சுட்டெரிக்கும் வெயில் சுடாமல் இருக்க ...
- மூளையில் 75%
- ரத்தத்தில் 83%
- எழும்புகளில் 22%
- தசைகளில் 75%
- கல்லீரலில் 86%
- சிறுநீரகங்களில் 83% -தண்ணீர் உள்ளது.
அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிவிட்டது, இந்த வருடம் அக்னி நட்சத்திரம்
ஆரம்பிப்பதற்கு முன்பே வெயிலின் தாக்கம் ஆரம்பமாகி விட்டது என்று கூட சொல்லலாம்.திருச்சி,சென்னை
ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 39.6 டிகிரி செல்சியஸ் (103.28 டிகிரி பாரன்ஹீட்) ஆக
பதிவாகி உள்ளது.இது மனித உடலின்
நார்மல் வெப்பநிலையை விட அதிகம்., அக்னி நட்சத்திரம் வெயிலின் ஆக்ரோசத்தை இன்னும்
அதிகரிக்க வைக்கும்,வருகிற நாட்களில் வெப்பநிலை இன்னும் அதிகரிக்கும்.பொதுவாக மே
மாதத்தில் தான் வெயில் உச்சம் தொடும்.
வெயில் வைக்கும் ஆப்புகள்:
மக்களிடையே சிறியதும் பெரியதுமாக வெயில் சார்ந்த பாதிப்புகள்
பரவ ஆரம்பித்துள்ளது.வேர்க்குரு,வெயில் கட்டிகள்,சரும கோளாறுகள்,உதடு
வெடிப்பு,எடைகுறைவு,மஞ்சள்காமாலை,டைபாய்டு,வயிற்றுப்போக்கு,அம்மை,ஹீட் ஸ்ட்ரோக்
போன்ற நோய்கள் மக்களை குறிவைத்து காத்திருக்கிறது.
இதில் "ஹீட் ஸ்ட்ரோக்" என்கிற பாதிப்பு கோமா வரை மனிதனை தள்ளி
விடும் தன்மை கொண்டது...
அதென்ன ஹீட் ஸ்ட்ரோக் ?
வெயிலில் அதிகம் அலைகிற நபர்களை
குறி வைத்தே இந்த ஹீட் ஸ்ட்ரோக் (heat stroke) பாதிக்கிறது.வெயில்
மனித உடலில் உள்ள நீர் சத்தை வெளியேற்றுகிறது.
வெயிலில் அதிக நேரம் இருக்கும்
போது உடலிலுள்ள நீர் தன்மை அதிகமாக வெளியேறிவிடுகிறது,இதனால் ரத்தத்தின்
கெட்டித்தன்மை அதிகரிக்கிறது.கெட்டியான ரத்தத்தை பம்ப் செய்ய குட்டி இதயம் ரொம்ப
சிரமப்படுகிறது,உடலின் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் மயக்கம் ஏற்பட்டு அந்த
குறிப்பிட்ட நபர் கீழே விழுகிறார்,சரியான முதலுதவி அளிக்க படாவிடில்
பாதிக்கப்பட்ட நபரின் உயிருக்கே ஆபத்தாக முடியும் நிலை ஏற்படும்.
தண்ணீர்... தண்ணீர்...
வெயில் சார்ந்த நோய்களின் முக்கிய காரணம் நீரின் அளவு உடலில்
குறைந்து போவதன் காரணத்தினால் தான் வருகிறது.
தண்ணீரின் அவசியம்:
மனித உடலில் நீரின் சதவீதம் 79%
மனித உடலில் உள்ள பொருட்களில் தண்ணீருக்குத்தான்
பெரும்பான்மை.ரத்த ஓட்டம்,உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை சப்ளை செய்வது,உணவை
சக்தியாக மாற்றுவது,உடல் உறுப்புகளை சத்துக்களை(nutrients) உறிஞ்ச
வைப்பது,உடல் உறுப்புகளின் உராய்வை குறைப்பது,கழிவுகளை வெளியேற்றுவது என மனித
உடலின் ஒவ்வொறு செயல்பாட்டுக்கும் நீர் அவசியமாகிறது.
சுட்டெரிக்கும் வெயில் சுடாமல் இருக்க...
1.தண்ணீர்
அதிகம் குடிக்க வேண்டும்,வெயிலில் செல்லும்போது கையில் ஒரு தண்ணீர் புட்டி(Water bottle) எடுத்து செல்வது
நல்லது.தாகமாக,வறட்சியாக உணர்கிற சமயங்களில் எல்லாம் தயங்காமல் தண்ணீர்
குடித்து விடுங்கள்.
2.தினசரி
குளியல் அவசியம்.
3.குழந்தைகள்
வெயிலில் விளையாட அனுமதிக்க கூடாது.விளையாட தோதான நேரம் காலை 6 முதல் 8 மற்றும்
மாலை 4 முதல் 6.
4.கார்பன்
வாயு அடைக்கப்பட்ட குளிர்பானங்களை முடிந்த வரை தவிர்க்க வேண்டும்.பழச்சாறுகள்,இளநீர்,நீராகாரம்,மோர்,பால்
போன்ற இயற்கை பானங்களை பருகுவது நலம்.
5.ஈ
மொய்க்கும் பண்டங்களை தவிர்க்க வேண்டும்.(இது வெயில் காலம் மட்டுமல்ல
எக்காலமும் பொருந்தும் அறிவுரை).
6.இறுக்கமான
உடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.
7.வெயிலின்
சூட்டை தணிக்கிறேன் பேர்வழி என்று குளிர்பானங்கள்,ஐஸ் க்ரீம்கள் அதிகம்
சாப்பிடுவது உடற்சூட்டை அதிகரிக்கும்.
8.காபி
(caffine
உடைய
பானங்கள்) அதிகம் சாப்பிடுவது உடற்சூட்டை அதிகரிக்கும்.
9.இயற்கை
கோடையின் கொடையாக அளித்துள்ள வெள்ளரி,தர்பூசணி,நுங்கு போன்ற கோடைக்கு
இதமளிக்கும் விஷயங்களை அதிகம் சாப்பிடலாம்
10.முடிந்த
வரை வெயிலில் அலைவதை தவிர்த்து விடுங்கள்.வெயிலில் அதிகம் அலைபவர்கள்
குளுக்கோஸ் கலந்த நீரை எடுத்து செல்வது நல்லது.
Labels: summerspecial, tamil article, கட்டுரை, செய்திக்கட்டுரை, வெயில், வெயில்கொடுமை
5 Comments:
வெயில்ல கூல்டிரிங்ஸ் குடிக்கறதுதானே ஸ்டைல் னு நினைக்கிறாங்க
த.ம. 2
தகுந்த நேரத்திற்கான தகவல். நன்றி.
Reply @ T.N.MURALIDHARAN said...
வருகைக்கும்,கருத்துக்கும் ,ஓட்டுக்கும் நன்றி முரளிதரன்.
reply @சி.கருணாகரசு said...
நன்றி நன்பரே,என்னை இந்த பதிவு எழுத தூண்டியது வெயில் கொடுமை தான்.
Post a Comment
கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....
Subscribe to Post Comments [Atom]
<< Home