Saturday, March 16, 2013

கடல் மீன்கள்

(ராமேசுவரம் மீனவர்களின் வாழ்க்கைப் பதிவு)



                                               "ஒரு நாள் போவார்
ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்"


  து ஒரு ஞாயிற்றுக்கிழமை...
நம்மில் பெரும்பாலோருக்கு ஓய்வு நாளாக மட்டுமே பழகிப்போன வாரத்தின் இறுதி நாள், இராமேசுவர மீன்பிடி கடற்கரைப் பகுதி ஒரு திருவிழா போல மனித கூட்டத்தை நிறைத்துக்கொண்டு அந்த கடலோர உழைப்பாளர்களின் உழைப்பில் குதூகளித்துக் கொண்டிருந்தது.

  குவியல் குவியலாக,கூடை கூடையாக ,பெட்டிப் பெட்டியாக கடற்கரை ஓரமெங்கும் இறந்த மீன்களின் இறுதிஊர்வலம் மிக விமரிசையாக,மீனவர்களின் ஆதரவுடன் சந்தோசமாக நடந்து கொண்டிருந்தது.

  ந்த இறந்து போன மீன்கள்தான் ,லட்சக்கணக்கான அந்த மீனவ மக்களின் உயிர் வளர்க்கும் ஆதாரமாக உள்ளது.
நம் உணவாக உருமாற்றம் அடைந்த இந்த இறந்த மீன்களுக்காக நாம் அதிகம் கவலைபடுவதில்லை , இருந்தாலும் இந்த மீன்களை நம் உண்வாக மாற்றித்தர மீனவர்கள் மிகுந்த சிரமப் படுகிறார்கள் கடலில் அவர்கள் படுகிற கஷ்டங்கள் நம்மில் பலருக்கு தெரிவதில்லை

மீனவர்கள் எப்படி மீன் பிடிக்கிறார்கள்?,அவர்கள் படுகிற கஷ்டங்கள் என்ன?

இந்த பதிவில் அவைகளை பதிகிறேன்….

    வாரத்தில் திங்கள்,புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டுமே கடலுக்கு மீன் பிடிக்க செல்ல அனுமதி உண்டு,மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் முன் மீன் வளத்துறையினரிடமிருந்து டோக்கன் என அழைக்கப்படுகிற அனுமதிச்சீட்டை பெற வேண்டும் காலை ஆறு மணிக்கு டோக்கன் விநியோகம் துவங்குகிறது இந்த அனுமதிச்சீட்டு 24 மணி நேரம் மீன் பிடிக்க அனுமதி தருகிறது, அதாவது இந்த அனுமதிச்சீட்டு  24 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும், இந்த சீட்டு இன்றி மீன்பிடிப்பது குற்றமாகும்.மீன்பிடி தொழிலுக்கு டீசல் விசைப்படகுகள்(fishing boats) பயன்படுத்தப் படுகின்றன.

அனுமதிச்சீட்டினை பெற்ற பிறகு...

   மீன்பிடி வலை,விசைப்படகை இயக்க தேவையான டீசல் அடங்கிய பேரல்கள்,பிடிக்கிற மீன்களை கெட்டு போகமல் பராமரிக்க தேவையான ஐஸ்கட்டிகள் போன்ற பொருட்களுடன் தயாராக இருக்கிற விசைபடகுகள் மீனவர்களுடன் கடலலைகளைக் கிழித்துக் கொண்டு கடலுக்குள் பாய்கிறது.

[காலை 6 மணிக்கு கடலுக்குள் சீறிப்பாய்கிற படகுகள் மறுநாள் காலையில் தான் கரைக்குத் திரும்புகின்றன.]

   டலுக்குள் சென்றவுடன் மீனவர்கள் கரைக்கும் தங்களுக்குமான உறவை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் துவங்குகிறார்கள்ஆழ்கடல் பகுதிகளில் தொலை தொடர்புக்கு பயன்படுத்தப்படும் செல் பேசிகள் செயல் படுவதில்லை.கடலுக்குள் உயிரை பணயம் வைத்து செல்கிற மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதலுக்கு உட்ப்பட்டு உயிரிழந்தாலோபடகில் ஏற்படும் பிரச்சனை அல்லது இயற்கை சீற்றங்களுக்கு இரையாகினாலோ...
அவர்களுக்கு உடனடியாக உதவ அங்கு யாரும் இல்லை.

   டலுக்குள் குறிப்பிட்ட தூரம் சென்றவுடன் கயிறு மூலம் வலையை கடலுக்குள் இறக்கிக் கொண்டே செல்கிறார்கள்,வலையை கடலுக்குள் விடும் போது படகின் வேகம் பாதுகாப்பு கருதி குறைக்கப்படுகிறது.

  கடல் நீரின் ஆழத்தைப் பொறுத்து 60 முதல் 70 பாகம் [ஒரு பாகம் =ஐந்தரை அடி] வலையை கடலுக்குள் இறக்குகின்றனர்

  றக்கி விடப்பட்ட வலை இரண்டு முதல் மூன்று மணி நேரம் அப்படியே விடப்படுகிறது ,இந்த நேர இடைவெளியில் கடல் மீன்கள் வலைக்குள் சிக்கி கொள்கின்றன.
சில சமயங்களில் ஒரு படகின் வலை மற்ற படகுகளின் வலைகளுடன் சிக்கிக்கொள்ளும்.அப்படி வலைகள் சிக்கி கொள்ள நேரிட்டால் மீன்கள் வலைகளில் சிக்காது,எனவே ஒரு படகுக்கும் இன்னொரு படகுக்கும் இடையே 100 மீட்டர் இடைவெளி விட்டு மீன்பிடிக்கிறார்கள்.

  பின்பு கடலுக்குள் வீசியெறியப்பட்ட மீன்பிடி வலை மீனவர்களின் பெரும் முயற்சியால் மேலே இழுக்கப்படுகிறது.

  வலையை மேலே இழுக்க கயிறு மற்றும் வின்ச் (winch) எனப்படும் கயிறு சுழற்றும் கருவியும் பயன் படுத்தப்படுகிறது, வின்ச்சை சுழற்றி வலையை மேலே இழுக்கிறார்கள்

வின்ச்


  வலையை படகின் உள்ளே இழுத்த பின்பு வலையில் சிக்கி இருக்கிற மீன்கள் வகை வாரியாக தரம் பிரிக்கப் படுகிறது(வலையில் மீன்கள் மட்டுமல்லாமல்,கடற்சிப்பிகள்,சங்குகள் போன்றவைகளும் சிக்குகின்றன அவைகளும் பிரித்து வைக்க படுகின்றன)

  வலையை கடலுக்குள் வீசுதல்,வீசிய வலையை மேலே எடுத்தல்,வலையில் சிக்கிய மீன்களை பிரித்து பெட்டிக்குள் அடைத்தல் ஆகிய இந்த செயல் முறை "பாடு" என அழைக்கப்படுகிறது.

சராசரியாக ஒரு நாளில் 8 முதல் 10 "பாடு" வரை மீன் பிடிக்கிறார்கள்.

  மீனவர்கள் தங்களுக்கான காலை சாப்பாட்டை கடலுக்குள் கிளம்புவதர்க்கு முன்னரே வீட்டிலிருந்து எடுத்து வந்து விடுகிறார்கள், விசைப் படகுகளில் சமையலரை தனியாக உள்ளது, இங்கு அவர்களுக்கு தேவையான சாப்பாடு சமைக்கப்படுகிறது (மீனுடன்...)மீனவர்களுக்கு தேவையான டீ, காபி போன்ற தேவைகளையும் இந்த சமையலறை நிறைவு செய்கிறது.

மீனவர்கள் பொழுதுபோக்கிற்காக ரேடியோ எடுத்து செல்வதுண்டு. தற்போதைய கால கட்டத்தில் செல் பேசியிலேயே பொழுது போக்கு அம்சங்கள் வந்து விட்டதால் ரேடியோக்கள் காலாவதியாகி விட்டன

  ரவு நேரங்களில் கூட "பாடு" நடந்து கொண்டு தான் இருக்கும்.இரவுகளில் பாட்டரி விளக்குகள் விசைப் படகுகளை ஒளியூட்டுகின்றன..
கடல் நாள் என்று அழைக்கப்படும் மீன்பிடி நடைபெறும் நாட்களில் எல்லாம் நட்சத்திரங்களுக்கு போட்டியாக  மீன் பிடி படகுகள் கடலுக்குள் ஒளி வீசிக்கொண்டிருக்கும்

காலையில் மீன்பிடி பணிக்கு செல்கிற மீனவர்கள்
வெயில், மழை,காற்று என் எந்த பிரச்சனையையும் பொருட்படுத்தாமல் நாளின் 24 மணி நேரமும் தொடர்ந்து வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்

கடல் நாட்களின் போது அவர்களின் கண்கள் தூக்கதை இழந்து விடுகிறது, அவர்களது உடல் ஓய்வை மறந்து விடுகிறது.
பல சமயங்களில் எல்லை தாண்டி மீன் பிடித்தாக காரணம் சாட்டப்பட்டு இலங்கை கடல் பாதுகாப்புப் படை வீரர்களால் (வீரர்?) சுட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்ட நேரம் முடிவடைந்தவுடன்(மீன் பிடித்து முடித்தவுடன் இல்லை?) விசைப்படகுகள் கரையை நோக்கி த் திரும்புகின்றன

மீனவர்கள் பாடுபட்டு பிடித்த மீன்கள் மீன்பிடி விசை படகின் உரிமையாளருக்குத்தான் சொந்தம்

 மீன்கள் கடற்கரைக்கு அருகாமையில் உள்ள விசைப்படகின் உரிமையாளருக்கு சொந்தமான மீன் கம்பேனி என அழைக்கப்படுகிற இடங்களில் எடை போடப்பட்டு விநியோகஸ்தர்களுக்கும்,மீன் வியாபாரிகளுக்கும்  விற்பனை செய்யப் படுகின்றன.

கரைக்குத்திரும்பிய மீனவர்கள் மீன்களை உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட்டு தங்கள் கூலிகளை ப் பெற்றுக்கொண்டு வீடுகளுக்குத் திரும்புகிறார்கள்

அடுத்த நாள் மீண்டும் மீன்பிடிக்க தயாராவதற்க்காக
  லேபில்கள்: kadakarai,kadarkarai pathivukal,rameswaram patriya katturai,இராமேஸ்வரம் மீனவர்கள்,இலங்கைப் படை மீனவர் தாக்குதல்,வலை,மீன்,கடல்,விஜயன்,vijayan durai,விஜயந்துரை,கடற்கரை,கடற்கரை,கடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரை, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan

Labels: , , , ,

15 Comments:

At Wed Jul 13, 06:27:00 pm , Blogger Vijayan Durai said...

//அடுத்த முறை மீனின் சுவையை உணரும் போது அதன் பின் மறைமுகமாக மறைந்து இருக்கிற மீனவர்களின் உழைப்பை உணர்வோமாக…//

 
At Wed Jul 13, 08:58:00 pm , Blogger Unknown said...

arumaiyaana varikal...irandam pathi, ucham...thanx for reading my blog...keep reading i will update regularly

 
At Wed Jul 13, 09:17:00 pm , Blogger Vijayan Durai said...

நன்றி நன்பா

 
At Tue Sept 13, 06:27:00 pm , Anonymous Anonymous said...

அடுத்த நல்ல மீண்டும் மீன் பிடிக்க தயாராவதற்கு.....
உங்களின் உணர்வுபூர்வ பதிவுக்கு நன்றி....

 
At Sat Sept 17, 07:37:00 pm , Blogger Vijayan Durai said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தோழி

 
At Tue Mar 19, 04:46:00 pm , Blogger ஜீவன் சுப்பு said...

நேரில் சென்று பார்த்தது போல இருந்தது .

 
At Wed Mar 20, 06:05:00 pm , Blogger சீனு said...

அருமையான பதிவு விஜயன், ஜீவன் சுப்பு சொன்னது போல் நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது... உன்னிடம் இருக்கும் இது போன்ற விசயங்களைக் கொண்டு சிறுகதை முரசி செய்து பாரேன்

//மீனவர்கள் பாடுபட்டு ப்டித்த மீன்கள் மீன்பிடி விசை படகின் உரிமையாளருக்குத்தான் சொந்தம்…// இந்த நிலை என்று தான் மாறுமோ

 
At Wed Mar 20, 06:06:00 pm , Blogger சீனு said...

முயற்சி*

 
At Mon Sept 09, 10:38:00 pm , Blogger வெற்றிவேல் said...

அழகான பதிவு நண்பா...

டோக்கன் முறை, வின்ச், பாடு, என நிறைய விடயங்களை மீனவர்களின் வாழ்வு பற்றி அறிந்துகொண்டேன்.

சிறப்பான பதிவு, பாராட்டுகள்...

நண்பா, சீனு அண்ணன் கூறியது போல இந்த தகவல்களை வைத்துக்கொண்டு நாவல், சிறுகதை என முயற்சித்துப் பாருங்களேன்... வாழ்த்துகள்.

 
At Mon Sept 09, 10:57:00 pm , Blogger Vijayan Durai said...

மிக்க நன்றி அண்ணா !!

 
At Mon Sept 09, 10:58:00 pm , Blogger Vijayan Durai said...

முயல்கிறேன் :)

 
At Mon Sept 09, 11:05:00 pm , Blogger Vijayan Durai said...

நன்றி வெற்றி !
//நண்பா, சீனு அண்ணன் கூறியது போல இந்த தகவல்களை வைத்துக்கொண்டு நாவல், சிறுகதை என முயற்சித்துப் பாருங்களேன்... வாழ்த்துகள்.//

அதற்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெடல்கள் தேவை என்று நினைக்கிறேன் வெற்றி :)

 
At Wed Sept 11, 08:23:00 pm , Blogger Priya said...

அருமையான பதிவு... இந்த வாரம் நான் வாசிது என் வலைப் பூவில் அறிமுகப் படுத்திய கடலும் கிழவனும் நாவலின் உண்மைத் தன்மயை இது இன்னும் உறுதிப் படுத்துகிறது...

 
At Thu Oct 10, 02:02:00 pm , Blogger ராஜி said...

இனி மீன்கறி ருசிக்குமா!?

 
At Wed Mar 26, 05:58:00 am , Blogger திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : சீனு என்ற ஸ்ரீனிவாசன் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : திடங்கொண்டு போராடு

வலைச்சர தள இணைப்பு : கவனிக்கப்பட வேண்டிய படைப்பாளிகள்

 

Post a Comment

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....

Subscribe to Post Comments [Atom]

<< Home