Wednesday, August 29, 2012

சாதனை பதிவர்கள் (பதிவுலக சாதனையாளர்களின் அறிமுகம்))


   பதிவுலகம் முழுக்க ஆக:26 ல் சென்னையில் நடந்த பதிவர் திருவிழா பற்றிய பதிவுகள் தான் பெறும்பாலும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.அவரவர் பங்குக்கு ஒவ்வொருவரும் பதிவர்கள் சந்திப்புகள்,அனுபவங்கள் என எழுதி குவிக்கிறார்கள்....
 திவர் திருவிழாவில் நானும் பங்கெடுத்து கொண்டேன் என்று நினைக்கும் போது சந்தோசமாக உள்ளது.இந்த திருவிழாவை நடத்த காரணமாக அமைந்த மற்றும் நடத்திய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் நன்றிகள்.
 திவர்கள் திருவிழா மூலம் சில பிரபல பதிவர்களின் முகங்களை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது..சில அறியாத முகங்களின் அறிமுகம் கிடைத்தது.அறிந்த முகங்களின் நேர்முகம் கிடைத்தது.

 பதிவுலகில் பல சாதனை பதிவர்கள் பவ்யமாக வலம் வருகிறார்கள் என்கிற விவரம் எனக்கு அந்த பதிவர் விழாவில் கலந்து கொண்ட பிறகே தெரிய வந்தது. இது போன்ற பதிவர்களை அறிமுகப்படுத்தும் விதமாக பதிவு ஒன்று போடலாம் என்று தோன்றியது...எனக்கு தெரிந்த சாதனை பதிவர்களை ஒவ்வொருவராக  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...உங்களுக்கு தெரிந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள்.

முதலில் நாம் பார்க்க போகும் பதிவர் K.ராஜா: 

 
இவர் அப்படி என்ன சாதனை செய்தார்??
  ம் பதிவுலகில் பதிவர்கள் தங்கள் பதிவை டைப் செய்து எழுதுவதற்காக நம் பொன்னான நேரத்தில் பெரும்பான்மையான நேரத்தை செலவிடுகிறோம்.கணினி உதவியுடன் டைப் செய்யவே கஷ்டபடும் நமக்கு இந்த பதிவர் பற்றி கேள்விபடும் போது மிகுந்த ஆச்சரியம் ஏற்படுகிறது. காரணம் இவர் தன் பதிவுகள் அனைத்தையும் மொபைல் போன் உதவியுடன் டைப் செய்து வலைப்பூவில் ஏற்றியுள்ளார்.
  மொபைல் போனில் தமிழில் டைப் செய்வது எளிய காரியமல்ல.அது மட்டுமின்றி இவர் பயன்படுத்தும் செல்போன் அப்படி ஒன்றும் சிறந்த தொழில்நுட்பம் கொண்ட புதிய ரக(New model) மொபைல் போன் கிடையாது. இவர் பான்படுத்துவது "நோக்கியாவின் எக்ஸ்பிரஸ் மியூசிக் ".
   திவர் அறிமுகத்தின் போது இவர் தன் வலைப்பூவைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டார்.பதிவர் திருவிழாவின் முடிவின் போது இவரை நான் நேரடியாக சந்தித்தேன்...

அப்போது அவர் கூறியவை...(அவர் பேச்சு என் எழுத்துக்களில்)

"நான் பதிவெழுதுவதற்கு முன்பு இணைய தளங்களை பார்வையிட  பிரவுசிங்க் சென்டர் செல்வதுண்டு.அப்போது தான் பதிவுலகின் அறிமுகம் எனக்கு கிடைத்தது.அதன் பிறகு நான் எனக்கு தெரிந்த டேலி (Tally ) பற்றி வலைப் பூவில் எழுதலாம் என்று ஒரு வலைப்பூவை துவங்கினேன்.முதலில் பிரவுசிங்க சென்டரில் சென்று வலைப்பூவை எழுத முயற்சித்தேன் ஆனால் அது கொஞ்சம் சிரமமாக இருந்தது.இது வேலைக்கு ஆகாது என்று முடிவு செய்து என் செல் போன் உதவியுடன் பதிவுகளை எழுத ஆரம்பித்தேன்." இவருடன் வந்திருந்த M.K.பழனி என்கிற நன்பர் இவருக்கு பதிவுகள் எழுத உதவி செய்வதாகவும்  சொன்னார்.

இப்படி மொபைல் மூலம் எழுதுவதில் உங்களுக்கு சிரமமாக இல்லையா? என்று நான் கேட்டேன்.

 சிரமமாகத்தான் இருக்கிறது என்று சொன்னார்..(கம்ப்யூட்டர்ல டைப் அடிக்கிற  நமக்கே கடுப்பாகுது.இவருக்கு இருக்காதா?). திரட்டிகளின் ஓட்டு பட்டைகள் இணைப்பது,கேட்ஜட் சேர்ப்பது போன்ற விசயங்களை செய்வது மொபைல் போனில் இயலவில்லை .இதை மட்டும் இவர் பிரவுசிங்க் சென்டரில் கணினி உதவியுடன் செய்துள்ளார்.வரும் மறுமொழிகளுக்கு பதில் கூற இயலவில்லை .அது மட்டுமின்றி லிங்க் (Hypher link) கொடுக்கும் வேலையையும் மொபைல் உதவியுடன் இவரால் செய்ய முடியவில்லையாம்.ஹைப்பர் லிங்க் கொடுக்கும் வேலைக்கு மட்டும் இவர் கணினி தற்போது கணினி துணை நாடுகிறார் மற்றபடி எழுதும் வேலை அத்தனையையும் மொபைல் போன் உதவியுடனேயே டைப் செய்து இணையதளத்தில் பதிவிடுகிறார்..

இவர் வலைப்பூ முகவரி:

ராஜா அண்ணா யூ ஆர் கிரேட் !

இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா.. ஓட்டு போடுங்க இன்னும் சில நல்லிதயங்களை இது சென்றடையும்...
ஏதாவது சொல்லனும்னா கமென்ட் -ல சொல்லுங்க..

 

Post Comment

Thursday, August 23, 2012

இலவச மொபைல் ரீ-சார்ஜ் செய்து தரும் இனியத்தளம்

 இந்த இணைய தளத்தில்  உங்களுடைய விவரங்களை பதிவு செய்து,  பின்னர் எளிதாக  மொபைல் ரீ - சார்ஜ் செய்து கொள்ளலாம்...நீங்க எந்த மொபைல் வடிக்கையாளராக வேண்டுமானாலும் இருக்கலாம் இந்த தளம் உங்கள் மொபைலை இலவசமாக ரீ-சார்ஜ் செய்யும்.


உண்மையாவா???

இது ஏமாற்று வேலை இல்லை உண்மைதான்.இத்தளம் உங்களுக்கு இலவசமாக இணையம் மூலம் SMS அனுப்பும் வசதியையும் தருகிறது. ஆக நமக்கு இரட்டை நன்மை நீங்கள் இலவசமாக SMS ம் அனுப்பலாம்,இலவசமாக ரீஜார்ஜ் -ம் செய்யலாம்.


மொபைல் எப்படி ரீ-சார்ஜ் ஆகும் ??
 இருவழிகளில் உங்களுக்கு பணம் கிடைக்கும்
1.நீங்கள் உங்கள் நன்பர்களுக்கு அனுப்பும் ஒவ்வொரு இலவச sms க்கும் காசு தராங்க
2.நீங்க உங்க நன்பர்களுக்கு இந்த இணியதளத்தை அறிமுகம் செய்தாலும் காசு தராங்க
இந்த பணத்தை நீங்க உங்க மொபைலுக்கு ஒரு க்ளிக் மூலம் ரீ-சார்ஜ் செய்ய முடியும்.

கீழே உள்ள இணைய முகவரியை க்ளிக் செய்து பதிவு செய்து கொள்ளுங்கள்..
 உங்க மொபைல இலவசமாக ரீஜார்ஜ் செய்து எஞ்சாய் பன்னுங்க.!
 

Post Comment

Sunday, August 19, 2012

உங்கள் பிறந்த நாளுக்கு ஏற்றபடி மாறும் கூகுள் பக்கம்(செம மேட்டர் மா!)


 கூகுளின் முகப்பு பக்கம் முக்கிய நாட்களுக்கு ஏற்றபடி மாறுவதை நாம் பார்த்திருப்போம், இதை விட ஒரு சூப்பர் மேட்டரை கூகுள் நமக்காக செய்கிறது.நீங்கள் இதை கவனிக்க மறந்திருக்கலாம்....நம் பிறந்த நாளுக்கு ஏற்றபடி கூகுள் தன் முகப்பு (Home Page) பக்கத்தை மாற்றி நம்முடன் சேர்ந்து நம் பிறந்த நாளை கொண்டாடுகிறது.


இது எப்படி???

 நீங்கள் உங்கள் கூகிள் அக்கவுன்ட் டில் Log in செய்யும் போது அது உங்கள் பிறந்தநாளை செக் செய்கிறது.அது அன்றைய தினத்துடன் மேட்ச் ஆகினால் உங்கள் கூகுள் ஒரு புதிய டூடுளை (doodle) (கூகிள் முகப்பு படம்) உங்கள் முகப்பு பக்கத்தில் காட்டி உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும்.
கேக் மற்றும் மெழுகுவர்த்திகளுடன் உங்களுக்கு மட்டும் காட்டப்படும் இந்த பிரத்யேக முகப்பு பக்கத்தின் அருகே நீங்கள் உங்கள் மவுஸின் கர்சரை கொண்டு சென்றால்."Happy birthday..............(உங்கள் பெயர்)" என்று எழுதி காட்டும்.அதை நீங்கள் க்ளிக் செய்தால் உங்கள் கூகிள் பிளஸ் Profile திறக்கப்படும்.

இந்த விசயத்தை கூகிள் எப்போதிருந்து செய்கிறது???

 2010 ம் வருடத்திலிருந்து இந்த "பிறந்த நாள் வாழ்த்து சொல்லும்' கூகிளின் முகப்பு பக்கம் நடைமுறையில் உள்ளது இது ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் முகப்பு பக்கத்தில் கேக் கொஞ்சம் கம்மியாக இருந்திருக்கிறது (பார்க்க படம்).

 சில மாதங்களுக்கு முன் கூகுள் இந்த டூடிலை(Doodle) மறு வடிவம் செய்திருக்கிறது.(இதுல 6 கேக் இருக்கு!).

கூகிள் உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லனும்-னா....

1.கூகிளில் உங்களுக்கு அக்கவுன்ட் இருக்கனும்
2.கூகிள் பிளஸ் -ல் உங்கள் பிறந்த நாளை (Date of birth) கொடுத்திருக்க வேண்டும்.
3.உங்க பிறந்த நாள் அன்று நீங்கள் அக்க்வுன்டில் லாக் இன் ஆகியிருக்க வேண்டும்.

 இதெல்லாம் நீங்க செய்திருந்தீர்கள் என்றால் கூகுள் உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும்.

 Google நிறுவனத்தினர் எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களோ???
இணைய உலகின் தல கூகுள் தான்.தல உன்ன அடிச்சுக்க ஆளே இல்ல.

உங்களின் கருத்துக்களை மறக்காமல் கமெட்-ல் பதிவு செய்யவும்


 

Post Comment

Wednesday, August 15, 2012

நம் சுதந்திரத்தை பயன்படுத்துவது எப்படி??


"அனைவரும் உறங்குகிற வேளையில் இந்தியா விழித்து கொண்டது"
-----------------------------------------------------------------------------------ஜவஹர்லால் நேரு


28 மாநிலங்கள்
யூனியன் பிரதேசங்கள்
18 ஆட்சி மொழிகள்
325 மொழிகள், 1652 கிளை மொழிகள்
1.10 பில்லியன் மக்கள்
பல்வேறு மதங்கள்
பல ஆயிரம் ஜாதிகள்
பல்வேறு நாகரிகங்கள்
என பல்வேறு வண்ணங்களின் கலவையின் உருவமாக நிற்கும்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக அரசு
நம் இந்தியா

 இந்த இனிய நாளில் சுதந்திர இந்தியா தனது 66 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறதுவாசகர்களுக்கும்,நன்பர்களுக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
 
  சுதந்திரம் என்கிற விசயம் யாரும் யாருக்கும் கொடுக்கக்கூடிய ஒன்றோ,அல்லது யாரிடமிருந்தும் பெருகின்ற ஒன்றோ கிடையாது.அது ஒரு தன்னிச்சையான உணர்வு.அடிமையாக இருக்கின்ற போதும் கூட ஒருவர் சுதந்திர உணர்வுடன் இருக்க முடியும். அதே நேரம் ஒருவருக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டாலும் கூட அடிமை உணர்வுடன் கூட ஒருவர் இருக்க முடியும். அடிமைபட்டு கிடந்த காலத்திலும் கூட பல தலைவர்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட்டதை நாம் நினைவு கொள்ள வேண்டும்.
ஆனந்த சுதந்திரம்
அடைந்து விட்டோம் என
ஆடுவோமே! பள்ளு பாடுவோமே!"
-என அடிமைப்பட்டு கிடந்த காலத்திலும் சுதந்திரம் அடைந்துவிட்டோம் என சொன்ன பாரதியை பற்றி சிந்தித்து பாருங்கள்.
ந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது என இன்றைய தினத்தின் இரவு பன்னிரெண்டு மணிக்கு வெள்ளையன் அறிவித்துவிட்டு சென்றான்.இருட்டில் கிடைத்த்தால் தான் என்னவோ இன்னமும் கூட இந்தியாவில் பல பேர் வாழ்க்கை விடியாமல் இருக்கிறது....
 ந்தியாவில் இன்றளவும் செயன்முறையில் உள்ள பல விசயங்கள் ஆங்கிலேயன் தந்த அருட்கொடையே!கல்வி,அரசியல்,சட்டம்,அரசு வேலை வாய்ப்புகள் போன்ற பல விசயங்கள் அவன் தந்த அடிப்படைய்லேயே தான் இன்றும் இருக்கின்றன அந்நியன் தந்த விசயங்களை அப்படியே பயன்படுத்தும் நமக்கு சுதந்திர உணர்வு சுயமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பது தவறு தான்.!

 "நம் இந்தியர்களில் பலர் விளையாட்டு விசயத்தில் தேசப்பற்றுடன் இருக்கிறோம்,ஆனால் தேசிய விசயங்களில் விளையாட்டாகவே இருந்துவிடுகிறோம்."

-என்று யாரோ ஒரு நபர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்.
அது உண்மை தான் .இந்தியா கிரிக்கெட்டில் வெற்றி பெறும் வேளையில் பொங்கி எழும் நாம்,ஒரு அரசிய்ல் வாதியின் தவறான செய்கை வெளியில் தெரியும் போது வாய்மூடி கைகட்டி இருந்து விடுகிறோம்.சரி அது கிடக்கட்டு விடுங்கள்.நமக்கு கிடைத்திருக்கும் சுதந்திரத்தை பயன்படுத்துவது எப்படி??
இன்று நாம் நமது கருத்துக்களை வெளியிட்டு கொண்டிருக்கிறோம் இல்லையா... இது சுதந்திரத்தின் வெளிப்பாடு தான்.

நம் சுதந்திரத்தை பயன்படுத்துவது எப்படி??

 நான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்கிற சுயநல உணர்வின் அதீத தன்மையால் சுயம் கெட்டு போய் கிடக்கிறது.சுயநலம் பற்றிய சிந்தனை அதிகமாகும் போது..நாடுபற்றிய சிந்தனை குறுகி விடுகிறது சுயநல சிந்தனை மூலம் ஒருவரின் வாழ்வு சிறப்பாக இருக்கும் என்பதாக நினைத்தே "சுயநல உணர்வு" உருவாகிறது,ஆனால் வாழின் பெறும்பாலான பிரச்சனைகளுக்கு "சுயநல உணர்வின்" அதீத தன்மையே காரணம்.
உங்கள் அருகில் ஒருவர் உணவின்றி இருக்கின்ற போது..உங்களிடம் நிறைவான உணவு இருந்தால் அதை முழுமையாக தானம் செய்து விட வேண்டும் என தேவையில்லை,உங்களால் இயன்ற அளவு சிறிதளவு உதவுங்கள்.
 கொடுத்தால் குறைந்து விடும் என்று சுயநல எண்ணம் சொல்லிக்கொடுக்கிறது..நல்ல மனதுடன் கொடுக்கும் எதுவும் குறந்து போவதில்லை.நான் உங்களுக்கு சொல்கிறேன்....
"கொடுக்கிற எண்ணம் உடையவர்களுக்கே நிறைய கிடைக்கும்"
  இது கொஞ்சம் முரண்பாடாக தெரியலாம்.ஆனால் இயற்கை விதி இதுதான்.
 ன்று கல்வியில் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றுவிட்டோம் என்று அரசியல்வாதிகள் தம்ப்ப்ட்டம் அடித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில்... இந்தியாவில் பல உள்ளங்கள் உணவின்றி ,உறக்கமின்றிபணமின்றி,பலமின்றி இருந்து கொண்டிருக்கின்றனர்.
       
·         எங்கள் உயிர்களை.,
பசியெனும் நெருப்பு
வறுமை அடுப்பில்
உணவாய் சமைத்துக் கொண்டிருக்கிறது..
உணர்வு உள்ளவர்களே
உணவு தாருங்கள்
நாங்கள்
உணவாவதற்கு முன்னால்

கல்வியின் வாசம் அறியாத எத்தனையோ பிள்ளைகள் நம்மருகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.நம்மால் முடிந்தால் அந்த உள்ளங்கள் கல்வி பெற நாம் உதவ முடியும்.
நம் ஒவ்வொரு தேவைக்கும் பிறரையோ,அரசையோ குறை சொல்லும் போக்கை குறைத்துக்கொண்டு,நம் நிலைபற்றி நினைத்துக்கொள்வோம்,
நம்மை சுதந்திரத்தால் நிறைத்துக்கொள்வோம்.

வாருங்கள் நமக்கு கிடைத்திருக்கும் இந்த சுதந்திரத்தை கொண்டாடுவோம்..கொண்டாட்டம் அறியாத நபர்களுக்கும் சுதந்திரத்தின் அருமையை உணர்த்துவோம்.. சுதந்திரம் என்பது ஒரு நாள் மட்டும் கொண்டாடும் விசயமல்ல !..

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்
அதை உணர்ந்து செயல்படுவோம் தினம் தினம். 

Post Comment

Monday, August 06, 2012

உலகத்தை அழிப்பது எப்படி??(சுவரசியமான பதிவு)


லகம் இதற்கு முன் இது போன்றதொரு அணுகுண்டு பேரழிவை பார்த்த்தில்லை... 
லகில் இன்று வரை முதல் மற்றும் கடைசி அணுகுண்டு பிரயோகம் (இது "கடைசியாக" என்றும் தொடர வேண்டும் )இது மட்டும் தான்.

இன்றிலிருந்து மிகச்சரியாக 67 வருடங்களுக்கு முன் ஆகஸ்ட் 6,1945 அமெரிக்கா ஜப்பானின் ஹிரோசிமா நகர் மீது "லிட்டில் பாய்" என்ற பெயர் கொண்ட அணுகுண்டை வீசியது.,மக்கள் அந்த அழிவின் தாக்குதலில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே முதல் அணுகுண்டு வீசி மூன்று நாட்கள் கழித்து நாகாசாகி நகரத்தின் மீது "Fat man" என்ற குண்டை வீசியது.

அந்த அழிவின் அலைகள் இந்த பதிவில்........

ஹிரோசிமா,நாகாசாகியின் வரைபடம்:

முதல் அணுகுண்டு:

இரண்டாம் குண்டு:

அப்போதைய அமெரிக்க பிரதமர்: ஹாரி ட்ரூமன்:

அணுகுண்டை விமானத்தில் பொருத்தும் காட்சி:


லிட்டில் பாய் அணுகுண்டை வீசிய விமானம்(Enola Gay) அதன் ஓட்டுனருடன் (பால் டிப்பெட் உடன்) போஸ் கொடுக்கிறது .

அழிவிற்கு முன் ஹிரோசிமா:

அழிவின் சுவடுகள்:
வெடித்து சிதறும் அணுகுண்டு.... 


இடிபாடுகளுக்கிடையே... 
"Okito இரும்பு தொழிற்சாலை"

Urakami Cathedral (Roman Catholic) தேவாலயம்:

வெடிப்புக்குப் பின்...


மண்டை ஓடுகள்...

அழிவில் மாட்டிக்கொண்டு மாண்டு போன ஒரு குடும்பத்தின் போட்டோ ஆல்பம்:

உறைந்து போனது காலம்:(இடிபாடுகளுக்கிடையில் இருந்து எடுக்கப்பட்ட கடிகாரம்)

அணுகுண்டு சரியாக வெடித்ததா?? என வெடிப்பின் தரத்தை ஆராயும் அமெரிக்க வீரர்கள்...

அமெரிக்க அரசு அமைதிக்காக வெளியிட்டுள்ள தபால் தலை......


(பின் குறிப்பு: உலகில் அதிகமாக அமைதிக்கான நோபல் பரிசுகளை பெற்ற நாடு அமெரிக்கா,அதே போல உலகில் அதிகமாக அணுகுண்டு சோதனைகள் நடத்திய நாடு அமெரிக்கா....!)

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்தை மறக்காமல் கமென்ட் பெட்டியில் சொல்லவும்...

 

Post Comment