Saturday, February 02, 2013

ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம்-8


இதுவரை இணைய இணைய உலகின் ஆரம்ப கால கதையை வரலாற்றுப்பார்வையில் பார்த்தோம். இணையத்தின் ஆரம்ப கால கதையை நாம் இந்த பதிவிலிருந்து அறிவியல் கண்ணோட்டத்தில் பார்க்கலாம். ஒரே விசயத்தை வெவ்வேறு பார்வையில் பார்க்கும்போது அதன் வெவ்வேறு பரிமாணங்களை அறிய முடியும்.

ஆரம்ப கால இணையம்:

 "தேவையே கண்டுபிடிப்பின் தாய்"

றிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனிதர்களின் தேவையை அடிப்படையாக அடிப்படையாக வைத்து தோன்றியவைதான்.இணையத்தின் தேவை பற்றி மனித மனம் எப்போது சிந்திக்க ஆரம்பித்தது என்று நாம் கால சக்கரத்தை பின்னோக்கி நகற்றும் போது ...(ரொம்ப... பின்னாடி போனால் புறாவில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.,)

 உலகின் பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த நூற்றாண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு.
இந்த நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்புகளான மின்சாரம்,தந்திமுறை,ரேடியோ போன்றவைகளின் துவக்கம் தான் இணையத்தினைப் பற்றி மனித மனம் சிந்திக்க காரணமாக அமைந்தது.
தந்தி முறையின் பரிணாம வளர்ச்சி தான் இணையற்று விரிந்திருக்கும் இப்போதைய இணையம் என்று ஆணித்தரமாக கூறலாம்.

                                 தந்திக்கருவி

டொக் டொக்....

இந்த கருவி எப்படி செயல்பட்டது என்று உங்களுக்கு தெரியுமா?,தகவலை அனுப்பும் இடத்தில் இந்த கருவியை அழுத்தி அழுத்தி மோர்ஸ் குறியீடு அடிப்படையில் ஒலிக்குறிப்புகள் ஏற்படுத்தப்படும். தகவலை பெறும் இடத்தில் அந்த ஒலிக்குறிப்புகள் கேட்கும் (கம்பி வழியாக பயணித்து), இந்த ஒலிக்குறிப்புகளை மீண்டும் தகவலாக மாற்றி புரிந்து கொள்ள வேண்டும். டொக்...டொக் டொக்.... என்று மட்டும் சத்தம் கேட்கும் அதை எழுத்துக்களாக மாற்றி தகவல் புரிந்து கொள்ள வேண்டும்...

இந்த மோர்ஸ் குறியீடுகளை படத்தில் காணலாம். புள்ளி "சின்ன டொக்...". கோடு "பெரிய டொக்..."

                       மோர்ஸ் குறியீடு - ஒலியை மொழியாக்கி புரிந்து கொள்ளுங்கள்....


SOS எனும் மோர்ஸ் குறியீடு மிகவும் பிரசித்தம், Save Our Souls என்று அர்த்தம் கொண்ட இந்த ஒலி க் குறியீட்டை ஆபத்து காலங்களில் பயன்படுத்துகிறார்கள்.இன்றும் கூட ஆபத்து கால தகவலுக்கு SOS என்று தான் பெயர் உள்ளது !



                                                    தந்தி கருவி இயக்கப்படுகிறது... டொக்... டொக் டொக்...

தேவை கண்டுபிடிப்புகளின் தாயாக இருக்கிறது என்றால் கற்பனை அவற்றின் தகப்பனாக இருக்கிறது. பெறும்பாலும் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு அறிவியல் சார்ந்த பொருளும் ஒரு தனி மனிதனின் அல்லது ஒரு மனித கூட்டத்தின் கற்பனையாகவே முதலில் உருவாகி இருக்கும்.

இணையம் பற்றி இணையம் உருவாவதற்கு முன்பே யாராவது கற்பனை செய்திருக்க முடியுமா ?.
1863 -ல் அறிவியல் புனை கதைகளின் மன்னன் என்று அழைக்கப்படும் " ஜூல்ஸ் வெர்னெ "(Jules verne) இணையம் பற்றி சிந்தித்திருக்கிறார், அவர் காலத்தில் தந்தி முறை செயல் பாட்டில் இருந்திருக்கிறது ,இந்த தந்தி முறையில் அந்த காலத்தில் மோர்ஸ் குறியீடுகள் எனப்படும் சங்கேத ஒலிக்குறியீடுகளை அனுப்புவது மட்டுமே அப்போதைய சாத்தியக்கூறாக இருந்தது, ஆனால் "ஜூல்ஸ்" Telegraphy எனப்படும் தந்தி முறையின் மேம்பட்ட வடிவமாக புகைப்பட தந்தி முறை (Photo Telegraphy) பற்றி கற்பனை செய்திருக்கிறார், புகைப்பட தந்திமுறை மூலமாக எழுத்து படைப்புகள், கையெழுத்துக்கள்,புகைப்படங்கள் போன்ற இன்னபிற விசயங்களை அனுப்ப முடியும் என்று கற்பனையில் கண்டறிந்து கூறியிருக்கிறார்.

ஜூல்ஸ் வெர்னே சில குறிப்புகள்:

இவரு தாங்க அந்த ஜூல்ஸ் வெர்னெ

துமட்டுமல்ல இந்த மனிதர் நிலவிற்கு மனிதன் செல்வது பற்றிக்கூட தன் கதைகளில் குறிப்பிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது புத்தகங்களில் சில திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன.
Twenty Thousand Leagues Under the SeaA Journey to the Center of the EarthAround the World in Eighty DaysThe Mysterious IslandDick Sand, A Captain at Fifteen  போன்றவை குறிப்பிடத்தக்கவை.பிற மொழிகளில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட இரண்டாவது நபர் இவர் (முதல் நபர் அகதா கிரிஸ்டி).இவர் அறிவியல் புனைக்கதைகளின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். 

இணைப்பு கம்பிகள்:

மின் வழி தகவல் தொடர்பு தந்திவழி தகவல் தொடர்பு முறை,மற்றும் தொலைபேசி முறை வளரத்துவங்கிய காலத்தில் தான் வளரத்துவங்கியது,உலகின் முதல் கம்பிவழி இணைப்பில் தகவல் பரிமாற்றம் 1844 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வாசிங்க்டன் மற்று பால்டிமோர்(Baltimore) ஆகிய இரு இடங்களுக்கிடையே நிகழ்ந்தது 17 வருடங்களில் 1858 வாக்கில் தந்திகம்பிகள் அமெரிக்காவின் பெரும்பான்மை இடங்களை இணைப்பில் கொண்டு வந்திருந்தது.
அந்த கால தொலைபேசி

  
ஜூல்ஸ் வெர்ன் அவர்களின் கற்பனை உயிர் வடிவம் பெற 100 ஆண்டுகள் மட்டுமே தேவைப்பட்டிருக்கின்றன. இணையத்திற்கான இணைப்பின்  அடிப்படையாக இந்த தந்திமுறை தான் இருந்திருக்கிறது,நாம் இன்று பயன்படுத்துவது கூட இதன் மேம்பட்ட இணைப்பு முறைதானே தவிற புதிய சரக்கு கிடையாது.

யோசித்து பாருங்கள்...

 யிரமாயிரம் எண்ணங்கள்,எழுத்துக்கள்,கணக்கில்லா கற்பனைகள்,கவிதைகள்,புகைப்படங்கள்,இசை,தகவல்கள்,பண பரிவர்த்தனைகள்,வியாபாரம் என்று எத்தனையோ விசயங்களை சுமந்து கொண்டு சத்தமில்லாமல் கடலுக்கடியில்,பூமிக்கடியில்(கம்பி வழி இணைப்பு),விண்வெளியில் (செயற்கை-கோள் இணைப்பு) என நம்மை இணைக்கும் இந்த இணையத்தின் பிரமாண்டத்தை...!


                                                                                                                                  இன்னும் கூறுவேன்

மின்னஞ்சல் முகவரி:vijayandurairaj30@gmail.com

Labels: , , , , , ,

8 Comments:

At Mon Oct 22, 06:14:00 pm , Blogger திண்டுக்கல் தனபாலன் said...

/// ஒரே விசயத்தை வெவ்வேறு பார்வையில் பார்க்கும்போது அதன் வெவ்வேறு பரிமாணங்களை அறிய முடியும். ///

சின்ன டொக்... பெரிய டொக்... - நல்லா இருக்குங்க...

அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்...

தொடர்கிறேன்... நன்றி...

 
At Mon Oct 22, 06:29:00 pm , Blogger Vijayan Durai said...

டக் டக் நு வந்து படிச்சு கமென்ட் கொடுக்கும் கலையை எங்கு கற்று கொண்டீர்கள் அண்ணா! பின்னூட்டம் கொடுத்து ஊட்டம் தரும் அண்ணனுக்கு என் நன்றிகள்

 
At Mon Oct 22, 09:35:00 pm , Blogger tech news in tamil said...

மிக அருமை பலவும் அறியாத விசயங்கள்

 
At Tue Oct 23, 09:31:00 am , Blogger Subramanian said...

படைப்பில் பலமெருகு தன்மைகள் கூடியிருப்பது தெரிகிறது! படங்களும், தகவல்களை எளிமையாக தொகுத்தளித்திருக்கும் படைப்புருவாக்கமும் மிக அருமை! தொடருங்கள்!

 
At Tue Oct 23, 10:24:00 pm , Blogger Vijayan Durai said...

நன்றி அண்ணா, வருகைக்கும் கருத்துக்கும்

 
At Tue Oct 23, 10:27:00 pm , Blogger Vijayan Durai said...

இணாய்ந்து விட்டேன் !

 
At Tue Oct 23, 10:29:00 pm , Blogger Vijayan Durai said...

மிக்க நன்றி,கருத்திட்ட உங்களுக்கு

 
At Sat Nov 03, 06:15:00 pm , Anonymous Anonymous said...

we want more..

 

Post a Comment

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....

Subscribe to Post Comments [Atom]

<< Home