ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம்-10
(தீபாவளி சிறப்பு பதிவு)
சென்ற வாரம் கம்பி இணைப்பு கண்டங்களை எப்படி இணைத்தது என்று பார்த்தோம்.இந்த வாரம் கணினியின் வரலாற்றை பார்க்கலாம் என்று கட்டுரையை முடித்திருந்தேன்...கணினியின் வரலாற்றுக்குள் பிரேவேசிக்கும் முன் இந்த வாரம் கம்பி இணைப்பு சம்பந்தமான சில அரிய புகைப்படங்களை பகிர்ந்து கொள்கிறேன்....
கம்பி இணைப்பின் காரணாகர்த்தாக்கள்.அந்த தாடிக்காரர் (மோர்ஸ்) தான் தந்தியை கண்டுபிடித்தவர்
இவரு பேரு "சார்லஸ்.T .பிரைட்" அட்லான்டிக் கம்பி கம்பேனியின் தலைமை பொறியியலாளர் (24 வயது !) . இவரு 24 வயதில் 2 டஜன் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வாங்கியிருந்தாராம் !.இந்த போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போது 20 வயது.
1857 -ல் கடலுக்கடியில் கம்பி புதைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் கப்பல்கள். நயகரா மற்றும் டென்டர்.இந்த கப்பல்கள் 1265 மைல் நீள கம்பியை கொண்டுஅமெரிக்க -ஐரோப்பா கண்டங்களை இணைத்தது
இது தான் அந்த கம்பி ! (1857 வருடம்.மூன்று வாரங்கள் மட்டுமே இவை செயல் புரிந்தன)
அதிக மின்னழுத்தத்தால்பாதிக்கப்பட்ட பழைய கம்பிகளுக்கு மாற்றாக வந்த மேம்படுத்தப்பட்ட
கம்பிகள்.
புதிய கம்பிகளை புதைத்த புதிய கப்பல் Great Eastern. இதில் 10,000 பணியாளர்கள் இருந்தார்களாம் !
சுத்தி...சுத்தி... தொழிற்சாலையிலிருந்து கம்பி கப்பலுக்குள் பறிமாற்றப்படுகிறது.
கம்பி கப்பலில் இருந்து விடுவிக்கப்பட்டு புதைக்கப்படுகிறது.
1 ,2, 3, 4 குட்டி கப்பல்கள் Terrible,Sphinx,Hawk, மற்றும் Carroline
தானியங்கி கம்பி வெளியேற்றும் அமைப்பு
பல கரங்கள் கம்பியை கரை நோக்கி இழுக்கும் காட்சி
இடம்:Valentina,அயர்லாந்து
நாள் :1866 -ஜூலை 7
காசு
தபால் தலை
வெற்றி! வெற்றி!
வெற்றி ! வெற்றி! தந்தி தரையை அடைந்த சந்தோசத்தை கொண்டாடும் மக்கள்
பட்டாசு வெடித்து கொண்டாடும் அமெரிக்கா !
வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
குறிப்பு:
இந்த புகைப்படங்கள் 1959 ம் வருடம் வெளியான THE ATLANTIC CABLE , BY BERN DIBNER எனும் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.
சந்தேகங்கள்,கேள்விகள்,கருத்துக்கள் போன்றவைகளை மறக்காமல் கமென்டில் குறிப்பிடவும். ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம் தொடர் தீபாவளியை முன்னிட்டு அடுத்த வாரம் வெளிவராது.
Labels: internet history, internet history இணையம், தொடர்பதிவு, தொழில் நுட்பம், தொழிற்களம, மாயஉலகம்
4 Comments:
கம்பி கண்டுபிடிப்புக்கு காரணமானவர்களின் புகைப்படங்களைத் தேடி தேடி எடுத்துப் போட்டிருக்கிறீர்கள் விஜயன்!
ஒவ்வொரு புகைபடமும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை.
பாராட்டுக்கள்!
மிகவும் அருமை... சேமித்துக் கொண்டேன்... நன்றி...
அருமையான சரித்திரத் தொகுப்புக்குப் பாராட்டுக்கள்..
அரிய புகைப்படங்களை தேடி எடுத்து பகிர்ந்து தகவல்களை எளிமையாக தந்து வரும் தங்கள்சேவைக்கு பாராட்டுக்கள்!
Post a Comment
கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....
Subscribe to Post Comments [Atom]
<< Home