Monday, July 29, 2013

பேஸ்புக்கும் பெண்களும் (பாகம்-3)

பெண்களே எச்சரிக்கை :
பேஸ்புக்கில் உங்கள் புகைப்படங்கள் திருடப்படுகின்றன ...

                                      
டந்த இரண்டு பதிவுகளில் பேஸ்புக் பாதுகாப்பு பற்றிய அடிப்படை விசயங்கள் பற்றியும், பகிர்வுகள்மற்றும் படங்களை பகிரும் போது கவனிக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கூறியிருந்தேன்.

பேஸ்புக்கினால் பெண்களுக்கு அப்படி என்ன பெரிய பாதிப்புகள் வந்துவிடப்போகின்றன என்று சிலர் நினைக்கலாம், அட ஆமாங்க பேஸ்புக்குடன் இலவச இணைப்பாக பல பல இம்சைகள் கிடைப்பது பலரின் பார்வையில் படுவதே இல்லை.

 இந்த வாரம் முதல் பேஸ்புக் பாதுகாப்பு நடவடிக்கைகள் மட்டுமல்லாமல் பேஸ்புக்கால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் இந்த தொடரில் பதிய இருக்கிறேன்.. (தவறிருப்பின் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் கொஞ்சம் வெளிப்படையாகவே விசயங்களை பகிர இருக்கிறேன்)

உங்கள் புகைப்படங்கள் திருடப்படுகின்றன:

நீங்கள் உங்கள் பதிவுகளை அல்லது புகைப்படங்களை   Public ஆப்சனில் பகிரும்போது (Share)  (sharing tips பற்றி அறிய கிளிக்கவும்). அதை இணைய உலகில் உலா வரும் எவர் வேண்டுமானாலும் பார்வையிட முடியும் என்று முன்பே பார்த்தோம்.

நீங்கள் உங்கள் தனிப்பட்ட (Personal) புகைப்படங்களை அல்லது உங்கள் அழகான புகைப்படங்களை பேஸ்புக்கில் பப்ளிக்காக பதிவு செய்பவர் என்றால் பேஸ்புக் புகைப்பட திருடர்களின் பொறிகளில் மாட்டிக்கொள்ள தகுதியான எலியாக நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்...

பேஸ்புக்கில் பெண்களின் புரோபைல்களில் புகைப்பட வேட்டை நிகழ்த்தி  புகைப்படங்களை திருடி தங்களின் இணைய பக்கங்களில் வைத்துக்கொள்வதற்கென்றே ஒரு கும்பல் இருக்கிறது . ,"எங்களின் புகைப்படங்கள் அவர்களுக்கு எதற்கு ?" என்று வெள்ளந்தியாக கேள்வி கேட்கும் பெண்கள், தயவு செய்து கீழுள்ள பேஸ்புக் பக்கங்களின் லின்க் களை க்ளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.


க்யூட் கேர்ல்ஸ்

இந்த லிங்கை மறக்காம பாருங்க !

இது மாதிரியான பக்கங்கள் இணைய உலகில் இன்னும் நிறைய இருக்குங்க... அவை எல்லாவற்றின் முகவரிகளை கொடுத்துக்கொண்டிருந்தால் பதிவின் பயணம் வேறு பாதையில் பயணிக்கக்கூடும்.

இது போன்ற இணைய பக்கங்களில் மாடல்கள், நடிகைகள் புகைப்படங்கள் மட்டுமின்றி ,யாதொன்றும் அறியாமல், உலகின் ஏதோ ஒரு மூலையில் பேஸ்புக்கில் தனது  புன்னகையை புகைப்படமாக பதிவு செய்யும் பெண்களின் புகைப்படமும் பதிவேற்றப்படுகின்றன.

இது கூட பரவாயில்லை சில ஆபாச இணையத்தளங்களில் இருந்தும் இது போன்ற பேஸ்புக் ப்ரொபைல்களில் உள்ள ப்ப்ளிக்காக பதியப்படும் படங்களில் இருந்து புகைப்பட வேட்டை நடத்தப்படுகிறது.

அதுமட்டுமின்றி அபலைகளின் படங்கள்  ஆபாச படமாக மார்ப்பிங்க் செய்யப்படும் சாத்தியக்கூறும் இருக்கிறது.

நீங்கள் பேஸ்புக்கில் பகிர்ந்த புகைப்படம் வேறு எங்கேனும் திருடப்பட்ட்தை எப்படி தெரிந்து கொள்வது;

அந்த வித்தையை உங்களுக்கும் சொல்லித்தருகிறேன்.அதற்கு முன் ஒரு குட்டி பெட்டி செய்தி:

அட அவங்களுக்கே அப்படியா?:

பேஸ்புக்கின் ஓனரான "மார்க் ஜகர்பெர்க்" -ன் அக்கா "ரான்டி ஜகர்பெர்க்" கடந்த வருட(2012) கிறிஸ்துமஸ் கொண்டாட்ட்த்தின் போது தன் குடும்பத்துடன் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தனது பேஸ்புக் டைம்லைனில் தன் நன்பர்களுடன் பகிர்ந்து கொள்வதாக நினைத்து (பப்ளிக்.. பப்ளிக்...) பகிர்ந்துள்ளார் ,
இவங்க தான் பேஸ்புக் ஒனர் : அக்காஅந்த புகைப்படம் Vox Media வை சார்ந்த Callie Schweitzer  என்ற பத்திரிக்கை நிருபரின் பேஸ்புக் பக்கத்தில் பளிச்சிட அவர் அதை ப்ப்ளிக்காக பதியப்பட்ட படம் தானே என்று நம்பி தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். இதன் பிறகு ரான்டி அக்கா நீங்கள் செய்தது தவறு என கேளியிடம் கூறி, எனது Personal புகைப்படத்தை நீங்கள் ஷேர் செய்த்து தவறு என குதித்துள்ளார், இதன்பிறகு அந்த நபர் தான் செய்த அந்த ஷேர் காரிய்யத்திற்கு மன்னிப்பு கேட்டு தான் ஷேர் செய்த படத்தை டெலீட் செய்துள்ளார்.
புகைப்படத்தை டீவீட்டிய நிருபர்

இந்த பிரச்சினைக்கு பின்பு பேஸ்புக்கின் செக்யூரிட்டி செட்டிங்க் சரியில்லை,அதில் நிறைய மேம்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று பேஸ்புக் ஓனரின் அக்காவே சொல்லி இருக்கிறார்.

இந்த பிரச்சினைக்கு பிறகு நம்ம அக்கா தனது டிவீட்டரில் கீழ் காணும் டிவீட்டை தட்டியிருந்தார்:

"I'm just sensitive to private photos becoming 'news,'" 
மொழியாக்கம்: எனது சொந்த புகைப்படங்கள் செய்திகளில் வருவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை , உங்கள் நன்பர்களின் புகைப்படங்களை ப்ப்ளிக்காக பகிர்வதற்கு முன் அவர்களிடம் அனுமதி வாங்குங்கள், அதுதான் அறம்
இந்த பிரச்சினை பேஸ்புக்கில் உள்ள பிரைவசி செட்டிங்க்  பற்றியதல்ல மனித உறவுகளின் மாண்பை பற்றியது

பேஸ்புக் ஓனரின் அக்கா சொல்றதும் சரிதாங்க,

சரி நம்ம விசயத்துக்கு வருவோம்.

நீங்கள் பேஸ்புக்கில் பகிர்ந்த புகைப்படம் வேறு எங்கேனும் திருடப்பட்ட்தை எப்படி தெரிந்து கொள்வது; கூகுள் வழங்கும் இமேஜ் சேர்ச் மூலம் இதனை எளிதாக செய்யலாம்:இங்கு நீங்கள் புகைப்படத்தை கொடுத்து அது இணையத்தில் வேறு ஏதேனும் பக்கங்களில் திருடப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்ள முடியும்.

கூகுள் இமேஜ் சர்ச் போலவே செயல்படும் இன்னொரு தளம் : Tineye.

நீங்கள் க்ரோம் பிரவுசர்( Google chrome)பயன்படுத்துபவர் எனில் இந்த தேடலை எளிதாக செய்ய அருமையான எக்ஸ்டன்சன் (க்ரோம் இணைப்பு)  ஒன்றை கூகுள் தருகிறது

1. இந்த முகவரில் சென்று  அதை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

2. பின் உங்கள் கூகுள் கிரோமினை க்ளோஸ் செய்து மறுபடி திறக்கவும் (Restart)

3.அதன் பின் கிரோம் செட்டிங்க்ஸ் சென்று  கொள்ளவும்


4.extensions என்பதை க்ளிக் செய்து   படத்தில் காணும் இடத்தில் டிக் செய்யவும்.


5. புதிய தேடல் கருவி உங்கள்  க்ரோமில் இணைந்து விட்டது.


நீங்கள் தேட நினைக்கும் புகைப்படங்களின் மீது ரைட் க்ளிக் செய்தால் இனி இந்த ஆப்சன் வரும். 


க்ளிக் செய்தால் கூகுள் இமேஜ் சேர்ச் மூலம் அந்த புகைப்படம் தேடப்படும்.

உங்கள் புகைப்படம் திருடப்பட்டிருந்தால் என்ன செய்வது?

இணைய உலகில் உங்களது சொந்த தகவல்கள் அல்லது புகைப்படத்தை வேறு தளத்தில் உங்கள் அனுமதியின்றி பயன்படுத்துவது சைபர் க்ரைம் வகையறாவில்  வருகிறது, இதனை Identity theft என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்.

இவ்வாறு உங்கள் தகவல்கள் இணைய பக்கங்களில் வேறு எங்கேனும் காண நேரிட்டால் .

இந்த முகவரிக்கு சென்று புகார் அளிக்க முடியும். (குறிப்பிட்ட முகவரிக்கு செல்ல லிங்கை கிளிக் செய்யவும்)

அனைவருக்கும் தெரியும் வகையில் புகார் அளிக்க : (உங்கள் புகார் அனைவருக்கும் தெரியும் Public).
அனைவருக்கும் தெரியும் வகையில் அளிக்கப்பட்ட புகார் ஒன்றின்  மாதிரி:


1. பாகம்-1 பாதுகாப்பு அடிப்படைகள்
2.பாகம்-2  Sharing செய்யும் போது கவனிக்க வேண்டியவை

வாசகர்களின் கருத்துக்கள், விமர்சனங்கள், விவாதங்கள், சந்தேகங்கள் வரவேற்கப்படுகின்றன., கமென்டிலோ, மெயிலிலோ மறக்காமல் கூறலாம் :

vijayandurairaj30@gmail.com


facebook paathukaappu,facebook safety in tamil, facebook and girls, photo sharing tips for facebook, facebookkum penkalum,vijayan durai, பேஸ்புக்,பேஸ்புக்கும் பெண்களும்,பேஸ்புக் பாதுகாப்பு,பேஸ்புக்கில் பாதுகாப்பாக இருப்பது எப்படி, பெண்கள் பேஸ்புக்கில் படங்களை பகிரும் முன் கவனிக்க வேண்டியவை,விஜயன் துரை, பேஸ்புக் சேப்டி டிப்ஸ் தமிழில், தமிழில் பேஸ்புக், பேஸ்புக் புகைப்பட பகிர்வு  டிப்ஸ், பெண்கள் பாதுகாப்பு,கடற்கரை,கடற்கரை,கடற்கரை,கடற்கரை, விஜயன் துரை

 

Post Comment

Sunday, July 14, 2013

என் தேவதை அனிதாவுக்கு எழுதிய கடிதம்

(உன் வீட்டில் உன்னைத்தவிர யாருக்கும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லை என்பது மிகவும் வசதியாக போயிற்று, இந்த "தேவதைகளின் தேவதை" புத்தகத்திற்குள் நான் எழுதி வைத்திருக்கும் இந்த கடிதத்தை என் அனிதா வாசிக்க துவங்கியிருப்பாள் என்று நம்புகிறேன்)

ன்று காலையில் உன் பெயர் தாங்கி உன் வீட்டு முகவரியிலிருந்து ஒரு திருமண பத்திரிக்கை எனது அலுவலக விலாசத்திற்கு வந்திருந்தது,  உன் வீட்டு விலாசத்தை பார்த்தபோது மனது கொஞ்சம் பகீர் என்றது. பத்திரிக்கையை படித்து பார்த்தபோது தான் விவரம் புரிந்தது திருமணம் உன் அக்காவிற்கென்று. (அடிப்பாவி இப்படியா பதற வைப்பாய் ? )

ப்படி இருக்கிறாய் ?அத்தை,மாமா,உன் தம்பி ,அக்கா எல்லோரும் நலமா? கல்லூரி வாழ்க்கை எப்படி போகிறது ?,இங்கு நான் நலம் , சிங்கப்பூர் வாசம் நன்றாக தான் இருக்கிறது, குடும்பத்தையும், உன்னையும் பிரிந்து இருப்பதை நினைக்கும் போது மட்டும் சிறைவாசம் ஆகி கொல்கிறது ,கடந்த முறை ஊருக்கு வந்தபோது உன்னை பார்த்தது.. கிட்டத்தட்ட ஐந்து மாதம் ஆயிற்று உன்னைப் பார்த்து. வெளிநாடு கிளம்பும் செய்தியை உன் வீட்டில் சொல்ல வந்த போது உன் கையால் நீ கொடுத்த அந்த Coffee யின் இனிப்பு இன்னும் என் நாக்கிலேயே இருக்கிறது.

ன் செல்ல தேவதைக்கு செல்போன் கூட வாங்கி கொடுக்காத Strict மாமா மீது கோபம் கோபமாக வருகிறது., பேசி ரொம்ப நாள் ஆச்சே பத்திரிக்கையுடன் ஒரு கடிதம் எழுதி வைத்து அனுப்ப இவளுக்கு என்னவாம் என்று உன் மீதும் கொஞ்ச நேரத்திற்கு முன்பு வரை கோபப்பட்டு கொண்டு இருந்தேன்.

மேஜை மீதிருந்த கல்யான பத்திரிக்கையையும், கவரையும், கவரிலிருந்த உன் பெயரையும் உன் நினைவோடு வெறித்துப் பார்த்து கொண்டிருந்த போது கவருக்குள் வார்த்தைகள் எதனாலும் விவரித்து சொல்லிவிட முடியாத வெட்கமும் கோபமும் கலந்த உனது மௌனத்தை என்னால் காண முடிந்தது.

ன் 'அனி' ரொம்பவே புத்திசாலி சில நிமிடங்கள் உன்னை தவறாக எண்ணி கோபித்துவிட்டேன் !, இது ஒன்றும் எனக்கு புதிதல்ல ,மௌனம் உனக்கும் புதிதல்ல .  வார்த்தைகளின் கலப்பு சிறிது கூட இல்லாமல் நீ சிந்துகிற ஒற்றை மௌனத்திற்கே ஓராயிரம் அர்த்தங்கள் இருக்கிறதே ! எந்த அர்த்தத்தில் நீ மௌனித்திருக்கிறாய் என்பதை அறிய முடியாமல் ஒவ்வொரு முறையும் குழம்பிப்போகிறேன், பல முறை உன் மௌனப் புதிர்களுக்கு அர்த்தம் தெரியாமல் என் அறிவு தோற்றுப் போயிருக்கிறது !, என்ன செய்ய ? ஆண்டவன் படைப்பில் ஆணினமே இப்படித்தான் போல.

ந்த முறை உன் மௌனத்திற்குள் மௌனமாக ஒளிந்திருக்கும் உன் எண்ணங்களை என்னால் உட்கிரகிக்க முடிகிறது . நீ சொல்லாமல் சொல்லவந்த விசயத்தை சொற்கள் ஏதுமின்றியே என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

ன் அக்காவின் திருமணம் முடிந்து உன் திருமணப் பேச்சை எடுக்க குறைந்த பட்சம் ஒரு வருடமாவது ஆகும் என்று நம்புகிறேன்.கொஞ்ச நாள் பொறுமை காப்பதில் தவறேதும் இல்லை என்றே நினைக்கிறேன் !

ன் நான் காத்திருக்க வேண்டும் என்று கேட்கிறாயா? பண நிலையில் நல்ல நிலைக்கு வருவதற்கு முன் மணம் பற்றி பேசுவது மடத்தனம். என்பது என் கருத்து., நீயும் இதில் ஒத்துப்போவாய் என்று நம்புகிறேன், கடந்த முறை நம் ஊர் பெரிய கோவில் ஆயிரம் கால் மண்டபத்தை நாம் ஆயிரத்து நான்கு கால்களாக்கி நடந்திருந்த ஒரு தினத்தில் உன்னிடம் இதை நான் முன்பே கூறியிருந்தேன் !

ன்னோடு சேர்ந்திருக்க வேண்டும் என்ற ஆசை உன்னைப்போலவே எனக்கும் நிறையவே உண்டு.எல்லாம் நன்றாகவே நடக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது, நீயும் நம்பிக்கை தளரவிடாதே ! மெல்ல மெல்ல நம் வீட்டில் நம் காதல் விவகாரத்தை புரிகிற மாதிரி எடுத்து சொல்ல முயற்சிக்கலாம். எதிர்ப்புகளை எதிர்ப்பதற்கு பதிலாக எதிர்கொள்ள கற்றுக் கொள்வோம்.

பிரிந்து வாழ்வது என்பது கொஞ்சம் கடினம் தான். நினைவுகளை துணைக்கழைத்துக்கொள்..உன் நினைவாக உன் நினைவுகள் என்னிடம் நிறையவே இருக்கின்றன. விவரமறியா வயதில் விளையாட்டுத்தோழியாக நீ அறிமுகமானது முதல்....

ன் கைப்பிடித்து வட்டமிட்டது, ஊஞ்சலில் உன்னை உட்காரவைத்து ஆட்டிவிட்டது, கண்ணாமூச்சி ஆடிய போது கண்ணை கட்டிக்கொண்டு உன்னைக் கட்டிப்பிடித்தது, ஒரு ஆரஞ்சு மிட்டாய் வாங்கி உன் பாவடைத்துணிக்குள் சுருட்டி எச்சில் படாமல் நீ கடித்து தந்தது., கண்கள் மூடி உன்னை நினைத்துக்கொள்ளும் போதெல்லாம் இப்படி எத்தனையோ விசயங்களை என் கண் முன் காட்டி என்னை மீண்டும் குழந்தையாக்கி, குட்டி தேவதையாக மாறி என் இழந்துவிட்ட சொர்க்கம் நோக்கி இப்போதும் கூட என் அனிதா இழுத்து செல்கிறாள்.

னக்கு நினைவிருக்கிறதா, பாவடை சட்டைக்குள் மொட்டாக இருந்த நீ மலராக மாறி தாவனிக்கு தாவிய அந்த நாட்களில், அதன் அர்த்தம் கேட்டு விவரமறியாமல் விடலைத்தனமாக நான் கேட்ட வினாவிற்கு பதிலேதும் சொல்லாமல், என் மடியில் உன் கைகளால் தட்டிவிட்டு மாயமாய் மான் குட்டிப்போல ஓடி மறைந்து சொல்ல வந்த்தை சொல்லாமல் சொல்லிச்சென்றாயே !

ன் அனிதா புத்திசாலி எப்போது என்ன செய்ய வேண்டும் என்றும், எதை எப்போது செய்ய வேண்டும் என்றும் அவளுக்கு நன்றாக தெரியும்.

ன் மனதை நம்பிக்கைகளாலும்,நினைவுகளாலும் நிறைத்துக்கொள்.உன் அக்கா கல்யாணத்திற்கு வர முடியாததற்காக வருந்துகிறேன்.நிச்சயம் உன் கல்யாணத்திற்கு வருவேன் .
 - என்றும் உன் நினைவுகளோடு உன் விஜயன்   


குறிப்பு: இக்கடிதத்துடன் நான் தங்கியிருக்கும் வீட்டு விலாசத்தை இணைத்துள்ளேன்,அடுத்த முறை அந்த விலாசத்திற்கே கடிதம் எழுது, அலுவலக முகவரிக்கு வேண்டாம்.
                           

 

Post Comment