Saturday, May 18, 2013

ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம் -17



(கணிப்பொறி வரலாறு -பாகம் -7)

 ந்த தொடரை ஆரம்பித்த புதிதில் வாரம் ஒன்றாக எழுதிக்கொண்டிருந்தேன்மடிக்கணினி களவுவேலை தேடும் படலம் என்று தொடர்ந்து வந்த சில விசயங்கள் தொடரை தொடர முடியாமல் போக காரணமாகி விட்டது...

இணையம் எப்படி உருவானது ,ஏன் உருவாக்கப்பட்டதுஅது செயல்படும் விதம் என்ன என்று விரிவாக விளக்கும் முயற்சியாக துவக்கப்பட்ட இந்த தொடரில் கிளைக் கதைகளாக

·        தகவல் தொழில்நுட்ப யுகத்தின் துவக்கம் பற்றிய கதையையும்
·        கணினியின் வரலாற்றையும்கடந்த பதிவுகளில் பார்த்தோம்

ஒரு சின்ன ரீகேப்

பதிவு முதல் பதிவு வரை கற்பக விருட்சமாக வளர்ந்து நிற்கும்                                                                                                                                                                                                                          இன்றைய இணைய உலகத்தின் விதையாக அமைந்த ஆர்பாநெட் பற்றிய விசயங்கள்

பதிவு 6- ஆரம்ப கால ஆர்பாநெட் பற்றிய கேள்வி-பதில் பகுதி

பதிவு 7 - ஆர்பாநெட்-ன் வளர்ச்சி

பதிவு 8 - 10 தகவல் தொடர்பு யுகத்தின் கதை

பதிவு 11 முதல்  கணினியின் வரலாறு

கதை.... விட்ட இடத்தில் இருந்து துவங்குகிறது...

அமெரிக்க அரசாங்கம் அறிவித்திருந்த 1890 ஆம் ஆண்டிற்கான சென்சஸ் கணக்கெடுப்பை எளிதாக முடித்து கொடுப்பதற்கான தீர்வுடன் ரயிலில் இருந்து இறங்கினார் ஹாலரித்.

துளை இடப்பட்ட அட்டைகள் (Punched Cards) உதவியுடன் சென்செக்ஸ் கணக்கெடுப்பை நிகழ்த்தினால் கால விரயம்பணவிரயம்உழைப்பு விரயம் போன்ற விரயங்களை குறைக்க முடியும் என்ற விசயத்தை அரசு தரப்பிடம் ஹாலரித் அறிவித்தார்.

இந்த அட்டைகள் ஹாலிரித் சென்செக்ஸ் விசயத்திற்கு பயன்படுத்துவதற்கு முன்பே கைத்தறிகளில் பயன்படுத்தப்பட்ட கதையை பதிவு 15 -ல் பார்த்தோம் இது தவிர player piano அல்லது pianola அல்லது autopiano என்ற இசைக்கருவியிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது (காற்று மாறுபட்ட வடிவ மற்றும் அளவுடைய துளைகளுக்குள் செல்லும் போது மாறுபட்ட சத்தத்தை (இசையை கொடுத்தது ).





எந்திரங்களை துளையிடப்பட்ட அட்டைகளை கொண்டு கட்டுபடுத்த முடியும் என்கிற அடிப்படை உண்மையை ஹெர்மன் ஹாலரித் -ற்கு முன்பே சிலர் கண்டுபிடித்து பயன்படுத்தியும் இருந்தனர்.

 1725--ல் Basile Bouchon and Jean-Baptiste Falcon என்ற இருவரால் பிரான்ஸில் கைத்தறி களில் டிசைன்களை ஏற்படுத்த துளையிடப்பட்ட அட்டைகள் முதன் முதலில் பிரயோகிக்க பட்டன

 1801--ல் ஜோசப் மேரி ஜேக்குவார்ட் என்பவர் கைத்தறி கருவியை மேம்படுத்தி ஜேக்குவார்ட் கைத்தறி என்ற கருவியை உருவாக்கினார்பழைய கருவிகளை விட மேம்பட்டதாக இக்கருவி இருந்தது

அதன் பிறகு 1832 ஆம் வருடம், ரஷ்ய காவல்துறை அமைச்சகத்தின் (department of the Russian Police Ministry ) புள்ளியியல் பிரிவில் பணிபுரிந்த செமன் கொர்சகாவ் Semen Korsakov ) என்கிற ரஷ்ய மருத்துவர்  தகவல்களை (Data) சேகரிக்கவும்சேகரித்த தரவுகளில் இருந்து தேவையான தகவலை பெறவும் இந்த துளை இடப்பட்ட அட்டைகளை பயன்[படுத்தி ஒரு முறையை கண்டுபிடித்து கூறியிருந்தார்தகவல் தொழில்நுட்பம் என்கிற துறையை துவக்கி வைத்தவர் இவரே !.,
 சென்சக்ஸ் கணக்கெடுப்பை எளிமைப்படுத்த ஹாலரித் கண்டறிந்த வழிமுறை செமன் கொர்சகாவி-ன் கண்டுபிடிப்பின் மேம்படுத்தப்பட்ட வடிவம் தான் (ஆனால் கொர்சகாவ் தனது கண்டுபிடிப்பை முதன் முதலில் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்-ல் உள்ள 
Imperial Academy of Sciences என்கிற அமைப்பின் முன்பு வெளியிட்ட போது ,அவரது கண்டுபிடிப்பை அந்த அமைப்பு பயனற்ற விசயம் என்று கூறி நிராகரித்துள்ளது..!!)

துளை இடப்பட்ட அட்டைகளில் தகவல்கள் எவ்வாறு சேமிக்கப்பட்டன சேகரிக்கப்பட்ட தகவல்கள் எவ்வாறு எளிதில் தேடி எடுக்கப்பட்டன.,என்பதையும் பார்க்கலாம்.





செமன் கொர்சகாவ் வடிவமைத்திருந்த--Punched Card





பட விளக்கம்:



முதல் படத்தில் உள்ளது துளையிடப்படாத-Punched Card) அட்டை ,தகவல் எழுதபடாத அட்டை






துளைகள் இடப்பட்ட அட்டை (தகவல்கள் எழுதப்பட்ட அட்டை)




கடைசி வரிசை ரிசல்ட் களை குறிப்பதற்காக





தகவல்களை எழுதுவதற்கும் தகவல்களை தேடுவதற்கும் பயன்படும் கட்டை



தகவல்கள் உள்ளிட படுகின்றன



தேடல் ...



தேடல் கிட்டியது... ரிசல்ட் சிகப்பு நிறத்தில்...


 இவரது கண்டுபிடிப்பான ஹோமியோஸ்கோப் (Homeo scope)  ன் அனிமேசன்:

1
3
2

ஹெர்மன் ஹாலரித் வடிவமைத்திருந்த சென்செக்ஸ் கணக்கிடும் கருவியும் இதே தத்துவத்தை அடிப்படையாக கொண்டே இயங்கியது. ஹெர்மன் ஹாலரித்-ன் கருவி பற்றி அடுத்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.



 ஒரு முக்கியமான விசயம் : எனக்கு வேலை கிடைத்துவிட்டது..தற்போது பெங்களூரில் இருக்கிறேன்



 

Post Comment

4 comments:

  1. பெங்களுரில் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமை... தொடருங்கள்... அதைவிட தற்போது பெங்களூரில் இருப்பது மிகவும் சந்தோசம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் பணி சிறக்க....!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் விஜயன். இனி எலாம் நலமே.திறமைக்கு எப்போதும் மதிப்பு உண்டு.
    வலைப் பக்கமும் அடிக்கடி வரவும்..நான் கூட தொடர்பு கொள்ள நினைத்தேன். மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....