Thursday, May 24, 2012

பொறியியல் கல்வி-வழிகாட்டல்


என்ன படிக்கலாம்?,எங்கு படிக்கலாம்?-(கல்வி சந்தை ஒரு அலசல்)

 +2 தேர்வு முடிவுகள் வந்து விட்டன என்ன படிப்பு படிக்கலாம்,எந்த கல்லூரியில் படிக்கலாம் போன்ற அலசல்கள் மாணவர்களிடையே அதிகம் அலைமோதும் நேரம் இது... தேர்வு முடிவுகள் மாணவர்களை அதிகம் பாதிக்கிறதோ இல்லையோ பெற்றோர்களை அதிகமாகவே பாதித்து விடுகிறது, தன் பிள்ளை அதிக மதிப்பெண் வாங்கியிருக்கிறான்  (அ) வாங்கியிருக்கிறாள்,என்று சொல்லிக்கொள்வது பெற்றோர்களுக்கு ஒரு கௌரவமாக இருக்கிறது...மதிப்பெண் குறைவை அவர்கள் கௌரவ குறைச்சலாக கருதுகிறார்கள்.சமீப காலமாக மக்களிடையே இந்த எண்ண ஓட்டம் அதிகரித்துள்ளது.

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள்:

  பெரும்பான்மையான மாணவர்களும் பெற்றோர்களும் மருத்துவம் மற்றும் பொறியயல் படிப்பை மட்டுமே சிறந்த படிப்புகளாக கருதுகிறார்கள்.இவை அதிகம் சம்பாதிக்க துணை செய்யும் படிப்புகள் என்கிற மோகம் மக்களிடையே பரவலாக உள்ளது.
மருத்துவப்படிப்பிற்கான "கட்-ஆப்" மதிப்பெண் மற்றும் மருத்துவப்படிப்பிற்கான இடங்கள் (mere 1,653 (excluding 635 additional seats surrendered by self-financing colleges)  
மருத்துவத்துறையை நாடும் மாணவர்களை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மெயின்டைன் செய்கிறது.



            மெடிக்கல் கட்-ஆப் ஒரு ஒப்பீடு: நன்றி THE HINDU

பொறியியல் படிப்பில் சேர தகுதிகள் அதிகம் தேவைப்படுவதில்லை,பன்னிரென்டாம் வகுப்பு தேர்வாகி இருந்தால் மட்டும் போதும் கட் ஆப் மதிப்பெண் குறைவாக இருந்தால் பணம் கொடுத்து சீட் வாங்கி விட முடியும்,என்ஜினியரிங்க் கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகம்.ஆக என்ஜினீயரிங்க் துறையை மாணவர்கள் தேர்வு செய்கின்றனர்.

ற்போது தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்பங்கள் விற்பனை துவங்கிய ஒரே வாரத்தில், 2 லட்சம் விண்ணப்பங்கள் விற்று தீர்ந்துவிட்டன


பொறியியல் படிப்பின் தற்போதைய நிலை:

ண்மையான ஆர்வம் காரணமாக பொறியியல் படிப்பை தேர்வு செய்யும் மாணவர்களை விட ஆர்வக்கோளாராக,தெளிவான சிந்தனையின்றி பொறியியலை நாடும் மாணவர்கள் அதிகம்,இது மட்டுமில்லாமல் சில மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் விருப்பம் இல்லாமல் இருந்த போதிலும் அவர்களின் பெற்றோர் வற்புறுத்தல் காரணமாக இந்த படிப்பில்ல் வந்து மாட்டிக்கொள்ளும் மாணவர்களும் அதிகம்.(எங்கள் கல்லூரியிலேயே இது போன்ற நன்பர்களை நான் சந்தித்து இருக்கிறேன்).
ப்படி ஆர்வமில்லாமல் ஒரு படிப்பில் நுழையும் போது அந்த படிப்பில் பிடிப்பு இல்லாமல் போகிறது,பாடங்களை படிக்க முடியாமல்,புரிந்துகொள்ள முடியாமல் மாணவர்கள் திணருகிறார்கள்,மன அழுத்தம் அதிகரித்து படிப்பை தொடர முடியாமல் பாதியிலேயே கை விடுகிறார்கள்.சில மாணவர்கள் தற்கொலை வரை கூட செல்லத்துணிகிறார்கள்.

 1997 ம் ஆண்டில் வெறும் 90ஆக இருந்த, தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை, கடந்தாண்டு நிலவரப்படி, 535ஆக உயர்ந்தது. கடந்த 2007ம் ஆண்டில் கூட, 277 இன்ஜினியரிங் கல்லூரிகள் தான் இருந்தன. நான்கு ஆண்டுகளில் இருமடங்காக, இன்ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டில் புதியதாக மேலும், 15 இன்ஜினியரிங் கல்லூரிகள் துவங்கப்பட உள்ளன.

மிழகத்தில் உள்ள அத்தனை கல்லூரிகளும் சிறந்த கல்லூரிகள் என்று கூறி விட முடியாது.சரியான அடிப்படை வசதிகள் இல்லாமல் கூட பல கல்லூரிகள் தங்களை சிறந்த கல்லூரிகள் என்று மார்தட்டிக்கொண்டு வலம் வந்து கொண்டு இருக்கின்றன.


                              படம்:நன்றி:ஜூ.வி

ல கல்லூரிகள் தகுதி குறைவான ஆசிரியர்களை நியமித்துக்கொண்டு தன் கல்லூரிகளில் பாடம் கற்பித்து வருகின்றன,தகுதி குறைவான ஆசிரியர்கள் அதிக சம்பலம் எதிர்பார்பதில்லை இதன் மூலம் கல்லூரி நிர்வாகம் கனிசமான தொகையை சேமிக்க முடியும் என்பதால் பெரும்பான்பை கல்வி நிறுவனங்கள் இப்படிப்பட்ட ஆசிரியர்களை நியமித்து மாணவர்களின் வாழ்வில் விளையாடுகின்றன.
ஆண்டுதோறும் நாடுமுழுவதும், 15 லட்சம் மாணவர்கள் இன்ஜினியரிங் படித்து வெளிவரும் நிலையில், இதன் எண்ணிக்கை தமிழகத்தில் மட்டும், 2.25 லட்சமாக உள்ளது.இதில் வேலைக்கு தகுதியானவர்கள் 10 முதல் 14 % மட்டுமே என்கிறது ஓர் ஆய்வு. 

 "மிகச் சிறந்த கல்லூரிகளில் வேலைவாய்ப்பு விகிதம் 95 ஆகவும், மூன்றாம் மற்றும் நான்காம் தர கல்லூரிகளில் வேலைவாய்ப்பு விகிதம், 30 முதல் 50 சதவீதமாகவும் இருக்கிறது. எனினும், 30 சதவீதம் பேர் தான் படிப்பிற்கேற்ற துறையில் வேலை பெறுகின்றனர்; 20 சதவீதம் பேர் உயர்கல்விக்கும், 30 சதவீதம் பேர் சம்பந்தமே இல்லாத வேலைக்கும் சென்று விடுகின்றனர். படிப்பை நிறைவு செய்யாமலும், வேலை கிடைக்காதவர்களும், மீதமுள்ள 20 சதவீதத்தினர்'' என்கிறார், கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி.
 
டிப்பை தேர்வு செய்யும் முன்னர் இந்த படிப்பு நமக்கு ஏற்றதுதானா?? என்று ஒருமுறை சிந்தியுங்கள்,சிந்திக்க முடியாத பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் உதவுங்கள்,என்ஜினியரிங்க் மருத்துவம் ஆகிய இரண்டு படிப்புகள் மட்டுமே நல்லது என்கிற மோகத்திலிருந்து மீண்டு மாணவர்கள் தங்களின் தகுதி,திறமை,ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் படிப்புகளை தேர்வு செய்யுங்கள்.என் ஜினியரிங்க் படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள் தயவு செய்து தாங்கள் தேர்வு செய்யும் துறை சார்ந்த தகவல்கள்,தாங்கள் தேர்வு செய்யப்போகும் கல்லூரியி தரம் போன்றவற்றை தீர்க்க்மாக ஆராய்ந்து விட்டு தேர்வு செய்யவும்.

படிப்பு முக்கியம் தான் ஆனால் வாழ்க்கை அதை விட முக்கியம்.

புள்ளி விவர உபயம்:
THEHINDU

Labels: , , , , , , , , ,

6 Comments:

At Thu May 24, 02:23:00 pm , Blogger Subramanian said...

கடமையாக இருந்தாலும்கூட, செயலினும் பெருமை தரும் செயல், மூத்தவர் இளையோருக்கு வழிகாட்டுதல். தங்களது அக்கறை மிகுந்த வழிகாட்டல் பலபேரை சென்றடைந்து பயனுறச்செய்யட்டும். வாழ்த்துக்கள் நண்பரே!

 
At Thu May 24, 04:25:00 pm , Blogger Unknown said...

படிப்பு முக்கியம் தான் ஆனால் வாழ்க்கை அதை விட முக்கியம். புரிந்தது விஜயன் அண்ணா...

 
At Thu May 24, 07:18:00 pm , Blogger Vijayan Durai said...

reply @வலைஞன் said...
//வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்//

இணைத்து விட்டேன் நன்பரே.

 
At Thu May 24, 08:00:00 pm , Blogger Vijayan Durai said...

reply @ வே.சுப்ரமணியன். said...
//கடமையாக இருந்தாலும்கூட, செயலினும் பெருமை தரும் செயல், மூத்தவர் இளையோருக்கு வழிகாட்டுதல். தங்களது அக்கறை மிகுந்த வழிகாட்டல் பலபேரை சென்றடைந்து பயனுறச்செய்யட்டும். வாழ்த்துக்கள் நண்பரே!//

நன்றி நன்பரே

 
At Thu May 24, 08:03:00 pm , Blogger Vijayan Durai said...

reply @எஸ்தர் சபி said...
//படிப்பு முக்கியம் தான் ஆனால் வாழ்க்கை அதை விட முக்கியம். புரிந்தது விஜயன் அண்ணா...//

வரவுக்கும்,பின்னூட்டம் வழி தாங்கள் தரும் ஊக்கத்திற்கும் என் நன்றிகள்

 
At Tue Jun 05, 06:24:00 am , Blogger டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது .நேரம் இருப்பின் வாசிக்கவும்.
http://blogintamil.blogspot.in/2012/06/2.html
நன்றி.

 

Post a Comment

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....

Subscribe to Post Comments [Atom]

<< Home