பேஸ்புக்கும் பெண்களும் (பாகம்-3)
பெண்களே
எச்சரிக்கை :
பேஸ்புக்கில்
உங்கள் புகைப்படங்கள் திருடப்படுகின்றன ...
கடந்த இரண்டு
பதிவுகளில் பேஸ்புக் பாதுகாப்பு பற்றிய அடிப்படை விசயங்கள் பற்றியும், பகிர்வுகள்மற்றும் படங்களை பகிரும் போது கவனிக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும்
கூறியிருந்தேன்.
பேஸ்புக்கினால்
பெண்களுக்கு அப்படி என்ன பெரிய பாதிப்புகள் வந்துவிடப்போகின்றன என்று சிலர்
நினைக்கலாம், அட ஆமாங்க பேஸ்புக்குடன் இலவச இணைப்பாக பல பல இம்சைகள் கிடைப்பது
பலரின் பார்வையில் படுவதே இல்லை.
இந்த வாரம் முதல் பேஸ்புக் பாதுகாப்பு
நடவடிக்கைகள் மட்டுமல்லாமல் பேஸ்புக்கால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும்
இந்த தொடரில் பதிய இருக்கிறேன்.. (தவறிருப்பின்
என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் கொஞ்சம் வெளிப்படையாகவே விசயங்களை பகிர இருக்கிறேன்)
உங்கள் புகைப்படங்கள் திருடப்படுகின்றன:
நீங்கள்
உங்கள் பதிவுகளை அல்லது புகைப்படங்களை Public ஆப்சனில் பகிரும்போது (Share) (sharing tips பற்றி அறிய கிளிக்கவும்). அதை இணைய
உலகில் உலா வரும் எவர் வேண்டுமானாலும் பார்வையிட முடியும் என்று முன்பே
பார்த்தோம்.
நீங்கள்
உங்கள் தனிப்பட்ட (Personal)
புகைப்படங்களை அல்லது உங்கள் அழகான புகைப்படங்களை பேஸ்புக்கில் பப்ளிக்காக பதிவு
செய்பவர் என்றால் பேஸ்புக் புகைப்பட திருடர்களின் பொறிகளில் மாட்டிக்கொள்ள
தகுதியான எலியாக நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்...
பேஸ்புக்கில்
பெண்களின் புரோபைல்களில் புகைப்பட வேட்டை நிகழ்த்தி புகைப்படங்களை திருடி தங்களின் இணைய
பக்கங்களில் வைத்துக்கொள்வதற்கென்றே ஒரு கும்பல் இருக்கிறது . ,"எங்களின்
புகைப்படங்கள் அவர்களுக்கு எதற்கு ?" என்று வெள்ளந்தியாக கேள்வி கேட்கும்
பெண்கள், தயவு செய்து கீழுள்ள பேஸ்புக் பக்கங்களின் லின்க் களை க்ளிக் செய்து
பார்த்துக்கொள்ளுங்கள்.
க்யூட் கேர்ல்ஸ்
இந்த லிங்கை மறக்காம பாருங்க !
இது மாதிரியான பக்கங்கள் இணைய உலகில் இன்னும் நிறைய இருக்குங்க... அவை எல்லாவற்றின் முகவரிகளை கொடுத்துக்கொண்டிருந்தால் பதிவின் பயணம் வேறு பாதையில் பயணிக்கக்கூடும்.
இந்த லிங்கை மறக்காம பாருங்க !
இது மாதிரியான பக்கங்கள் இணைய உலகில் இன்னும் நிறைய இருக்குங்க... அவை எல்லாவற்றின் முகவரிகளை கொடுத்துக்கொண்டிருந்தால் பதிவின் பயணம் வேறு பாதையில் பயணிக்கக்கூடும்.
இது போன்ற இணைய
பக்கங்களில் மாடல்கள், நடிகைகள் புகைப்படங்கள் மட்டுமின்றி ,யாதொன்றும் அறியாமல்,
உலகின் ஏதோ ஒரு மூலையில் பேஸ்புக்கில் தனது புன்னகையை புகைப்படமாக பதிவு
செய்யும் பெண்களின் புகைப்படமும் பதிவேற்றப்படுகின்றன.
இது கூட
பரவாயில்லை சில ஆபாச இணையத்தளங்களில் இருந்தும் இது போன்ற பேஸ்புக் ப்ரொபைல்களில்
உள்ள ப்ப்ளிக்காக பதியப்படும் படங்களில் இருந்து புகைப்பட வேட்டை நடத்தப்படுகிறது.
அதுமட்டுமின்றி அபலைகளின் படங்கள் ஆபாச படமாக மார்ப்பிங்க் செய்யப்படும் சாத்தியக்கூறும் இருக்கிறது.
அதுமட்டுமின்றி அபலைகளின் படங்கள் ஆபாச படமாக மார்ப்பிங்க் செய்யப்படும் சாத்தியக்கூறும் இருக்கிறது.
நீங்கள்
பேஸ்புக்கில் பகிர்ந்த புகைப்படம் வேறு எங்கேனும் திருடப்பட்ட்தை எப்படி தெரிந்து
கொள்வது;
அந்த வித்தையை
உங்களுக்கும் சொல்லித்தருகிறேன்.அதற்கு முன் ஒரு குட்டி பெட்டி செய்தி:
அட அவங்களுக்கே
அப்படியா?:
பேஸ்புக்கின்
ஓனரான "மார்க் ஜகர்பெர்க்" -ன் அக்கா "ரான்டி
ஜகர்பெர்க்" கடந்த வருட(2012) கிறிஸ்துமஸ் கொண்டாட்ட்த்தின் போது தன்
குடும்பத்துடன் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தனது பேஸ்புக் டைம்லைனில் தன் நன்பர்களுடன் பகிர்ந்து கொள்வதாக நினைத்து (பப்ளிக்.. பப்ளிக்...) பகிர்ந்துள்ளார்
,
இவங்க தான் பேஸ்புக் ஒனர் : அக்கா
அந்த புகைப்படம் Vox
Media வை சார்ந்த Callie Schweitzer என்ற பத்திரிக்கை நிருபரின் பேஸ்புக் பக்கத்தில் பளிச்சிட அவர் அதை
ப்ப்ளிக்காக பதியப்பட்ட படம் தானே என்று நம்பி தனது டிவிட்டரில் ஷேர்
செய்துள்ளார். இதன் பிறகு ரான்டி அக்கா நீங்கள் செய்தது தவறு என கேளியிடம் கூறி,
எனது Personal புகைப்படத்தை நீங்கள்
ஷேர் செய்த்து தவறு என குதித்துள்ளார், இதன்பிறகு அந்த நபர் தான் செய்த அந்த ஷேர்
காரிய்யத்திற்கு மன்னிப்பு கேட்டு தான் ஷேர் செய்த படத்தை டெலீட் செய்துள்ளார்.
புகைப்படத்தை டீவீட்டிய நிருபர்
இந்த பிரச்சினைக்கு பின்பு பேஸ்புக்கின் செக்யூரிட்டி செட்டிங்க் சரியில்லை,அதில் நிறைய மேம்பாடுகள் செய்யப்பட
வேண்டும் என்று பேஸ்புக் ஓனரின் அக்காவே சொல்லி இருக்கிறார்.
இந்த
பிரச்சினைக்கு பிறகு நம்ம அக்கா தனது டிவீட்டரில் கீழ் காணும் டிவீட்டை தட்டியிருந்தார்:
"I'm just sensitive to private photos becoming 'news,'"
Digital etiquette: always ask permission before posting a friend's photo publicly. It's not about privacy settings, it's about human decency— Randi Zuckerberg (@randizuckerberg) December 26, 2012
மொழியாக்கம்: எனது சொந்த புகைப்படங்கள் செய்திகளில் வருவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை , உங்கள் நன்பர்களின் புகைப்படங்களை ப்ப்ளிக்காக பகிர்வதற்கு முன் அவர்களிடம் அனுமதி
வாங்குங்கள், அதுதான் அறம்
இந்த பிரச்சினை
பேஸ்புக்கில் உள்ள பிரைவசி செட்டிங்க்
பற்றியதல்ல மனித உறவுகளின் மாண்பை பற்றியது
பேஸ்புக்
ஓனரின் அக்கா சொல்றதும் சரிதாங்க,
சரி நம்ம
விசயத்துக்கு வருவோம்.
நீங்கள் பேஸ்புக்கில் பகிர்ந்த புகைப்படம் வேறு எங்கேனும் திருடப்பட்ட்தை எப்படி தெரிந்து கொள்வது; கூகுள்
வழங்கும் இமேஜ் சேர்ச் மூலம் இதனை எளிதாக செய்யலாம்:
இங்கு நீங்கள் புகைப்படத்தை
கொடுத்து அது இணையத்தில் வேறு ஏதேனும் பக்கங்களில் திருடப்பட்டுள்ளதா என்று
தெரிந்து கொள்ள முடியும்.
நீங்கள் க்ரோம் பிரவுசர்( Google chrome)பயன்படுத்துபவர் எனில் இந்த தேடலை எளிதாக செய்ய அருமையான எக்ஸ்டன்சன் (க்ரோம் இணைப்பு) ஒன்றை கூகுள் தருகிறது
1. இந்த முகவரில் சென்று அதை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
2. பின் உங்கள் கூகுள் கிரோமினை க்ளோஸ் செய்து மறுபடி திறக்கவும் (Restart)
3.அதன் பின் கிரோம் செட்டிங்க்ஸ் சென்று கொள்ளவும்
4.extensions என்பதை க்ளிக் செய்து படத்தில் காணும் இடத்தில் டிக் செய்யவும்.
5. புதிய தேடல் கருவி உங்கள் க்ரோமில் இணைந்து விட்டது.
நீங்கள் தேட நினைக்கும் புகைப்படங்களின் மீது ரைட் க்ளிக் செய்தால் இனி இந்த ஆப்சன் வரும்.
க்ளிக் செய்தால் கூகுள் இமேஜ் சேர்ச் மூலம் அந்த புகைப்படம் தேடப்படும்.
உங்கள் புகைப்படம் திருடப்பட்டிருந்தால் என்ன செய்வது?
இணைய உலகில் உங்களது சொந்த தகவல்கள் அல்லது புகைப்படத்தை வேறு தளத்தில் உங்கள் அனுமதியின்றி பயன்படுத்துவது சைபர் க்ரைம் வகையறாவில் வருகிறது, இதனை Identity theft என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்.
இவ்வாறு உங்கள் தகவல்கள் இணைய பக்கங்களில் வேறு எங்கேனும் காண நேரிட்டால் .
இந்த முகவரிக்கு சென்று புகார் அளிக்க முடியும். (குறிப்பிட்ட முகவரிக்கு செல்ல லிங்கை கிளிக் செய்யவும்)
அனைவருக்கும் தெரியும் வகையில் புகார் அளிக்க : (உங்கள் புகார் அனைவருக்கும் தெரியும் Public).
இந்த முகவரியிலும் சென்று புகார் செய்யலாம் (Cyber Crime India. org)
அனைவருக்கும் தெரியும் வகையில் அளிக்கப்பட்ட புகார் ஒன்றின் மாதிரி:
1. பாகம்-1 பாதுகாப்பு அடிப்படைகள்
2.பாகம்-2 Sharing செய்யும் போது கவனிக்க வேண்டியவை
வாசகர்களின் கருத்துக்கள், விமர்சனங்கள், விவாதங்கள், சந்தேகங்கள் வரவேற்கப்படுகின்றன., கமென்டிலோ, மெயிலிலோ மறக்காமல் கூறலாம் :
vijayandurairaj30@gmail.com
facebook paathukaappu,facebook safety in tamil, facebook and girls, photo sharing tips for facebook, facebookkum penkalum,vijayan durai, பேஸ்புக்,பேஸ்புக்கும் பெண்களும்,பேஸ்புக் பாதுகாப்பு,பேஸ்புக்கில் பாதுகாப்பாக இருப்பது எப்படி, பெண்கள் பேஸ்புக்கில் படங்களை பகிரும் முன் கவனிக்க வேண்டியவை,விஜயன் துரை, பேஸ்புக் சேப்டி டிப்ஸ் தமிழில், தமிழில் பேஸ்புக், பேஸ்புக் புகைப்பட பகிர்வு டிப்ஸ், பெண்கள் பாதுகாப்பு,கடற்கரை,கடற்கரை,கடற்கரை,கடற்கரை, விஜயன் துரை
Labels: Facebook safety in tamil, girls and facebook, பேஸ்புக் பிரச்சினைகள், பேஸ்புக்கும் பெண்களும்
19 Comments:
மிக மிக அவசியமான பதிவு. பேஸ்புக் மிகுந்த ஆபத்தை தரவல்லதொரு தளம் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக தனிப்பட்ட புகைப்படங்களை களவாடி ஆபாச கருத்துக்களையும், தளங்களில் இடும் வக்கிர கும்பல்கள் பல உள்ளன, இந்தியாவில் இது பன்மடங்காய் உள்ளது. பெண்கள், குழந்தைகள், ஏன் தோற்றமிக்க ஆண்களின் புகைப்படங்கள் கூட தவறானோர் கைகளில் போய்விடுவதுண்டு. நன்கு பரிச்சயமான உற்றார், உறவினர், தோழர் தவிர வேறு எவருக்கும் சொந்த விடயங்களை பகிராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அத்தோடு நாம் இடும் கருத்துக்கள், விரும்பும் பக்கங்கள் கூட கண்காணிக்கப்படுகின்றன. பலர் பணி இழப்பையும் இதனால் சந்தித்துள்ளனர். இதனால் தான் சுயமாய் பேஸ்புக் கணக்கு நான் வைத்தில்லை. தப்பித்தோம்.
facebook கணக்கு வைத்திருக்கும் அனைவரும் அவசியமாக அறிந்து கொள்ள வேண்டியவை.பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
மிகவும் பயனுள்ள பதிவு
படங்கள் எதுவும் பகிர்வதில்லை... இருந்தாலும் விளக்கத்திற்கு உதவும் - நண்பர்களுக்கு பகிர... நன்றி...
விஜயன் மிகவும் பயனுள்ள விஷயங்கள்.பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும்தான்.
நிறைய புதிய தகவல்கள்.... நன்றி...
அவசியமான பகிர்வு......
ஆழமான அலசல் தெளிவான விளக்கம் பல புதிய விசயங்களை இப்பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா...
அருமையான பதிவு...என் முக நூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளேன்...
நான் எப்பவும் ”ஒன்லி மீ” போட்டு தான் பா ப்ரொஃபைல் படம் போடுவேன், என்ன தவற யாரும் ஓபன் பண்ணி பாக்க முடியாது :) நல்ல பதிவு, தொடருங்கள், வாழ்த்துக்கள்!
Reply @ நிரஞ்சன் தம்பி said...
கருத்திற்கு மிக்க நன்றி நிரஞ்சன் தம்பி, நீங்கள் சொல்வது மாதிரி பேஸ்புக்கில் தீமைகள் உள்ளன, அதே சமயம் நன்மைகளும் உள்ளன !, பயன்படுத்துபவர்களின் பயன்பாட்டை பொறுத்து பேஸ்புக்கின் பயன்பாடு நிபந்தனைகளுக்கு உட்பட்டது !
மறுமொழி @ Tamizhmuhil Prakasam said...
facebook கணக்கு வைத்திருக்கும் அனைவரும் அவசியமாக அறிந்து கொள்ள வேண்டியவை.பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
ரொம்ப நன்றி சார், தங்களின் தொடர் ஆதரவுக்கு நன்றிகள்
மறுமொழி @ கரந்தை ஜெயக்குமார் said...
//மிகவும் பயனுள்ள பதிவு//
ரொம்ப நன்றிங்கண்ணா
மறுமொழி @ T.N.MURALIDHARAN said...
அதுவும் சரிதான் ! தொடர் ஆதரவுக்கு மிக்க நன்ற்கள் சார்
ஸ்கூல் பையன் said...
நிறைய புதிய தகவல்கள்.... நன்றி...//
நன்றி வாத்யாரே !
வெங்கட் நாகராஜ் said... ,ம.ஞானகுரு said...
தங்களின் மேலான ஆதரவுக்கு மிக்க நன்றி !
மறுமொழி @ Kanmani Anbodu said...
//நான் எப்பவும் ”ஒன்லி மீ” போட்டு தான் பா ப்ரொஃபைல் படம் போடுவேன், என்ன தவற யாரும் ஓபன் பண்ணி பாக்க முடியாது :) நல்ல பதிவு, தொடருங்கள், வாழ்த்துக்கள்!//
நன்றி கண்மணி ! எச்சரிக்கையா இருந்தா சரி ! //என்ன தவற யாரும் ஓபன் பண்ணி பாக்க முடியாது :)//
:) :)
ஒவ்வொரு பாகமும் ஒரு எச்சரிக்கையை கொடுக்கிறது. பேசாமல் கணக்கை இழுத்து மூடிவிடலாமா என்று கூட யோசிக்க வைக்கிறது.
நல்ல பகிர்வு. ஒன்றுமே தெரியாத என்னைப் போன்றவர்களுக்கும் புரியும்படி தெளிவாகச் சொல்கிறீர்கள் விஜயன், பாராட்டுக்கள்!
எம்புட்டு விஷயம் இருக்கு ... உண்மையை சொல்கிறேன் இதில் பாதி விசயங்கள் இதுவரை தெரியாமல் இருந்தேன் விஜயன்... நல்ல தகவலுக்கு நன்றி
Post a Comment
கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....
Subscribe to Post Comments [Atom]
<< Home