Sunday, November 04, 2012

தீபாவளி தமிழர்களின் பண்டிகை இல்லை ! ஏன்??  தீபாவளி தமிழர்களின் பண்டிகை இல்லை ! ஏன்??
  தீபாவளி -தீபங்களின் வரிசை எனப்பொருள்படுகிற சமஸ்கிருத சொல்.தீபாவளியை தீபஒளித்திருநாள் என்று நாம் தமிழில் மொழியாக்கம் செய்து கொண்டோம்.இந்த திருநாள் கொண்டாடப்படுவதற்கு ஒன்றிற்கு மேற்பட்ட காரணங்களை பட்டியலிடுகிறார்கள்.

  கதை கதையாம் காரணமாம்...

  1.நராகாசுரனை கிருஷ்னன் வதைத்த நாள்
  2.ராவண வதம் முடிந்து ராமன் அயோத்தியா திரும்பிய நாள்
  3.பாண்டவர்கள் வனவாசம் முடிந்து நாடு திரும்பிய தினம்
  4.கோவர்த்தன கிரி மலையை தன் சுண்டு விரலால் தாங்கி மக்களை மழையிலிருந்து கிருஷ்ன்ன் காத்தருளிய நாள்.
  5.பார்கடலை கடையும் போது பூமியில் ஏற்பட்ட விஷத்தின் தாக்கத்தை சரி செய்த தன்வந்திரியின் பிறந்த தினம்.
  6.மகாவீர்ர் ஞானம் பெற்ற தினமாக சமணர்கள் கொண்டாடுகிறார்கள்.
  7.சீக்கியர்கள் தங்கள் ஆறாவது குருவான ஹர் கொவிந்த் சிங்க் -ன் வருகையை குறிக்கும் விதமாக கொண்டாடுகிறார்கள்...(மொகலாய மன்னன் ஜஹாங்கீர் சீக்கிய குரு மற்றும் 52 மன்னர்களை கைது செய்திருந்தான்,40 நாட்களுக்கு பிறகு குரு ஹர் கோவிந்த் சிங்க் விடுதலை செய்ய்ப்பட்ட தினம் தீபாவளி தினம் .இதன் நினைவாகவே சீக்கியர்கள் தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.)
  8.வங்காளத்தில் காளியை வழிபடும் தினமாக கொண்டாடுகிறார்கள்
  9.மார்வாடி இன மக்கள் தீபாவளியை வருடபிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

  இப்படியாக பட்டியல் நீள்கிறது.

  இதில் நரகாசுர வதத்திற்காக தீபாவளி என்பது நம் தமிழ் மக்களிடம் பரவலாக உள்ள நம்பிக்கை ...

    நரகசுர வதம்
  எந்த காரணமாக வேண்டுமானலும் இருந்து விட்டு போகட்டும்.தீபாவளியின் நோக்கம் அல்லது தத்துவம் 
   " தீமையை நன்மை வெற்றி கொள்ளல் " என்று சுருக்கமாக கூற முடியும்."அறியாமை இருளை அறிவு ஒளியால் நிறைக்கும் திரு நாள் " என்று கூட அர்த்தம் சொல்கிறார்கள்.

  இதை நினைவு கூர்ந்து சந்தோசமாக இருப்பதற்குத் தான் தீபாவளி என்னும் பண்டிகை நம்மிடையே கொண்டாடப்படுகிறது.

  தீபாவளி திருநாள் இந்தியாவில்:

  குஜராத்,மஹாராஸ்டிரம்,ஆந்திரம்,கேரளம்,பீகர்,வங்காளம்,அசாம்,கோவா,ஒரிசா,கர்நாடகம் ,தமிழகம் போன்ற மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.

  தீபாவளி தமிழர்களின் பண்டிகை கிடையாது.

  தீபாவளி பண்டிகை வட இந்தியர்கள் துவக்கி வைத்த பண்டிகை.வட இந்தியாவில் ஐந்து நாள் பண்டிகையாக இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

  5 நாள் பண்டிகையின் முதல் நாள் ஐப்பசி மாதம் (வடநாட்டில் இம்மாதத்தின் பெயர் அஸ்வினி மாதம்) வருகிற தேய்பிறையின்.(கிருஷ்ண பட்சம்) 13 ம் நாள் தன்திரயோதசி என்று பெயரிடப்பட்டு கொண்டாடப்படுகிறது. (தன் என்றால் செல்வம் எனும் பொருள்படும் திரயோதசி என்பது பதிமூன்றாம் நாள் என பொருள் படும்.). இந்த நாளில் தேவ லோக மருத்துவர் தன்வந்திரி பாற்கடலை கடைந்த போது பரவிய விஷத்தின் தாக்கம் போக்க அமிர்த கலசத்துடன் அவதரித்த தினம் என்றும் நம்ப படுகிறது.  

 1. முதல் நாள் முதலாளிகள் தங்கள் புதிய கணக்கு துவங்கும் நாளாக கொண்டாடுகிறார்கள்.
 2. இரண்டாம் நாளை நரகாசுர வதத்தினை நினைவு கூறும் தினமாக கொண்டாடுகிறார்கள்.
 3. மூன்றாம் தினம் (அமாவாசை) செல்வத்தின் நாயகி லெட்சுமியை ஆராதித்து வணங்கி வழிபடும் தினமாக கொண்டாடப்படுகிறது
 4. நான்காம் தினம் கோவர்த்தன பூஜை (கிருஷ்ணன் மலையை தாங்கி மழையின் தாக்கத்திலிருந்து மக்களை காத்த நாள்).ஹிந்து வருட பிறப்பின் துவக்க நாள்.
 5. ஐந்தாம் நாள் யமன் தன் தங்கை யமியை சந்தித்த தினம் என்று கொண்டாடப்படுகிறது.யமன் தன் தங்கைக்கு பரிசுப்பொருட்களை கொடுத்ததாகவும்,யமி தன் அண்ணனுக்கு விருந்து உபசாரம் செய்ததாகவும் சொல்கிறார்கள்.இந்த தினத்தை யம துவிதியை என்று அழைக்கிறார்கள்.இந்த தினத்தில் அண்ணன்மார்கள் தங்கள் தங்கைமார்களுக்கு பரிசுப்பொருட்கள் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்..


 6. இந்த ஐந்து நாள் விழாவில் நம் பணத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் மனநிலை தீபாவளி (பணத்தின் நாயகி லெட்சுமியை வழிபடும் முறை) பண்டிகையை மட்டும் கொண்டாட துணிந்தது.

  தீபாவளி வட நாட்டினரிடமிருந்து தென்னாட்டவருக்கு பரவிய கொண்டாட்ட தினம்.

  பிற நாடுகளில் தீபாவளி:

  தீபாவளி இந்தியா தவிர பிற நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.!(அந்த நாடுகளில் இந்தியர்கள் தான் கொண்டாடுகிறார்கள்)

  அவைகளின் பட்டியல் கீழே...

  அந்த நாடுகளில் தீபாவளி கொண்டாட்டம் பற்றிய விவரம் வேண்டுவோர் லிங்கை க்ளிக் செய்து பெற்று கொள்ளலாம்.
  அடுத்த பதிவில் தீபாவளி பண்டிகை பற்றி இன்னும் பேசலாம்...


 

Post Comment

10 comments:

 1. விரிவான தகவல் தந்துள்ளீர்கள் நன்றி விஜயன்

  ReplyDelete
 2. தீபாவளி பற்றிய பல்வேறு தகவல்கள் நன்று விஜயன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றிகள்

   Delete
 3. பல தகவல்கள் அறியாதவை விஜயன்.

  தீபாவளித் திண்டாட்டங்கள் நீங்கள் எழுதுவதற்கு முன் என் தீபாவளி வாழ்த்துக்களைச் சொல்லிவிடுகிறேன்.

  இனிய தீபாவளி வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா

   Delete
 4. பிற நாடுகளில் தீபாவளி பற்றியையும் தகவல்கள் தந்தமைக்கு நன்றி...

  தீபாவளி வாழ்த்துக்கள்...
  tm2

  ReplyDelete
 5. அறிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

  ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....