இணையத்தின்வரலாறு-பாகம்-4
இணையம் வழியாக பரிமாறிக்கொள்ளப்பட்ட முதல் செய்தி:
இணையத்தின் முன்னோடியான ஆர்பா செயல்பாட்டிற்கு நான்கு முனைப்புள்ளிகளுடன்(Nodes) வந்தது.அவை பற்றிய விவரங்களை கடந்த பதிவில் பார்த்தோம்.இணையத்தில் முதன் முதலாக பரிமாறிக்கொள்ளப்பட்ட செய்தியை பற்றியும்,உலகின் முதல் இணைய இணைப்பான ஆர்பா எப்படி தன் செயல்பாட்டை துவக்கியது என்றும் இந்த பதிவில் பார்க்கலாம்.
நான்கு கணிப்பொறி இணைப்புடன் தன் பயணத்தை துவக்கிய இன்டர்நெட்
பட விளக்கம்:
இதில் வட்டத்திற்குள் எழுதி இருப்பது கணிப்பொறியின் வகை (தற்காலத்தில்HCL,HP,Dell இந்த மாதிரி,அந்த கால கணிப்பொறிகள்).வட்டத்திற்கு வெளியே எழுதி இருப்பது ஆர்பா-நெட் –ல் முதன்முதலாக இணைந்த 4 நிறுவனங்கள்(பார்க்க :கடந்த பதிவு).IMP என்பது தற்காலத்தில் பயன்படுத்தப்படும் Router மற்றும் Modemகளின் முன்னோடி Interface Message Processor. "ஆர்பா –இணையத்தில்" IMP உதவியுடன் தான் 4 நிறுவனங்களின் கணிப்பொறிகளும் இணைக்கப்பட்டன.
ஆர்பா-நெட் சோதனை ஓட்டம் :
ஆர்பா-நெட் தன் சோதனை ஓட்டத்திற்கு தயாரானது.UCLAகலிபோர்னியா யுனிவர்சிட்டி ,லாஸ் ஏஞ்சல்ஸ்-ல்.கணிப்பொறித்துறை பேராசிரியரான க்ளெயின்ராக் (Kleinrock).அவரது மாணவர்கள் சிலருடன் ஸ்டான்போர்டு பல்கலை., இல் உள்ள கணிப்பொறிக்கு லாக்-இன் செய்து தகவல் அனுப்ப திட்டமிட்டனர்.இங்கே டைப் செய்யும் ஒவ்வொரு எழுத்தும் ஸ்டான்போர்டில்(SRI) உள்ள கனிணியில் தெரிய வேண்டும் என்பது திட்டத்தின் நோக்கம்.
“LOGIN” என்னும் வார்த்தையை அனுப்புவதற்காக தன் விரல்களை லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா யுனிவர்சிட்டி (UCLA)கணிப்பொறியில் வைத்து ஒவ்வொரு எழுத்தாக அழுத்த ஆயத்தமானார்.
UCLA பேராசிரியர் க்ளெயின்ராக் (Kleinrock)அவர்களின் பேட்டியில் இருந்து...
“நாங்கள் ஸ்டான்போர்டு ஆராய்ச்சி நிறுவனத்திர்கு தொலைபேசி அழைப்பு விடுத்து,தொலைபேசி மூலமாக இணைந்து கொண்டோம்.பின் நாங்கள்
எங்கள் கணிப்பொறியில் “L” எனும் எழுத்தை டைப் செய்து விட்டு.
தெரிகிறதா? என்று SRI –இடம் கேட்டோம்...
தெரிகிறது என்று பதில் வந்தது.
பிறகு “O” டைப் செய்து விட்டு கேட்டோம்
“O” தெரிகிறது என்று பதில் வந்தது..
“G” டைப் செய்யும் போது கணிப்பொறி செயல்பாட்டை இழந்தது(System Crash )
புரட்சியின் துவக்கம் உதயமானது”
“LO”-இதுதான் இணையம் வழியாக பரிமாறிக்கொள்ளப்பட்ட முதல் செய்தி...
ஆர்பா தன்னை கொஞ்சம் கொஞ்சமாக புதுப்பித்துக்கொண்டது,ஆர்பாவின் புகழ் அமெரிக்க நிறுவனங்களிடையே பரவ துவங்கியது.
ஜூலை 1970 -ல் ஆர்பாவில் 15 நிறுவனங்கள் இணைந்தன.
15 நிறுவனங்களின் பட்டியல்:
• University of California at Los Angeles (UCLA)
• Stanford Research Institute (SRI)
• University of California at Santa Barbara (UCSB)
• University of Utah
• Bolt Beranek and Newman (BBN)
• Massachusetts Institute of Technology (MIT)
• RAND Corporation
• SDC
• Harvard
• Lincoln Labs
• Stanford
• University of Illinois at Urbana Champaign (UIUC)
• Case Western Reserve University (CWRU)
• Carnegie Mellon University (CMU)
• NASA-Ames
1971 -ல் ஆர்பா அமெரிக்க மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
ஏப்ரல் 1971 -ல் ஆர்பாவின் நிலை
ஆர்பாவில் இணையும்நிறுவனங்களின் எண்ணிக்கை ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வந்தது.1973 -ல் ஆர்பாவில் 35 -ற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணைந்திருந்தன.
இந்த பதிவை ஒரு கேள்வியுடன் முடித்துக்கொள்கிறேன்..ஆர்பா தொடங்கப்பட்டதன் நோக்கம் பற்றி முதல் பதிவில் பார்த்தோம் அந்த நோக்கம் நிறைவேறியதா?? அடுத்த பதிவில் பார்க்கலாம்.
இந்த கட்டுரையை வாசிக்கும் நல்லுள்ளங்கள் தங்கள் சந்தேகங்கள்,கேள்விகள்,கருத்துக்கள் போன்றவைகளை கமென்டில் மறக்காமல் குறிப்பிட்டு செல்லுங்கள்
Tweet |
//வருந்துகிறோம், இந்த வலைப்பதிவில் நீங்கள் தேடும் பக்கம் இல்லை. //
ReplyDeleteஇல்லை என்று வருகிறது... சரி பார்க்கவும்
சரி செய்து விட்டேன் அண்ணா
ReplyDeleteஉங்கள் தளத்திலும் பகிரலாம்... தவறில்லை...
ReplyDeleteதொழிற்களத்தில் படிக்கிறேன்...
நன்றி...