Wednesday, March 20, 2013

பரதேசி திரைப்படம்- சில குறைகள்

இந்த திரைப்படத்திற்கான திரை விமர்சனத்தை படிக்க கீழுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்...

பரதேசியும்,பாலாவும்,அப்புறம் நானும்

எச்சரிக்கை: திரைப்படத்தை பார்த்தவர்கள் மட்டும் இந்த பதிவை படிக்கவும்...

பரதேசி திரைப்படத்தில் நிறைகளும் நிறையவே உள்ளன ,இருந்தாலும் சில இடங்கள் முன்னுக்கு பின் முரணாகவும்,நெருடலாகவும் இருந்தன...


1.ஒட்டு மொத்த கிராமும் செட் என்பது அப்பட்டமாக தெரிகிறது.கலை இயக்கமும் ஒளிப்பதிவும் இன்னும் கொஞ்சம் முயற்சித்திருக்க கூடாதா? என்று யோசிக்க தோன்றுகிறது.

2.ஹீரோயினின் மேக்கப் படுமோசம், செவத்த பொன்ன கருத்த பொன்னாக காட்ட முயன்ற முட்டாள் தனத்திற்கு பதில் கருப்பான ஏதேனும் தமிழ் பெண்ணை அறிமுகம் செய்திருக்கலாமே.ஹீரோயினின் நடிப்பும் அவ்வளவாக சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.சில இடங்களில் முகம் சுழிக்க வைக்கிறது

3.படத்தின் முதல் பாதி முழுக்க அந்த பழங்குடி கிராமத்தை சுற்றியே நகர்கிறது .சந்தோசத்திற்கு குறைவில்லாத கிராம்மாகவே காட்சிபடுத்தப்பட்டிருந்தது, அந்த கிராமத்தின் முகத்தில் கவலை ரேகையோ வறுமை சாயமோ சிறிதும் பூசப்படவில்லை, பின் ஏன் அவர்கள் "கங்கானி" யின் பேச்சை கேட்டு கண் காணத பரதேசம் நோக்கி பரதேசிகளாக நகர்கிறார்கள்

4. 48 நாள் நடை பயணம் என்பது நம்பும்படியாக இல்லை,அது மட்டுமின்றி இடைவேளைக்கு முந்தைய காட்சியில் நடை பயணத்தின் போது தன் கிராம வாசி ஒருவர் நடை தளர்ந்து , நா வறண்டு நகர முடியாமல் இறப்பின் பிடியில் இருந்த சமயம் ஊர்மக்கள் ஒருவர்கூட அந்த ஜீவனை ஏரெடுத்தும் பார்க்காமல்  நகர்வது போல காட்சி உள்ளது.,கங்காணியின் கொடுமையை கண்முன் கண்டும் ஊரார் கோபம் கொள்ளாமல்.தன் ஊர்க்காரன் சாவதை வேடிக்கை பார்த்துக்கொண்டே நகர்கிறார்கள்...(கிராமத்து மக்கள் இரக்கமில்லாதவர்கள், பணத்தாசை பிடித்தவர்கள் என்று எண்ண வைக்கிறார் இயக்குநர் பாலா)

5.ஆண்டுகள் பல கடந்தும் கரிச்சான் மண்டைகளாக சுற்றும் கிராம மக்களின் தலைமுடி அப்படியே இருப்பதன் ரகசியம் என்னவென்று பிடிபடவில்லை

6.வெள்ளைக்காரனின் ஆசைக்காக சந்தோசமாக ஒத்துப்போகும் தமிழ்ப் பெண்கள் முரணாக தெரிந்தனர்.

7.எஸ்டேட்டிற்குள் நுழந்த உடனேயே அதர்வா கேரக்டர் கடுதாசி போட முடியுமா என்று கேட்பது போல காட்சி உள்ளது கடிதம் போட 2 அனா படித்துக்காட்ட 2 அனா என்றும் மருந்து கலக்கி (போலி டாக்டர்) பதில் தருகிறார். படத்தில் ஒரு இடத்தில் ஹீரோவுக்கு கடிதம் வருகிறது. ஹீரோயினுக்கு குழந்தை பிறந்த பிற்பாடு கடிதம் ஏன் அனுப்ப படவில்லை என்பது குழப்பமாக இருந்தது. (பிறந்த குழந்தை ஆணா பெண்ணா என்று கூட ஏன் அவனுக்கு தெரியவில்லை என்று யோசிக்க தோன்றுகிறது).

8.கடிதப்போக்குவரத்து இருந்தும் தன் மனைவிக்கு கடிதம் எழுதாத கதாநாயகனும், தானும் எஸ்டேட்டுக்கு வரும் செய்தியை தன் கனவனுக்கு சொல்லாமல் புறப்பட்டு வரும் கதாநாயகியும் முரணாகவே இருந்தனர்


    9.கிருத்தவ டாக்டரின் மதம் பரப்பும் படலத்தை கொஞ்சம் நாகரிகமாக காட்டியிருக்கலாம்


    பரதேசி திரைப்படத்தை மொக்கைப்படம் என்று சொல்ல முடியாது,ஆனால் உலகத்தர திரைப்பட வரிசையில் இதை வைக்க முடியாது.நேர்த்தியான கதையமைப்பு,நெருடாத காட்சியமைப்பு,கதை கள ஆராய்ச்சி போன்ற விசயங்களில் கவனம் செலுத்தியிருந்தால்  நிச்சயம் இந்த தமிழ் சினிமா உலகத்தரவரிசையில் எட்டிப்பார்த்திருக்கும். Just Miss

    தமிழ் சினிமாக்களில் சொல்லப்படாத புதிய விசயம் என்ற வகையில் இயக்குநர் பாலாவுக்கு நாம் பாராட்டு மழை பொழியலாம்.மற்றபடி "பரதேசி" தமிழ் சினிமா டெம்பிளேட் குள் அடைபட்டு கிடப்பதை மறுப்பதற்கில்லை

     

    Post Comment

    பரதேசியும்,பாலாவும்,அப்புறம் நானும்

    " சுதந்திரத்திற்கு முன்பான காலகட்டத்தில் வெள்ளையர்களின் தேயிலை தோட்டத்தில் பணிபுரிய அப்போதைய சென்னை மாகானத்தில் இருந்த கிராமத்து மக்களை கொத்தடிமைகளாக அந்த தேயிலை தோட்டத்திற்கு அழைத்து சென்றார்கள், பிழைக்க வழி கிடைத்ததே என்று அந்த அப்பாவி கூட்டமும் வேறு வழியின்றி வேலைக்கு செல்கின்றனர்... இன்று நாம் அருந்தும் தேனீருக்காக அன்று ரத்தம் சிந்திய லட்சக்கணக்கான மக்களின் உண்மைக்கதை... "

     படம் துவங்குவதற்கு முன்பே திரையில் எழுத்துக்களாகவும் குரலாகவும் பாலா கதையின் கருவை சொல்லிவிடுகிறார்.அதன் பின்பே கதை ஆரம்பிக்கிறது.

    தமிழில் வெளிவரும் வழக்கமான படங்களில் இருந்து பாலாவின் படங்கள் வித்தியாசமாகவே இருக்கும். "பரதேசி" யும் இதற்கு விலக்கல்ல. படத்தில் சோகம் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது.ஒட்டுப்பொறுக்கியின் (ஹீரோ) அப்பாவித்தனம், சாதி கொடுமை, அடிமையாக செல்லும் மக்கள் படும் துயரம் என நிறைய இடங்களில் அழ வைக்கிறார் இயக்குனர் பாலா.

     எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் வசனமும், வைரமுத்து அவர்களின் பாடல் வரிகளும் கிராமத்து வாசனையை நம்மை சுவாசிக்க செய்கின்றன. கிராமத்து மக்களின் இயல்பையும் நக்கல்,நையாண்டி,குசும்பு போன்றவற்றையும் வசனங்களில் அழகாக ரசிக்கும் விதத்தில் பதிவு செய்திருக்கிறார் நாஞ்சில் நாடன். ஜி.வி. யின் இசை கதையின் பின்புலத்தில் சலனமின்றி நம் பயணத்தை தொடர வைக்கிறது.

    சாளூர் கிராமத்தில் தண்டோரா போட்டு தகவல்களை சொல்லும் ராசா என்கிற ஒட்டுப்பொறுக்கியாக வருகிற அதர்வா முரளி -ன் நடிப்பு அற்புதம். அப்பாவி கேரக்டர் ,ஊரார் தருகிற வேலைகளை செய்து கொண்டு.
    அவர்கள் கொடுக்கிற கஞ்சியையோ, கூலையோ பெற்றுக்கொண்டு ( ஒட்டுப்பொறுக்கிக்கொண்டு...) சுற்றி வருகிற இளந்தாரிப்பையனாக கதையில் பயணப்படுகிறார்.

    தனது பேரன் ராசாவை(ஹீரோவின் பெயர்) தாய் தந்தை இல்லாத குறை தெரியாமல் வளர்த்த கிழவி கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.கூனல் கிழவி பேராண்டியை பாசமாக திட்டுகிற இடங்கள் அருமை.!

    ஒட்டுப்பொறுக்கியின் அத்தை பொண்ணாக ஹீரோயின்.,வழக்கமான தமிழ் படங்களைப்போலவே அத்தை பெண் மீது ஹீரோவுக்கு காதல் பூக்கிறது.I Love You என்கிற வழக்கமான சினிமா முறையில் அல்லாமல் "நான் உன்ன நெனக்கிறேன்" .. என்று கிராமத்து வார்த்தையில் வேதிகா தன் காதலை சொன்ன இடம் சிலிர்க்க வைத்தது.( பஞ்சாயத்து இல்லாமல் கிராமத்து கதையா ?? என நினைக்கும் போது கதையின் ஒரு இடத்தில் பஞ்சாயத்து கூடுகிறது ).

    வெள்ளையனின் கைக்கூலியாக இருக்கும் "கங்கானி" தேயிலை தோட்டத்துக்கு   மக்களை இனிக்க இனிக்க பேசி ஆசைகாட்டி வேலை வாங்கி தருவதாக கூறி கொத்தடிமைகளாக கொத்து கொத்தாக தூக்கி செல்கிறார். சாமி சிரிப்பு.. சிரிப்பா.. பேசுது பாரு என்று கங்கானியின் பேச்சை நம்பி வெள்ளந்தியாக வெள்ளைக்காரனுக்கு அடிமையாக பன்னிரன்டனா பத்திரத்தில் கைநாட்டு போட்டு பச்சை மலை எஸ்டேட் நோக்கி பாதம் நோக 48 நாட்கள் நடந்து பயணம் போகிறது அந்த பாவப்பட்ட கூட்டம்.

    இடைவேளைக்கு பின் தேயிலை தோட்டத்தில் கிராமத்து மக்கள் படுகிற துயரத்தை பதிவு செய்துள்ளார் பாலா. ஒரு நாளைக்கு முப்பது கூடை கொழுந்து இலைகளை பறிக்க  வேண்டும் என்று புதிய அடிமையாக வந்த பெண்ணிடம் பழைய அடிமையாக இருக்கும் ஒரு பெண் பாடம் சொல்லி தருகிறார்.( ஒரு கூடையை நிறைக்கவே மணிக்கணக்கு ஆகும்.போல பெரிய கூடை...30 கூடை நிறைக்கனுமானு சொல்லும் போது உழைப்பை உறிஞ்சும் அட்டைப்பூச்சிகள் மீது கோபம் வந்தது?? ).இது தவிற அட்டைப்பூச்சி கடி, வெள்ளையனின் காமப்பசி, சவுக்கடி,விசக்காய்ச்சல் என தேயிலை பறிக்க போன கூட்டம் பல உராய்வுகளால் தேய துவங்குகிறது.

                                     

    கொடிய நோய் வந்து கொத்தடிமைகள் கொத்து கொத்தாக செத்து மடியும் போது கர்த்தரின் பெயர் சொல்லி மதம் பரப்ப ஒரு கூட்டம் வருகிறது. (இந்த லிங்கில் உள்ளகட்டுரையில் இலங்கையில் துயரப்படும் நம் தமிழினத்தை மதம் மாற்ற முயன்ற உண்மை கதையைஉருக்கமாக மணி அண்ணன் எழுதியுள்ளார்) இவனுங்களையெல்லாம் என்ன தான் பண்றது...

    அழுகைக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் சமயத்தில் கர்த்தரின் கருணையால்  ரசிகர்களின் மனதிலும்,முகத்திலும் புன்னகை பூக்க செய்து சில நிமிடம் சிரிக்க வைக்கிறது "அல்லேலூயா..." பாடல் (அழுகாச்சி ராகங்களாகவே ஒளிக்கும் கிறித்தவ இசை ஜி.வி பிரகாசின் கருணையால் துள்ளலாக இசைக்கிறது).விச காய்ச்சலில் இறந்து போன அடிமைகளுக்காக அடிக்கும் சாவு கொட்டு போல ஒலிக்கிறது.(பாடல் எனக்கு மிக பிடித்திருந்தது).

    வேலைக்கு கூலி,வேளா வேளைக்கு உணவு என நம்பி வந்த மக்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.மருத்துவர்,சாமியார்,வெள்ளைக்காரன், வெள்ளைக்காரனின் கைக்கூலியான "கங்கானி" இவர்கள் தான் அடிமைகள் தயவில் அற்புத வாழ்வை வாழ்கிறார்கள் .வழக்கமான சினிமாக்களில் வருகிற மாதிரி ஹீரோ பறந்து சண்டைபோட்டு அடிமைகள் வாழ்வை மீட்க வரமாட்டானா என்று எண்ண வைக்கிறது...

    அடிமை இந்தியா... ஆங்கிலேயனின் ஆதிக்க வெறி... ஆகியவற்றை உருக்கமாக பதிவு செய்துள்ளது இந்த திரைப்படம். தமிழ் சினிமாவில் ஒரு முத்திரையாக என்றென்ன்றும் இந்த பரதேசி இருப்பான்.


    (படம் முடிந்ததும் சுதந்திர காற்றை நமக்கு வாங்கி தந்த தலைவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்!! கூறிக்கொண்டேன்..)

    "செந்நீர் தானா ? செந்நீர் தானா?
    செந்தேனீரில் செம்பாதி கண்ணீர் தானா?

    என்று டீ குடிக்கும் போதெல்லாம் இனி யோசித்துகொள்வோம் !

    பரதேசி - படமல்ல பதிவு !

    டிஸ்கி: கடற்கரை  வலைப்பூவில் வெளிவரும் முதல் திரை விமர்சனம் இது..

    படத்தில் உள்ள குறைகளை பற்றிய பதிவு... மறக்காம இதையும் படிங்க...

     

    Post Comment

    Saturday, March 16, 2013

    கடல் மீன்கள்

    (ராமேசுவரம் மீனவர்களின் வாழ்க்கைப் பதிவு)                                                   "ஒரு நாள் போவார்
    ஒரு நாள் வருவார்
    ஒவ்வொரு நாளும் துயரம்"


      து ஒரு ஞாயிற்றுக்கிழமை...
    நம்மில் பெரும்பாலோருக்கு ஓய்வு நாளாக மட்டுமே பழகிப்போன வாரத்தின் இறுதி நாள், இராமேசுவர மீன்பிடி கடற்கரைப் பகுதி ஒரு திருவிழா போல மனித கூட்டத்தை நிறைத்துக்கொண்டு அந்த கடலோர உழைப்பாளர்களின் உழைப்பில் குதூகளித்துக் கொண்டிருந்தது.

      குவியல் குவியலாக,கூடை கூடையாக ,பெட்டிப் பெட்டியாக கடற்கரை ஓரமெங்கும் இறந்த மீன்களின் இறுதிஊர்வலம் மிக விமரிசையாக,மீனவர்களின் ஆதரவுடன் சந்தோசமாக நடந்து கொண்டிருந்தது.

      ந்த இறந்து போன மீன்கள்தான் ,லட்சக்கணக்கான அந்த மீனவ மக்களின் உயிர் வளர்க்கும் ஆதாரமாக உள்ளது.
    நம் உணவாக உருமாற்றம் அடைந்த இந்த இறந்த மீன்களுக்காக நாம் அதிகம் கவலைபடுவதில்லை , இருந்தாலும் இந்த மீன்களை நம் உண்வாக மாற்றித்தர மீனவர்கள் மிகுந்த சிரமப் படுகிறார்கள் கடலில் அவர்கள் படுகிற கஷ்டங்கள் நம்மில் பலருக்கு தெரிவதில்லை

    மீனவர்கள் எப்படி மீன் பிடிக்கிறார்கள்?,அவர்கள் படுகிற கஷ்டங்கள் என்ன?

    இந்த பதிவில் அவைகளை பதிகிறேன்….

        வாரத்தில் திங்கள்,புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டுமே கடலுக்கு மீன் பிடிக்க செல்ல அனுமதி உண்டு,மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் முன் மீன் வளத்துறையினரிடமிருந்து டோக்கன் என அழைக்கப்படுகிற அனுமதிச்சீட்டை பெற வேண்டும் காலை ஆறு மணிக்கு டோக்கன் விநியோகம் துவங்குகிறது இந்த அனுமதிச்சீட்டு 24 மணி நேரம் மீன் பிடிக்க அனுமதி தருகிறது, அதாவது இந்த அனுமதிச்சீட்டு  24 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும், இந்த சீட்டு இன்றி மீன்பிடிப்பது குற்றமாகும்.மீன்பிடி தொழிலுக்கு டீசல் விசைப்படகுகள்(fishing boats) பயன்படுத்தப் படுகின்றன.

    அனுமதிச்சீட்டினை பெற்ற பிறகு...

       மீன்பிடி வலை,விசைப்படகை இயக்க தேவையான டீசல் அடங்கிய பேரல்கள்,பிடிக்கிற மீன்களை கெட்டு போகமல் பராமரிக்க தேவையான ஐஸ்கட்டிகள் போன்ற பொருட்களுடன் தயாராக இருக்கிற விசைபடகுகள் மீனவர்களுடன் கடலலைகளைக் கிழித்துக் கொண்டு கடலுக்குள் பாய்கிறது.

    [காலை 6 மணிக்கு கடலுக்குள் சீறிப்பாய்கிற படகுகள் மறுநாள் காலையில் தான் கரைக்குத் திரும்புகின்றன.]

       டலுக்குள் சென்றவுடன் மீனவர்கள் கரைக்கும் தங்களுக்குமான உறவை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் துவங்குகிறார்கள்ஆழ்கடல் பகுதிகளில் தொலை தொடர்புக்கு பயன்படுத்தப்படும் செல் பேசிகள் செயல் படுவதில்லை.கடலுக்குள் உயிரை பணயம் வைத்து செல்கிற மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதலுக்கு உட்ப்பட்டு உயிரிழந்தாலோபடகில் ஏற்படும் பிரச்சனை அல்லது இயற்கை சீற்றங்களுக்கு இரையாகினாலோ...
    அவர்களுக்கு உடனடியாக உதவ அங்கு யாரும் இல்லை.

       டலுக்குள் குறிப்பிட்ட தூரம் சென்றவுடன் கயிறு மூலம் வலையை கடலுக்குள் இறக்கிக் கொண்டே செல்கிறார்கள்,வலையை கடலுக்குள் விடும் போது படகின் வேகம் பாதுகாப்பு கருதி குறைக்கப்படுகிறது.

      கடல் நீரின் ஆழத்தைப் பொறுத்து 60 முதல் 70 பாகம் [ஒரு பாகம் =ஐந்தரை அடி] வலையை கடலுக்குள் இறக்குகின்றனர்

      றக்கி விடப்பட்ட வலை இரண்டு முதல் மூன்று மணி நேரம் அப்படியே விடப்படுகிறது ,இந்த நேர இடைவெளியில் கடல் மீன்கள் வலைக்குள் சிக்கி கொள்கின்றன.
    சில சமயங்களில் ஒரு படகின் வலை மற்ற படகுகளின் வலைகளுடன் சிக்கிக்கொள்ளும்.அப்படி வலைகள் சிக்கி கொள்ள நேரிட்டால் மீன்கள் வலைகளில் சிக்காது,எனவே ஒரு படகுக்கும் இன்னொரு படகுக்கும் இடையே 100 மீட்டர் இடைவெளி விட்டு மீன்பிடிக்கிறார்கள்.

      பின்பு கடலுக்குள் வீசியெறியப்பட்ட மீன்பிடி வலை மீனவர்களின் பெரும் முயற்சியால் மேலே இழுக்கப்படுகிறது.

      வலையை மேலே இழுக்க கயிறு மற்றும் வின்ச் (winch) எனப்படும் கயிறு சுழற்றும் கருவியும் பயன் படுத்தப்படுகிறது, வின்ச்சை சுழற்றி வலையை மேலே இழுக்கிறார்கள்

    வின்ச்


      வலையை படகின் உள்ளே இழுத்த பின்பு வலையில் சிக்கி இருக்கிற மீன்கள் வகை வாரியாக தரம் பிரிக்கப் படுகிறது(வலையில் மீன்கள் மட்டுமல்லாமல்,கடற்சிப்பிகள்,சங்குகள் போன்றவைகளும் சிக்குகின்றன அவைகளும் பிரித்து வைக்க படுகின்றன)

      வலையை கடலுக்குள் வீசுதல்,வீசிய வலையை மேலே எடுத்தல்,வலையில் சிக்கிய மீன்களை பிரித்து பெட்டிக்குள் அடைத்தல் ஆகிய இந்த செயல் முறை "பாடு" என அழைக்கப்படுகிறது.

    சராசரியாக ஒரு நாளில் 8 முதல் 10 "பாடு" வரை மீன் பிடிக்கிறார்கள்.

      மீனவர்கள் தங்களுக்கான காலை சாப்பாட்டை கடலுக்குள் கிளம்புவதர்க்கு முன்னரே வீட்டிலிருந்து எடுத்து வந்து விடுகிறார்கள், விசைப் படகுகளில் சமையலரை தனியாக உள்ளது, இங்கு அவர்களுக்கு தேவையான சாப்பாடு சமைக்கப்படுகிறது (மீனுடன்...)மீனவர்களுக்கு தேவையான டீ, காபி போன்ற தேவைகளையும் இந்த சமையலறை நிறைவு செய்கிறது.

    மீனவர்கள் பொழுதுபோக்கிற்காக ரேடியோ எடுத்து செல்வதுண்டு. தற்போதைய கால கட்டத்தில் செல் பேசியிலேயே பொழுது போக்கு அம்சங்கள் வந்து விட்டதால் ரேடியோக்கள் காலாவதியாகி விட்டன

      ரவு நேரங்களில் கூட "பாடு" நடந்து கொண்டு தான் இருக்கும்.இரவுகளில் பாட்டரி விளக்குகள் விசைப் படகுகளை ஒளியூட்டுகின்றன..
    கடல் நாள் என்று அழைக்கப்படும் மீன்பிடி நடைபெறும் நாட்களில் எல்லாம் நட்சத்திரங்களுக்கு போட்டியாக  மீன் பிடி படகுகள் கடலுக்குள் ஒளி வீசிக்கொண்டிருக்கும்

    காலையில் மீன்பிடி பணிக்கு செல்கிற மீனவர்கள்
    வெயில், மழை,காற்று என் எந்த பிரச்சனையையும் பொருட்படுத்தாமல் நாளின் 24 மணி நேரமும் தொடர்ந்து வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்

    கடல் நாட்களின் போது அவர்களின் கண்கள் தூக்கதை இழந்து விடுகிறது, அவர்களது உடல் ஓய்வை மறந்து விடுகிறது.
    பல சமயங்களில் எல்லை தாண்டி மீன் பிடித்தாக காரணம் சாட்டப்பட்டு இலங்கை கடல் பாதுகாப்புப் படை வீரர்களால் (வீரர்?) சுட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

      மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்ட நேரம் முடிவடைந்தவுடன்(மீன் பிடித்து முடித்தவுடன் இல்லை?) விசைப்படகுகள் கரையை நோக்கி த் திரும்புகின்றன

    மீனவர்கள் பாடுபட்டு பிடித்த மீன்கள் மீன்பிடி விசை படகின் உரிமையாளருக்குத்தான் சொந்தம்

     மீன்கள் கடற்கரைக்கு அருகாமையில் உள்ள விசைப்படகின் உரிமையாளருக்கு சொந்தமான மீன் கம்பேனி என அழைக்கப்படுகிற இடங்களில் எடை போடப்பட்டு விநியோகஸ்தர்களுக்கும்,மீன் வியாபாரிகளுக்கும்  விற்பனை செய்யப் படுகின்றன.

    கரைக்குத்திரும்பிய மீனவர்கள் மீன்களை உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட்டு தங்கள் கூலிகளை ப் பெற்றுக்கொண்டு வீடுகளுக்குத் திரும்புகிறார்கள்

    அடுத்த நாள் மீண்டும் மீன்பிடிக்க தயாராவதற்க்காக
      லேபில்கள்: kadakarai,kadarkarai pathivukal,rameswaram patriya katturai,இராமேஸ்வரம் மீனவர்கள்,இலங்கைப் படை மீனவர் தாக்குதல்,வலை,மீன்,கடல்,விஜயன்,vijayan durai,விஜயந்துரை,கடற்கரை,கடற்கரை,கடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரை, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan

     

    Post Comment