின் பகுதியாக உருவான ஆர்பா ஏன் பல்கலைகழகங்களின் கணினிகளை இணைக்க வேண்டும்?.
கணினிகளின் விலை அவைகளின் அளவு போன்ற விசயங்கள் பொது மக்களை கணினிகள் அருகே நெறுங்க முடியாமல் தடுத்தன.காலப்போக்கில் டிரான்சிஸ்டர்,நுண் செயலிகள் என்று விஞ்ஞான முன்னேற்றங்கள் வளர வளர ... அறை முழுதும் ஆக்கிரமிப்பு செய்திருந்த கணினிகளை விரல்களில் தவழ ஆரம்பித்திருக்கின்றன.
கணினிகள் பெரிய வணிக நிறுவனங்கள்,அரசாங்கம்,அறிவியல் ஆராய்ச்சி நிலையங்கள், மற்றும் அரசு சார் நிறுவனங்கள் போன்ற இடங்களில் மட்டுமே இருந்தன.
அமெரிக்க அரசுக்கும்,ராணுவத்திற்கும் உபகரணங்களை தயாரித்து கொடுக்கவும்,அவை சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட நிறுவனங்களின் கணினிகளையுமே ஆர்பா-நெட் இணைத்தது.
இதற்கான முக்கிய காரணம் கால பங்கீடு (Time Sharing).ஆராய்ச்சி நிறுவனங்கள் அத்தனையும் தங்கள் ஆராய்ச்சி முடிவுகளையும்,வேறு இடத்தில் உள்ள கணினிகளில் உள்ள தகவல்களை பங்கீட்டு கொள்ளவும் உதவியாக இருக்கும் படிக்கு ராணுவத்திற்கு உதவியாக இருந்த நிறுவனங்களின் கணினிகள் இணைக்கப்பட்டன.
கேள்வி-2
இணையத்தில் கணினிகளை இணைக்க ஏன் IMP எனப்படும் இடைமுக கருவியை பயன் படுத்த வேண்டும்,நேரடியாக கணினிகளை இணைக்க முடியாதா?
இணையம் மூலம் தகவல் தொடர்பு ஆரம்பிப்பதற்கு முன்பே தொலைபேசி தொடர்புகள் செயல் பாட்டில் இருந்தன, இவை அனலாக் (Analog) வகையில் தகவல்களை பரிமாறிக்கொள்வன.ஆனால் கணிப்பொறிகளில் உள்ள தகவல்கள் டிஜிட்டல் முறையில் இருப்பவை.ஆர்பாநெட் கணினிகளை தொலைபேசி இணைப்பு மூலமாகவே இணைத்தது.தொலைபேசி இணைப்புகள் மூலம் அனலாக் தகவல்களையே அனுப்ப இயலும்.டிஜிட்டல் தகவல்களை பரிமாற்றும் தகுதி அவற்றுக்கு கிடையாது. இந்த டிஜிட்டல் தகவல்களை அனலாக் ஆக மாற்றி கம்பி வழி அனுப்பவும்,அவற்றை மீண்டும் கணிகளிடையே டிஜிட்டலாக பரிமாறவும் ஒரு கருவி தேவை,அவை தான் IMP .இந்த காலத்தில் இதே வேலையை மோடம் (MO-DEM) எனும் கருவி செய்கிறது.Modulator -Demodulator எனும் விர்வின் சுருக்கமே மோடம், Modulator-அனலாக் தகவலை டிஜிட்டலில் மாற்றும்,Demodulator-டிஜிட்டலை அனலாக் காக மாற்றும். (இந்த பதில் சிலருக்கு குழப்புவது போல் இருக்கலாம்.இது பற்றி விரிவாக பின்வரும் பகுதிகளில் பார்க்கலாம்)
கேள்வி -3
போர்கள் தாண்டி பிழைத்திருக்க தானே இணையம் ஏற்படுத்தப்பட்டது பின் ஏன் அது போர் தாங்கும் சக்தியற்று இருக்கிறது?
ஆர்பா உருவாகவும் இணையம் உருவாகவும் காரணமாக போர் இருந்தது.உருவாக்கப்பட்ட காலத்தில் போர்களை தாங்கும் வல்லமையுள்ள ஒரு இணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தோன்றியது ,ஆனால் அவை உருவாக்கப்பட்ட நோக்கமும் அவை அடைந்த நோக்கமும் வேறு தான் அறிவியலின் வரலாற்றில் இந்த "நோக்கம் நிறைவேற்றாமை" புதிதல்ல ஒரு நோக்கத்துடன் துவங்கி வேறு வழியில் சென்று வேறொன்றை கண்டறிவது அறிவியல் வரலாற்றில் அடிக்கடி நிகழ்வது.உதாரணத்திற்கு இரும்பு போன்ற எளிதில் கிடைக்கும் பிற உலோகங்களை தங்கமாக மாற்ற வேண்டும் என்கிற நோக்கத்துடன் துவங்கிய ஆராய்ச்சி வேதியியல் என்கிற புதிய துறை ஒன்றின் அச்சாரமாக அமைந்தது,இன்னமும் ரசவாத வித்தையை விஞ்ஞானம் கண்டுபிடிக்கவில்லை .அதே மாதிரி ரான்ட்ஜென் எனும் விஞ்ஞானி கதிரியக்கம் பற்றி ஏதோ ஒரு விசயத்தை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது எதேச்சையாக சில கதிர்கள் வெளிப்பட்டன அவற்றை அவர் பின்பு பார்த்து கொள்ளலாம் என்று " X " என்று குறித்து வைத்தார் பெயர் வைக்காமல் அவர் விட்டுப்போன அந்த கதிர்கள் தான் நம் எழும்புகளையும்,உடல் உள்ளுருப்புகளையும் எக்ஸ்-ரே படம் பிடித்து தருகின்றன.
இணையமும் கூட இப்படித்தான் எதற்கோ துவங்கி இப்படி அவதாரம் எடுத்திருக்கிறது....
மாயங்கள் தொடரும்...
Tweet |
குட் வொர்க்
ReplyDeleteவிளக்கமான பதில்கள்...
ReplyDeleteநன்றி...
அன்பின் விஜயன் - நல்ல பதில்கள் - தகவல்கள் அனைத்துமே பதில்களில் உள்ளன். விளக்கங்கள் படிப்பதற்கு எளிதாக உள்ளன. பாராட்டுகள் - நல்வாழ்ழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅரிய தகவல்கள் .தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்.
ReplyDeleteஅரியதொரு தகவல் பகிர்வுகள்! பாராட்டுதல்களும் வாழ்த்துக்களும்!
ReplyDeleteஅரியதொரு தகவல் பகிர்வுகள்! பாராட்டுதல்களும் வாழ்த்துக்களும்!
ReplyDelete