அனைவருக்கும் என் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !
இந்த கட்டுரைக்கு நான் ஏன் இந்த மாதிரி
எதிர்மறையான தலைப்பு வைத்திருக்கிறேன் என்று நீங்கள் என்னை வினவலாம்,கோபம் கூட
படலாம்.கொஞ்சம் பொறுமையாக இந்த கட்டுரையை வாசித்து விடுங்கள்...
தற்போதைய காலகட்டத்தில் ஆசிரியர்
என்பவர் ஒரு எதிரியை போலவே மாணவர்களால் பார்க்கப்படுகிறார்.தனக்கு பிடிக்காத
விசயங்களை செய்ய சொல்லும் ஒரு நபராகத்தான் ஆசிரியர் பெரும்பாலும் மாணவர்களுக்கு
அறிமுகமாகிறார்.இதை நாம் “இதெல்லாம் சகஜம் தானே” என்று மிக சாதாரணமாக
நினைக்கலாம்.ஆனால் இதன் பாதிப்பு பலமானததன் வகுப்பு மாணவனால் சமீபத்தில் கொலை
செய்யப்பட்ட ஆசிரியை உமா மகேஸ்வரி பற்றி உங்களுக்கு நினைவிருக்கும் என்று
நம்புகிறேன்.
இந்த அளவு ஆசிரியர்கள் மீது மாணவர்கள்
கொலைவெறி யுடன் நடந்து கொள்ள என்ன காரணம் இருக்கும்?? இந்த கனமான கேள்விக்கு நான்
பதில் கூற முயலவில்லை...என் கருத்துக்களை மட்டும் கூறுகிறேன்,தவறு இருப்பின்
தாராளமாக பின்னூட்டத்தில் கூறலாம்...
ஒய் திஸ் கொலைவெறி??
கல்வி முக்கோணம் என்று ஒரு
கருத்துறு(Concept) உள்ளது
ஆசிரியர் ,மாணவர் ,பெற்றோர் ஆகிய மூவரும் இந்த
முக்கோணத்தின் மூன்று பக்கங்களாக அமைகின்றனர்.எந்த
இடத்தில் குறை ஏற்ப்பட்டாலும் கற்றலை அது பாதிக்கிறது.கல்வி கற்கும் மாணவனையும்,முக்கோணத்தின்
மற்ற இரு பக்கங்களில் உள்ளாவர்களையும் பாதிக்கிறது.மாணவன் செய்யும் தவறுகள்
ஒவ்வொன்றுக்கும் பெற்றோரும் ஆசிரியர்களும் ஏதோ ஒரு வகையில் பங்குதாரர்கள்.ஒரு
மாணவன் ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்தான் என்பதை பரபரப்புடன் பார்க்கும்
நாம் மாணவர்கள் தங்களை தாங்களே மாய்த்து கொள்வதை பெரிய செய்தியாக பார்ப்பதில்லை.
“நாய் மனிதனை கடித்தால் அது சாதரண செய்தி,ஆனால் மனிதன் நாயை கடித்தால் அது
பரபரப்பு செய்தி.” இது மாதிரி தான் நாம் மாணவர்களின் தற்கொலைகள் பற்றிய செய்திகளை
சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம்.இந்த முக்கோணத்தின் படி சிந்திக்கிற போது மாணவர்களை
தீர்மானிக்கிற பொறுப்பு ஆசிரியர் மற்றும் பெற்றோர் கையில் உள்ளது என்ற முடிவுக்கு
நம்மால் வரமுடிகிறது.
இதற்கு தீர்வு இருக்கிறதா ??
ஏன் இல்லை...தீர்வெல்லாம் இருக்கத்தான்
செய்கிறது ஆனால் அதை நடைமுறை படுத்துவதில் தான் சிக்கலே.இந்த தீர்வை நான்
கட்டுரையின் முடிவில் கூறுகிறேன்.அதற்கு முன் உங்களிடம் ஒரு நிகழ்ச்சியை பகிர்ந்து
கொள்கிறேன்.
நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயம்
ஒருமுறை எங்கள் வகுப்பில் ஒரு கலந்துரையாடல் நடந்த்து ,அதன் தலைப்பு “சமூகத்திற்கு
பெரிதும் சேவை செய்பவர்கள் ஆசிரியர்களா?, அல்லது மருத்துவரா?.” அந்த தலைப்பை
தந்தவர் ஆசிரியர்.அதனால் பெரும்பான்மையான மாணவர்கள் ஆசிரிய பணியே பெரிதும் சேவை
செய்யும் பணி என்பது மாதிரி பேசினர்.என்னுடைய முறை வந்த போது நான்
“மருத்துவப்பணியே மக்களுக்கு பெரிதும் சேவை செய்கிறது.ஒரு சமூகத்தில் யார்
வேண்டுமானாலும் ஆசிரியராக இருக்க முடியும்,ஆனால் யார் வேண்டுமானாலும் மருத்துவராக
இருக்க முடியாது.இது புரிந்து கொள்ள கொஞ்சம் சிரம்மாக இருக்கலாம்.ஒரு விசயத்தை
தெரிந்து வைத்திருக்கும் ஒரு நபர் தெரியாத நபருக்கு சொல்லிக்கொடுக்கும் போது அவர்
ஆசிரியர் ஆகிறார்.மருத்துவருக்கு மருத்துவத்தை கற்று கொடுத்தவர் அவர் ஆசிரியர்
தான்.கூலி வேலையில் அனுபவசாலி வேலையில் புதிதாக சேர்ந்த நபருக்கு தொழில்
சொல்லிக்கொடுக்கும் போது அந்த இடத்தில் அவர் ஆசிரியர் ஆகிறார்.ஆக ஆசிரியர் என்பது
யாராலும் எடுக்க முடிந்த அவதாரம்,மருத்துவத்துறையுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது
‘ஆசிரியர் பணி’ ஒன்றும் பெரிதும் சேவை கிடையாது.” என்று நான் என் கருத்தை
கூறினேன்.
கொலைவெறி தீர தீர்வு என்ன:
1.கல்வி என்பது வாழ்க்கைக்கு தேவையான விசயங்களை(அது என்ன என்ன விசயங்கள் என்று சந்தேகம் உள்ளவர்கள் பின்னூட்டத்தில் கேட்கலாம்.) கற்றுக்கொடுக்கும் போது.மாணவர்கள் தெளிவான சிந்தனையுடன் இருப்பர்.கல்வி அவர்களுக்கு கசக்காது.
2.படிப்பு என்பது ஒரு
குறிப்பிட்ட மதிப்பெண் பெறுகிற மாணவர்களை உருவாக்குவது என்றில்லாமல்.கற்ற மாணவர்களை
உருவாக்க வேண்டும்
3.”கற்க கசடற“ என்று மாணவ
சமுதாயத்தை நோக்கி மட்டும் எப்போதும் சொல்லும் நமது நாக்குகள் “கற்பிக்க கசடற “
என்று ஆசிரியர்களுக்கும் சொல்லட்டும்.
4.ஒழுக்கத்தை மாணவர்களுக்கு
கற்றுக்கொடுக்கும் பெற்றோர்களும் ,ஆசிரியர்களும் முதலில் அதை அவர்கள்
கடைபிடித்துவிட்டு மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டும்.
5.பாடபுத்தகங்களை மட்டும்
வாசித்து,அதை நெட்டுறு போட்டு பாடம் கற்பிக்கிறேன் பேர்வழி என்று தங்களை
சொல்லிக்கொள்ளும் ஆசிரியர்கள் திருந்த வேண்டும்.
6.மாணவர்களை நன்றாகபடிப்பவர்கள்,
சுமாராக படிப்பவர்கள்,படிக்காதவர்கள் என்று முத்திரை குத்தி அவர்களை
பாரபட்சத்தோடு நடத்துவதை விட்டு விட்டு ஓரே மாதிரியாக அவர்களை நட்த்த
வேண்டும்.(படிப்பில் ஆர்வ்ம் இல்லாத மாணவர்களுக்கும் ஆர்வம் வருகிற மாதிரி
பாடங்கள் சொல்லி த்தரப்ப்ட வேண்டும்.)
7.மாணவர்களின் மன்நிலையை
செதுக்கி சீர் படுத்தும் விதமாக மன ரீதியில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆலோசனை
வழங்கப்பட வேண்டும்.
8.கண்டிப்பு,கவனம்,கனிவு
இவைகளுடன் மாணவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும்.
9.ரசாயணம்,பௌதீகம்,சாத்திரம்,இலக்கியம்
இவைகளோடு வாழ்க்கையும் கற்றுத்தரப்பட வேண்டும்.
10.மகாத்மா காந்தி சொல்லியது
மாதிரி ஒரு நல்ல கல்வி என்பது கை,தலை,மற்றும் இதயம்(பணம்,அறிவு ) இம்மூன்றையும்
நிறைவு செய்கிற ஒன்றாக இருக்க வேண்டும்-(“A good education should serves
the head heart and hand”) .
11.நீதி போதனை,விளையாட்டு போன்ற
வகுப்புகள் சரியாக சொல்லித்தரப்பட வேண்டும்.(பெறும்பான்மையான
கல்வி நிறுவன்ங்களில் பி.டி,ஓவியம்,நீதி போதனை போன்ற வகுப்புகளை வாடகைக்கு எடுத்து
வகுப்பு நடத்தும் புண்ணியவான்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்).
12.பெற்றோர்கள் அதிக பணம்
வாங்கும் பள்ளிகள்,ஆங்கிலத்திலேயே கல்வி சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் சிறந்தவை
என்கிற மோகத்தில் இருந்து வெளிவர வேண்டும்.
13.மாணவர்கள் மூளைக்குள்
படிப்பை திணிக்கும் போக்கு களையப்பட வேண்டும்.படிப்பு என்பது வற்புருத்தலால்
வரக்கூடியது அல்ல.அது வற்புறுத்த வற்புறுத்த வழி மாறி போவது,திணிக்க திணிக்க திசை
மாறி போவது.
14.பெற்றோர்களே
!..ஆசிரியர்களே...! மணவர்களுடம் மனமாற பேசுங்கள்.
எழுத்தறிவித்தவன் இறைவன்
ஆவான் –என்று சொல்வார்கள் எனக்கு கல்வி சொல்லிக்கொடுத்த கடவுள்களுக்கு என்
நன்றிகள்....
"ஆசிரிய பெருமக்களே ! நான் மரமாக செழித்து வளர நீங்கள் வேர்களாக
இருந்தீர்கள்.,வேர்களுக்கு நன்றி சொல்கிறது வளரும் இந்த மரம் !"
Tweet |
ஆசிரிய பெருமக்களே ! நான் மரமாக செழித்து வளர நீங்கள் வேர்களாக இருந்தீர்கள்.,வேர்களுக்கு நன்றி சொல்கிறது வளரும் இந்த மரம் !"
ReplyDeleteஅருமையான ஆசிரியர் தின வாழ்த்துகள் !
விஜயன் பதிவு நன்று.வித்தியாசமாக சொல்லி இருக்கிறீர்கள்.ஆசிரியர் பணி ஒன்றும் பெரிய சேவை அல்ல என்று சொல்வது சரியானது அல்ல என்பது என் கருத்து.மருத்துவத் துறையோடு ஆசிரியப் பணியை ஒப்பிடுவது தவறு.
ReplyDeleteதம்பி! ஆசிரியப் பணியை தயவு செய்து குறைவாக நினைக்க வேண்டாம். இங்கே ஆசிரியப் பணி என்பது மேல் நிலையில் சொல்லிக்கொடுக்கப்படும் ஆசிரியப் பணி அல்ல. கல்வி என்றால் என்னவென்றே தெரியாமல் பள்ளிக்கு வரக்கூடிய குழந்தைகளுக்கு மனம் கோணாமல் எண்ணையும் எழுத்தையும் உலக விஷயங்களையும் முதலில் கற்றுத் தரும் ஆசரியர் பணியைத்தான் எல்லோரும் போற்றுகிறார்கள். கல்லூரி ஆசிரியர் பணியை அல்ல.தனக்கு தெரிந்ததை பிறருக்கு சொல்லிக் கொடுப்பவர் எல்லோரும் ஆசிரியராக ஆகிவிட முடியாது. மருத்துவம் சொல்லிகொடுக்கும் ஆசிரியரும் கற்கும் மாணவருக்கும் அறிவு நிலையில் அதிக வேறுபாடு இல்லை அனுபவ நிலையில் மட்டுமே வேறுபாடு உண்டு. தானாகவே கற்றுக்கொள்ளகூடிய திறமை இந்த மாணவர்களுக்கு உண்டு.
ஆனால் ஒன்றுமே தெரியாத வெள்ளைக் காகிதமாய் வருபவர்களை புத்தகமாக மாற்றி அனுப்பும் பணியை செய்யும் தொடக்கக் கல்வி ஆசிரியர் பணி ஈடு இணை அற்றது. ஒரு மணிநேரம் முதல் வகுப்பு மாணவனை ஒரு மணி நேரம் உட்கார வைத்து பாடம் சொல்லி பாருங்கள்.
நீங்களே உணர்வீர்கள்.
ஒன்று மட்டும் சொல்வேன். இது வெறும் அறிவு சார்ந்த பணி அல்ல. .இன்னும் விரிவாக இதைப் பற்றி எழுத ஆசை.முடிந்தால் இது தொடர்பாக ஒரு பதிவு இடுவேன்.
எனது பதிவின் முன்னுரையை மீண்டும் படித்துப் பார்க்கவும்.
மனதில் உள்ளதை மறைக்காமல் கூறியதற்கு நன்றி.
ஆசிரியை தினம் என்று நான் இன்று நான் பதிவிட்டிருக்கிறேன். பாருங்களேன்.
ReplyDeletehttp://www.vedivaal.blogspot.com
சகாதேவன்
மறுமொழி @ T.N.MURALIDHARAN said...
ReplyDeleteமன்னியுங்கள் சார் ,கட்டுரையை முழுமையாக வாசித்தால் நீங்கள் இப்படி சொல்லியிருக்க மாட்டீர்கள்....அந்த தலைப்பு எனக்கு கொடுக்கப்பட்டதால் தான் நான் அவ்வாறு யோசிக்க வேண்டியதாயிற்று..ஒப்பிடும் விசயத்தில் எனக்கும் கூட உடன்பாடு இல்லை தான்....
எழுத்தறிவித்தவர்கள் உண்மையில் இறைவனுக்கு ஒப்பானவர்கள் என்பதை நானும் அறிவேன்....மன்னித்து கொள்ளுங்கள் சார் தவறாக ஏதேனும் சொல்லி இருந்தால்
மறுமொழி @சகாதேவன் said...
ReplyDeleteவருகைக்கு நன்றி ...தங்கள் கட்டுரையை வாசித்து விட்டேன்