ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம்-2
இணையத்தின் வரலாறு -பாகம்-2
முதல் பாகம் படிக்க: இணைப்பை க்ளிக் செய்யவும்
முதல் பாகம் படிக்க: இணைப்பை க்ளிக் செய்யவும்
கடந்த பதிவில் இணையத்திற்கு துவக்கப்புள்ளி வைத்த அமெரிக்காவின் அச்சம் பற்றியும்,இன்று நம்மிடையே மாபெரும் ஊடகமாக (media) அவதாரம் எடுத்திருக்கிற இந்த இணையத்தின் தாத்தா ஆர்பாநெட் பற்றிய அறிமுகத்தையும் பார்த்தோம்...
அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே நடந்த பனிப்போர் காரணமாக அமெரிக்க பாதுகாப்பு துறையால்(D.O.D) ஆர்பாவின் கையில் ஒரு செயற்திட்டம் கொடுக்கப்பட்டது என்று கடந்த பதிவிலேயே கூறி இருந்தேன்.
D.O.D(அமெரிக்க பாதுகாப்பு துறை)
சில நன்பர்கள் பனிப்போர் என்றால் என்ன என்று என்னிடம் வினவியிருந்தார்கள்,அவர்களுக்காகவும்.,பனிப்போர் பற்றிய வினா மனதிற்குள் எழுந்த இன்ன பிற வாசகர்களுக்காகவும் அது பற்றி ஓரிரு வரிகளில் அடுத்த தலைப்பில் பார்த்துவிடுவோம்.. பனிப்போர் விவரம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் அடுத்த தலைப்பிற்கு தாவி விடலாம்.
பனிப்போர் (Cold War):
பொதுவாக போர்களை ஆங்கிலத்தில் மூன்று வகையாக பிரிக்கின்றனர்.
1.Hot War(ரத்த களமாக,ஆயுத பிரயோகங்களுடன் நடக்கும் போர்.)
2.Warm War(இரு நாடுகளிடையேயும் பேச்சுவார்த்தை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது ஆனாலும்,இரு நாடுகளின் தரப்பும் போரிட தயார் நிலையில் இருக்கின்றன,இவர்களிடையே எந்த நேரத்திலும் போர் நடக்கலாம் என்கிற நிலை.)
3.Cold War (இரு நாடுகளுக்கிடையேயும் நேரடியாக சண்டை நடக்காது,ஆனால் இரண்டும் தங்கள் எதிர்ப்பையும் ,ராணுவ முன்னேற்றங்களையும் காட்டி தங்களை பலமான நாடாக காட்டிக்கொள்ளும்.தங்களுக்கு பிடித்த நாடுகளுக்கு உதவியாகவும் ,பிடிக்காத நாடுகளுக்கு எதிரணியாகவும் நின்று பிற நாடுகளுக்கு உதவும்(??) .தங்கள் போரை பிற நாடுகளில் நிகழ்த்தும்,நேரடி சண்டை இருக்காது).
அமெரிக்க-ரஷ்ய பனிப்போர்:
இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இணைந்துதான் செயல்பட்டன அப்போதே இவைகளிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்தன,இரண்டாம் உலகப்போரின் முடிவில் கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்தன இவ்விரு நாடுகள் இடையே நடந்த அரசியல் மற்றும் ராணுவம் சார்ந்த முன்னேற்றங்கள் மற்றும் சாதனைகள் போன்றவற்றில் நடந்த நெறுக்கடிகள்,போட்டாப்போட்டிகள்,அணு ஆயுத சோதனைகள் போன்றவையே அமெரிக்க-ரஷ்யப் பனிப்போர் .இரண்டாம் உலகப்போரின் முடிவு தொடங்கியதிலிருந்தே அமெரிக்க-ரஷ்ய பனிப்போரும் துவங்கியிருந்த்து. 1945 முதல் 1980 வரை இது தொடர்ந்தது.
ரஷ்யா 1957-ல் ரஷ்யா தனது முதல் செயற்கைகோளை செலுத்தியது,கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை சோதனை செய்தது,அமெரிக்கா அணு அயுதங்கள் தயாரித்தது, விண்வெளி ஆராய்ச்சி செய்தது, நிலவுக்கு மனிதனை அனுப்பியது,இவை எல்லாமே பனிப்போரின் பாகமே...இணையமும் இந்த பனிப்போர் பெற்று தந்த பரிசு தான்.பனிப்போருக்கு நம் நன்றிகளை தெறிவித்துக்கொள்வோம்...
ஆர்பா:
பனிப்போர் போரின் முன்னோடியாக அமைய முடியும் என்பதை நாம் அறிவோம்.இதனால் அமெரிக்க அரசாங்கம் ரஷ்யா செய்த ஒவ்வொரு நடவடிக்கையையும் எச்சரிக்கை உணர்வுடன் கண்காணித்தது. ரஷ்யா தனது ரானுவத் தகவல் தொடர்பை துண்டித்து விட்டால் என்ன செய்வது.போர் திட்டத்தை செயல்படுத்தும் சிக்கலை எப்படி நிவர்த்தி செய்வது ,தகவல் தொடர்பு அறுபடாமல் இருக்க புதிய வழிமுறை உள்ளதா? என்கிற ஆராய்ச்சியில் ஈடுபட்டு ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்துமாறு ஆர்பா(ARPA) வை கேட்டுக்கொண்டது.ஆர்பா சில பல வருடங்களாக ஆராய்ச்சி செய்து1969-ல் ஆர்பாநெட் எனும் ஒரு திட்ட அறிக்கையை சமர்ப்பித்தது.
இணையத்தின் தாத்தா – ஆர்பாநெட்:
துண்டிப்பிலாத தகவல் தொடர்பை தருவதற்காக ஆர்பாநெட் Packet Switching எனும் கருத்துருவை (Concept)பயன்படுத்தியது.உலகின் முதல் தகவல் துணுக்கு பரிமாற்றம் [த.து.பரிமாற்றம்] (packet switching) ஆர்பா இணையத்தில் தான் நிகழ்ந்தது. Packet Switching பற்றி பிரிதொரு பதிவில் விளக்கமாக சொல்கிறேன்,தங்களை குழப்பிக்கொள்ள வேண்டாம்...
முன்னிருந்த தொழில்நுட்ப கருவிகள் மின்சுற்று விசை அமைவை (Circuit Switching) அடிப்படையாக கொண்டு இயங்கியவை தொலைபேசி,தந்தி போன்றவை. த.து பரிமாற்றத்தின் அடிப்படையில் தான் இன்றைய இணையமும் செயல் பட்டு கொண்டிருக்கிறது.இதனால் தான் ஆர்பா-நெட்டை இணையத்தின் தாத்தா என்று செல்லமாக அழைக்கிறார்கள்.
இணையத்தின் வளர்ச்சியை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்...
மின்னஞ்சல் முகவரி:vijayandurairaj30@gmail.com
Tweet |
No comments:
Post a Comment
கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....