இணைய உலகின் வரலாறு பாகம்-3
இணையத்தின் விதையை விதைத்தவர் யார்:
நாம் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும்,விசயமும் ஒரு காலத்தில் தனி மனிதனின் சிந்தனையாக இருந்தவைகள் தான்.இணையமும் இந்த விதிக்கு விதிவிலக்கல்ல
1958 ல் அமெரிக்க அரசு உருவாக்கிய ஆர்பாவில் பணியாற்றிய கணினி ஆராய்ச்சியாளராக இருந்த JCRலிக்லிடர் (Joseph Carl Robnett Licklider) என்பவர் தான் இணையத்தின் (Internet)சிந்தனையை முதன் முதலில் கூறியவர்.அதாவது இணையத்தின் விதையை விதைத்தவர் இவர் தான்.அதன் பின்பு பல விஞ்ஞானிகளால் நீரூற்றி வளர்க்கப்பட்டது,
1960 ஆம் ஆண்டு JCR கணினிக்கும் மனிதருக்கும் இடையேயான தகவல் பரிமாற்றம் பற்றிய தன் ஆராய்ச்சி கட்டுரையை ( Man-Computer Symbiosisஎன்ற தலைப்பில்) சமர்ப்பித்தார்.
இணையத்தின் விதையை விதைத்த JCR இவர் தாங்க
இதில் இவர் “உலகின் நூலகங்களில் காணப்படும் தகவல்களை அனைத்தையும் கணினிகள் மூலம் இணைத்து அனைவரும் தகவல்களை பயன்படுத்திக்கொள்ளும் விசயம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்”
"A network of such [computers], connected to one another by wide-band communication lines [which provided] the functions of present-day libraries together with anticipated advances in information storage and retrieval and [other] symbiotic functions."
— J.C.RLicklider
1962 ஆகஸ்ட் மாதம் தன் நன்பர் வெல்டன் கிளார்க்(welden clark) உடன் இணைந்துஇணையம் பற்றிய மற்றுமொரு ஆராய்ச்சி கட்டுரையை (On-Line Man Computer Communication)வெளியிட்டார்.கணினி வலையமைப்பை பற்றி விரிவாக பேசிய உலகின் முதல் கட்டுரை இது தான்.
நம்ம JCR – ன் ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் அறிவால் இவருக்கு ஆர்பாவில் புதிய பிரிவாக ஆரம்பிக்கப்பட்ட Information Processing Techniques Office (IPTO) வில் பணி வாய்ப்பு கிடைத்தது.இங்கிருந்து தான் இவர் ஆர்பா நெட்-ன் விதையை தூவினார்.
இணைய உலகில் நாம் பயன்படுத்தும் பல கருத்துக்கள் (graphical computing, point-and-click interfaces, digital libraries, e-commerce, online banking, and software that would exist on a network ) இவர் முன்னிருத்திய விசயங்கள் தான்.
1964 ல் J.C.R. Massachusetts Institute of Technology (MIT)எனும் நிறுவனத்தின் Project MAC ( Man and Computer) எனும் கருத்துருவின் தலைமை பொறுப்பாளியாக பொறுப்பேற்றார்.ஆர்பா இந்த பிராஜக்டிற்கு 2 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்திருந்தது,குறிப்பிடத்தக்கது.
இதன் பின் ஐந்து வருடங்கள் கழித்து JCR ஆரம்பித்து வைத்த திட்டம் JCR ற்கு பிறகு வந்த ஆர்பா விஞ்ஞானிகளான Lawrence Roberts மற்றும் Robert Taylor ஆகியோரால் ஆர்பாநெட் எனும் பெயரில் 1969 ஆம் ஆண்டு
உருப்பெற்றது.
ஆரம்ப கால ஆர்பாநெட் :
இது தான் ஆரம்ப கால ஆர்பா நெட்
1969 அக்டோபர் 29 ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்-ல் உள்ள University of California -ம், ஸ்டான்போர்டு ஆராய்ச்சி நிறுவனமும் (SRI) வலைத்தொடர்பில் இணைக்கப்பட்டன அதன் பின் டிசம்பர் மாதம்சான்டா பார்பராவில் உள்ள University of California –ம்,University of Utah-ம் இணைந்தன
ஆரம்ப கால ஆர்பாநெட் நான்கு நிறுவனங்களிலுள்ள கணிப்பொறிகளை இணைத்தது.இந்த நான்கு நிறுவனங்களின் கணினிகள் தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்து கொண்டன.
கணினிகளிடையேயான இணைப்புகள் கம்பி வழி இணைப்புகள் (Wired).இவை IMP என்ற Interface Message Proccessor மூலமாக தொடர்பில் இணைக்கப்பட்டன.இந்த IMP தற்காலம் நாம் பயன் படுத்தும் ரவுட்டர்கள் மற்றும் மோடம்களின் முன்னோடி இதன் வேகம் 50 kpbs.
இன்று நாம் பயன்படுத்தும் இணையமாக இந்த ஆர்பாநெட் எப்படி மாறியது?? அடுத்த வாரம் பார்க்கலாம்..
Tweet |
No comments:
Post a Comment
கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....