Friday, January 04, 2013

மாயஉலகம் (தொடர்பதிவு -15)


(உலகின் முதல் ஹார்ட்வேர் -சாப்ட்வேர் தொழில்நுட்பம் )
இது பற்றி விரிவாக பார்ப்பதற்கு முன் ஒரு அடிப்படை விசயத்தை புரிந்து கொள்வோம் ...

ஹார்ட்வேர் என்றால் என்ன ?? சாப்ட்வேர் என்றால் என்ன ??, உங்களுக்கு இதற்கான விடை தெரிந்திருக்கலாம்,இருந்தாலும் இதன் விளக்கத்தை இன்னொரு முறை(சாதரண வார்த்தைகளில்) தெரிந்து கொள்வோம் .

வன்பொருள் (hardware ) -மென்பொருள் (software ) ??:

மனிதனின் செயலை எளிதாக்க வடிவமைக்கப்பட்ட "பல அல்லது சில பொருட்களின் கூட்டாக "(compound)உருவாக்கப்பட்ட எந்தவொரு சாதனமும் "எந்திரம்" என்றழைக்கப்படும்.எந்திரம் மனிதனால் இயக்கப்படும் பொருளாக மட்டும் இருந்து வந்த காலங்களில் வன்பொருள் மென்பொருள் என்று பாகுபடுத்தி பார்க்கும் அவசியம் இல்லாதிருந்தது ,எந்திரத்தை தானாக (automatic ) ஒரு வேலையை செய்ய வைக்க முயன்ற முயற்சியின் விளைவாக விளைந்தது தான் மென்பொருள் எனும் விஷயம் .தானாக வேலை செய்யும் எந்திரம் (automatic machine ) என்று அழைக்கப்படும் எந்திரங்கள் உண்மையில் தானாக வேலை செய்கின்றனவா??

தானியங்கி எந்திரங்கள் :

ஆழமாக யோசித்து பார்த்தால் தானாக வேலை செய்யும் எந்திரங்கள் என்று ஒன்று இல்லவே இல்லை , மனிதனின் கட்டளைகளின் படியே அவை வேலை செய்கின்றன , தானியங்கி எந்திரங்கள் எப்படி வேலை செய்ய வேண்டுமென்று முன்பே அவைகளின் மூளைகளில் கட்டளைகள் எழுதப்படுகின்றன ,இந்த கட்டளைகளின்படியே அவை வேலைகளை "தானாக" செய்கின்றன.

வன்பொருள்:

கண்ணால் பார்க்க முடியும் எந்திர பாகங்கள்.

மென்பொருள்:

எந்திரங்களை தானாக வேலை செய்ய அவற்றின் மூளைகளில் எழுதப்படும் கட்டளைகளின் தொகுப்பு .


உலகின் முதல் ஹார்டுவேர் -சாப்ட்வேர் :
உலகின் முதல் தானியங்கி கருவி ஒரு நெசவு எந்திரம் ,இந்த தானியங்கி நெசவு எந்திரத்தை 1801- ல் ஜோசப் மேரி சார்லஸ் (செல்லப்பெயர் ஜேக்குவார்ட் ) என்றழைக்கப்பட்ட வியாபாரி ஒருவர் வடிவமைத்தார் ,இந்த தானியங்கி நெசவுக்கருவி "ஜேக்குவார்ட் -தறி "(jacquard loom ) என்று சார்லஸ் -ன் செல்லப்பெயரின் மூலமே செல்லமாக அழைக்கப்பட்டது .

ஜேக்குவார்ட் தறி வடிவமைக்கபடுவதற்கு முன்பே சிற்சில தானியங்கி தறிகள் நடைமுறையில் இருந்துள்ளன.இவைகள் நமது ஜேக்குவார்ட் -தறியின் முன்னோடிகள் . இந்த கருவிகளை மேம்படுத்தியே ஜேகுவார்ட் தறி வடிவமைக்கப்பட்டது.ஆனால் முதல் வெற்றிகரமான தானியங்கி கருவி ஜேக்குவாட்-னுடையதே .இந்த கருவி மூலமாக நாம் விரும்பும் வடிவமைப்புகளை துணிகளில் உருவாக்க முடிந்தது .

நெசவு :
நெசவு செய்யும் எந்திரத்தில் பக்கவாட்டில் நூலிழைகள் இறுக்கி கட்டப்பட்டிருக்கும் (Weft),பக்கவாட்டில் உள்ள நூலிழைகளின் ஊடாக நெட்டுவாக்கில் (warp) நூலிழைகளை பிண்ணுதல் என்ற முறையில் துணிகள் நெசவு செய்யப்படுகின்றன


.


ஜேக்க்வார்ட் தறியின் உதவியுடன் சிக்கலான வடிவமைப்புகளை கூட துணிகளில் டிசைன் செய்ய முடிந்தது ...

,இந்த டிசன்களின் படங்களையும் அவற்றின் பெயர்களையும் கீழுள்ள படங்களில் காணலாம் .
BROKAT
DAMASK
MATELASSE

ஜேகுவார்ட் நெசவு எந்திரத்தின் உதவியுடன் டிசைன் செய்யப்பட்ட ஜேகுவார்ட்

ஜேக்குவார்ட்-ன் இந்த படம் இவர் உருவாக்கிய தறி எந்திரத்தின் உதவியில் உருவாக்கப்பட்டது
இதை உருவாக்க 24,000 துளை இடப்பட்ட அட்டைகள் (punched card ) பயன்படுத்தப்பட்டன ! ,இந்த துணி தற்போது லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தில் உள்ளது

எப்படி இயங்கியது இந்த கருவி ??
இந்த தறியில் punched cards என்றழைக்கப்பட்ட ஓட்டை போடப்பட்ட அட்டைகள் பயன்படுத்தப்பட்டன (இவைதான் மென்பொருள் (software),அட்டைகளில் இருந்த துளைகளின் மாறுபாடுகளுக்கு ஏற்ப டிசைன்கள் உருவாக்கப்பட்டன.
இவைதான் மென்பொருள் (software )
ஜேக்குவர்ட் தறியில் போலுஸ் (bolus hooks ) எனும் சிறப்பு வகை கொக்கிகள் இருந்தன .இந்த கொக்கிகள் மூலமாகவே நெசவு எந்திரத்தில் நூற்பு வேலை செய்யப்பட்டது .
போலுஸ் (bolus hooks )

ஓட்டை அட்டைகளில் (punched cards ) துளை உள்ள பகுதி அடைப்பு பகுதி என இரு பகுதிகள் இருக்கும் ,போலுஸ் கொக்கிகள் நூலை தறியில் நூற்பு செய்யும் போது இந்த அட்டைகளில் உள்ள துளையுள்ள பகுதியில் நூலின் அடர்த்தி அதிகமாகவும் ,துளைஇல்லாத இடங்களில் நூலின் அடர்த்தி குறைவாகவும் நெய்யப்படும் ,இப்படியாக ... அடர்த்தி குறைவு மற்றும் அடர்த்தி மிகுதி அடிப்படையில் துணியில் டிசைன்கள் ஏற்படுத்தப்பட்டன.,(ஒரே டிசைன்-பேட்டர்ன் துணியில் திரும்ப திரும்ப வரும் படியாகவும் செய்ய முடிந்தது).
நெசவு எந்திரத்துக்கும் கணிப்பொறிக்கும் என்ன தொடர்பு ? அடுத்த பதிவு வரை காத்திருங்கள்....







 

Post Comment

7 comments:

  1. மிக மிக அரிய தகவல்களை தொகுத்து வழங்கும் உங்களுக்கு பாராட்டுதல்களும் நன்றியும்! தொடருங்கள் தொட்ர்கிறோம்!

    ReplyDelete
  2. வன்பொருள் மென்பொருள் நல்ல விளக்கம். எளிய முறையில் கொடுத்திருக்கிறீர்கள் விஜயன்.
    நெசவுக்கும், கணனிக்கும் என்ன தொடர்பு என்று படிக்கும்போது கேள்வி எழுந்தது. நீங்கள் சொல்லுகிறேன் என்றவுடன் காத்திருக்க தயாராகி விட்டேன்.

    நெசவைப் பற்றியும் நிறையத் தெரிந்து கொள்ள முடிந்தது.
    எதைப் பற்றிய விஷயம் ஆனாலும், நுனிப்புல் மேயாமல் ஆழமாக விளக்குவது உங்கள் தனித்தன்மை.

    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. சொல்லும் விதம் மிக நன்று விஜயன்.எளிமையாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் உள்ளது.

    ReplyDelete
  4. reply @ krishna ravi

    மிக்க நன்றி அண்ணா

    ReplyDelete
  5. reply @ Ranjani Narayanan
    பாராட்டிற்கு நன்றி அம்மா அடுத்த பதிவில் கணிப்பொறிக்கும் கைத்தறிக்குமான தொடர்பு பற்றி எழுதுகிறேன் ,தொடர் வாசிப்பிற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  6. reply @ T.N.MURALIDHARAN

    ரொம்ப நன்றி சார் !

    ReplyDelete
  7. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள், விஜயன்.
    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....