Saturday, September 15, 2012

பவர்ஸ்டாரின் வாழ்க்கை வரலாறு...


பவர் ஸ்டார் பற்றி சமீபத்தில் வெளியாகியிருக்கும் செய்தி இது:


 "வங்கியில் பல கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 65 லட்சம் பெற்றுக்கொண்டு, பல மாதங்கள் ஆகியும் கடன் தொகையையும் வாங்கித்தரவில்லை, கமிஷனையும் திருப்பி தரவில்லை என்று சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பாலசுப்புரமணியன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது

 இதையடுத்து பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதனைத்தொடர்ந்து 15 நாள் காவலில் புழல் சிறையில் பவர் ஸ்டார் அடைக்கப்பட்டிருக்கிறார்."


அனைவருக்கும் வணக்கம்.,

  வர் ஸ்டார் சீனிவாசனை வைத்து மொக்கை போடாத நபர்களே இல்லை என்று அடித்து கூறலாம்.அந்த அளவிற்கு அவர் நமக்கெல்லாம் பழக்கப்பட்டு போன  நபர்.அவரை பிரபல நடிகராக மாற்றியவர்கள் நாம் தான்., இதற்கு சாட்சியாக பேஸ்புக் பக்கங்கள்,இணைய பக்கங்கள்,வலைப்பூக்கள் என பவர் ஸ்டாரின் பவர் இருக்கிறது.
 னக்கு தானே விளம்பரம் செய்து கொண்ட நபர் என்று பலர் இவரை விமர்சிக்கிறார்கள் எனக்கென்னவோ...இவரை பிரபல படுத்தியவர்கள் மக்களாகிய நாம் தான் என்று தோன்றுகிறது .
 சரி விசயத்துக்கு வருவோம் "யார் இவர்?" இவர் எதற்காக இப்படி செய்ய வேண்டும்? "இவர் நல்லவரா? கெட்டவரா?" "இவர் ஏன் கைது செய்யப்பட்டார்? பல கேள்விகளுக்கு விடை தேடி இந்த பதிவில் பயணிப்போம்...

யார் இவர் ?


 சினிமா உலகில் நுழைந்து ஐந்தே ஆண்டுகளில் அதிக அளவு பிரபலமாகி அசத்திய அசாத்திய நபர் இவர்.

  சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்து வருகிறார் ,அண்ணா நகரிலும் இவரக்கு ஒரு வீடு உள்ளது , அண்ணா நகரில் பவர்ஸ்டாருக்கென அலுவலகம் உள்ளது. தன் பெயருக்கு முன் டாக்டர் பட்ட்த்தை சேர்த்து கொள்ளும் இவர் ஒரு அக்கு பஞ்சர் டாக்டர்.
 இவர் மீது போலி டாக்டர் வழக்கு, எய்ட்ஸ்க்கு சிகிச்சை தருவதாக 10 ஆண்டுகளுக்கு முன்பே கோடிக்கணக்கில் மோசடி செய்தது உட்பல பல வழக்குகள்  நிலுவையில் இருக்கிறதாம்!. தற்போதௌ இந்த பட்டியலில் புதிய வழக்கொன்றும் சேர்ந்து கொண்டது.
  ஆரம்பத்தில்  ஊரை ஏமாற்றி  சம்பாதித்த (??) பணத்தைக் கொண்டு பத்து ஆண்டுகளுக்கு வாங்கிப்போட்ட இடங்களில் இரண்டை 40 கோடிக்கு விற்று  அதை வைத்தே பத்து படங்களை எடுத்திருக்கிறார் என்கிறார்கள். இதில் ஒரு இடம் வானகரத்தில் வியாபாரம் ஆனது என்றும், அந்த இடத்தின் முன்பகுதியில் இரண்டாயிரம் சதுர அடியை வைத்துக் கொண்டு, அதில் தற்போது டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஆரம்பித்திருகிறார் என்றும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
  தன் சொந்த தயாரிப்பில் படம் எடுத்து அதில் தானே நடித்து தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்த இந்த ஸ்டார் அரசியலில் குதிக்கவும் பற்பல முயற்சிகள் எடுத்துள்ளார்.
 இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்துவிட்டு பின் கட்சியிலிருந்து விலக்கப்பட்டதாகவும்,அ.தி.மு.க வில் சேர முயன்று சேர இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டாதகவும் தகவல்கள் உள்ளன.

"பவர்" சிறையில் அடைக்கப்பட காரணம் என்ன??


படம் உபயம்:Facebook


  சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தொழிலை மேம்படுத்துவதற்காக ரூபாய் 10 கோடி பணம் கேட்டு நண்பரை அணுகி இருக்கிறார். நண்பர் "பிசினஸ் கன்சல்டிங்" நடத்தி வரும் சினிமா ஸ்டார் பவர் ஸ்டார் சீனிவாசனை தெரியும் என்று கூறி, அவரிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்திருக்கிறார். அண்ணா நகரில் உள்ள பவர் ஸ்டார் அலுவலத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. அதன்பின்னர் பண விசயமாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள பவர்ஸ்டார் வீட்டிற்கு நண்பருடன் பாலசுப்பிரமணியன் இரண்டு முறை சென்றுள்ளார். அப்போது பாலசுப்பிரமணியனிடம் பேசிய பவர்ஸ்டார், சொத்து மதிப்பின் பேரில்தான் நான் பைனான்ஸ் செய்வது வழக்கம் என்று சொல்லி அதற்கான ஆவணங்களை கேட்டுள்ளார்.

 பாலசுப்பிரமணியனும் ஆவணங்களை கொடுத்துள்ளார். அதன்பின்னர் உங்களுக்கு ரூ.10 கோடி கடனை ஒரு வாரத்தில் பெற்றுத்தருகிறேன். ஆனால் டாக்குமெண்ட் வெரிவிக்கேஷன் காரணமாக நீங்கள் ரூ.65 லட்சம் தரவேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே பாலசுப்பிரமணியமும் ரூ.65 லட்சம் கொடுத்துள்ளார்.

 அதன் பிறகு ஒரு வாரம் கழித்து பவார் ஸ்டாரை சந்திக்க அலுவலகம் சென்ற போது அவர் படப்பிடிப்பில் இருப்பதாக அலுவலக ஊழியர்கள் கூறியுள்ளனர். அதன்பின் பாலசுப்பிரமணியம் அண்ணாநகரில் உள்ள அவர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அங்கும் அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. தொலைபேசியிலும்  தொடர்பு கொள்ள முடியவில்லை. வீடு, அலுவலகம், தொலைபேசி என்று மும்முனை போராட்டத்தை போராடி பார்த்துவிட்டு ஓய்ந்து போன பாலசுப்பிரமணியன் கடைசி முயற்சியாக சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை நேரில் சந்தித்தார்.

வர்ஸ்டாரிடம் தான் ஏமாற்றம் அடைந்தது பற்றி மிக விரிவாக மூன்று பக்கத்துக்கு புகார் மனு கொடுத்தார். பணம் கைமாறியதற்கான ஆதாரங்களையும் கொடுத்தார்

 வர் ஸ்டார் மீது உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பேரில் அவர் புழல்  சிறையில் 15 நாள் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்


                                                          

பவர் போன பவர் ஸ்டார்:

 யார் என்ன கேள்வி கேட்டாலும்,கலாய்த்தாலும் (இவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில்) கோப்ப்படாமல்,பொறுமையாக,நிதானமாக சிரித்துக்கொண்டே பதில் சொல்லும் பவர் ஸ்டாரின் பின்னால் இப்படி ஒரு பின்னனி இருக்கும் என்று நாம் யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டோம்.
 பண மோசடி செய்து "கம்பி நீட்ட" முயற்சித்த "பவர் "தற்சமயம் சென்னை புழல் சிறையில் கம்பி எண்ணுகிறார்.

எப்படி இருந்த நான்.. இப்படி ஆயிட்டேன்..

பவர் ஸ்டார்-வாழ்க்கை கூறும் நீதி:

 " கோமாளி போல நடித்து  ஏமாளியாக்க ஒரு கூட்டம் காத்திருக்கிறது எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள் மக்களே !"

வாசகர்களுக்கு ஒரு கேள்வி "பவரு நல்லவரா?,கெட்டவரா?" மறக்காமல் கமென்டில் சொல்லுங்க...
                                                            -விஜயன்


 

Post Comment

10 comments:

  1. poor ஐ ஏமாற்றி power ஆகிவிட்டரோ!என்ஹப் புத்துல என்ஹ்டப் பாம்பு இருக்கும்னு தெரியல.

    ReplyDelete
  2. அறுபத்தி ஐந்து லட்சம் கொடுக்குற அளவுக்கு இருக்குறவரு , ஏன் கடன் வாங்கினாரு? அதுக்கு டுபாகூர் ஆள்தான் கிடைத்தாரா? இல்லீகல் பிசினஸ்? அதுவும் வெறும் வேரிபிகசுனுக்கு கமிசனா யாராவது தருவாங்களா? 6.5% processing fee seems more than what banks are charging I guess. உள்ள ஒன்னு நடக்கும், வெளிய ஒன்னு சொல்லுவாங்க, இதுலயும் அதுதான், உண்மை வெளிச்சத்துக்கு வரவே வராது!

    ReplyDelete
  3. reply IlayaDhasan said...
    பாஸ் "அறுபத்தி ஐந்து லட்சம் கொடுக்குற அளவுக்கு இருக்குறவரு , ஏன் கடன் வாங்கினாரு?" நு கேட்கிறீர்கள் நீங்க ஏன் இப்படி யோசிக்க கூடாது இந்த ஆள் அந்த 65 லட்சத்தையும் இது மாதிரி ஊரை ஏமாற்றித்தான் சேர்த்திருக்கிறார்...
    "எது உண்மை நு தெரியல் பாஸ் இப்போதைக்கு இதுதான் நீயூஸ் பவர் ஸ்டார் மாஸ்"

    ReplyDelete
  4. சுபாஸ்ரீSun Sept 16, 06:26:00 pm

    கோல்மால் நடக்கிறது...
    சோழியும் குடுமியும் சும்மா ஆடாது.
    பவரின் தரப்பையும் அறிந்து தான் எதையும் சொல்ல முடியும்.

    ReplyDelete
  5. கோல்மால் நடக்கிறது...
    சோழியும் குடுமியும் சும்மா ஆடாது.
    பவரின் தரப்பையும் அறிந்து தான் எதையும் சொல்ல முடியும்.

    ReplyDelete
  6. // சுபாஸ்ரீ said...
    கோல்மால் நடக்கிறது...
    சோழியும் குடுமியும் சும்மா ஆடாது.
    பவரின் தரப்பையும் அறிந்து தான் எதையும் சொல்ல முடியும்.//
    ஆமாம்.. ஆமாம்...

    ReplyDelete
  7. anakennavo something rong?bos

    ReplyDelete
  8. anakennavo something rong?bos

    ReplyDelete
  9. power nallavar thaan pa....tamilnadu thaan avara cheat pannudhu.,

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....