Monday, April 02, 2012

பதிவர்களுக்கு ஒரு பாராட்டு விழா

திவுலகில் நான் நடைபயில ஆரம்பித்த ஆரம்ப காலத்தில் பதிவுலகம் பற்றி எனக்கு அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை,பதிவை எழுதி வைத்துவிட்டு "யாருமேயில்லாத கடைல யாருக்குடா டீ ஆத்துற" என்பது மாதிரி கடை விரித்து வைத்துவிட்டு ஈ ஓட்டிக்கொண்டிருந்தேன்.பதிவுலகின் ரகசியங்களை தெரிந்துகொள்ள எனக்கு சில காலம் எடுத்து கொண்டது.
திவுலகின் நுணுக்கங்களையும்,பதிவுகள் சம்பந்தப்பட்ட விசயங்களையும் கற்றுக்கொடுத்த  சக பதிவர்களுக்கும்,
நான் எழுதும் பதிவுகளுக்கு பின்னூட்டம் தந்து எனக்கு "முன்" ஊட்டமளித்த நன்பர்களுக்கும்,வாசகர்களுக்கும்,என்னை தொடரும் உறவுகளுக்கும் (Followers) என் மனமார்ந்த நன்றிகள்.

தண்ணீர்பந்தலை சேர்ந்த நன்பர் வெ.சுப்பிரமணி அவர்கள் தன் மனம் கவர்ந்த பதிவர்களில் 5 பேர்களில் ஒருவராக என்னைத் தேர்ந்தெடுத்து எனக்கு "versatile blogger award" என்ற மகுடத்தை சூட்டி கௌரவித்திருந்தார்.

இந்த விருது பின்வரும் நிபந்தனைகளை உள்ளடக்கியது:

  • இந்த விருது சுழல் விருது,அதாவது இதை பெற்றவர் தன் கவர்ந்த 5 பதிவர்களுக்கு இதை வழங்க வேண்டும்,
  • அது மட்டுமின்றி தனக்கு பிடித்த ஏழு விசயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த விருதை நான் என் மனம் கவர்ந்த ஐந்து பதிவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்னர் எனக்குப் பிடித்த 7 விசயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

1.என்னை புதுப்பிக்க புத்தகங்களை படிப்பது .
2.என்ன தகவல் கேட்டாலும் சளைக்காமல் தரும் இணைய உலகில் உலா வருவது.
3.கடலோரம் அலை தீண்டி நடப்பது.
4.என்னை இழந்து கவிதை செய்வது.
5.மனதை திருடும் கவிதைகளை வாசித்து சுவாசிப்பது.
6.வாக்கியமும்,வாத்தியமும் சரியான விகிதத்தில் கலந்து செய்த பாடல்களை  ரசிப்பது.
7.ரசிகனாக இருப்பது

இப்பொழுது விருது வழங்க
 வேண்டிய தருணம்...



                    இது தாங்க அந்த விருது

விருதின் பெயர்: Versatile Blogger Award

இந்த விருதுக்கு தமிழில் என்னபெயர்??
"Versatile Blogger" என்ற ஆங்கில வார்த்தையை "சகலக்கலா பதிவர்" என்று சொல்லலாம்.

விருது பெறுபவர்கள் பட்டியல்.

   ஹுஸைனம்மா அவர்கள் என்னை மிகவும் கவர்ந்த பதிவர்களில் ஒருவர், அவரது சிந்தனைகள்,கோணங்கள்,பார்வைகள் வித்தியாசனமானவை,பரந்து விரிந்தவை .பொதுவாக அவர் தனது அனுபவங்களையும்,தான் பெற்ற படிப்பினைகளையும்,தன் கருத்துக்களையும் தன் வலைப்பூவில் பகிர்ந்துள்ளார். பதினேழாம்வாய்ப்பாடு என்னும் தலைப்பில் தோனி திரைப்படத்திற்கு அவர் எழுதியிருக்கும் விமர்சனம் மிக வித்தியாசமானதாக இருந்தது ,மேலும் "தமிழ் எனும் மெஷின்லாங்குவேஜ்" என்கிற தலைப்பில் அவர் பகிர்ந்துள்ள கட்டுரை என்னை வெகுவாக கவர்ந்த மற்றும் சிந்திக்க வைத்த கட்டுரைகளில் ஒன்று. ஹுஸைனம்மாவுக்கு என் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்,விருதும்.

 ம் தமிழ் பதிவுலகின் இளம் பதிவர்களில் ஒருவர் தொழில் நுட்பம்,சினிமா,பிளாக்கர் டிப்ஸ் என பல விசயங்களை தன் வலைப்பூவில் பதிந்துள்ளார்.இவர் வழங்கும் "டிப்ஸ் மற்றும் டிரிக்ஸ்" கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.சதிஷ் -க்கு என் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்,விருதும்.

     விஞர் கௌரமி அவர்கள் தன் கவிதைகளை சிதறல்களாக தன் வலைப்பூவில் பதிந்து வருகிறார்,அவரது கவிதைகள் சமூக விழிப்புணர்வு,காதல்,இயற்கை...என சகலமும் பேசும். மாற்றம் (லிங்க்) என்கிற தலைப்பில் அவர் படைத்த கவி, என்னை பாடய் படுத்திய கவிதைகளில் ஒன்று. எல்லைகள் இல்லாத கற்பனை வெளியில் கவிதைகளை பெற்று வந்து வாசகர்களுக்கு விருந்தளிக்கும் அவரது முயற்சிக்கு பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்,விருதும்.

    இவரது பதிவுகள் நம்மை நிச்சயம் சிந்திக்க வைக்கும்,தன் கருத்துக்களை,சிந்தனைகளை கவி வடிவில் படைத்து,படிப்பவர்களை செதுக்கும் முயற்சியில் உள்ள மாலதி அக்காவுக்கு பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்,விருதும்.

  நான் ஒரு மின் மற்றும் மின்னணு பொறியியல் மாணவன்,"மின்னியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தமிழ் வலைப்பூக்கள் இல்லையே !!" என்ற என் தேடலின் பயனாக கிடைத்த வலைப்பூ இது..எந்த வொரு விஷயமானாலும் நாம் தாய் மொழி வாயிலாக சிந்திக்கும் போது நமக்கு சிறந்த தீர்வுகள் கிடைக்கும் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.தமிழ் வழி மின் கல்வியை சொல்லி தரும் அண்ணனுக்கு என் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்,விருதும்.


நன்பர்களை விருதுகளை ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.மேலும்  இதை தங்கள் மனம் கவர்ந்த ஐந்து பதிவருக்கு பரிசளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

Labels:

15 Comments:

At Mon Apr 02, 03:27:00 pm , Blogger Unknown said...

வாழ்த்துக்கள் தோழரே விருது பெற்றதற்கு. இன்னும் பல விருதுகளை வாரி குவியுங்கள் வாழ்த்துக்கள்....

 
At Mon Apr 02, 03:45:00 pm , Blogger Vijayan Durai said...

This comment has been removed by the author.

 
At Mon Apr 02, 03:47:00 pm , Blogger Vijayan Durai said...

reply@Esther sabi said...
நன்றி தோழி வருகைக்கும் கருத்துக்கும்

 
At Mon Apr 02, 05:31:00 pm , Anonymous GowRami said...

விருது பெற்ற வாழ்த்துக்கள் நண்பா :)

நான் அந்த விருதுக்கு தகுந்தவனா தெரியவில்லை... மேலும் வளர முயலுவேன். தமிழோடு சேர்ந்து நாமும் சுவையாவோம் :) நன்றி தோழா :)

 
At Mon Apr 02, 06:09:00 pm , Blogger Vijayan Durai said...

reply@ GowRami said...
//நான் அந்த விருதுக்கு தகுந்தவனா தெரியவில்லை.//
மது புட்டிக்கு மதுவின் போதை தெரிவதில்லை,

// மேலும் வளர முயலுவேன்//
வாழ்த்துக்கள் நன்பா!

// நன்றி தோழா//
வாருங்கள் நன்பரே !!

 
At Mon Apr 02, 06:13:00 pm , Blogger Yaathoramani.blogspot.com said...

விருது பெற்றமைக்கும்
மிகச் ச்ரியான நபர்களைத் தேர்ந்தெடுத்து
பகிர்ந்து கொண்டமைக்கும் வாழ்த்துக்கள்

 
At Mon Apr 02, 07:56:00 pm , Blogger Vijayan Durai said...

reply@Ramani said...
தங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி ஐயா.

 
At Mon Apr 02, 09:38:00 pm , Blogger Subramanian said...

தங்களுக்கும், தங்களின் விருதினை பெற்றவர்களுக்கும் மனம் திறந்த வாழ்த்துக்கள் நண்பரே! மிகப்பொருத்தமான பதிவர்களை தேர்ந்தெடுத்தமை சிறப்பு. நன்றி நண்பரே!

இப்படிக்கு...

வே.சுப்ரமணியன்.

 
At Tue Apr 03, 06:34:00 pm , Blogger Unknown said...

Versatile Blogger Award-ல் என்னை தேர்ந்தெடுத்ததற்க்கு மிக்க நன்றி நண்பா

உங்களுக்கும் வாழ்த்துகள்

 
At Fri Apr 06, 08:22:00 am , Blogger Vijayan Durai said...

reply@ வே.சுப்ரமணியன். said...
// மனம் திறந்த வாழ்த்துக்கள் நண்பரே!//
நன்றி நன்பரே..

 
At Fri Apr 06, 08:24:00 am , Blogger Vijayan Durai said...

reply @ Sathish said...
வாருங்கள் சதிஷ்,தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

 
At Sat Apr 21, 03:01:00 pm , Blogger மாலதி said...

ங்களின் சிறப்பான விருதிற்கும் தெரிவு செய்தமைக்கும் உளப்பூர்வமான பாராட்டுகளும் நன்றியும்

 
At Sat Apr 21, 03:12:00 pm , Blogger Vijayan Durai said...

// மாலதி said...
ங்களின் சிறப்பான விருதிற்கும் தெரிவு செய்தமைக்கும் உளப்பூர்வமான பாராட்டுகளும் நன்றியும்//
வாருங்கள் மாலதி

 
At Tue Apr 24, 05:51:00 pm , Blogger ஹுஸைனம்மா said...

ஆஹா, எனக்கும் விருதா... என் பதிவுகளைத் தொடர்ந்து, விரும்பி, ரசித்து வாசித்து வருகிறீர்கள் என்று உங்களின் பதிவிலிருந்து தெரிந்துகொண்டேன். ரொம்ப மகிழ்ச்சியாருக்கு. ரொம்ப நன்றிங்க.

தொடர்ந்து வாசிங்க. கருத்து சொல்லுங்க தம்பி.

மீண்டும் நன்றி!!

 
At Mon Apr 30, 07:42:00 pm , Blogger Vijayan Durai said...

Reply @ ஹுஸைனம்மா said...
//ஆஹா, எனக்கும் விருதா... என் பதிவுகளைத் தொடர்ந்து, விரும்பி, ரசித்து வாசித்து வருகிறீர்கள் என்று உங்களின் பதிவிலிருந்து தெரிந்துகொண்டேன். ரொம்ப மகிழ்ச்சியாருக்கு. ரொம்ப நன்றிங்க.
//
வருகைக்கும் கருத்துக்கும்,விருதை பெற்றுக்கொண்டமைக்கும் நன்றி அக்கா.

 

Post a Comment

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....

Subscribe to Post Comments [Atom]

<< Home