Saturday, December 08, 2012

ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம்-13





(கணிப்பொறி வரலாறு -பாகம்-3)






சகலக்கலா டாக்டரின்-ன் கணக்கிடும் கருவி:

 பாரிஸ் நகரத்தில் 1666 மற்றும் 1675 காலகட்டத்தில் க்ளாட் பெர்ரால்ட் என்ற சகலக்கலா டாக்டர் (அபேக் ராப்தலிக்) Abaque Rhabdologique என்ற கணக்கிடும் கருவி ஒன்றை கண்டுபிடித்தார்.படிப்பால் இவர் ஒரு மருத்துவர் என்றாலும் கணிதவியல்,கட்டடவியல்,அறிவியல் என்ற பல “வியல்”களில் வித்தகராக இருந்தார். பெர்ரால்ட் உருவாக்கிய இந்த கருவி மியூசியங்களில் கூட இல்லை .இந்த கருவியின் மறுவடிவங்கள்  மட்டுமே மியூசியங்களில் உயிருடன் உள்ளன.


அபேக் ராப்தலிக்-ன் ரிமேக் மாடல்

அபேக் கருவி-சில குறிப்புகள்:
 “அபேக் கருவி 1.15 கிலோ எடை கொண்ட செவ்வக உலோக தகடாக செய்யப்பட்டிருந்தது.,நீள,அகல,தடிமன் முறையே 30 cm x 12 cm x 0.7 cm.நழுவு அளவி (Slide Rule) இயங்கும் தத்துவத்தின் மேம்பட்ட வடிவமாக இந்த கருவி உருவாக்கப்பட்டது.  இந்த கருவியின் உதவியுடன் கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளை மட்டுமே செய்ய முடிந்தது.இருந்தாலும் இந்த கருவிக்கு ஒரு சிறப்பு உண்டு, இதற்கு முன்பிருந்த கணக்கிடும் கருவிகள் கியர் மெக்கானிசத்தில் இயங்கின,ஆனால் இந்த கருவி கியர்களை அடிப்படையாக கொண்டு இயங்கவில்லை இக்கருவி மெக்கானிக்கல் கால்குலேட்டர்களின் முன்னேற்றத்தின் படிக்கல்லாக அமைந்தது.





               சகலக்கலா டாக்டர் உருவாக்கிய கருவி (வரைபடம்).
இக்கருவியில் கூட்டல் கணக்குகளின் விடை கீழ் பகுதியிலும்,கழித்தல் கணக்குகளின் விடை மேல் பகுதியிலும் என தனித்தனியாக பார்க்கும் விதத்தில் இக்கருவி அமைக்கப்பட்டிருந்தது.

க்ளாட் இறந்து பதினோரு ஆண்டுகள் கழித்து ...
1701'ம் வருடம் Le Journal des sçavans  என்ற பிரஞ்சு பத்திரிக்கை  க்ளாட்-ன் 9 கண்டுபிடிப்புகளை பற்றிய விளக்கங்களுடன் ஒரு சிறு புத்தகம்(Recueil de plusieurs machines, de nouvelle invention) வெளியிட்டது, இந்த புத்தகத்தில் இவரின் கணக்கிடும் கருவி  பற்றியும் ஒரு செயல்முறை குறிப்பும் வெளியிடப்பட்டிருந்தது .அதில் குறிப்பிடப்பட்டுள்ள படம் தான் மேலே கொடுக்கப்பட்டுள்ள படம்.


இந்த கருவியை அடிப்படையாக கொண்டு 1720 ல் கேஜ் (Caze) என்ற பிரஞ்சுக்காரரும்,கம்மர் (Kummer) என்ற ரஷ்யரும் கணக்கிடும் கருவிகளை அமைத்தனர், பின் 1889 ல் Louis Troncet என்பவரால் அரித்மோகிராப் (Arithmographe) என்ற கருவி   நம் சகலக்கலா டாக்டரின் கணக்கிடும் கருவி இயங்கும் தத்துவத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டது.




                               அரித்மோகிராப் (1889)

1891 –ல் பீட்டர்.ஜெ.லேன்டின் என்பவர் இந்த கருவியை சிறு சிறு மாற்றங்களுடன் “லேன்டின் கம்ப்யூட்டர்” ( Landin Computer )  என்கிற பெயரில் தயாரித்து வெளியிட்டார்.


                      லேன்டின் கம்ப்யூட்டர்  எடை: 750g.




(கருவி மீது அச்சிடப்பட்ட வார்த்தைகள்: Landin Computer Co., Minneapolis Patent Allowed

சகலக்கலா டாக்டர் கண்டுபிடித்த கான்செப்ட் (கருத்துறு) இரு நூற்றாண்டுகளாக செயல்பாட்டில் இருந்துள்ளது என்பது ஆச்சரியமான விசயம் தான்


அபேக் இயங்கிய தத்துவத்தில் இயங்கிய 20-ம் நூற்றாண்டு கருவிகள்:


         The Comptator ( 1922) தயாரிப்பாளர்கள்: Hans Sabielny, Dresden, நாடு ஜெர்மனி  



                The Addiator தயாரிப்பாளர்: Addiator Gesellschaft, நாடு:பெர்லின்.
இக்கருவி 1920 முதல் 1982 வரை பயன்பாட்டில் இருந்தது.
இந்த கருவியில் எப்படி கணக்கு போடுவது என்று கீழுள்ள விடியோவில் பார்க்கலாம்.

கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,வகுத்தல் ஆகிய நான்கு செயல்களையும் செய்யும் கால்குலேட்டர் ஜெர்மானிய விஞ்ஞானியான லெப்னீஸ் (Gottfried Wilhelm Leibniz )என்பவரால் 1672 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

,இந்த கருவி பற்றி விளக்கமாக அடுத்த வாரம் பார்க்கலாம்...
இந்த கருவி பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்...

வாசகர்களின் தொடர் ஆதரவிற்கு நன்றிகள்., 
கருத்துக்கள்,விமர்சனங்கள் மற்றும் சந்தேகங்களை மறக்காமல் கமென்ட் பெட்டியில் கூறுங்கள் அல்லது இமெயில் செய்யுங்கள்!
vijayandurairaj30@gmail.com.

Labels: , , , , , ,

5 Comments:

At Sat Dec 08, 05:56:00 am , Blogger டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கணிப்பொறி வரலாறு நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. தொடர்ந்து படித்து வருகிறேன்.
முயற்சி தொடரட்டும்.

 
At Sat Dec 08, 12:31:00 pm , Blogger Ranjani Narayanan said...

எத்தனை எத்தனை விஷயங்கள்!
அருமையாக விளக்குகிறீர்கள் விஜயன்.
பாராட்டுக்கள்!

 
At Mon Dec 10, 04:27:00 pm , Blogger Vijayan.Durairaj said...

மிக்க நன்றி அம்மா ,தொடர் வருகைக்கு நன்றி

 
At Thu Dec 13, 08:02:00 pm , Blogger Ranjani Narayanan said...

அன்புள்ள விஜயன்,
எனக்கு உங்கள் பெயரில் ஒரு இமெயில் இரண்டு வாரங்களாக வருகிறது.
உங்கள் லாப்டாப் சரியில்லை என்றும் உங்களுக்கு தொலை பேச வேண்டும் என்றும்.
இது உண்மையில் நீங்கள் எழுதியதா?
எனக்கு ஸ்பாம் ஆக இருக்குமோ என்று.
குழப்பத்தை தீர்க்கவும் ப்ளீஸ்!

 
At Sun Dec 16, 06:35:00 pm , Blogger Vijayan Durai said...

aam amma unmai thaan

 

Post a Comment

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....

Subscribe to Post Comments [Atom]

<< Home