உலக அழிவும் 21 -12-2012 -ம்
மக்கள் மனதில் சமீபத்தில் பீதியை கிழப்பி இருக்கும் செய்தி உலகம் அழியுமா அழியாதா,அழிந்தால் எப்படி அழியும் ??
மக்கள்
எந்த விசயத்தில் ஒற்றுமையாக இருக்கிறார்களோ இல்லையோ ? பீதியை
கிழப்புவதிலும் வதந்தியை பரப்புவதிலும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். சரி
வழ-வழ வென்று பேசாமல் விசயத்திற்கு வருவோம்....
உலக-அழிவிற்கு சொல்லப்படும் காரணங்கள் :
உலக அழிவிற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகின்றன அவற்றுள் டாப் 10 காரணங்களை மட்டும் பார்க்கலாம்
1.மாயன் காலண்டர் முடிவு (இது தான் முதலிடம் பிடித்திருக்கும் காரணம் )
2.சூரியப்புயல்
3.நிபுரு எனப்படும் நெருப்பு கிரகம் பூமியை தாக்கலாம் ( வானத்தில் இந்த கிரகம் தெரியுதா பாருங்க :-) )
4.கருந்துளைக்குள் (black hole)பூமி செல்லலாம்
5. மின் காந்த புயல்
6.நமது சூரிய குடும்பம் ("galactic plane") நம் அண்டத்தின் எல்லையை அடையலாம்
7.பூமியின் துருவங்கள் இடம் மாறலாம்
8.நில நடுக்கம் சுனாமி வரலாம்
9. சூப்பர் எரிமலைகள்( super valcano ) வெடிக்கலாம் (நிலத்திற்கு அடியில் இருந்து நெருப்பு வரும் என்பதை டீசண்டாக சொல்கிறார்கள்)
10.புனித நூல்கள் உலக அழிவு பற்றி கூறுகின்றன
அழிந்தால் என்னவெல்லாம் நடக்கும் :
(முன் குறிப்பு: பயபடாமல் படிக்கவும் )
இந்த
பயத்தால் பலர் தற்கொலை வரை கூட சென்றிருக்கிறார்கள் என்கிற செய்தி
வருத்தம் தருகிரது ,என் வகுப்பில் ஒரு மாணவி தான் அந்த தேதியில்
வகுப்பிற்கு வர மாட்டேன் என்று விடுப்பு வாங்கி உள்ளாள் ,இன்று ஒரு
உணவுக் கடையில் பழைய பாக்கிகளை 21-12-2012 ற்குள் செலுத்தி விடவும் என்று
போர்டு வைத்து இருந்தனர்....
இந்த
விசயங்களை கேள்விப்படும்போது சிரிப்பு தான் வருகிறது,உலக அழிவு பற்றி
பரவியுள்ள பீதியின் சக்தி ,உலக அழிற்கு காரணமாகப்போகும் சக்தியை விட பல
மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று நம்புகிறேன் ...
அழியுமா?? அழியாதா ??
யார் யாரோ என்னென்னமோ சொல்றாங்க, உலகம் உணமையில் அழியுமா?? அழியாதா ?? இதை எப்படி தெரிந்து கொள்வது...??
கேள்விக்குறிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது ....
- உலக அழியும் என்று உருக்கமாக நம்பி பீதியோடு இருப்பவர்கள் மற்றும்
- உலகம் அழியாது என்று நம்பிக்கையோடு உள்ளவர்கள்
என இரு சாராரின் எண்ணிக்கையும் சமமாகவே இருக்கும் என்றே நான் நம்புகிறேன் ,
நமது
உலகம் 21-12-2012 ல் அழியும் என்று பல ஞாநிகள் (??) தீர்க்க
தரிசனம் கூறுகிறார்கள் , அவர்கள் உலகம் அழிந்தால் என்னென்ன நடக்கும்
என்று பட்டியல் போடுகிறார்கள்... ஒன்று மட்டும் நிச்சயம் அவர்கள் நினைத்து
கொண்டு இருப்பது மாதிரி பூமி எனும் கிரகம் மனிதர்களுக்கு
மட்டுமானதல்ல,மனிதன் வருவதற்கு முன்பும் பூமி இருந்தது ...மனிதனுக்கு
பிறகும் இந்த பூமி இருக்கும். இடையில் தோன்றி இத்தனை ஆட்டம் போடும்
மனிதன் இதை உணர்வானாக
அழிவின் காரணங்கள் ஒரு அலசல் :
மாயன் காலண்டர் :
மாயன்
காலண்டர் முடிவுற்றால் உலகம் முடிய வேண்டும் என்று ஏதாவது கட்டாயம் உள்ளதா
என்ன?,மாயன் தங்கள் புத்தகங்களில் உலக அழிவு பற்றி கூறி உள்ளனர் என்றும்
ஒரு வறட்டு காரணம் கூறுகின்றனர்.காலம் என்பதே மனிதனின் கண்டுபிடிப்பு
தான் (காலம் என்றால் என்னவென்று ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள் ).காலம்
என்பது இடத்திற்கு இடம் மாறுபடுகிறது " இன்று நம் தமிழகத்தில் இன்றாக இருக்கும் இன்றைய காலை ,அமெரிக்கர்களுக்கு நேற்றைய நாளின் இரவாக இருக்கிறது".
இப்படியாக காலம் எனும் விஷயம் நாட்டிற்கு நாடு ,கிரகத்திற்கு கிரகம்
மாறுபடுகிறது.இன்னொரு முக்கியமான விஷயம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள
வேண்டும். காலம் என்பது காலத்திற்கு காலம் கூட மாறுபட்டு வந்திருக்கிறது
,(நமது புத்தாண்டு பழங்காலத்தில் ஏப்ரல் 1-ல் கொண்டாடபட்டதாம் ,நமது
காலண்டரில் உள்ள ஜூலையும் , ஆகஸ்டும் ஜூலியஸ் சீசர் மற்றும் அகஸ்டஸ் சீசர்
நினைவாக வந்தவைகள் இவர்களுக்கு முன் இந்த இரு மாதங்கள் இல்லை ,காலம் என்பது
பிரபஞ்சம் உருவான மறுவினாடியில் உதயமானது என்று அறிவியல் சொல்கிறது
உண்மையில் காலம் என்பது மனிதனுக்கு பின் வந்தது ,மனிதனால் வந்தது...காலம்
என்பது மனிதன் கண்டுபிடிப்பு தானே !!,பூமி தானே மனிதனுக்கு நாள் குறித்து பூமிக்குள் குடி புகுத்தியது ...பூமிக்கு நாள் குறிக்க மனிதன் யார் ??
மாயன் காலண்டர் முடிந்தால் முடிந்தால் என்னங்க ?? நம்ம காலண்டர் ஜனவரி 1-ல் ஆரம்பம் ஆகிறதே ! (புத்தாண்டு வாழ்த்துக்கள் !)
நிபுரு -நெருப்பு கிரகம் :
நாசாவின்
வலைப்பக்கத்தில் பூமியை அழிக்க அழிவுக்கோள் ஒன்றும் வரவில்லை நிபுரு
என்பது கற்பனை கிரகம் அப்படி பூமியை அழிக்க ஏதாவது கிரகமோ ,விண்கல்லோ
வந்திருப்பின் வானத்தில் புலப்படாமல் இருக்குமா? என்று கேள்வி
எழுப்புகிறார்கள்
சூரியப்புயல் மின்காந்தபுயல் :
சூரியனில்
புயல் என்பது புது விசயமல்ல ,இந்த சூரியப்புயல் ஒவ்வொரு பதினோரு ஆண்டுக்கு
ஒருமுறை உச்சம் தொடும் என்பதும் பழைய செய்தி தான் , இப்புயலின் உச்சம்
தொடும் நிகழ்வு இந்த வருட முடிவில் துவங்கி 2014 வரை நீடிக்கும் ,இதனால்
பூமிக்கு பாதிப்பு கிடையாது .
பூமியின் துருவங்கள் இடம் மாறலாம் :
இந்த
தகவலை பல நல்ல உள்ளங்கள் பூமி ரிவர்ஸில் சுத்தப்போகுது என்று பீதியை
கிளப்பி உள்ளனர் (அதெப்டீங்க ) ,பூமியின் வட மற்றும் தென் துருவங்கள்
மாறப்போகின்றன என்றும் பீதி உள்ளது .பூமியின் மின் காந்த புலங்கள் இதனால்
மாறப்போகின்றன என்றும் பீதியின் தீவிரம் உள்ளது ,இப்படி மாறினால்
மின்காந்த அடிப்படையில் எந்த பொருளும் இயங்காது,மின் தகவல்கள் மாயமாகி
விடும் (பயப்படாதீங்க).இது 400,000 வருடத்திற்கு ஒருமுறை தான் நடக்கும் என்று விஞ்ஞானிகள் சூடம் அடிக்காத குறையாக சத்தியம் செய்கிறார்கள் .
இன்னும் சில காரணங்கள் :
எரிமலை
,நிலநடுக்கம் ,சுனாமி,கடல் வெள்ளம்,புயல் என பல்வேறு விசயங்கள் நம் உலகில்
நிகழாத ஆண்டே கிடையாது,மனிதன் என்கிற இந்த உயிரினமே இயற்கை சீற்றங்கள்
கொடுத்த மாற்றங்களால் உருவான இனமே !,மேலோட்டமாக பார்க்கும் போது இயற்கை
சீற்றங்கள் மனிதர்களுக்கு தொந்தரவான விசயமாக படலாம் ,நம் பூமிக்கு அவை
வேண்டும்.சுற்றி சுற்றி கலைத்துப்போன,சூட்டால் காய்ந்து போன பூமிக்கு
இயற்கை சீற்றங்கள் சிறு சிறு ஓய்வுகள் ....
வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் கமெண்டில் கேளுங்கள்
நன்பர்கள் ,வாசகர்கள் மற்றும் அனைவருக்கும் 21-12-12 நல் - வாழ்த்துக்கள்
Tweet |
கலக்கல் நண்பா. தேடலுக்கு வாழ்த்துக்கள்.. லேப்டாப் செய்தி வருத்தம் அளித்தது.. வெற்றி பயணம் தொடரட்டும்
ReplyDeleteஎனக்கு SMS வரல்லையே? அப்புறம் எப்படி உலகம் அழியும்?
ReplyDelete21.12.2012 - வாழ்த்துக்கள்.
ReplyDelete//பூமி தானே மனிதனுக்கு நாள் குறித்து பூமிக்குள் குடி புகுத்தியது ...பூமிக்கு நாள் குறிக்க மனிதன் யார் ??//
ReplyDeleteநல்ல கேள்வி.
நல்ல அலசல்.
உங்களுக்கும் 21.12.2012 - வாழ்த்துக்கள்!