(இணைய உலகின் வரலாறு -1)
எந்த தகவல் கேட்டாலும்அள்ளி கொண்டுவந்து கொட்டும்அற்புத விளக்காக இருக்கிற அற்புத உலகம்.நாம் அனைவரையும் உலகத்தின் எந்த மூலையில் எங்கே இருந்தாலும் இணைத்து வைக்கிற சாதனம்.நான் இந்த கட்டுரையை எழுதவும் நீங்கள் இந்த கட்டுரையைவாசிக்கவும் துணையாக இருக்கும் இந்த மாய உலகம்.எப்படிஉருவானது?, ஏன் உருவானது?,அதன் செயல்பாடு என்ன? என்றெல்லாம் இந்த தொடர்பதிவின் மூலம்கொஞ்சம் விரிவாக நான் உங்களுடன்பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.வாசகர்கள் நன்பர்கள் தங்கள் ஆதரவையும் ,கருத்துக்களையும் மறக்காமல்தெரிவிக்கவும்.
இணைய உலகம் தோன்ற அவசியம் என்ன ??
“மனிதன் ஒரு சமூக விலங்கு” என்று புகழ்பெற்ற வாசகம் ஒன்று உண்டு. தன் கருத்துக்களை,எண்ணங்களை,மற்றும் தகவல்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்,பிற மனிதர்களோடு,உறவுகளோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்று மனித மனம் குரங்கிலிருந்து மனிதனாக மாறத் துவங்கியதிலிருந்தே சிந்திக்க துவங்கியிருந்தது.
தகவல் தொடர்பு ஆதிமனிதர்களிடமிருந்து சைகைகள்,புகை குறியீடுகள்,தூதுவர்கள்,புறா விடு தூது என படிப்படியாக வளர்ந்து இன்று நாம் பயன்படுத்தும் இந்த இணையம் வரை வளர்ந்திருக்கிறது.
இணையம் என்கிற இந்த மாய உலகம் உருவாக மையப்புள்ளியாக இருந்தது தகவல் தொடர்பு தான்..,ஆனால் இணைய உலகம் உருவாக முக்கிய காரணமாக இருந்த விசயம் பயம் ! .
இணையத்திற்கு அச்சாரம் இட்ட அமெரிக்காவின் அச்சம்:
ரஷ்ய அரசாங்கம் (USSR) அக்டோபர் 4, 1957 ஆம் வருடம் பூமியின் வளிமண்டலத்தை ஆராய்ச்சி செய்து பூமிக்கு தகவல் அனுப்ப கூடைபந்தைவிட சற்றே அளவில் பெரியதான ஸ்புட்னிக் என்ற ஒரு செயற்கைகோளை விண்ணில் ஏவியது.
இதுதான் அந்த ஸ்புட்னிக்-1
விண்ணுக்கு செலுத்தப்பட்ட உலகின் முதல் செயற்கைகோள் இதுவே.ரஷ்யாவின் இந்த செய்கையை கண்டு அமெரிக்கா திடுக்கிட்டது. இதற்கு போட்டியாக ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்கிற விடாப்பிடியான எண்ணத்தில் இருந்தது.ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியின் பிடியில் இருந்து அமெரிக்கா மீள்வதற்குள் லைக்கா எனும் நாய்குட்டியுடன் அதே வருடம் நவம்பர் 3 -ல் ஸ்புட்னிக்-2எனும் அடுத்த செயற்கைகோளை அனுப்பியது.
அமெரிக்காவின் அச்சம்
அதிர்ச்சி,ஆச்சரியம் இவைகளுடன் அச்சமும் அமெரிக்காவை கவ்விக்கொண்டது.ரஷ்யா விண்ணில் செயற்கை கோள் அனுப்புகின்றதென்றால் தன் நாட்டின் மீது ஏவுகணை அனுப்ப முடியுமே என்று பயம் கொண்டது அமெரிக்கா.
அமெரிக்காவின் பயத்தின் விளைவாக அமெரிக்க பாதுகாப்பு துறையின் (DOD)உட்பிரிவாக ஆர்பா (ARPA) Advanced Research Project Agency என்ற அமைப்பு 1958 ல் துவங்கப்பட்டது.
ஆர்பா துவங்கப்பட்டு 18 மாதங்களில் ஆர்பாவின் விஞ்ஞானிகளால் ஸ்பட்னிக் செயற்கைகோளிற்கு போட்டியாக எக்ஸ்ப்ளோரர்-1 என்ற செயற்கைகோள் தயாரிக்கப்பட்டது. இது ஸ்புட்னிக்கை விட கொஞ்சம் மேம்பட்டதாக தயாரிக்கப் பட்டிருந்தது 1958 ஜனவரி 31 –ம் திகதி வின்னை தொட்டது அமெரிக்காவின் முதல் செயற்கை கோளான எக்ஸ்ப்ளோரர்-1
எக்ஸ்ப்ளோரர்-1
அமெரிக்க ராணுவத்தின் உட்பிரிவாக துவங்கப்பட்ட இந்த ஆர்பா தான் இப்போது நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இணையத்திற்கான விதையாக அமைந்தது.
ஆர்பா-இணையத்தின் விதை:
ஆர்பா அமைப்பானது விண்வெளி ஆராய்ச்சி,தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பு போன்ற விசயங்களுக்காக அமைக்கப்பட்டிருந்தது. ஆர்பா அமைப்பு, பாதுகாப்பு துறையின் பிரிவாக மட்டும் இருக்கும் விதமாக, முதல் செயற்கைகோளை ஏவிய கையோடு விண்வெளி ஆராய்ச்சிக்காக NASA எனும் அமைப்பை தனியாக உருவாக்கியது அமெரிக்கா.
அச்சமயத்தில் அமெரிக்காவில் பனிப்போர் காலம்.போர் காலங்களில் தகவல் தொடர்பு சாதனங்களுக்கான(Electronic-Communication)இணைப்புகள் சில இடங்களில் அவ்வப்போது துண்டிக்க படுவதுண்டு.இதனால் மொத்தமாக அனைத்து ரானுவ தளவாடங்களிடையேயும். தகவல் பறிமாற்றம் தடைப்பட்டது.தனது ராணுவத் தளவாடங்களிடையே தகவல் தொடர்பு தங்கு தடையின்றி நல்ல முறையில் அமைய வேண்டும் என விரும்பிய அமெரிக்க அரசு இந்த செயற்திட்டத்தை(Project)ஆர்பாவின் கையில் ஒப்படைத்தது.
ஆர்பா பலமாக ஆராய்ச்சி செய்து ஆர்பாநெட் என்கிற திட்டம் ஒன்றை சமர்ப்பித்தது.இந்த ஆர்பாநெட் தான் இன்றைய இணையத்தின் தாத்தா. நம் முன்னே பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கும் இணையத்தின் காரணகர்த்தாவான ஆர்பாநெட் பற்றியும் அதன் வளர்ச்சிகள் பற்றியும் விவரமாக தெரிந்து கொள்ள அடுத்த வாரம் வரை காத்திருங்கள்...
மாய உலகம் தொடரின் பிற பாகங்களை படிக்க இங்கே க்ளிக்கவும்
Tweet |
ஆச்சரியாமான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteஅன்பின் விஜயன் - அரிய தகவல்கள் - தகவல்களை விளக்கி பகிர்ந்தமை நன்று - நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteEniya vaalthu.
ReplyDeleteVetha.Elangatilakam.
உங்களுக்கு என் நல்வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்க.
ReplyDeleteவலைச்சரம் மூலம் வந்தேன். தொடர்கிறேன்.
ReplyDeleteசிறப்பான தகவல்கள்....