Saturday, October 29, 2011

ஜிமெயில் ரகசியங்கள்: -5

ம்மில் பலர்
முக்கியமான குறிப்புகள்,பார்வையிட வேண்டிய தளங்களின் முகவரிகள்,இணையத்தில் தேட வேண்டிய சமாச்சாரங்க்கள் இப்படி எத்தனையோ விசயங்களை காகிதத்தில் குறிப்புகளாக எழுதி வைத்துக்கொண்டு இணையத்தில் தேடுவோம்.
கொஞ்சம் கம்ப்யூட்டர் அறிவும்,சொந்த கம்ப்யூட்டரும் உள்ள நபர்கள் நோட் பேட்(notepad) அல்லது வேர்ட் பேட்(wordpad) மூலம் தகவல்களை எழுதி வைத்துக்கொண்டு பயன்படுத்துவோம்.
  
சில இணைய வழி தபால் சேவைகள் குறிப்புகள் எடுத்து கொள்ளும் வாய்ப்பையும் சேர்த்தே தருகின்றன.ஆனால் ஜிமெயிலில் குறிப்புகள் எடுத்துக் கொள்ள தனியாக ஆப்சன்(option) இல்லை.

அப்புறம் ஜிமெயில எப்படி குறிப்புகள் எடுக்க பயன்படுத்துறது??

  • சில பிரத்யேக முன்னேற்படுகளை (ஒருமுறை மட்டும்) ஜிமெயிலில் செய்ய வேண்டும்

  • பின் உங்களுக்கு நீங்களே  பிரத்யேக முறையில் இமெயில் அனுப்பிக் கொள்ளுதல் மூலம் ஜிமெயிலை குறிப்பெடுக்கும் கருவியாக பயன்படுத்த முடியும்



முன்னேற்பாடுகள்:

1.உங்கள் ஜிமெயில் அக்கவுன்டிற்கு  username, password கொடுத்து உள்ளே செல்லவும்.

2.  பின் "Notes" என்ற பெயரில் புதிய contact ஒன்றை உருவாக்கவும்.பின் அதன் இமெயில் முகவரியை username+Notes@gmail.com என்று கொடுக்கவும்.
("user name" என்பது உங்கள் ஜிமெயில் username)


3."Notes" என்று புதிய லேபில்(label)ஒன்றை உருவாக்கவும்.



4.பின்பு கீழ்கணும் படி ஒரு filter ஐ உருவாக்கவும்.


Settings ல் filter Tab ஐ கிளிக் செய்யவும்



Create a new filter பட்டனை அழுத்தவும்




From ல் உங்கள் ஜிமெயில் முகவரியை தரவும்

To ல் உங்கள் username+notes@gmail.com என தரவும்

Subject ல் notes என் தரவும்



5.Next step கிளிக் செய்யவும்





6."Skip the Inbox (Archive it)" என்ற checkbox ல் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
  Apply the label  ல் "notes" select செய்து டிக் செய்யவும்

  





பிரத்யேக முறையில் உங்களுக்கு நீங்களே இமேயில் அனுப்புதல்

இது ஒன்னும் பிரத்யேக முறை எல்லாம் இல்லைங்க சாதாரண விசயம் தான்

1.ஜிமெயிலின் இட்து புறம் இருக்கும் Compose email ஆப்சனை க்ளிக் செய்யவும்
2.username+notes@gmail.com என்று To  அட்ரஸ் கொடுக்க வேண்டும்.(இந்த பெரிய அட்ரஸை நீங்கள் ஒவ்வொரு முறையும் டைப் செய்ய தேவையில்லை.)அதாவது "Notes" என்று கொடுத்தாலே போதும்.
3.குறிப்புகளை இமெயில் டைப் செய்வது போல டைப் செய்து கொள்ளவும்
4.குறிப்புகளை Send செய்யவும்.



அவ்ளோதான்...........

னிமேல் நீங்கள் "Notes " என்ற முகவரிக்கு அனுப்பும் குறிப்புகள் அத்தனையும், inbox க்கு செல்லாமல் "notes" என்ற லேபில்களாக(உங்கள் கணினியில் பயன்படுத்தும் ஒரு தனி folder மாதிரி)
பதிவாகும்.


சரி நார்மலா Notes எடுக்கறதுக்கும் ஜிமேயில் மூலம் Notes எடுப்பதற்கும் என்ன வித்தியாசம்??
ஏதாவது பலன் இருக்கா??

ஜிமெயில குறிப்பெடுக்கும் கருவியாக பயன்படுத்துவதால் சில நன்மைகள் உண்டு

  • பேப்பர் மூலம் Notes எடுத்துக் கொண்டு இணையத்தில் உலவும் போது சில இணைய முகவரிகளை டைப் செய்ய வேண்டிய அவசியம் இருக்கும்.ஆனால் ஜிமெயில் notes  மூலம் இணைய முகவரிக்கு Copy,paste முறையில் அல்லது கிளிக் மூலம் தாவ முடியும்

  • நோட் பேட்(notepad) அல்லது வேர்ட் பேட்(wordpad) மூலம் தகவல்களை எழுதி வைத்துக்கொண்டு பயன்படுத்தம் போது நீங்கள் குறிப்பெடுத்த கணினியில் மட்டுமே Notes இருக்கும்.அந்த கணினியை விட்டு நாம் பிரிந்திருக்கும் போது அதை பயன்படுத்த முடியாது.
//pen drive,cd போன்றவைகள் மூலம் பயன்படுத்த முடியுமே??//
பல இடங்களில் இதுவும் சாத்தியமில்லைங்க...

ஆனால் ஜிமெயில் Notes  ஐ உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் பயன்படுத்த முடியும்.

குறிப்பு:   பில்டர்களை பயன்படுத்தி குறிப்பிட்ட நபரிடமிருந்து வரும் இமெயில்களை இன்பாக்ஸ் செல்லாமல் தனியாக பதிவாகும் மாதிரி செய்ய முடியும்.


மறக்காமல் உங்கள் கருத்துக்களை கமென்ட் பெட்டியில் பதிவு செய்யவும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேளுங்கள் .

அடுத்த பதிவில் இன்னும் சில ரகசியங்களுடன் சந்திக்கிறேன்...


ஜிமெயில் ரகசியங்கள் (முந்தைய பதிவுகள்)


 

Post Comment

Tuesday, October 11, 2011

ஜிமெயில் ரகசியங்கள்: -4

ஜிமெயிலின் ரகசியங்களில் மிகவும் முக்கியமான 
லேபில்கள் மற்றும் பில்டர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...
லேபில்கள் என்றால் என்ன??

நாம் நமது கம்ப்யூட்டரில் பைல்களை வித விதமான போல்டர்கள் போட்டு சேமிப்போம் இல்லையா...அதே மாதிரியான சமாச்சாரம் தான் இந்த லேபில்கள்.
ஆனால் லேபிலுக்கும், போல்டர்க்கும் வித்தியாசம் இருக்குங்க...இத நாம் ஒரு சிறிய எடுத்துக்காட்டு மூலம் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

போல்டர் என்பது பெட்டி மாதிரி அதில் நாம் நமக்கு தேவையான விசயங்களை பிரித்து அடுக்கி வைத்துக் கொள்ள முடியும்
                              பெட்டி 

 ஆனால் லேபில்கள் என்பது நூலகங்களில் புத்தகங்களை ரேக் அல்லது 'செல்ப்' ல் தரம் வாரியாக பிரித்து வகை வாரியாக சேல்ப்களுக்கு பெயர்களை எழுதி ஒட்டி அடுக்கி வைத்து இருப்பார்களே அது மாதிரியான ஒன்று.
                            லேபில்
உங்களுக்கு வரும் இமெயில்களில் நீங்கள் Jokes , personal , pictures , office என எந்த அடையாளத்தை வேண்டுமானலும் உருவாக்கிக்கொள்ள முடியும். அதே மாதிரி நீங்கள் ஒரு இமெயிலுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட லேபில்கள் கூட உருவாக்கலாம்.
சுருக்கமா சொல்லனும் என்றால் லேபில்கள் என்பது நமக்கு வரும் இமெயில் கடிதங்களின் மேல் நாம் நம் விருப்பத்தின் படி அடையாளங்களை ஒட்டி வைப்பது.  

செயல்படுத்துவது எப்படி??

  • ஜிமெயில் தபால் பெட்டியின் உள்ளே username , password கொடுத்து உள் நுழையவும்.
  • வலது ஓரத்தில் இருக்கும் settings லிங்க் ஐ கிளிக் செய்யவும்(settings link screen ல் தெரியவில்லை என்றால் வலது ஓரத்தில் உள்ள கியர் போன்ற உருவத்தை க்ளிக் செய்து பெறலாம்)

  • அதில் lables என்பதை தேர்வு செய்யவும்
  • இந்த option மூலம் நாம் புதிய லேபில்கள் உருவாக்குதல்,ஏற்கனவே இருக்கும் லேபில்களுக்கு பெயர் மாற்றம் செய்தல் போன்ற விசயங்களை செய்து கொள்ள முடியும்
  • புதிய லேபில் உருவாக்க create new label பெட்டியில் தேவையான அடையாள்ச் சீட்டின் பெயரை டைப் செய்து
Create பட்டனை க்ளிக் செய்யவும்.

லேபில் ரெடி..
நீங்கள் உருவாக்கும் லேபில்கள் ஜிமெயிலின் இடது ஓரத்தில் இடம் பெரும்...
மெயில்களுக்கு லேபில் தருவது??
இது மிகவும் எளிது
நீங்க லேபிலினை அப்படியே drag செய்து மெயிலின் மேல் விட்டால் போதும்.மெயிலுக்கு லேபில் தரப்பட்டு விடும்.  
பில்டர்கள்(Filters)???

ஆங்கிலத்தில் பில்டர் (Filter) என்ற வார்த்தைக்கு வடிகட்டி என்று பொருள் .பொதுவாக தேவையான விசயங்களை மட்டும் தனியாக பிரித்து தரும் எந்த ஒரு அமைப்பை பில்டர் என்று செல்லமாக சொல்லலாம்.
 ஜிமெயில் வடிகட்டியும் இது மாதிரி ஒரு தேவையான விசயங்களை மட்டும் தனியே பிரித்து தர பயன்படும் அமைப்பு தான்

இந்த வடிகட்டி உங்கள் ஜிமெயிலில் எங்கே இருக்கும்??

Setting -ல் லேபில்களுக்கு அருகே ஜிமெயிலின் வடிகட்டி சேவை இருக்கும்.
இந்த வடிகட்டிகளை பயன்படுத்துவது எப்படி??

அடுத்த பதிவில் வடிகட்டி பற்றிய விரிவான விளக்கங்களுடன் ஒரு புதிய ரகசியம் காத்திருக்கிறது.....
முந்தைய ரகசியங்கள் 

மறக்காமல் உங்கள் கருத்துக்களை கமென்ட் பெட்டியில் பதிவு செய்யவும்.
 

Post Comment

Thursday, October 06, 2011

ஜிமெயில் ரகசியங்கள்: -3

அட்டாச்மென்ட் ரகசியங்கள்

ரகசியம்-5
("அட்டாச்மென்டில் இணைக்க முடியாது" என ஜிமெயில் நிராகரிக்கும் பைல்களை இணைப்பது எப்படி)

சில பைல்களை ஜிமெயில் மூலம் அட்டாச் செய்து அனுப்ப முடியாது
".exe"  என்ற பின் இணைப்புடன் உள்ள(executable file,softwares,games போன்றவைகள்) பைல்களை Normal பைல்களை அட்டாச் செய்வது மாதிரி செய்ய முடியாது.
அட்டாச் செய்ய முயற்சி செய்தால்
“FILE is an executable file" அட்டாச் செய்ய இயலாது என எச்சரிக்கை செய்தி வரும்

சில பாதுகாப்புக்காக(security reasons) ஜிமெயில் இது மாதிரி செய்துள்ளது.

பின்ன எப்டி தான் அட்டாச் செய்றது??


இது ரொம்ப சுலபமான விசயம் தான்.இதுக்கு அனுப்புனர்,பெறுநர் (email sender and reciever) இரண்டு பேருக்கும் தனித்தனியே வழிமுறைகள் தேவைபடுகிறது

அனுப்புநருக்கான வழிமுறை:

1.அட்டாச் செய்ய போகும் பைலின் பெயரை ".exe" என்ற extension இல்லாம rename செய்யவும்.
2.பின் அந்த பைலை எதாவது சாப்ட்வேர் மூலம் கம்ப்ரஸ்(compress) செய்து அட்டாச் செய்யவும்.
இப்பொழுது அந்த பைல் அட்டாச் ஆகும்

பெறுநருக்கான வழிமுறை:

1.பைலை uncompress செய்து
2.பைலை ".exe " extension உடன் rename செய்ய வேண்டும்.


குறிப்பு : ஜிமெயில் இணைக்க முடியாது என்று நிராகரிக்கும் சகல வித பார்மட் பைல்களுக்கும் இந்த வழிமுறைப் படி செய்யலாம்

ஏதேனும் சந்தேகம் இருப்பின் தயங்காமல் கமென்ட் பெட்டியில் கேட்கவும்.
மறக்காமல் உங்கள் கருத்துக்களை கமென்ட் பெட்டியில் பதிவு செய்யவும், அது எனக்கு நம்ம எழுதுறதயும் நாலு பேரு படிக்கிறாங்க என்ற நம்பிக்கையை தரும்.
 அடுத்த பதிவில் இன்னும் சில ரகசியங்களுடன் சந்திக்கிறேன்...

 

Post Comment

ஜிமெயில் ரகசியங்கள்: -2

அட்டாச்மென்ட் ரகசியங்கள்

ரகசியம்-4
(ஜிமெயிலின் அட்டாச்மென்ட் நினைவூட்டி)
 பல சமயங்களில் மெயில் அனுப்பும் போது நாம் நமது கவனக்குறைவின் காரணமாக அட்டாச் செய்ய வேண்டிய  பைல்களை  மறந்து விட வாய்ப்புண்டு.
இது போன்ற செயல்கள் நட்பு அல்லது உறவு வட்டாரத்தில் பெரிய பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தி விட போவதில்லை,ஆனால் அலுவலக (Official) விசயங்களில் இது போன்ற செயல்கள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
உதரணமாக நீங்கள் ஒரு கம்பேனிக்கு வேலைக்காக விண்ணப்பிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்,அவர்களுக்கு நீங்க்கள் அனுப்பும் மெயிலில் இத்துடன் எனது Bio Data அல்லது Resume இணைத்திருப்பதாக சொல்லிவிட்டு இணைக்காமல் விட்டு விடுகிறீர்கள் என்றால் அது தர்ம சங்கடமான சூழலாக மாறிவிடும். (உங்களுக்கு கிடைக்க வேண்டிய?? வெலை இந்த சின்ன கவனக்குறைவால் தவறிப் போகலாம்

இந்த பிரச்சினைக்கு தீர்வாக Gmail Attachment Reminder என்ற சேவையை துவக்கியுள்ளது.

என்ன செய்யும் இந்த அட்டாச்மென்ட் நினைவூட்டி??

  • நீங்கள் அனுப்ப இருக்கும் இமெயிலை செக் செய்யும்

  • அதில் attach ,attachments போன்ற வார்த்தைகள் இருக்கிறதா என்று துழாவும்

  • அப்படி எதாவது சிக்கி நீங்கள் அட்டாச்மென்ட் பைல்கள் எதையும் இணைக்க வில்லை என்றால். உங்களுக்கு அது "நீங்கள் அட்டாச்மென்ட் எதையும் இணைக்கவில்லை என்று நினைவூட்டும்



இதை நீங்கள் செயல்படுத்த கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றவும்.

  • “Settings” லிங்க் ஐ கிளிக்கவும்,

  • பின் “Labs” tab செலக்ட் செய்யவும்,

  • “Forgotten Attachment Detector” அருகில் உள்ள “Enable” ப்ட்டனை செலக்ட் செய்யவும்

  • கிழே இருக்கும் “Save Changes”  என்ற ஆப்சனை கிளிக் செய்து விட்டு வெளியேறவும்.


அடுத்த பதிவில் இன்னும் சில ரகசியங்களுடன் சந்திக்கிறேன்...

மறக்காமல் உங்கள் கருத்துக்களை கமென்ட் பெட்டியில் பதிவு செய்யவும், அது எனக்கு நம்ம எழுதுறதயும் நாலு பேரு படிக்கிறாங்க என்ற நம்பிக்கையை தரும்.


 

Post Comment