Saturday, February 02, 2013

ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம்-9



கடந்த பதிவில் இணைய உலகின் இணைப்பிற்கு முன்னோடியான தந்தி முறைப்பற்றியும்,இணையம் பற்றி தீர்க்கதரிசனம் சொன்ன ஜூல்ஸ் வெர்னெ பற்றியும் பார்த்தோம்.இந்த பதிவில் கம்பி வழி தகவல் தொடர்பின் அசுர வளர்ச்சியை பார்க்கலாம்.

தகவல் யுகத்தின் உதயம்:

 தகவல் யுகம் தன்னை உருவாக்கி கொண்டது பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான்.இதன் பிறப்பு தாமதமாக இருந்தாலும் வளர்ச்சி கொஞ்சம் வேகமாகத்தான் இருந்தது. தந்தி,ரேடியோ,தொலைபேசி,தொலைக்காட்சி என்று வேகமாக வளரத்துவங்கியது.

   கடலுக்கடியில் கம்பி புதைக்கும் பணியை செய்யும் கப்பல்கள் -1858

கண்டங்களை இணைத்த கம்பிகள்:

 தந்தி முறையின் தந்தையான சாமுவேல் மோர்ஸ்,(தந்தி வழியாக பரிமாறிக்கொள்ளப்படும் மோர்ஸ் குறியீடு (படம் பார்க்க:க்ளிக்குக) எனும் ஒலிக்குறிப்புகள் இவர் கண்டறிந்தது தான்) அவர்கள் கடலுக்கடியில் கம்பிகளை அமைத்து கண்டங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்ய முடியும் என்று அவர் தந்தியை கண்டுபிடித்த காலத்திலேயே கூறியிருந்தார்

 கம்பி வழி தகவல் தொடர்பு வலுப்பெற ஆரம்பித்த உடன் 1857 -ம் வருடத்தில் அமெரிக்க-இங்கிலாந்து நாடுகளுக்கிடையில்  தந்தி தொடர்பு ஏற்படுத்த கடல் வழியாக தகவல் தொடர்பு கம்பிகள் அமைக்க ஏற்பாடு ஏற்படுத்தப்பட்டது.


கடலுக்கடியில் சென்று கண்டங்களை இணைத்த கம்பிகள்....!

(இந்த திட்டத்திற்கான பணத்தை அமெரிக்க -இங்கிலாந்து அரசுகள் பகிர்ந்து கொண்டன.)


கடலுக்கடியில் கம்பி புதைக்கும் இந்த கடினமான பணியை Cyrus West Field மற்றும் Atlantic Telegraph Company ஆகிய இரு நிறுவனங்கள்  அட்லான்டிக் கடலுக்கடியில் துவக்கின.,

பல போராட்டங்களுக்கு பிறகு இவை 1858 ஆகஸ்ட் -ல் செயல்படத் துவங்கின.
ஆகஸ்டு 16 -ல் முதல் முதலாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடையே வாழ்த்து தந்தி பரிமாறிக்கொள்ளப்பட்டது.கண்டம் விட்டு கண்டம் பரிமாறிக்கொள்ளப்பட்ட முதல் எலக்ட்ரானிக் தகவல் இது தான் .இந்த தந்தியை இங்கிலாந்து மகாராணி விக்டோரியா அனுப்ப  அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் புச்சனன் (James Buchanan)  பெற்றுக்கொண்டார்.

(இந்த கம்பிகள் வழியாக ஒரு எழுத்தை,அல்லது ஒரு எண்ணை அனுப்ப இரண்டு நிமிடம் தேவைப்பட்டது.முதன்முதலில் அனுப்பட்ட செய்தியை முழுமையாக பெற 17 மணி நேரம் ஆனதாம் !)


மூன்று வாரங்களுக்கு பிறகு...

 இந்த இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டு சரியாக மூன்று வாரங்கள் கடந்திருந்த வேளையில் கம்பி வழியாக தவறுதலாக அதிக மின்னழுத்தம் (Voltage)அனுப்ப பட்டதன் விளைவாக கம்பிகள் கருகிப்போயின..

 கம்பி நீட்டிய பழைய கம்பிகளில் இருந்த குறைகளை நீக்கி 1866 - ஜூலை 28 ல் மீண்டும் கடல் வழி கம்பி புதைத்தல் பணி மறுபடியும் நிறைவேற்றப்பட்டது.

1866 -ல் மீண்டும் இணைப்பு....! கிரேட் ஈஸ்டர்ன் கப்பல்


           Great Eastern கப்பலில் இருந்த கம்பி புதைக்கும் கருவி (Grappling Hook)

  இந்த புதிய கம்பிகள் மூலம் ஒரு நிமிடத்தில் 8 எழுத்துக்களை அனுப்ப முடிந்தது. அதிக தூரம் தகவல் அனுப்பும் போது ஏற்படும் தகவல் இழப்பை தடுக்க சில புதிய கருவிகளும் இணைப்பில் இணைந்தன.

1870 -ல் ஒரே கம்பி வழியாக பல தகவல்களை அனுப்பும் முறை கொண்டுவரப்பட்டது.

1873, 1874, 1880, மற்றும் 1894 வருடங்களில் மேலும் பல புதிய கம்பிகள் புதைக்கப்பட்டன19-ம் நூற்றாண்டின் இறுதி காலகட்டத்தில் பிரிட்டிஸ்,பிரான்ஸ்,ஜெர்மனி,அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு உரிமையான தகவல் தொடர்பு கம்பிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களின் நாடுகளை இணைக்க துவங்கியிருந்தன ,கம்பிகளின் உதவியால் கண்டங்கள் இணைய ஆரம்பித்தன...

அடுத்த பதிவில் கணினிகளின் வளர்ச்சியைப்பற்றி பார்ப்போம்:

தொடர்ந்து வாசித்து ஆதரவு தாருங்கள்.தங்கள் சந்தேகங்கள்,கேள்விகள்,கருத்துக்கள் போன்றவைகளை மறக்காமல் கமென்டில் குறிப்பிடவும்


 

Post Comment

8 comments:

  1. படங்களுடன் செய்திகளை பகிர்ந்தவிதம் மிக அருமை!

    ReplyDelete
  2. இன்றுதான் உங்கள் வலை தளத்தை பார்வை இட்டேன், மிகவும் அருமை, தொடர்ந்து எழுதுங்கள் இது போன்ற அறிவியல் விஷயங்கள் எல்லாம் நம் தமிழ் மொழயில் கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா, தங்களின் ஆதரவுக்கும் அன்பிற்கும் நன்றி, தொடர்ந்து வருகை தாருங்கள்..

      Delete
  3. அருமையாக உள்ளது தங்கள் வலைப்பூ தொடர்க !!

    ReplyDelete
    Replies
    1. தொடர்கிறேன் அண்ணா, தங்களின் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்.

      Delete
  4. தொழிற் களத்திலும் கருத்திட்டேன் நண்பரே...

    நன்றி...
    tm2

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா, தங்களின் ஆதரவுக்கும் அன்பிற்கும் நன்றி, தொடர்ந்து வருகை தாருங்கள்.

      Delete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....