Tuesday, November 01, 2011

ஜிமெயில் ரகசியங்கள்: -6


பார்வர்டு மெயில் அனுப்புவோர் கவனத்திற்கு:

நாம் பார்வர்டு மெயில் அனுப்பும்போது To அட்ரஸ்-ல் நாம் யார் யாருக்கெல்லாம் மெயில் அனுப்ப நினைக்கிறோமோ அவர்களின் முகவரிகளையெல்லாம் வரிசையாக கமா (",") போட்டு  நிரப்பி அனுப்புவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்,இப்படி நாம் அனுப்பும் போது  நாம்
வரிசையாக  To Field-ல் பதிவு செய்த முகவரிகள் எல்லாம் பார்வர்டு செய்த  மெயிலுடன் பயணம் செய்து  அனைவரையும் அடைகிறது.

அதாவது நாம் யார் யாருக்கெலாம் மெயிலை  பார்வர்டு செய்தோம் என அனைவரும் அறிகிறார்கள்.
   
இது பலருக்கும் பல விதத்தில் பல பிரச்சினைகளுக்கு காரணமாக அமைய வாய்ப்பிருக்கிறது....

இதை தவிர்ப்பது எப்படி??...


மெயில் அனுப்பும் போது "To "address    field- ற்கு கீழே Add Cc   மற்றும்  Add Bcc என இரண்டு லிங்க் களை நீங்கள் கவனித்திருக்க வாய்ப்புண்டு....



Cc என்பது

கார்பன் காப்பி (carbon copy) என்பதன் சுருக்கம்.அதவாது "நகல்" என்று பொருள்

To adresss-ல் இமெயில் பெருநரின் முகவரியை  கொடுத்துவிட்டு cc field-ல் அந்த மெயிலின் நகல் யாருக்கெல்லாம் செல்ல வேண்டுமோ அவர்களின் முகவரிகளை வழங்க வேண்டும்.(To  அட்ரஸ்-ல் முகவரிகளை கொடுப்பதால் என்ன நடக்குமோ CC -ல் முகவரிகளை தருவதாலும் அதே தான் நடக்கும்) .
அதனால் இந்த CC
அதிகம் பயன்படாத , அதிகம் பயன்படுத்தப்படாத ஒன்று ஆகும்.

அடுத்த படியாக இருக்கும்..."Bcc "field இது தான் நமது பிரச்சினையை தீர்க்க உதவி செய்கிறது...

Bcc என்பது

 Blind Carbon Copy என்பதன் சுருக்கம்.அதவாது "மறைமுக நகல்" அல்லது தனி நகல் என பொருள் படுத்திக் கொள்ளலாம்.
To அட்ரசில் ஒரே ஒரு முகவரியை மற்றும் கொடுத்து விட்டு மீதமுள்ள முகவரிகளை எல்லாம் Bcc -ல் தர வேண்டும் .
இப்படி செய்வதால்

அனைத்து நபர்களுக்கும் மெயில் தனித்தனியாக அனுப்பப்படுகிறது....

நாம் முகவரிகள் எல்லாம் பார்வர்டு செய்த  மெயிலுடன் பயணம் செய்து  நாம் யார் யாருக்கெலாம் மெயில் அனுப்பினோமோ அவர்களை எல்லாம் அடையாது.



குறிப்பு::

To அட்ரசில் உங்கள் முகவரியை அளித்து விட்டு யார் யாருக்கெல்லாம் பார்வர்டு செய்ய நினைக்கிறீர்களோ அவர்க்கள் முகவரிகளை எல்லாம் Bcc -ல் கொடுப்பது மூலம் உங்க்கள் மெயிலை தனித்தன்மை வாய்ந்த்தாக செய்ய முடியும்....

ஜிமெயில் ரகசியங்கள்.....(முந்தைய பதிவுகள்)



 

Post Comment