Friday, December 21, 2012

ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம்-14

  கூட்டல் ,கழித்தல் ,பெருக்கல் ,வகுத்தல் என கணிதத்தின் முக்கியமான மற்றும் அடிப்படையான விசயங்கள் அனைத்தையும் செய்த உலகின் முதல் கருவி பற்றி இந்த வாரம் பார்க்கலாம் .

(என் மடிக்கணினி களவு போன காரணத்தால் என்னால் கடந்த இரு வாரங்களாக எழுத இயலவில்லை ).வாசக நன்பர்களின் தொடர் ஆதரவிற்கு என் நன்றிகள்.

முதல் கால்குலேட்டரை வடிவமைத்தவர் :

"கணக்கீடுகள் செய்யும்  கருவிகள் மூலம் கணக்கீடுகளில் திறமை  இல்லாத நபர்களே குறைந்த நேரத்தில் கணக்கீடுகள் செய்ய முடியும் போது ,திறமையான நபர்கள் தங்கள் பொன்னான நேரத்தை கணக்கீடுகளில் வீணடிப்பது வீண்"
                                                                                                                                        -லெப்னீஸ்
                                                                      இவரே அவர்
  கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,வகுத்தல் ஆகிய நான்கு செயல்களையும் செய்யும் கால்குலேட்டர் ஜெர்மானிய விஞ்ஞானியான லெப்னீஸ் (Gottfried Wilhelm Leibniz )என்பவரால் 1672 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. சிறு விசயங்களின் கணிதம் கணிதவியலில் இதை வகை நுண் கணிதம் ( infinitesimal calculus ) என அழைக்கிறார்கள் ,நியூட்டனுக்கு முன்பே இக்கணித முறையை கண்டறிந்தவர் இவரே .
   லேப்னீஸ் கணக்கில் மட்டும் புலி இல்லை யற்பியல்,தொழில்நுட்பம்,தத்துவம்,உயிரியல் ,மருத்துவம் ,மனோதத்துவம் ,மொழியியல் அரசியல் என பல விசயங்களில் தன் பங்கை அளித்துள்ளார் அரசியல் ,தத்துவம் ,சட்டம் ,வரலாறு ,சமூக நீதி,கடவுளை பற்றிய கருத்துக்கள் ,மொழியியல் போன்ற துறைகளில் இவர் எழுத்து மூலம் தன் கருத்துக்களை தந்திருக்கிறார்.

முதல் நான்காம்ச கால்குலேட்டர் : 
  இந்த கால்குலேட்டரில் லெப்னீஸ் இதற்கு முன்பு வந்த கணக்கிடும் கருவிகளை போல் அல்லாமல் வித்தியாசமான கியர் மேக்கானிசத்தை பயன்படுத்தியிருந்தார் .இதற்கு லேப்நீஸ் சக்கரம் அல்லது லெப்னீஸ் உருளை என பெயர் வைத்துள்ளனர்
                                                               லெப்னீஸ் சக்கரம்
எப்படி வந்தது இந்த கால்குலேட்டர் ஐடியா ?
   லெப்னீஸ் , பாரீஸில் இருக்கும் போது மனிதர்களின் நடையை(நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கணக்கிடும் ,1700 களிலேயே இந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது... இதை இடுப்பில் கட்டிக்கொண்டு நடைபோட்டால்,இது நடையை எண்ணி கணக்குப்போடும் ) கணக்கிடும் கருவியான பேடா மீட்டர் (pedometer )எனும் கருவியில் இருந்து இந்த கால்குலேட்ட்டர்-கான ஐடியாவை பெற்றார். 
                                                        பேடா மீட்டர் (pedometer )
இதன் பிறகு இவர் பாஸ்கலின் கருவி பற்றி பென்ஸீஸ் (pensees )எனும் புத்தகம் மூலம் படித்து அறிகிறார்,பாஸ்கலின் கூட்டல் கணக்கு மட்டும் போடுவது கண்டு திருப்தி கொள்ளாத லெப்னீஸ் ,கூட்டல்,கழித்தல்,பெருக்கல்வகுத்தல் என சகலத்தையும் செய்யும் கருவியை வடிவமைக்க திட்டமிட்டார் .
                                                              லேப்நீசின் குறிப்புகள்
  பிபரவரி 1,1673 -ல் லண்டன் ராயல் சொசைட்டியில் (Royal Society of London ) இந்த கணக்கிடும் கருவியின் மரக்கட்டை மாடலை சமர்பித்து ,அதைப்பற்றி விளக்க உரை நிகழ்த்தினார் ,சுலபமாக ,துல்லியமாக ,வேகமாக கணக்கிடும் கருவி என்று லெப்னீஸ் இதனை குறிப்பிடுகிறார்
பின் வந்த பல கருவிகள் :
  லேப்நீசின் கணக்கிடும் கருவிக்கு பின் பல கருவிகள் அதே தத்துவத்தில் அதாவது லெப்னீஸ் சக்கரத்தை அதன் இதயமாக கொண்டு பல கருவிகள் வர ஆரம்பித்தன.
இவற்றுள் 1970 கள் வரையில் பயன்பாட்டில் இருந்த கார்டா (curta)எனும் கையடக்க கணக்கிடும் கருவி குறிப்பிடத்தக்கது .
                                                                              கர்டா
கடைசியாக ...
  லெப்னீஸின் இந்த கணக்கிடும் கருவி கருவி இப்போது ஜெர்மனியில் உள்ள National Library of Lower Saxony எனும் இடத்தில் மியூஸிய பொருளாக வைக்கப்பட்டுள்ளது ,பல கருவிகளுக்கு முன்னோடியாக இருந்த இந்த கருவி எலக்ட்ரானிக் கால்குலேட்டர் களின் படையெடுப்பால்  தோற்கடிக்கப்பட்டு  அமைதியாக துயில் கொள்கிறது ...

 

Post Comment

Thursday, December 20, 2012

உலக அழிவும் 21 -12-2012 -ம்


உலக அழிவும் 21 -12-2012 -ம் 
மக்கள் மனதில் சமீபத்தில்  பீதியை கிழப்பி இருக்கும் செய்தி உலகம் அழியுமா அழியாதா,அழிந்தால் எப்படி  அழியும் ??
மக்கள் எந்த விசயத்தில் ஒற்றுமையாக இருக்கிறார்களோ இல்லையோ ? பீதியை கிழப்புவதிலும் வதந்தியை பரப்புவதிலும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். சரி வழ-வழ வென்று பேசாமல் விசயத்திற்கு வருவோம்....

உலக-அழிவிற்கு சொல்லப்படும் காரணங்கள் :

உலக அழிவிற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகின்றன அவற்றுள்   டாப் 10  காரணங்களை மட்டும் பார்க்கலாம் 
1.மாயன் காலண்டர் முடிவு (இது தான் முதலிடம் பிடித்திருக்கும் காரணம் )
2.சூரியப்புயல் 
3.நிபுரு எனப்படும் நெருப்பு  கிரகம் பூமியை தாக்கலாம் ( வானத்தில் இந்த கிரகம் தெரியுதா பாருங்க :-) )
4.கருந்துளைக்குள் (black hole)பூமி செல்லலாம் 
5. மின் காந்த புயல் 
6.நமது சூரிய குடும்பம் ("galactic plane") நம் அண்டத்தின் எல்லையை அடையலாம்
7.பூமியின் துருவங்கள் இடம் மாறலாம்  
8.நில நடுக்கம் சுனாமி வரலாம்   
9. சூப்பர் எரிமலைகள்( super  valcano )   வெடிக்கலாம் (நிலத்திற்கு அடியில் இருந்து நெருப்பு வரும் என்பதை டீசண்டாக சொல்கிறார்கள்)
10.புனித நூல்கள்  உலக அழிவு பற்றி கூறுகின்றன  

அழிந்தால் என்னவெல்லாம் நடக்கும் :
(முன் குறிப்பு: பயபடாமல் படிக்கவும் )
 ந்த பயத்தால் பலர் தற்கொலை வரை கூட சென்றிருக்கிறார்கள் என்கிற செய்தி வருத்தம் தருகிரது ,என் வகுப்பில் ஒரு மாணவி தான் அந்த  தேதியில் வகுப்பிற்கு வர மாட்டேன் என்று விடுப்பு வாங்கி உள்ளாள் ,இன்று ஒரு உணவுக் கடையில் பழைய பாக்கிகளை 21-12-2012 ற்குள் செலுத்தி விடவும் என்று போர்டு வைத்து  இருந்தனர்.... 
இந்த விசயங்களை கேள்விப்படும்போது சிரிப்பு தான் வருகிறது,உலக அழிவு பற்றி பரவியுள்ள பீதியின் சக்தி ,உலக அழிற்கு காரணமாகப்போகும் சக்தியை விட பல மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று நம்புகிறேன் ... 

அழியுமா?? அழியாதா ??
 யார் யாரோ என்னென்னமோ சொல்றாங்க, உலகம் உணமையில் அழியுமா?? அழியாதா ?? இதை  எப்படி தெரிந்து கொள்வது...??
கேள்விக்குறிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது ....
  • உலக அழியும் என்று உருக்கமாக நம்பி பீதியோடு இருப்பவர்கள் மற்றும்
  •  உலகம் அழியாது என்று நம்பிக்கையோடு உள்ளவர்கள் 
என இரு சாராரின் எண்ணிக்கையும் சமமாகவே இருக்கும் என்றே  நான் நம்புகிறேன் , 
நமது உலகம் 21-12-2012 ல் அழியும் என்று பல ஞாநிகள் (??) தீர்க்க தரிசனம்  கூறுகிறார்கள் , அவர்கள் உலகம்  அழிந்தால் என்னென்ன நடக்கும் என்று பட்டியல் போடுகிறார்கள்... ஒன்று மட்டும் நிச்சயம்  அவர்கள் நினைத்து கொண்டு இருப்பது  மாதிரி பூமி எனும் கிரகம் மனிதர்களுக்கு  மட்டுமானதல்ல,மனிதன் வருவதற்கு முன்பும்  பூமி இருந்தது ...மனிதனுக்கு பிறகும் இந்த பூமி   இருக்கும். இடையில் தோன்றி இத்தனை ஆட்டம் போடும் மனிதன் இதை உணர்வானாக 

அழிவின்  காரணங்கள் ஒரு அலசல் :

மாயன் காலண்டர் :
மாயன் காலண்டர் முடிவுற்றால் உலகம் முடிய வேண்டும் என்று ஏதாவது கட்டாயம் உள்ளதா என்ன?,மாயன் தங்கள் புத்தகங்களில் உலக அழிவு பற்றி கூறி உள்ளனர் என்றும் ஒரு வறட்டு காரணம்  கூறுகின்றனர்.காலம் என்பதே  மனிதனின் கண்டுபிடிப்பு தான் (காலம் என்றால் என்னவென்று ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள் ).காலம் என்பது இடத்திற்கு இடம் மாறுபடுகிறது " இன்று நம் தமிழகத்தில் இன்றாக இருக்கும் இன்றைய காலை  ,அமெரிக்கர்களுக்கு நேற்றைய நாளின் இரவாக இருக்கிறது". இப்படியாக  காலம் எனும் விஷயம் நாட்டிற்கு நாடு ,கிரகத்திற்கு கிரகம் மாறுபடுகிறது.இன்னொரு முக்கியமான விஷயம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். காலம் என்பது காலத்திற்கு காலம் கூட மாறுபட்டு வந்திருக்கிறது ,(நமது புத்தாண்டு பழங்காலத்தில் ஏப்ரல் 1-ல் கொண்டாடபட்டதாம் ,நமது காலண்டரில் உள்ள ஜூலையும் , ஆகஸ்டும் ஜூலியஸ் சீசர் மற்றும் அகஸ்டஸ் சீசர் நினைவாக வந்தவைகள் இவர்களுக்கு முன் இந்த இரு மாதங்கள் இல்லை ,காலம் என்பது பிரபஞ்சம் உருவான மறுவினாடியில் உதயமானது என்று அறிவியல் சொல்கிறது உண்மையில் காலம் என்பது  மனிதனுக்கு பின் வந்தது ,மனிதனால் வந்தது...காலம் என்பது மனிதன் கண்டுபிடிப்பு தானே !!,பூமி தானே மனிதனுக்கு நாள் குறித்து பூமிக்குள் குடி புகுத்தியது ...பூமிக்கு நாள் குறிக்க மனிதன் யார் ??
மாயன் காலண்டர் முடிந்தால் முடிந்தால் என்னங்க  ?? நம்ம காலண்டர் ஜனவரி 1-ல் ஆரம்பம் ஆகிறதே ! (புத்தாண்டு வாழ்த்துக்கள் !)

நிபுரு -நெருப்பு கிரகம் :

நாசாவின் வலைப்பக்கத்தில் பூமியை அழிக்க அழிவுக்கோள் ஒன்றும் வரவில்லை நிபுரு என்பது கற்பனை கிரகம் அப்படி பூமியை அழிக்க ஏதாவது கிரகமோ ,விண்கல்லோ வந்திருப்பின் வானத்தில் புலப்படாமல் இருக்குமா? என்று கேள்வி எழுப்புகிறார்கள் 

சூரியப்புயல் மின்காந்தபுயல் :
சூரியனில் புயல் என்பது புது விசயமல்ல ,இந்த சூரியப்புயல் ஒவ்வொரு பதினோரு ஆண்டுக்கு ஒருமுறை உச்சம் தொடும் என்பதும் பழைய செய்தி தான் , இப்புயலின் உச்சம் தொடும் நிகழ்வு இந்த வருட முடிவில் துவங்கி 2014 வரை நீடிக்கும் ,இதனால் பூமிக்கு பாதிப்பு கிடையாது .

பூமியின் துருவங்கள் இடம் மாறலாம் :
இந்த தகவலை பல நல்ல உள்ளங்கள் பூமி ரிவர்ஸில் சுத்தப்போகுது என்று பீதியை கிளப்பி உள்ளனர் (அதெப்டீங்க ) ,பூமியின் வட மற்றும் தென் துருவங்கள் மாறப்போகின்றன என்றும் பீதி உள்ளது .பூமியின் மின் காந்த புலங்கள் இதனால் மாறப்போகின்றன என்றும்  பீதியின் தீவிரம் உள்ளது ,இப்படி மாறினால் மின்காந்த அடிப்படையில் எந்த பொருளும் இயங்காது,மின் தகவல்கள் மாயமாகி விடும் (பயப்படாதீங்க).இது 400,000 வருடத்திற்கு  ஒருமுறை தான் நடக்கும் என்று விஞ்ஞானிகள் சூடம் அடிக்காத குறையாக சத்தியம் செய்கிறார்கள் .

இன்னும் சில காரணங்கள் :
எரிமலை ,நிலநடுக்கம் ,சுனாமி,கடல் வெள்ளம்,புயல் என பல்வேறு விசயங்கள் நம் உலகில் நிகழாத ஆண்டே கிடையாது,மனிதன் என்கிற  இந்த உயிரினமே  இயற்கை சீற்றங்கள் கொடுத்த மாற்றங்களால் உருவான இனமே !,மேலோட்டமாக பார்க்கும் போது இயற்கை சீற்றங்கள் மனிதர்களுக்கு தொந்தரவான விசயமாக படலாம் ,நம் பூமிக்கு அவை வேண்டும்.சுற்றி சுற்றி  கலைத்துப்போன,சூட்டால் காய்ந்து போன பூமிக்கு இயற்கை சீற்றங்கள் சிறு சிறு ஓய்வுகள் .... 
வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின்  கமெண்டில் கேளுங்கள் 

நன்பர்கள் ,வாசகர்கள் மற்றும் அனைவருக்கும் 21-12-12 நல் - வாழ்த்துக்கள் 



 

Post Comment

Saturday, December 08, 2012

ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம்-13





(கணிப்பொறி வரலாறு -பாகம்-3)






சகலக்கலா டாக்டரின்-ன் கணக்கிடும் கருவி:

 பாரிஸ் நகரத்தில் 1666 மற்றும் 1675 காலகட்டத்தில் க்ளாட் பெர்ரால்ட் என்ற சகலக்கலா டாக்டர் (அபேக் ராப்தலிக்) Abaque Rhabdologique என்ற கணக்கிடும் கருவி ஒன்றை கண்டுபிடித்தார்.படிப்பால் இவர் ஒரு மருத்துவர் என்றாலும் கணிதவியல்,கட்டடவியல்,அறிவியல் என்ற பல “வியல்”களில் வித்தகராக இருந்தார். பெர்ரால்ட் உருவாக்கிய இந்த கருவி மியூசியங்களில் கூட இல்லை .இந்த கருவியின் மறுவடிவங்கள்  மட்டுமே மியூசியங்களில் உயிருடன் உள்ளன.


அபேக் ராப்தலிக்-ன் ரிமேக் மாடல்

அபேக் கருவி-சில குறிப்புகள்:
 “அபேக் கருவி 1.15 கிலோ எடை கொண்ட செவ்வக உலோக தகடாக செய்யப்பட்டிருந்தது.,நீள,அகல,தடிமன் முறையே 30 cm x 12 cm x 0.7 cm.நழுவு அளவி (Slide Rule) இயங்கும் தத்துவத்தின் மேம்பட்ட வடிவமாக இந்த கருவி உருவாக்கப்பட்டது.  இந்த கருவியின் உதவியுடன் கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளை மட்டுமே செய்ய முடிந்தது.இருந்தாலும் இந்த கருவிக்கு ஒரு சிறப்பு உண்டு, இதற்கு முன்பிருந்த கணக்கிடும் கருவிகள் கியர் மெக்கானிசத்தில் இயங்கின,ஆனால் இந்த கருவி கியர்களை அடிப்படையாக கொண்டு இயங்கவில்லை இக்கருவி மெக்கானிக்கல் கால்குலேட்டர்களின் முன்னேற்றத்தின் படிக்கல்லாக அமைந்தது.





               சகலக்கலா டாக்டர் உருவாக்கிய கருவி (வரைபடம்).
இக்கருவியில் கூட்டல் கணக்குகளின் விடை கீழ் பகுதியிலும்,கழித்தல் கணக்குகளின் விடை மேல் பகுதியிலும் என தனித்தனியாக பார்க்கும் விதத்தில் இக்கருவி அமைக்கப்பட்டிருந்தது.

க்ளாட் இறந்து பதினோரு ஆண்டுகள் கழித்து ...
1701'ம் வருடம் Le Journal des sçavans  என்ற பிரஞ்சு பத்திரிக்கை  க்ளாட்-ன் 9 கண்டுபிடிப்புகளை பற்றிய விளக்கங்களுடன் ஒரு சிறு புத்தகம்(Recueil de plusieurs machines, de nouvelle invention) வெளியிட்டது, இந்த புத்தகத்தில் இவரின் கணக்கிடும் கருவி  பற்றியும் ஒரு செயல்முறை குறிப்பும் வெளியிடப்பட்டிருந்தது .அதில் குறிப்பிடப்பட்டுள்ள படம் தான் மேலே கொடுக்கப்பட்டுள்ள படம்.


இந்த கருவியை அடிப்படையாக கொண்டு 1720 ல் கேஜ் (Caze) என்ற பிரஞ்சுக்காரரும்,கம்மர் (Kummer) என்ற ரஷ்யரும் கணக்கிடும் கருவிகளை அமைத்தனர், பின் 1889 ல் Louis Troncet என்பவரால் அரித்மோகிராப் (Arithmographe) என்ற கருவி   நம் சகலக்கலா டாக்டரின் கணக்கிடும் கருவி இயங்கும் தத்துவத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டது.




                               அரித்மோகிராப் (1889)

1891 –ல் பீட்டர்.ஜெ.லேன்டின் என்பவர் இந்த கருவியை சிறு சிறு மாற்றங்களுடன் “லேன்டின் கம்ப்யூட்டர்” ( Landin Computer )  என்கிற பெயரில் தயாரித்து வெளியிட்டார்.


                      லேன்டின் கம்ப்யூட்டர்  எடை: 750g.




(கருவி மீது அச்சிடப்பட்ட வார்த்தைகள்: Landin Computer Co., Minneapolis Patent Allowed

சகலக்கலா டாக்டர் கண்டுபிடித்த கான்செப்ட் (கருத்துறு) இரு நூற்றாண்டுகளாக செயல்பாட்டில் இருந்துள்ளது என்பது ஆச்சரியமான விசயம் தான்


அபேக் இயங்கிய தத்துவத்தில் இயங்கிய 20-ம் நூற்றாண்டு கருவிகள்:


         The Comptator ( 1922) தயாரிப்பாளர்கள்: Hans Sabielny, Dresden, நாடு ஜெர்மனி  



                The Addiator தயாரிப்பாளர்: Addiator Gesellschaft, நாடு:பெர்லின்.
இக்கருவி 1920 முதல் 1982 வரை பயன்பாட்டில் இருந்தது.
இந்த கருவியில் எப்படி கணக்கு போடுவது என்று கீழுள்ள விடியோவில் பார்க்கலாம்.

கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,வகுத்தல் ஆகிய நான்கு செயல்களையும் செய்யும் கால்குலேட்டர் ஜெர்மானிய விஞ்ஞானியான லெப்னீஸ் (Gottfried Wilhelm Leibniz )என்பவரால் 1672 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

,இந்த கருவி பற்றி விளக்கமாக அடுத்த வாரம் பார்க்கலாம்...
இந்த கருவி பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்...

வாசகர்களின் தொடர் ஆதரவிற்கு நன்றிகள்., 
கருத்துக்கள்,விமர்சனங்கள் மற்றும் சந்தேகங்களை மறக்காமல் கமென்ட் பெட்டியில் கூறுங்கள் அல்லது இமெயில் செய்யுங்கள்!
vijayandurairaj30@gmail.com.

 

Post Comment