Saturday, September 08, 2012

1 கொசுவர்த்தி = 100 சிகரெட் ! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!


 சுத்தமில்லாத காற்றால் தன்னை நிறைத்துக்கொண்டு,அவதிப்படும் சுற்றுபுறத்திற்குள் சிக்கிகொண்டு அரோக்கியத்தை இழந்து வரும் நவீனமயமாகி விட்ட நம்மை அதிர்ச்சியூட்ட இன்னுமொரு செய்தியை புதிய அராய்ச்சி வெளியிட்டுள்ளது.

து என்ன புதுக்கதை??


   
  கொசுவை விரட்ட பயன்படுத்தப்படும் கொசுவர்த்திகள் வெளியிடும் புகை 100 சிகரெட்கள் வெளியிடும் புகைக்கு சமமான பாதிப்பை ஏற்படுத்துகின்றனவாம்....தொடர்ந்து படியுங்கள்...

   சென்னையிலுள்ள தேசிய தொற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் வீட்டில் பயன்படுத்தும் பூச்சிகொல்லிகளால் ஏற்படும் நோய்களை பற்றி ஆராய்ச்சி ஒன்றை நடத்தியது இதில் கொசுக்களை விரட்ட நாம் பயன்படுத்தும் சுருள்கள் வெளியிடும் புகையால் என்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்ற ஆராய்ச்சியும் ஒன்று.
 கொசுவை விரட்ட பெரும்பாலான (96 % )மக்களால் பயன்படுத்தப்படும் ,நாம் தூங்குகின்ற வேளையில் நம்முடனே குறைந்தது ஏழு மணிநேரமாவது இருக்கும் இந்த கொசுவர்த்திகள் வெளியிடும் புகை இவ்வளவு தீமைகளை பரிசளிக்க கூடியது என்று நாம் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டோம்.ஆனால் அது வெளியிடும் புகை நூற்றுகணக்கான சிகரட்டுகள் வெளியிடும் புகையினால் வரும் பாதிப்பை தருகிறது என்று அந்த ஆராய்ச்சி தன் முடிவை சொல்லி நமக்கு அதிர்ச்சி தருகிறது.அதிலும் மலேசிய மற்றும் சீன கொசுவர்த்தி சுருள்களில் இருந்து வெளியாகும் புகை 134 சிகரெடுகளுக்கு சமமான தீங்கை தருகின்றனவாம்..!


கொசுவர்த்திகளில் என்ன உள்ளது??

  ச்சு புகையை வெளியிடும் அளவிற்கு இந்த சுருள்களில் என்ன பொருட்கள் உள்ளன என்று நான் இணையத்தை ஆராய்ந்தேன் ...
கொசுவர்த்தி தயாரிக்க தேவையான பொருட்கள்:

1.பைரத்ரின்(Pyrethrins)
2.மரத்தூள்
3.தேங்காய் ஓட்டு கரி
3. தூபப்பொடி (அ) சமித்து பிசின்)(joss powder).
4.கலப்பிகள் (Binders)
5.நைட்ரேட்கள் (Nitrates)மற்றும் 
6.சேர்ப்பு பொருட்கள்(additives)

  கொசுவர்த்தியின் மூலப்பொருட்களில் கொசுவை விரட்ட பயன்படும் முக்கிய பொருள் பைரத்ரின் எனும் ரசாயனம்.இது சாமந்திப்பூவிலிருந்து(chrysanthemum) பெறப்படுகிறது.இது தாவரங்களின் மூலம் கிடைக்கும் பொருள் தான் என்பதால் இதனால் மனித குலத்திற்கு தீமைகள் குறைவு தான்.ஆனால் இது மீனினங்கள் மற்றும் பூச்சியினங்களை செயலிழக்க செய்யும் தன்மை உடையது.


            சாமந்திப்பூ


   கொசுவை விரட்ட தேவையான இந்த பைரத்ரின் சாதாரணமாக புகையை வெளியிடும் அளவு எரியாது,எரிந்தாலும் நீண்ட நேரம் வராது,மேலும் எளிதில் சிதைவுறும் தன்மையுடையது.
   தை நீண்ட நேரம் புகைய வைக்க இதனுடன் சேர்க்கப்படும் மேலே குறிப்பிட்டிருக்கும்(மேலே குறிப்பிட்டுள்ள பட்டியலில் உள்ள முதல் மூன்று பொருட்களால் தீங்கில்லை ) மீதமுள்ள பொருட்கள் தான் தீங்கு விளைவிக்கின்றன.கொசுவர்த்தியில் 99% இவைகள் தான் உள்ளன மீதமுள்ள ஒரு சதவீதமே பைரத்ரின் !(ரசாயனங்களின் உதவியின்றி நீண்ட நேரம் பைரதிரின்-ஐ எரிய வைக்க ஏதாவது முறையிருந்தால் நன்றாக இருக்கும்.!)


கொசுவர்த்திகளில் நிகோடின் இல்லையே பின் இவை எப்படி சிகரெட்டுகளுடன் ஒப்பீடு செய்யப்படுகின்றன??

   ண்மைதான் கொசுவர்த்திகளில் சிகரெட்டில் உள்ள நிகோடின் எனும் பொருள் கிடையாது..சிகரெட் தரும் தீமைகள் அத்தனையையும் சளைக்காமல் இந்த புகையும் தருகிறது.
     கொசுவர்த்தி புகையில்....


  • பாலி அரோமடிக் ஹைட்ரோ கார்பன் (PHC)
  • ஃபார்மால்டிஹைடு(Formaldehyde)
  • அசிட்டாலிடைடு(acetaldehyde)
  • மற்றும் பென்சீன் ,தொலுவீன் 
போன்ற பொருட்கள் உள்ளன இவை சிகரெட் புகையை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்த வல்லவை...

இந்த புகை நுரையீரல்,கல்லீரல் போன்ற உடல் உள்ளுருப்புகளை பாதிக்கிறது
இதய நோய்களுக்கான வாய்ப்புகளையும் ,சர்க்கரை நோய்க்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது.
ஆஸ்துமா,சுவாசக்கோளாறுகள்,புற்று நோய்க்கான காரணியாகவும் அமைகின்றன....

அம்மாடியோவ்...! 

இயற்கை முறையில் கொசு விரட்டும் வழிமுறைகளை நோக்கி நாம் இனிமேலாவது நகருவோம்...


 

Post Comment

12 comments:

  1. மிக அருமையான விழிப்புணர்வு...நன்றி...

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நன்பரே

    ReplyDelete
  3. நல்ல விழிப்புணர்ச்சி ஊட்டும் பதிவு...........
    சரி சகோ, மின்சாரம் முலம் உபயோகப்படுத்தும் கொசு விரட்டிகளினால் தீமையா அல்லது நன்மையா ?? முடிந்தால் பதில் கொடுக்கவும்..நன்றி.

    ReplyDelete
  4. Reply @ Nasar said...
    //நல்ல விழிப்புணர்ச்சி ஊட்டும் பதிவு மின்சாரம் முலம் உபயோகப்படுத்தும் கொசு விரட்டிகளினால் தீமையா...//

    தீமை தான் சகோ,அவைகளிலும் ரசாயனங்கள் தான் உள்ளன.

    ReplyDelete
  5. வெங்கட்Sun Sept 09, 02:43:00 am

    நிகோடின் தரும் பாதிப்புகளை விட சிகரெட்டில் இருக்கும் மற்ற நச்சுக்களின் தீமை அதிகம்! நல்ல பதிவு! கொசு வலை தான் பெட்டர்!

    ReplyDelete
  6. கொசு வர்த்தி தீமைதான்னு தெரியும் ஆனா இவ்வவளவு மோசாமானதுன்னு தெரியாது.
    நல்ல பதிவு

    ReplyDelete
  7. nalla pathivu nanbaa...

    all out pondra minsaram moolam payanbaduthum kosu varthigal patriyum serthu kurippittirukkalaam...

    ReplyDelete
  8. //இயற்கை முறையில் கொசு விரட்டும் வழிமுறைகளை நோக்கி நாம் இனிமேலாவது நகருவோம்...//

    சரியான தீர்வு. கொசுக்கள் உருவாகாமல் தடுத்தலும், முடிந்த வரையில் உயிர்கொலை தவிர்க்க கொசுவலை உபயோகப்படுத்தலும் நன்று. அருமையாக சமூக சிந்தனையுடன் கூடிய பதிவு! நன்று.

    //மேலே படியுங்கள்...//

    "தொடர்ந்து படியுங்கள்", "மேற்கொண்டு படியுங்கள்" என்றிருந்திருக்கலாமோ?..

    ReplyDelete

  9. reply @ வெங்கட் said...
    ஆம் நன்பரே!கொசுவர்த்திகள் சிகரெட் புகையை விட அதிக நேரம் நம்மை புகையை சுவாசிக்க செய்கிறதால் தீமைகளும் அதிகம்

    ReplyDelete
  10. மறுமொழி @ T.N.MURALIDHARAN கூறியது...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...

    ReplyDelete
  11. மறுமொழி @ம.ஞானகுரு said...
    //all out pondra minsaram moolam payanbaduthum kosu varthigal patriyum serthu kurippittirukkalaam...//
    மறுமொழியில் குறிப்பிட்டிருக்கிறேன் நன்பா...அவைகளும் ரசாயனம் தானே...

    ReplyDelete
  12. மறுமொழி @ வே.சுப்ரமணியன். said...
    //சரியான தீர்வு. கொசுக்கள் உருவாகாமல் தடுத்தலும், முடிந்த வரையில் உயிர்கொலை தவிர்க்க கொசுவலை உபயோகப்படுத்தலும் நன்று. அருமையாக சமூக சிந்தனையுடன் கூடிய பதிவு! நன்று.//
    கருத்துக்கு நன்றி தோழரே!
    //தொடர்ந்து படியுங்கள்", "மேற்கொண்டு படியுங்கள்" என்றிருந்திருக்கலாமோ?//
    மாற்றம் செய்துவிட்டேன் நன்பரே!

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....