Monday, November 16, 2015

மழை அதிகாரம்

                                 மழை அதிகாரம்


மழையைப் பழித்தல் 
வேலைக்குப் போக முடியல,
பொழப்ப கெடுத்துருச்சு,
நாசமாய்ப்போற மழை,
மழையால டிராபிக் ஜாம் ஆகிடுச்சு,
சாக்கடை நெரஞ்சுடுச்சு,
ரோட்டுல நடக்க முடியல

நமக்குலாம் மழை தேவையா !,
போய் வேற எங்கயாவது பெய்ய வேண்டியதுதானே !
நாம இப்ப மழைய கேட்டோமா ?!


மழையை வியத்தல்:


 வானிருந்து பூமி வருதலால் அது அமிழ்தம்

                           - அறத்துப்பால் அதிகாரம் 2 .  வான் சிறப்பு

லகில் உயிர் நிலைத்திருப்பதற்கான மூலக் காரணங்களுள் தண்ணீரின் பங்கு கணிசமானது, அதிமுக்கியமானது.

தண்ணீர் - உலகிலும் சரி , உடலிலும் சரி முக்கால்வாசி இடத்தை இதுதான் ஆக்கிரமித்திருக்கிறது.நிலமும் சரி, உடலும் சரி தண்ணீர் போட்ட பிச்சை தான்.

எல்லா வகையிலும் மழை தான் தண்ணீரின் ஆதாரம்..

மழையைப் பொருத்தவரை அசுரத்தனம், அதீதம், அநியாயம், அதிகம் என்றெல்லாம் வரையறைகள் வைப்பது தவறு. பூமியின் தேவைக்கருதி அது பெய்கிறது., உங்களுடைய, என்னுடைய தேவைகருதி அல்ல.

சிலப்பதிகாரத்தின் வாழ்த்துப்பாடலில் இளங்கோவடிகள் மாமழை போற்றுதும் எனப் பாடி மழையை வணங்குகிறார், ( தற்போது தமிழகம் கண்டுகொண்டிருப்பது ஒருவகையில் மாமழை தான். மா.. மழை !).

                                    *****

டந்த சில தினங்களாக முன்பெப்போதும் போலில்லாது மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அநேக இடங்களை மூழ்கடித்து இன்னமும் பெய்துகொண்டிருக்கிறது. சில இடங்களை சிறிதும் இரக்கமின்றி தலைமுழுக தயாராகிக் கொண்டிருக்கிறது.

மழையில் நனைந்தபடி நடத்தல், மழையை ரசித்தபடி தேநீர் பருகுதல், பெய்து தேங்கிய மழைநீரில் காகிதக்கப்பல் விடுதல்... இவையெல்லாம் ரசிப்பதற்கும், நினைப்பதற்கும் அழகாய்த்தான் இருக்கின்றன. ஆனால் உண்மை வேறுவிதமாக வடிவெடுத்திருக்கிறது.

"வேலைக்கு போக முடியல", " பொழப்ப கெடுத்துருச்சு, "நசமாய்ப்போற மழை", " இந்த மழையால டிராபிக் ஜாம் ஆகிடுச்சு, சாக்கடை நெரஞ்சுடுச்சு, ரோட்டுல நடக்க முடியல", ...

அநேக இடங்களில் மழை அழையா விருந்தாளியாக அவமதிக்கப்படுகிறது. நன்றியை தன் வாழ்வின் அங்கமாக கொண்ட தமிழினம் நன்றிகெட்டு எப்படி இப்படி ஆனதென்று தெரியவில்லை. உனக்கு வந்தா தெரியும் என என்னை நீங்கள் கைகாட்டலாம்., எனக்கு கவலையில்லை., மழையைப் பழித்தல் தவறு என்கிற என் கருத்தை நான் மாற்றிக்கொள்ளப்போவதில்லை.

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா ! பெரும்பாலும் நாம் சுயநலமானவர்கள், குடை கொண்டுபோகாத போது , ஒதுங்குவதற்கு இடம் இல்லாதபோது, கொடியில் துணி காயப்போட்டிருக்கும்போது, மாடியில் கருவாடோ,வடகமோ,வற்றலோ உலரும்போது, மழை பெய்ய ஆரம்பித்தால் மழையைப் பழிக்கிறோம்.

வீடுநோக்கி செல்லும் குடையற்ற தினங்களில் நான் வீட்டிற்கு போகும் வரை மழை பெய்ய வேண்டாம் என நினைத்துக்கொள்கிறோம்.

பள்ளி/கல்லூரி நாட்களில் மழையின் காரணமாக விடுமுறை ஆக வேண்டுமென அடைமழை வேண்டி ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம். வேண்டாத தினங்களில் அலுவலகங்கள் மழைக்குள் மூழ்கி விடுமுறை கிடைக்காதா ? என ஏங்குகிறோம்.

நமக்கு உதவுவது மட்டும்தான் நல்லது, என்கிற சித்தாந்தம் நமக்குள் வேர்விட்டு ,கிளைவிட்டு மரமாகி காடாக விரவிக்கிடக்கிறது. எதுவும் உடனுக்குடன் பலன் தர வேண்டும் என்கிற இன்ஸ்டன்ட் கலாச்சார புத்திக்கு மழைநீர் நிலத்திற்குள் சென்று நாளைய சந்த்திக்கு உதவும் என்று சொன்னால் உறைக்கப்போவதும் இல்லை, அவர்கள் அதை நம்பபோவதும் இல்லை.

மாமழை !

சென்னையைப் பற்றி பேசியே ஆக வேண்டும் , சென்னையைப்பற்றி பேசாவிட்டால் இந்த மழைக் கட்டுரை ஜென்ம சாபல்யம் அடையாது. 
இந்திய பெருநகரங்களில் தண்ணீரை மிகக்குறைவாகப் பயன்படுத்தும் புண்ணியபூமி சென்னை என்கிறது ஒரு புள்ளிவிவரம். காரணம் தண்ணீர் சிக்கனம் இல்லை, தண்ணீருக்கான பற்றாக்குறை. பற்றாக்குறையைப் போக்கிக்கொள்ள மக்கள்கூட்டம் ஆழ்துளையிட்டு பூமிக்குள்ளிருக்கும் நீரை உறிஞ்சுகிறது.

தமிழக தலைநகராம் சென்னையில் ஒரு வருடம் குப்பைக்கொட்டியவன் என்கிற முறையில் ஒரு விசயம் சொல்கிறேன். தமிழகத்திலேயே மிக மோசமான குடிநீர் சென்னையில் தான் இருக்கிறது, அதற்கு மெட்ரோ வாட்டர் என புனைபெயர் வேறு !

தண்ணீரை காசுக்கு வாங்கி குடிப்பது கௌரவம் என்னும்  நிலை மாறி சாவைத்தள்ளிப்போடும் சாகசக்கலை என்னும் அளவிற்கு சென்னையின் நிலைமை இருக்கிறது.

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள் ,

சமநிலை என்பது பிரபஞ்ச தத்துவம். 

குறைகிற போது நிறைத்து சமன்செய்ய முயல்வது தான் இயற்கையின் குணம். காற்றழுத்தம் குறைவுபட்டால் அதிகமாக இருக்கும் இடத்திலிருக்கும் காற்று குறைவழுத்தத்தை நோக்கி நகரும், எலக்ட்ரான்களை குறைவு படுத்தினால் மின்னோட்டம் உருவாகி அவை சம்மாகும், நிலத்திற்குள்ளிருக்கும் நீரின் அளவை குறைத்துக்கொண்டே வந்தால் சமப்படுத்த தன்னால் ஆனதை இயற்கை செய்யும்.

மழையே பெய்யாது என நம்பி ! தண்ணீர் வற்றிப்போன ஆறு, குளம் , ஏரி, கண்மாய் என அத்தனையிலும் வீடுகட்டிக்கொண்டு வாழ்கிறோமே ! அந்த இடங்களில் மழை நீர் வந்தால் அது மழையின் பிழை என்று சொல்வது நியாயமா !?

அண்டை மாநிலங்களிடம் நீர் கேட்டு அழுகிறோமே கேரளத்திலும், கர்நாடகத்திலும் மரங்கள் அதிகம் இருக்கின்றன, அங்கே மனிதர்களுக்கு மட்டுமின்றி மரங்களுக்கும் காடுகள் இருக்கின்றன என்பதைப் பற்றியெல்லாம் நாம் யோசிக்கின்றோமா !
                                          *****


  • தமிழகத்தில் காமராசர் ஆட்சிக்குப் பிறகு அணைகளே அமையவில்லையாமே !!
  • பெய்த மழைத் தண்ணீரை வெளியேற்ற அரசாங்கம் என்ன செய்யும் , மோட்டார் போட்டு மறுபடியும் மண்ணுக்குள் அனுப்புமா, வடிகால் அமைத்து கடலுக்கு அனுப்புமா !? வற்றட்டும் என அப்படியே விட்டுவிடுமா !!
  • நிவாரண நிதி என்று எவ்வளவு பணம் கொடுப்பார்கள்
  • வரப்போகும் புயலுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் ?
  • இந்த மழை எப்போது நிற்கும்?

ஏதேதோ எண்ணங்கள் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது ! வீட்டிற்கு வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது,

கட்டுரையை பதிவதற்கு முன் மழையை எட்டிப்பார்த்தேன்..

சர சர குரலில் மறுபடியும் ஒரு மழைத்துளி என்னிடத்தில் பேசியது ...

"வியக்கவும் வேண்டாம், பழிக்கவும் வேண்டாம் .. , நகர மட்டும் கொஞ்சம் இடம் கொடுங்கள். "

அடித்தாலும் அணைத்தாலும் அவள் அன்னை என்போமே மழையும் கூட நம் அன்னை தான் !
ஹையா!! லீவு உட்டாச்சு 



Labels: , , , ,

Thursday, November 08, 2012

தீபாவளி : சில நிபந்தனைகள்


(தீபாவளி கொண்டாடுபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பகுதி)

தீபாவளி -நடைமுறை கண்ணோட்ட அலசல்: (Practical Perception on Diwali)

முன்குறிப்பு:
இது தீபாவளி தமிழர்களின் பண்டிகை இல்லை ஏன்எனும் பதிவின் தொடர் பதிவு.நான் இந்த தலைப்பிட்டதை பலர் ஏன்?? என்று சுட்டியிருந்தார்கள்இந்த தலைப்பை முதலில் பயன்படுத்திய நபர் தந்தைப் பெரியார் -  பெரியார் 94ஆவது பிறந்தநாள் விழா  "விடுதலைஇதழில் தீபாவளி தமிழர் விழாவாஎன்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.(இங்கு கிளிக் செய்து அந்த கட்டுரையை படிக்கலாம்).

தீபாவளியும் நானும்:
யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும்.தீபாவளி கொண்டாட எந்த காரணம் வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்.அது நம் தமிழர் பண்டிகையாக இல்லாமல் இருந்தால் என்னஅதை நாம் கொண்டாடக்கூடாதாநடைமுறை சார்ந்த கண்ணோட்டத்தில் இந்த தீபாவளி பண்டிகையை இந்த பதிவில் அலசலாம்.

 னது குழந்தை பருவத்தை நினைத்து பார்க்கிறேன்....தீபாவளி பண்டிகையை தேடி காலண்டரை அடிக்கடி புரட்டி நாட்களை எண்ணும் அந்த சின்னஞ்சிறு வயதை நினைத்து பார்க்கிறேன்....

 தீபாவளி பெரியவர்களுக்கு சந்தோசம் தருகிறதோ இல்லையோகுழந்தைகளுக்கு பாரபட்சம் காட்டாமல் சந்தோசம் காட்ட தீபாவளிகள் எப்போதும் தயாராகவே இருக்கின்றன.எனக்கும் கூட அப்படித்தான் தீபாவளி அறிமுகமாகியது(வயது நினைவில்லை).அதிகாலை எண்ணெய் குளியல்,புத்தாடை,மூத்தோர் காலில் விழுந்து ஆசி பெறல்,பின்பு இனிப்பு,பலகாரம்,சாப்பாடு என செம கட்டு கட்டுதல்,அண்டை வீட்டாருடன் பகிர்ந்து கொள்ளல்பட்டாசு வெடித்து மகிழ்தல்.

னக்கு விவரம் தெரிந்த வரையில் என் தீபாவளிகள் பெரும்பாலும் இப்படியாகத்தான் இருந்திருக்கின்றன.நான் பத்தாம் வகுப்பு முதல் ஒரு மூன்று வருடம் தினமலர் நாளிதழ் போடும் சிறுவனாக இருந்திருக்கிறேன்,தீபாவளி அன்று தினமலருக்கு விடுமுறை கிடையாது,இலவச இணைப்பாக சீயாக்காய் பொடி,ஷாம்பூ இது போன்ற விசயங்களையும் நாழிதளுடன் அவர்கள் தருவார்கள்.அதிகாலையில் நாளிதழுடன்,இலவச இணைப்பையும்,தீபாவளி வாழ்த்துக்களையும் வீடு வீடாக இறைத்துவிட்டு ஏழு மணிக்குள்ளாக வீடு வந்து தீபாவளியை தொடர்வேன்.
வயது ஆக ஆக தீபாவளி மீதான சுவரசியம் எனக்கு குறைந்து கொண்டே வந்திருப்பதை என்னால் கவனிக்க முடிகிறது.தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்தல்,தீபாவளியன்று ரிலீஸ் ஆகிய படங்களுக்கு செல்லுதல் என்று கொண்டாட்டம் சிறு வட்டத்தில் சுற்ற ஆரம்பித்தது
 தீபாவளி ஏன் எதற்காக?..கொண்டாட வேண்டுமாவேண்டாமா?... தமிழர் பண்டிகையாஆரியர் பண்டிகையாஎன்று கேள்வி கேட்பதெல்லாம் வீண் வேலை தான் ,கொண்டாட ஒரு நாள் இருக்கிறதென்றால் கொண்டாட யோசித்து நாளை இழப்பதை விடுத்து கொண்டாடி மகிழ்ந்திருப்பதே மேல்.

கொண்டாடுவதற்கு முன் சில நிமிடம்...:

 தீபாவளி என்றவுடன் நம் நினைவிற்கு எது வருகிறதோ இல்லை பட்டாசுகள் நிச்சயம் வரும்.பணம் இல்லா நபர்கள் கூட கடன் வாங்கியாவது பட்டாசு வாங்கி வெடித்து மகிழும் நடைமுறை நம்மவர்களிடம் உண்டுகாசை கரியாக்குதல் என்று இந்த பட்டாசு வெடிக்கும் நடைமுறைக்கு செல்லப்பெயரும் உண்டு.
பட்டாசில்லாத தீபாவளி, Green diwali, என்று சமூக சிந்தனையாளர்களும்,சுற்று சூழல் அறிஞர்களும் கூறுகிறார்கள்.பட்டாசில்லாத தீபாவளியாநினைத்து கூட பார்க்க முடியாது நம்மால்.

தீபாவளியும் -பட்டாசும்:

ட்டாசு உற்பத்தியில் இந்தியாவிலேயே நம்பர் ஒன் ஆக இருப்பது நம் சிவகாசி தான்,உலகிலேயே அதிக பட்டாசு உற்பத்தி செய்யும் இரண்டாவது இடம். (முதல் இடத்தில் இருப்பது சீனாவின் லியூயாங்க் (Liuyang in Hunan province of China). (மேலதிக விவரத்திற்கு). இரண்டாவது  பட்டாசு உற்பத்தி செய்யும் நகரம் நம்மிடம் உள்ளது என்று நீங்கள் பெறுமைபட்டு கொள்ளலாம்
 6-14 வயதுடைய குழந்தைகள் 33,000 பேர் குழந்தை தொழிலாளர்களாக சிவகாசியில் இருப்பதாக ஐ.நா வின் அறிக்கை சொல்கிறது.(கணக்கில் தெரிந்து இவ்வளவு தெரியாமல் எத்தனையோ?) உலகில் அதிக குழந்தை தொழிலாளர்கள் கொண்ட நகரம் சிவகாசி.நாம் வெடிக்கும் பட்டாசுகளை தயாரித்து கொடுத்த அந்த பிஞ்சு விரல்களை  பட்டாசை கையிலெடுக்கும் நொடிகளில் நினைத்துப் பார்க்க வேண்டும்.பட்டாசு வெடித்து சிதறுவது கண்டு,எத்தனை குழந்தைகளின் கனவுகள் இப்படி வெடித்து போயிருக்கும் என்று யோசித்து கொள்கிறேன்.,வெடி சத்தத்தை என்னால் இப்போது ரசிக்க முடியவில்லை.

தீ விபத்துகளில் உலகின் முதல் இடத்தில் இருக்கும் சீன பட்டாசு தொழிற்சாலையை விட இரண்டாம் இடத்தில் இருக்கும் நம் சிவகாசி முதல் இடத்தில் இருக்கிறது.இது வரை ஆயிரக்கணாக்கானவர்கள் நம் பட்டாசுகளை தயார் செய்ய உயிர் இழந்து இருக்கிறார்கள்.அரசாங்க புள்ளிவிவரம் (TNFAMA மற்றும் IANS) கடந்த 12 வருடங்களில் 237 உயிர்கள் பலியாகியுள்ளன மற்றும் 200 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் கட்டுக்கதை கட்டுகிறது.

பட்டாசு இல்லாமல் தீபாவளியா ?

 நரகாசுரனை வதம் செய்த கிருஷ்ன பரமாத்மா கட்டாயம் பட்டாசு வெடித்து தான் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று கட்டளை இட்டாராஎன்ன?.

லர் "நான் பட்டாசு வெடிக்க மாட்டேன் என்று சொல்கிற நபர்களை பாமரத்தனமாகத்தான் பார்க்கிறார்கள்.பட்டாசு வெடிப்பது என்பது தீபாவளியின் சம்பிரதாயம் என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.
பட்டாசுகள் தீய சக்திகளை விரட்ட  2ம் நூற்றாண்டில்  சீனர்கள் கண்டுபிடித்தவை.கிபி.581 -907 வரை சீனாவை ஆட்சி செய்த சூயீ மற்றும் டாங்க் காலத்தில் (Sui and Tang Dynasties ) பல ரக பட்டாசுகள் பட்டையை கிளப்ப ஆரம்பித்தன.(1300 களில் மார்கோபோலோ ஐரோப்பியர்களுக்கு சீனர்களின் இந்த பழக்கத்தை அறிமுகம் செய்தார்மூங்கில் குழாய்களில் வெடிமருந்தை நிரப்பி வெடித்து மகிழும் இந்த பழக்கம் மெல்ல பல நாடுகளில் பிரபலமடைந்து,இன்று நாம் பயன்படுத்தும் நவீன பட்டாசுகளாக நாகரிக வளர்ச்சி அடைந்திருக்கிறது.

பட்டாசும் சிவகாசியும்:

 ம் சிவகாசியில் 1934 ல் திருசன்முக நாடார் மற்றும் திரு ஐய நாடார்  ஆகிய இருவரால் வெடி தொழிற்சாலையின் விதை இடப்பட்டது.இவர்கள் ஆரம்பித்த தொழிற்சாலைக்கு தேவையான பொருட்கள்,வெடிமருந்துகள் ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
காலப்போக்கில் இந்தியா முழுமைக்கும் பட்டாசு விற்பனை செய்யும் பிரம்மாண்ட நகரமாக அவதாரம் எடுக்க துவங்கியிருந்தது சிவகாசிNational Fireworks, Kaliswari Fireworks மற்றும் Standard Fireworks  1942-ல் ஆரம்பிக்கப்பட்டன.
சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளின் எண்ணிக்கை:
1934 -1 அல்லது 2
1942-  3
1980-  189
2001-   450



சிவகாசி சில தகவல்கள்:

  • இந்தியாவின் 90 சதவீத பட்டாசுகள் சிவகாசியில் தான் தயாராகின்றன.
  • இந்தியாவின் 80 சதவீதம் தீப்பெடிகள் இங்குதான் தயாராகின்றன.
  • சிவகாசியில் வருடம் முழுக்க தயாராகும் பட்டாசுகள் இந்தியா முழுக்க மூன்றே நாட்களில் வெடித்து தீர்க்க படுகின்றன.
  • வேலையில்லா திண்டாட்டம் இங்கு கிடையாது !
  • சிவகாசியை குட்டி ஜப்பான் என்று செல்லப்பெயர் இட்டவர் ஜவஹர்லால் நேரு.

தீபாவளியை பட்டாசு இன்றி கொண்டாட முடியுமா?

பட்டாசுகளை நாம் விரும்பாவிட்டாலும் குழந்தைகள் விரும்புகின்றன,அதனால் அதை வாங்க வேண்டிய அவசியம் உள்ளது என பலர் சொல்கிறார்கள்,கொஞ்சம் யோசியுங்கள் பட்டாசு கண்டு பயப்படும் குழந்தைகளுக்கு பட்டாசை அறிமுகம் செய்தது யார் என்று?,குழந்தைகளுக்கு பட்டாசின் தீமைகளை எடுத்து சொல்லுங்கள்வெடியே வெடிக்க வேண்டாம் என்று சொல்லாதீர்கள்,குறைத்து கொள்ளுங்கள்.,குறைகளை சொல்லுங்கள்.
தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று அர்த்தமாம் நம்மில் எத்தனை பேர் வீடுகளில் தீபாவளிக்கு விளக்கேற்றுகிறோம்.(பட்டாசு கொளுத்துவதோடு சரி)

பட்டாசினால் விளையும் தீமைகள்:

1.மாசு (காற்று மற்றும் ஒலி)
2.மிருகங்களை மிரள வைக்கும்
3.தீ விபத்துகளுக்கு காரணமாகும்
4.வயதானவர்களுக்கும் நோயாளிகளுக்கும் தொல்லை தரும்
5.குழந்தை தொழிலாளர்.
6.தயாரிக்கும் இடத்தில் விபத்து
7.வெடிக்கும் நபருக்கும் பாதிப்பு தரும்

பட்டயை கிளப்பும் பட்டாசுகள்:

நரகாசுரனை வதம் செய்த கிருஷ்ணன்

 தீபாவளி லஷ்மியை சிறப்பிக்கும் தினம் அந்த தினத்தில் அந்த லஷ்மி படத்தை சுற்றி இருக்கும் லட்சுமி வெடிகளையும்,சரஸ்வதி வெடிகளையும் ,இன்ன பிற கடவுள் உருவம் சுற்றிய வெடிகளையும் நாம் வெடிக்கிறோம்எது எதுக்கோ போராட்டம் செய்றாங்க....இதுக்கெல்லாம் செய்ய மாட்டாங்க !

எங்கும் சந்தோசம் நிறைந்திருக்கட்டும்..எல்லா வளமும் நலமும் பெற்று இனிது வாழ்க !
அனைவருக்கும் என் இனிய தீபாவளி           வாழ்த்துக்கள் ! 

கட்டுரைக்கு உதவியவை:
புதிய தலைமுறை 20/9/2012
http://sivakasionline.com/ மற்றும்
wikipedia கட்டுரைகள்


Labels: , , , ,

Sunday, November 04, 2012

தீபாவளி தமிழர்களின் பண்டிகை இல்லை ! ஏன்??



    தீபாவளி தமிழர்களின் பண்டிகை இல்லை ! ஏன்??
    தீபாவளி -தீபங்களின் வரிசை எனப்பொருள்படுகிற சமஸ்கிருத சொல்.தீபாவளியை தீபஒளித்திருநாள் என்று நாம் தமிழில் மொழியாக்கம் செய்து கொண்டோம்.இந்த திருநாள் கொண்டாடப்படுவதற்கு ஒன்றிற்கு மேற்பட்ட காரணங்களை பட்டியலிடுகிறார்கள்.

    கதை கதையாம் காரணமாம்...

    1.நராகாசுரனை கிருஷ்னன் வதைத்த நாள்
    2.ராவண வதம் முடிந்து ராமன் அயோத்தியா திரும்பிய நாள்
    3.பாண்டவர்கள் வனவாசம் முடிந்து நாடு திரும்பிய தினம்
    4.கோவர்த்தன கிரி மலையை தன் சுண்டு விரலால் தாங்கி மக்களை மழையிலிருந்து கிருஷ்ன்ன் காத்தருளிய நாள்.
    5.பார்கடலை கடையும் போது பூமியில் ஏற்பட்ட விஷத்தின் தாக்கத்தை சரி செய்த தன்வந்திரியின் பிறந்த தினம்.
    6.மகாவீர்ர் ஞானம் பெற்ற தினமாக சமணர்கள் கொண்டாடுகிறார்கள்.
    7.சீக்கியர்கள் தங்கள் ஆறாவது குருவான ஹர் கொவிந்த் சிங்க் -ன் வருகையை குறிக்கும் விதமாக கொண்டாடுகிறார்கள்...(மொகலாய மன்னன் ஜஹாங்கீர் சீக்கிய குரு மற்றும் 52 மன்னர்களை கைது செய்திருந்தான்,40 நாட்களுக்கு பிறகு குரு ஹர் கோவிந்த் சிங்க் விடுதலை செய்ய்ப்பட்ட தினம் தீபாவளி தினம் .இதன் நினைவாகவே சீக்கியர்கள் தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.)
    8.வங்காளத்தில் காளியை வழிபடும் தினமாக கொண்டாடுகிறார்கள்
    9.மார்வாடி இன மக்கள் தீபாவளியை வருடபிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

    இப்படியாக பட்டியல் நீள்கிறது.

    இதில் நரகாசுர வதத்திற்காக தீபாவளி என்பது நம் தமிழ் மக்களிடம் பரவலாக உள்ள நம்பிக்கை ...

      நரகசுர வதம்
    எந்த காரணமாக வேண்டுமானலும் இருந்து விட்டு போகட்டும்.தீபாவளியின் நோக்கம் அல்லது தத்துவம் 
     " தீமையை நன்மை வெற்றி கொள்ளல் " என்று சுருக்கமாக கூற முடியும்."அறியாமை இருளை அறிவு ஒளியால் நிறைக்கும் திரு நாள் " என்று கூட அர்த்தம் சொல்கிறார்கள்.

    இதை நினைவு கூர்ந்து சந்தோசமாக இருப்பதற்குத் தான் தீபாவளி என்னும் பண்டிகை நம்மிடையே கொண்டாடப்படுகிறது.

    தீபாவளி திருநாள் இந்தியாவில்:

    குஜராத்,மஹாராஸ்டிரம்,ஆந்திரம்,கேரளம்,பீகர்,வங்காளம்,அசாம்,கோவா,ஒரிசா,கர்நாடகம் ,தமிழகம் போன்ற மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.

    தீபாவளி தமிழர்களின் பண்டிகை கிடையாது.

    தீபாவளி பண்டிகை வட இந்தியர்கள் துவக்கி வைத்த பண்டிகை.வட இந்தியாவில் ஐந்து நாள் பண்டிகையாக இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

    5 நாள் பண்டிகையின் முதல் நாள் ஐப்பசி மாதம் (வடநாட்டில் இம்மாதத்தின் பெயர் அஸ்வினி மாதம்) வருகிற தேய்பிறையின்.(கிருஷ்ண பட்சம்) 13 ம் நாள் தன்திரயோதசி என்று பெயரிடப்பட்டு கொண்டாடப்படுகிறது. (தன் என்றால் செல்வம் எனும் பொருள்படும் திரயோதசி என்பது பதிமூன்றாம் நாள் என பொருள் படும்.). இந்த நாளில் தேவ லோக மருத்துவர் தன்வந்திரி பாற்கடலை கடைந்த போது பரவிய விஷத்தின் தாக்கம் போக்க அமிர்த கலசத்துடன் அவதரித்த தினம் என்றும் நம்ப படுகிறது.  

  1. முதல் நாள் முதலாளிகள் தங்கள் புதிய கணக்கு துவங்கும் நாளாக கொண்டாடுகிறார்கள்.
  2. இரண்டாம் நாளை நரகாசுர வதத்தினை நினைவு கூறும் தினமாக கொண்டாடுகிறார்கள்.
  3. மூன்றாம் தினம் (அமாவாசை) செல்வத்தின் நாயகி லெட்சுமியை ஆராதித்து வணங்கி வழிபடும் தினமாக கொண்டாடப்படுகிறது
  4. நான்காம் தினம் கோவர்த்தன பூஜை (கிருஷ்ணன் மலையை தாங்கி மழையின் தாக்கத்திலிருந்து மக்களை காத்த நாள்).ஹிந்து வருட பிறப்பின் துவக்க நாள்.
  5. ஐந்தாம் நாள் யமன் தன் தங்கை யமியை சந்தித்த தினம் என்று கொண்டாடப்படுகிறது.யமன் தன் தங்கைக்கு பரிசுப்பொருட்களை கொடுத்ததாகவும்,யமி தன் அண்ணனுக்கு விருந்து உபசாரம் செய்ததாகவும் சொல்கிறார்கள்.இந்த தினத்தை யம துவிதியை என்று அழைக்கிறார்கள்.இந்த தினத்தில் அண்ணன்மார்கள் தங்கள் தங்கைமார்களுக்கு பரிசுப்பொருட்கள் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்..


  6. இந்த ஐந்து நாள் விழாவில் நம் பணத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் மனநிலை தீபாவளி (பணத்தின் நாயகி லெட்சுமியை வழிபடும் முறை) பண்டிகையை மட்டும் கொண்டாட துணிந்தது.

    தீபாவளி வட நாட்டினரிடமிருந்து தென்னாட்டவருக்கு பரவிய கொண்டாட்ட தினம்.

    பிற நாடுகளில் தீபாவளி:

    தீபாவளி இந்தியா தவிர பிற நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.!(அந்த நாடுகளில் இந்தியர்கள் தான் கொண்டாடுகிறார்கள்)

    அவைகளின் பட்டியல் கீழே...

    அந்த நாடுகளில் தீபாவளி கொண்டாட்டம் பற்றிய விவரம் வேண்டுவோர் லிங்கை க்ளிக் செய்து பெற்று கொள்ளலாம்.




    அடுத்த பதிவில் தீபாவளி பண்டிகை பற்றி இன்னும் பேசலாம்...





Labels: , , , , ,

Saturday, September 08, 2012

1 கொசுவர்த்தி = 100 சிகரெட் ! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!


 சுத்தமில்லாத காற்றால் தன்னை நிறைத்துக்கொண்டு,அவதிப்படும் சுற்றுபுறத்திற்குள் சிக்கிகொண்டு அரோக்கியத்தை இழந்து வரும் நவீனமயமாகி விட்ட நம்மை அதிர்ச்சியூட்ட இன்னுமொரு செய்தியை புதிய அராய்ச்சி வெளியிட்டுள்ளது.

து என்ன புதுக்கதை??


   
  கொசுவை விரட்ட பயன்படுத்தப்படும் கொசுவர்த்திகள் வெளியிடும் புகை 100 சிகரெட்கள் வெளியிடும் புகைக்கு சமமான பாதிப்பை ஏற்படுத்துகின்றனவாம்....தொடர்ந்து படியுங்கள்...

   சென்னையிலுள்ள தேசிய தொற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் வீட்டில் பயன்படுத்தும் பூச்சிகொல்லிகளால் ஏற்படும் நோய்களை பற்றி ஆராய்ச்சி ஒன்றை நடத்தியது இதில் கொசுக்களை விரட்ட நாம் பயன்படுத்தும் சுருள்கள் வெளியிடும் புகையால் என்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்ற ஆராய்ச்சியும் ஒன்று.
 கொசுவை விரட்ட பெரும்பாலான (96 % )மக்களால் பயன்படுத்தப்படும் ,நாம் தூங்குகின்ற வேளையில் நம்முடனே குறைந்தது ஏழு மணிநேரமாவது இருக்கும் இந்த கொசுவர்த்திகள் வெளியிடும் புகை இவ்வளவு தீமைகளை பரிசளிக்க கூடியது என்று நாம் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டோம்.ஆனால் அது வெளியிடும் புகை நூற்றுகணக்கான சிகரட்டுகள் வெளியிடும் புகையினால் வரும் பாதிப்பை தருகிறது என்று அந்த ஆராய்ச்சி தன் முடிவை சொல்லி நமக்கு அதிர்ச்சி தருகிறது.அதிலும் மலேசிய மற்றும் சீன கொசுவர்த்தி சுருள்களில் இருந்து வெளியாகும் புகை 134 சிகரெடுகளுக்கு சமமான தீங்கை தருகின்றனவாம்..!


கொசுவர்த்திகளில் என்ன உள்ளது??

  ச்சு புகையை வெளியிடும் அளவிற்கு இந்த சுருள்களில் என்ன பொருட்கள் உள்ளன என்று நான் இணையத்தை ஆராய்ந்தேன் ...
கொசுவர்த்தி தயாரிக்க தேவையான பொருட்கள்:

1.பைரத்ரின்(Pyrethrins)
2.மரத்தூள்
3.தேங்காய் ஓட்டு கரி
3. தூபப்பொடி (அ) சமித்து பிசின்)(joss powder).
4.கலப்பிகள் (Binders)
5.நைட்ரேட்கள் (Nitrates)மற்றும் 
6.சேர்ப்பு பொருட்கள்(additives)

  கொசுவர்த்தியின் மூலப்பொருட்களில் கொசுவை விரட்ட பயன்படும் முக்கிய பொருள் பைரத்ரின் எனும் ரசாயனம்.இது சாமந்திப்பூவிலிருந்து(chrysanthemum) பெறப்படுகிறது.இது தாவரங்களின் மூலம் கிடைக்கும் பொருள் தான் என்பதால் இதனால் மனித குலத்திற்கு தீமைகள் குறைவு தான்.ஆனால் இது மீனினங்கள் மற்றும் பூச்சியினங்களை செயலிழக்க செய்யும் தன்மை உடையது.


            சாமந்திப்பூ


   கொசுவை விரட்ட தேவையான இந்த பைரத்ரின் சாதாரணமாக புகையை வெளியிடும் அளவு எரியாது,எரிந்தாலும் நீண்ட நேரம் வராது,மேலும் எளிதில் சிதைவுறும் தன்மையுடையது.
   தை நீண்ட நேரம் புகைய வைக்க இதனுடன் சேர்க்கப்படும் மேலே குறிப்பிட்டிருக்கும்(மேலே குறிப்பிட்டுள்ள பட்டியலில் உள்ள முதல் மூன்று பொருட்களால் தீங்கில்லை ) மீதமுள்ள பொருட்கள் தான் தீங்கு விளைவிக்கின்றன.கொசுவர்த்தியில் 99% இவைகள் தான் உள்ளன மீதமுள்ள ஒரு சதவீதமே பைரத்ரின் !(ரசாயனங்களின் உதவியின்றி நீண்ட நேரம் பைரதிரின்-ஐ எரிய வைக்க ஏதாவது முறையிருந்தால் நன்றாக இருக்கும்.!)


கொசுவர்த்திகளில் நிகோடின் இல்லையே பின் இவை எப்படி சிகரெட்டுகளுடன் ஒப்பீடு செய்யப்படுகின்றன??

   ண்மைதான் கொசுவர்த்திகளில் சிகரெட்டில் உள்ள நிகோடின் எனும் பொருள் கிடையாது..சிகரெட் தரும் தீமைகள் அத்தனையையும் சளைக்காமல் இந்த புகையும் தருகிறது.
     கொசுவர்த்தி புகையில்....


  • பாலி அரோமடிக் ஹைட்ரோ கார்பன் (PHC)
  • ஃபார்மால்டிஹைடு(Formaldehyde)
  • அசிட்டாலிடைடு(acetaldehyde)
  • மற்றும் பென்சீன் ,தொலுவீன் 
போன்ற பொருட்கள் உள்ளன இவை சிகரெட் புகையை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்த வல்லவை...

இந்த புகை நுரையீரல்,கல்லீரல் போன்ற உடல் உள்ளுருப்புகளை பாதிக்கிறது
இதய நோய்களுக்கான வாய்ப்புகளையும் ,சர்க்கரை நோய்க்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது.
ஆஸ்துமா,சுவாசக்கோளாறுகள்,புற்று நோய்க்கான காரணியாகவும் அமைகின்றன....

அம்மாடியோவ்...! 

இயற்கை முறையில் கொசு விரட்டும் வழிமுறைகளை நோக்கி நாம் இனிமேலாவது நகருவோம்...

Labels: , , , , , ,