உங்கள் பிறந்த நாளுக்கு ஏற்றபடி மாறும் கூகுள் பக்கம்(செம மேட்டர் மா!)
கூகுளின் முகப்பு
பக்கம் முக்கிய நாட்களுக்கு ஏற்றபடி மாறுவதை நாம் பார்த்திருப்போம், இதை விட ஒரு
சூப்பர் மேட்டரை கூகுள் நமக்காக செய்கிறது.நீங்கள் இதை கவனிக்க
மறந்திருக்கலாம்....நம் பிறந்த நாளுக்கு ஏற்றபடி கூகுள் தன் முகப்பு (Home Page) பக்கத்தை மாற்றி நம்முடன் சேர்ந்து நம் பிறந்த நாளை
கொண்டாடுகிறது.
இது எப்படி???
நீங்கள் உங்கள் கூகிள் அக்கவுன்ட் டில் Log in செய்யும் போது அது உங்கள் பிறந்தநாளை செக் செய்கிறது.அது அன்றைய
தினத்துடன் மேட்ச் ஆகினால் உங்கள் கூகுள் ஒரு புதிய டூடுளை (doodle) (கூகிள் முகப்பு படம்) உங்கள் முகப்பு
பக்கத்தில் காட்டி உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும்.
கேக் மற்றும் மெழுகுவர்த்திகளுடன் உங்களுக்கு மட்டும் காட்டப்படும் இந்த
பிரத்யேக முகப்பு பக்கத்தின் அருகே நீங்கள் உங்கள் மவுஸின் கர்சரை கொண்டு
சென்றால்."Happy birthday..............(உங்கள்
பெயர்)" என்று எழுதி காட்டும்.அதை நீங்கள் க்ளிக் செய்தால் உங்கள் கூகிள்
பிளஸ் Profile திறக்கப்படும்.
இந்த விசயத்தை கூகிள் எப்போதிருந்து செய்கிறது???
2010 ம் வருடத்திலிருந்து இந்த "பிறந்த நாள்
வாழ்த்து சொல்லும்' கூகிளின் முகப்பு பக்கம் நடைமுறையில் உள்ளது இது
ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் முகப்பு பக்கத்தில் கேக் கொஞ்சம் கம்மியாக
இருந்திருக்கிறது (பார்க்க படம்).
சில மாதங்களுக்கு முன் கூகுள் இந்த டூடிலை(Doodle) மறு வடிவம் செய்திருக்கிறது.(இதுல 6 கேக் இருக்கு!).
கூகிள் உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லனும்-னா....
1.கூகிளில்
உங்களுக்கு அக்கவுன்ட் இருக்கனும்
2.கூகிள் பிளஸ் -ல் உங்கள் பிறந்த நாளை (Date of
birth) கொடுத்திருக்க வேண்டும்.
3.உங்க பிறந்த நாள் அன்று நீங்கள் அக்க்வுன்டில்
லாக் இன் ஆகியிருக்க வேண்டும்.
இதெல்லாம் நீங்க செய்திருந்தீர்கள் என்றால்
கூகுள் உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும்.
Google நிறுவனத்தினர்
எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களோ???
இணைய
உலகின் தல கூகுள் தான்.தல உன்ன அடிச்சுக்க ஆளே இல்ல.
உங்களின்
கருத்துக்களை மறக்காமல் கமெட்-ல் பதிவு செய்யவும்
Labels: birthday, doodle, google, கட்டுரை, கூகுள்- சில சுவாரசியமான தகவல்கள், படப்பதிவுகள்
5 Comments:
அறியாத தகவல்...
பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
sema mettar sir.thx
sema mettar sir.thx
அன்பின் விஜயன் துரை - தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Valuable Information. Thanks for sharing.
Builders in Trivandrum
Villas in Trivandrum
Villas for sale in Trivandrum
Apartments in Trivandrum
flats in Trivandrum
Villas near technopark
Post a Comment
கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....
Subscribe to Post Comments [Atom]
<< Home