Thursday, May 10, 2012

நாம் எழுதிய பதிவு திருட்டு போயிருக்கிறதா என கண்டறிவது எப்படி?


பதிவு திருடர்களுக்கு ஒரு எச்சரிக்கை (பாகம்-3)

 திவு திருட்டுப் பற்றி கடந்த இரு பதிவுகளில் பார்த்தோம்,நாம் எழுதியிருக்கும் பதிவு திருட்டு போய் இருக்கிறது என்பதை எப்படி கண்டுபிடிப்பது?என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்..

பதிவு திருட்டை கண்டுபிடிப்பது எப்படி?
   தை கண்டுபிடிக்க பல வழிகள் உள்ளது, (பல இணையதளங்கள் உள்ளன). நம்பகமான,அதே சமயம் எளிதான வழிகளை மட்டும் இவ்விடத்தில் கூறுகிறேன். தலைப்புகளில் குறிப்பிட்ட இணையத் தளத்தின் முகவரிக்கு லிங்க் கொடுத்துளேன்.குறிப்பிட்ட தளத்திற்கு செல்ல தலைப்பை க்ளிக் செய்யவும்.

 திவு திருடர்கள் உங்கள் பதிவை திருடியிருந்தால்
அதை மக்களின் பார்வைக்கு இணையதளத்தில் (internet) வைத்திருந்தால்... கூகுளிடமிருந்து அவரால் தப்ப முடியாது.இணையத்தின் எந்த மூலையில் எது ஒளிந்திருந்தாலும் பெரும்பாலும் கூகுள் நமக்கு தேடித்தரும். உங்கள் பதிவின் தலைப்பை கொடுத்து தேடிப்பாருங்கள்,அல்லது பதிவில் நீங்கள் பயன்படுத்தியிருக்கும் பிரத்யேக வார்த்தைகளை (Key-Words) கொடுத்து தேடிப்பாருங்கள்.

 இது ஒரு அருமையான தளம்.நாம் தேடவேண்டிய பதிவின் முகவரியை அளித்தால் இணையத்தில் அது வேறு எங்காவது காப்பி பேஸ்ட் செய்யப்பட்டுள்ளதா என தேடி விரைவாக நம்மிடம் சொல்லும்.இது இலவச சேவைதான் ஆனால் premium சேவையையும் Copy scape தளம் வளங்குகிறது.

 இதுவும் Copyscape தளத்தினைப்போலவே செயல்படுகிறது.ஆனால் இது இலவச,முடிவிலா சேவையை தருகிறது (free, unlimited service). Plagium தளம் யாகூ சேர்ச் எஞ்சினை பயன்படுத்தி இயங்குகிறது. எனவே இதன் தேடல் முடிவுகள் வித்தியாசமானவையாக கிடைக்கும். Copyscape மற்றும் Google சேர்ச் முடிவுகளை காட்டிலும் Plagium தேடித்தரும் விசயங்கள் மாறுபட்டவையாக இருக்கும்.

 உங்கள் பதிவுகள் திருடுபோவதை கண்டறிவதை அட்டோமேட் செய்ய நீங்கள் கூகுள் அலெர்ட்ஸ் ஐ பயன்படுத்தலாம்.இதன் மூலம்உங்கள் பதிவுகள் இணையத்தில் திருடுபோய் இருக்கிறதா?? என்று தேடச்சொல்லி தேடல் முடிவுகளை உங்களுக்கு இமெயில் அனுப்புமாறு செய்ய முடியும்.இது இலவச சேவை.

 RSS FEED வழியாக நம் பதிவு காப்பி அடிக்கப்படுவதை (RSS scraping)கண்டுபிடிக்க FAIRSHARE தளம் நமக்கு உதவுகிறது.அது மட்டுமில்லாமல் நம் பதிவுகள் காப்பி பேஸ்ட் செய்யப்படுவதையும் இத்தளம் மூலம் கண்டுபிடிக்க முடியும்.இதுவும் இலவச சேவையே.

 இந்த தளத்தில் நாம் உறுப்பினர் ஆகிக்கொண்டு,அவர்கள் தருகிற Java Script ஐ நம் பிலாக்கில் நிறுவிக் கொள்ளவேண்டும். நம் பிளாகில் யாராவது  காப்பி செய்தால், எந்த பகுதி காப்பி செய்யப்பட்டது,எப்போது செய்யப்பட்டது.போன்ற தகவல்களை இந்த தளம் இலவசமாக Trace செய்து நமக்கு தெரிவிக்கும். 

  நாம் பதிவுகளில் பயன்படுத்தும் படங்களுக்கு தனிப்பெயர் கொடுக்க வேண்டும், பதிவை திருடுபவர்கள் படங்களின் பெயர்களை பெரும்பாலும் மாற்றுவதில்லை,அப்படி அவர்கள் மாற்றினால் அவை சில சிக்கல்களை தரும்.கூகுள் இமேஜ் செர்ச்"சில் நம் பதிவுகளில் பயன்படுத்தியிருக்கும் படங்களின் தலைப்புகளை கொடுத்து தேடலாம்.அல்லது நாம் பயன்படுத்தியிருக்கும் படங்களை கொடுத்தும் தேடலாம்.
கூகுள் இமேஜ் சர்ச் போலவே செயல்படும் இன்னொரு தளம் Tineye.

திருட்டுப்போன என் பதிவுகள்:
ன் பதிவுகளில் முதலில் திருட்டுப்போனது  பதிவுலகில் என் இரண்டாவது பதிவான கூகுளின் பரிணாம வளர்ச்சி , நான் பதிவை எழுதிய அடுத்த நாளே அச்சு பிசகாமல் இந்த பதிவு வேறு ஒருவரின் வலைத்தளத்தில் எடுத்தாளப்பட்டது.கூகுளிடம் கொடுத்த புகாரின் பெயரில் அந்த பதிவு பிற்பாடு நீக்கப்பட்டுவிட்டது.மீண்டும் இந்த பதிவு கீழுள்ள முகவரியில் காப்பி பேஸ்ட் செய்யப்பட்டுள்ளது !!

திருட்டுப்போனவைகளில் மேலும் சில...

ஜிமெயில் ரகசியங்கள் -1                                         திருடப்பட்ட இடங்கள்
  1. http://jaffnapc.blogspot.com/2011/09/gmail-id.html மற்றும்
  2. http://www.kananiulakam.com/?p=961

இதில் ஒரு காமெடி என்னவென்றால் ஒருவர் என் வலைப்பூவில் இருந்து திருடியிருக்கிறார்,இன்னொருவர் அதை திருடியவரிடமிருந்து திருடியிருக்கிறார்.

திருடப்பட்ட இடம்:

குறிப்பு:
நம் பதிவுகள் காப்பி அடிக்கப்படுவதை தடுக்க பலர் Copy paste,Javascript,right-click போன்றவற்றை Disable செய்கிறார்கள் இது வாசகர்கள் நம் பதிவுகளில் இருந்து பின்னூட்டங்களில் மேற்கோள் காட்டுவதை தடுக்கும்,அது மட்டுமில்லாமல் நாம் தரும் தகவல்களை அவர்களின் தேவைக்காக (காப்பி அடிக்க அல்ல) பயன்படுத்திக்கொள்வதையும் தடுக்கும்.

பதிவு திருட்டை தடுக்க என்ன செய்யலாம் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
வாசகர்கள் மற்றும் பதிவுலக நன்பர்களின் கருத்துக்களும் ஆதரவும் வரவேற்கப்படுகிறது.

Labels: , , , , , ,

11 Comments:

At Thu May 10, 11:49:00 am , Blogger சசிகலா said...

சிறப்பான அனைவருக்கும் பயன்படும் பதிவு தொடரருங்கள் .

 
At Fri May 11, 08:31:00 am , Blogger டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நானும் டின்ட்டைப் பயன் படுத்துகிறேன்.அவை நான் முகநூலில் பகிர்ந்தவற்றை காப்பியாகத் தெரிவிக்கிறது.
நல்ல பயனுள்ள பதிவு பிறவற்றையும் முயற்சித்துப் பார்க்கிறேன்.

 
At Sat May 12, 10:12:00 am , Blogger Vijayan Durai said...

reply @ சசிகலா said...
//சிறப்பான அனைவருக்கும் பயன்படும் பதிவு தொடரருங்கள் //
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி,கண்டிப்பாக தொடர்கிறேன் சகோதரி.

 
At Sat May 12, 10:15:00 am , Blogger Vijayan Durai said...

reply @T.N.MURALIDHARAN said...
//நானும் டின்ட்டைப் பயன் படுத்துகிறேன்.அவை நான் முகநூலில் பகிர்ந்தவற்றை காப்பியாகத் தெரிவிக்கிறது.
நல்ல பயனுள்ள பதிவு பிறவற்றையும் முயற்சித்துப் பார்க்கிறேன்.//

தங்கள் வரவுக்கும்,கருத்துக்கும் நன்றி நன்பரே.பயன்படுத்திப்பாருங்கள்,பதிவுதிருட்டை கண்டறியுங்கள்.

 
At Sat May 12, 03:14:00 pm , Blogger Unknown said...

என்தான் திட்டினாலும் திருடுறத்த நிறுத்துறாங்க இல்லையே...

 
At Sat May 19, 10:51:00 am , Blogger Vijayan Durai said...

@ Esther sabi said...
//என்தான் திட்டினாலும் திருடுறத்த நிறுத்துறாங்க இல்லையே.//

அதுவும் சரிதான்...

 
At Sat Jun 23, 01:48:00 pm , Blogger கவிதை வானம் said...

உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி எனது பதிவுகள் நிறைய திருடப்பட்டன ...இது தடுக்கும் என்று நினைக்கிறேன்

 
At Sat Sept 01, 11:47:00 am , Blogger Ranjani Narayanan said...

அன்பு விஜயன் துரை,
உங்களை பதிவர் விழாவில் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி.
உங்களது பதிவு திருட்டுப் போவதைக் கண்டறிவது எப்படி கட்டுரை படித்தேன். நான் வேர்ட்ப்ரஸ்- ஸில் எழுதுகிறேன். copyscape இதில் பயன்படுத்த முடியுமா?
என் பதிவுகள்:
ranjaninarayanan.wordpress.com
அன்புடன்,
ரஞ்ஜனி

 
At Sat Sept 01, 07:29:00 pm , Blogger Vijayan Durai said...

reply @ பரிதி.முத்துராசன் said...
//உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி எனது பதிவுகள் நிறைய திருடப்பட்டன ...இது தடுக்கும் என்று நினைக்கிறேன்//

வாருங்கள் அண்ணா! முயன்று பாருங்கள், கட்டாயம் தடுக்க முடியும்...
அப்புறம் இன்னொரு விசயம் திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..

 
At Sun Sept 02, 04:56:00 pm , Blogger Vijayan Durai said...

Reply @ Ranjani Narayanan said...
//அன்பு விஜயன் துரை,
உங்களை பதிவர் விழாவில் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி.//
எனக்கும்...
//உங்களது பதிவு திருட்டுப் போவதைக் கண்டறிவது எப்படி கட்டுரை படித்தேன்.
நான் வேர்ட்ப்ரஸ்- ஸில் எழுதுகிறேன். copyscape இதில் பயன்படுத்த முடியுமா?//
ஓ தாராளமாக பயன்படுத்த முடியும்

 
At Sun Sept 02, 04:59:00 pm , Blogger Vijayan Durai said...

tynt தவிர மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து முறைகளையும் நீங்கள் Wordpress பிலாகிற்கு பயன்படுத்தலாம்.
வருகைக்கும் கருத்துகும் நன்றி அம்மா

 

Post a Comment

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....

Subscribe to Post Comments [Atom]

<< Home