Sunday, September 18, 2011

நிலவில் மனித உயிர்...நிலவில் பாட்டி வடை சுட்டுக் கொண்டிருப்பதை நம்பிய குழந்தைகளில் நானும் ஒருவனாக இருந்தேன் என்று நினைக்கிற போது எனக்குள் சிரிப்பு வருகிறது. அறிவியல் நம் அறிவின் அகலத்தை அதிகப்படுத்துகிறது.அதே சமயம் பல அதிசயங்களையும் நிகழ்த்துகிறது.


நீ வானத்தில் அழகாய் சிரித்துக்கொண்டு தேய்ந்து,வளர்ந்து,மறைந்து கண்ணாமூச்சி ஆடும் அந்த நிலாவில் மனிதன் காலடி பதித்த  சுவரஸ்யமான    மனிதனின் முதல் நிலாப் பயணத்தின் பதிவுகளை இப்பதிவில் (இந்த வலைப்பூவில் இது என் முதல் பதிவு) பதிகிறேன்...


ரசித்துவிட்டு மறக்காமல் தங்கள் கருத்துக்களை பின்னூட்டம் இடுங்கள்.

முதல் நிலாப் பயணம்:

பயணத்தின் பெயர்          : அப்போலோ 11

விண் கலத்தின் பெயர்      :  CSM: Columbia   LM: Eagle  

வின்கலத்தின் எடை        :  96,771 lb (43,895 kg)

பயணிகளின் எண்ணிக்கை  :   3

பயண நாள்                :   July 16, 1969
                                                                     13:32:00 UTC

நிலவை அடைந்த நாள்     :  July 20, 1969
                                                                     20:17:40 UTC

பூமி திரும்பிய நாள்        : July 24, 1969
                                                                 16:50:35 UTC

தரையிரங்கிய இடம்       :  North Pacific Ocean
                                                                       13°19′N 169°9′W


பயண காலம் மொத்தமாக  : 8 நாள் 3 மணி  18 நிமிடம் 35 நொடி

                      


மூவர்  குழு

ஆர்ம்ஸ்ட்ராங்க்,கொல்லின்ஸ்,ஆல்ட்ரின்

விண்கலத்தில் பொறிக்கப்பட்டிருந்த சின்னம்

பயணத்துக்கு முன் பயிற்சி

நிலா பயண்த்தை துவங்கும் முன்பு நிலா வில் உள்ள புவியீர்ப்பு விசை மாதிரி செயற்கையாக ஏற்படுத்தப்பட்டு விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறார்கள்.வின்கலத்தை தாங்கி கொண்டு சீரிப்பாய்கிறது ராக்கெட்

இந்த ராக்கெட்டின் பெயர்: saturn v 


பயண கண்காணிப்பு குழு

நிலாவுக்கு வழியனுப்பி வைத்தல்

வெளியே நிற்பது அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன்

நிலாவில் தரையிரங்குதல்

நிலாவோடு 4 நாட்கள்:

நிலாவில் மனிதன்நிலவில் மனிதனின் கால்த்தடம்நிலவில் மனிதன் இறங்குவதை டி.வி யில் பார்க்கிறார்கள்...


ஜூலை 21 1969 "கருடன் என்ற பெயர் பொரித்த விண்கலம் நிலவில் தரையிரங்கியது என்ற செய்தியுடன் வெளிவந்தது வாசிங்டன் போஸ்ட்(The Washington Post) நாளிதழ்...


நிலாவில் பூமி உதிக்கும் காட்சி...

நிலா...
பயணம் முடிந்து பூமிக்கு...

கிழம்புகிறது....


பூமிக்கு வந்து ...கடலில் விழுந்து...

ஹெலிகாப்டர் உதவியுடன் கடலில் விழுந்த விண்கலம் மீட்கப்படுகிறது...அப்பாடா.... ஒரு வழியா பூமிக்கு வந்து சேர்ந்தாச்சு...


பூமி திரும்பிய வீரர்களை வரவேற்கும் அவர்களின் மனைவிகள்

இடமிருந்து வலமாக: பேட் (காலின்ஸ் மனைவி)
                                                         ஜேன் (ஆர்ம்ஸ்ட்ராங்க் மனைவி) 
                                               ஜோன் (ஆல்ட்ரின் மனைவி)

நிலாவை காலடியில் கண்ட ..
தங்கள் கனவர்களை கண்ணெதிரே கண்ட சந்தோசத்தில் மனைவிகள் ...

 

Post Comment

Saturday, September 17, 2011

ஜிமெயில் ரகசியங்கள்: -1

ஜிமெயில் ரகசியங்கள்:
(ஒரு ஜிமெயில் அக்கவுன்ட் மூலம் எல்லையில்லாத பெயர்களில் 
போலி ஜிமெயில் முகவரிகளை உருவாக்கும் வித்தை:)

ம்மில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுன்ட்களை பல தேவைகளுக்காக வைத்திருப்போம்.
ஆனால் ஒரே ஜிமெயில் அக்கவுன்ட் மூலம் பல்வேறு அலியாஸ் (alias) ஜிமெயில் முகவரிகளை உருவாக்கும் வாய்ப்பை 'Google-ன் ஜிமெயில் தபால்பெட்டி சேவை' ஏற்படுத்தியுள்ளது என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.

குறிப்பு::இம்முறையில் நாம் உருவாக்கும் புதிய இமெயில் முகவரிகளுக்கு அனுப்பப்படும் தபால்கள்(E-Mail) கூட நம் உண்மையான ஜிமெயில் முகவரிக்கே கிடைக்கும்.

ஒரு ஜிமெயில் முகவரியை பயன்படுத்தி பல்வேறு போலி ஜிமெயில் முகவரிகள் ??


ரகசியம்-1(புள்ளி வித்தை):

 
ங்கள் மெயில் G-Mail முகவரி "username@gmail.com" என்று இருக்கும்.இதை நீங்கள் புள்ளி (full stop or dot) மூலம் பல முகவரிகளாக மாற்ற முடியும்.

உதரணமாக உங்களின் உண்மை முகவரி: "username@gmail.com" எனக் கொண்டால் நீங்கள் கீழ்காணும் முறையில் புள்ளிகளை மாற்றி மாற்றி வைத்து பல முகவரிகளை உருவாக்க முடியும்

போலி முகவரி1:"u.sername@gmail.com"
போலி முகவரி2:"us.ername@gmail.com"
போலி முகவரி3:"use.rname@gmail.com"
போலி முகவரி4:"user.name@gmail.com"
போலி முகவரி5:"usern.ame@gmail.com"
போலி முகவரி6:"userna.me@gmail.com"
போலி முகவரி7:"usernam.e@gmail.com"

ரகசியம்-2 (சேர்ப்பு வித்தை)


உண்மை முகவரி: "username@gmail.com"

username உடன் +(கூட்டல் குறி) மூலம் எந்த வார்த்தையை அல்லது பெயர்களை இணைத்து போலி முகவரிகளை உருவாக்க முடியும்.

போலி முகவரிகள்:"username+some_name@gmail.com"

இம்முறை மூலம்  நீங்கள்
                                                 "username+your lover name@gmail.com"
                                                " username+friend name@gmail.com"
                                                " username+your wife name@gmail.com"
  
என வித விதமான முகவரிகளை உருவாக்கி

உங்களின் அன்பானவர்கள், நன்பர்கள்,காதலி () காதலர் என உங்கள் நெருக்கமானவர்களை அவர்களுக்கென தயாரிக்கப்பட்ட பிரத்யேக ஜிமெயில் முகவரி மூலம் கவர முடியும்.

ரகசியம் -3

மேலே குறிப்பிட்ட இரு வித்தைகளையும் சேர்த்தும் நீங்கள் பயன்படுத்தலாம்...

(.ம்:) "user.name+your lover name@gmail.com"

                                                
குறிப்பு::இம்முறையில் நாம் உருவாக்கும் புதிய இமெயில் முகவரிகளுக்கு அனுப்பப்படும் தபால்கள்(E-Mail) கூட நம் உண்மையான ஜிமெயில்("username@gmail.com") முகவரிக்கே கிடைக்கும்.

ஏதேனும் சந்தேகம் அல்லது கருத்துகள் இருந்தால் Comment ல் தெரிவிக்கவும்

 

Post Comment