Sunday, June 02, 2013

பேஸ்புக்கும்... பெண்களும் ... (பாகம்-1)

   
(பெண்கள் ஸ்பெசல் தொடர்)  
 இந்த தொடர் பேஸ்புக்கில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும்பாதுகாப்பாக இருக்க அவர்கள் மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் உங்களோடு பேச இருக்கிறது... (அட ஆண்களுக்கு இந்த தொடர் யூஸ் ஆகாதாப்பா என்று கண் சிவக்க கடுப்பாகும் என் இனங்கள் உங்களுக்கு தெரிந்த தோழிகள் உறவுக்கார பெண்களுக்கு இந்த டிப்ஸ் களை கொடுக்க இதை படித்து வைத்துக்கொள்ளுங்கள்அல்லது நீங்களும் பேஸ்புக்கில் பாதுகாப்பை (Privacy ,Security and Safety) விரும்பினால் இந்த டிப்ஸ்களை பிரயோகிக்கலாம் 

பேஸ்புக் பாதுகாப்பானதா?? :

 ஆர்குட்இன்ஸ்டாகிராம்,ட்விட்டர் என்று நிறைய சமூக வலைத்தளங்கள் (Social Networking) இணைய உலகில் இருக்கின்றன ,ஆனால் சமூக வலைத்தளங்களில் நம்பர் ஒன் னாக இருப்பது பேஸ்புக் தான்அதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கோடிகளில் இருக்கிறது,அது மட்டுமின்றி அந்த எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்து கொண்டே இருக்கிறது., இத்தனை பேர் இருக்கிற காரணத்தினாலோ என்னவோ பேஸ்புக் குடன் இலவச இணைப்பாக பிரச்சனைகள் ,ஹேக்கர்கள் தொந்தரவுவைரஸ் மற்றும் மால்வேர்களும் தாராளமாக கிடைக்கின்றன...

அதெல்லாம் சரி பேஸ்புக் பாதுகாப்பானதா இல்லையா என்று ஒற்றை வரியில் சொல்லப்பா என்கிறீர்களா?? 

பேஸ்புக்கை நீங்கள் பாதுகாப்பாக பயன்படுத்தினால் அது பாதுகாப்பனதே !


பேஸ்புக் பாதுகாப்பு (சில அடிப்படைகள்):


 பேஸ்புக் என்பது சைக்காலஜி மற்றும் டெக்னாலஜி இரண்டின் சேர்க்கையாக இருக்கும் சமாச்சாரம்,இந்த இரண்டு விசயங்களிலுமே சர்ச்சைகள் ஏராளம் உண்டு  சரியா தவறா என்கிற பைனரி விடைகளுக்குள் இவை பிடிபடுவதில்லை.நல்லதும் கெட்டதும் சரிவிகித்தில் கலந்திருக்கும்.ஆங்கிலத்தில் இந்த மாதிரியான சமாச்சாரங்களை கிரே ஏரியா(Grey Area) என்று சொல்கிறார்கள் .

பயன்படுத்துகிற நபரை பொறுத்து பேஸ்புக் பயன்பாடு நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்த என்னவெல்லாம் செய்யலாம், பேஸ்புக்கில் உங்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு என்றெல்லாம் வரிசையாக பார்க்கலாம்.

லாக் இன்:


 1. உங்கள் பாஸ்வேர்டை யாரும் எளிதில் கண்டுபிடிக்க இயலாதவாறு வைக்கவும் (உங்கள் பெயர், போன் நம்பர், அம்மா பெயர்,அப்பா பெயர், காதலர் பெயர்,நாய்க்குட்டி பெயர்,12345...,ABCD...,ASDF... போன்றவைகளை பாஸ்வேர்டாக வைக்கும் முட்டாள் தனத்தை ஒரு போதும் செய்யாதீர்கள் ).முடிந்தவரை Small letter, Capital letter, Number, Symbol என சகலமும் இணைந்த சாமானியமாக கண்டுபிடிக்க முடியாத பாஸ்வேர்டை கொடுக்கவும்
 2. முகப்புத்தகத்தின் முகப்பில் லாகின் ஆகும் போது இருக்கும் திரையில் யூசர் நேம் ,பாஸ்வேர்ட் கொடுக்கும் இட்த்தின் அருகில் இருக்கும் கட்டத்தில் டிக் மார்க் இருந்தால் எடுத்து விடுங்கள் 1. நீங்கள் பயன்படுத்தும் மெயில் சேவை, பேஸ்புக் ,உங்கள் கணினி  போன்றவற்றின் பாஸ்வேர்ட்கள் முடிந்தவரை வேறு வேறாக இருக்கட்டும்.

 1. உங்கள் மொபைல் எண்,பெர்சனல் இமெயில் ஐ.டி ,உங்களின் முழு முகவரி போண்றவற்றை பேஸ்புக்கிடம் கொடுக்க வேண்டாம்,பாஸ்வேர்ட் காரணங்களுக்காக மொபைல் எண் மற்றும் மெயில் ஐ.டி கொடுத்திருந்தால் அதை உங்களுக்கு மட்டும் தெரியும் வகையில் செட் செய்து கொள்ளுங்கள்.

 1. உங்கள் பெர்சனல் விசயங்களை டைம் லைனில் அல்லது Wall -ல் அனைவருக்கும் தெரியும் வகையில் Public ஆக பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

 1. பிரவுசிங்க் சென்டர்களிலோ, அல்லது புதிய நபர்களின் கணினியிலோ      பேஸ்புக் பார்க்கும்போது Safe browsing ஆப்சனை பயன்படுத்தவும்.
க்ரோம் (Chrome) பிரவுசரில் :  Incognito Window என்று ஒரு ஆப்சன் உள்ளது, இதை பயன்படுத்த சார்ட் கட் கீ: Ctrl + Shift + N .Incognito window- ல் நீங்கள் பிரவுசிங்க் செய்யும்போது உங்கள் பாஸ்வேர்ட் பதியப்படாது..


பயர்பாக்ஸ் பிரவுசரில் (Fire Fox):

Private Browsing ஆப்சனை பயன்படுத்தவும், இதற்கான சார்ட்கட் கீ 
Ctrl +shift + P


Safe Browsing பற்றி விரிவாக பிரிதொரு பதிவில் சொல்கிறேன்.அறிமுக பதிவில் அதிக தகவல்களை திணிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.

 1. பேஸ்புக் பயன்படுத்தி முடிந்ததும் மறக்காமல் லாக் அவுட் செய்து விடுங்கள்.(நீங்கள் பேஸ்புக்கை Open செய்து வைத்துவிட்டு வேறு வெப்சைட்களை பார்வை இடும் போது நீங்கள் இன்டர்நெட்-ல் மேற்கொள்ளும் பிற வேலைகளை பேஸ்புக் ட்ரேஸ் செய்யும் என்று சொல்லப்படுகிறது.).

 1. நீங்கள் Shared computer களில் (அதாவது ஒரே நெட்வொர்க்கில் இணைக்கப்பட்ட கணினிகள் எ-கா பிரவுசிங்க் சென்டர்). பேஸ்புக் பயன்படுத்தும்போது ஹேக் செய்யப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. உங்கள் பிரவுசரில் பேஸ்புக் முகவரியின் முன்புறத்தில் https:// என்று உள்ளதா என சரிபார்த்த பின்னர் பேஸ்புக்கை பயன்படுத்துங்கள். 1. உங்கள் மெயில்களுக்கு வந்திருக்கும் ,அல்லது பிற வெப்சைட்களில் உள்ள் பேஸ்புக் சம்பந்தமான லின்குகளை (Links) கிளிக் செய்வதற்கு முன்பு அது www.facebook.com என்று "ஸ்பெல்லிங்க்-சுத்தமாக" சரியாக உள்ளதா என சரிபார்த்து க்ளிக் செய்யுங்கள். சில வலை விரித்து காத்திருக்கும் பிஷிங்க் (Pishing) பேர்வழிகள் உங்கள் அக்கவுன்டை ஹேக் செய்யக்கூடும்.


பேஸ்புக்கில் உங்கள் பகிர்வுகளை பதியும்போது கவனிக்கவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் ,இன்னும் சில முக்கியமான எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் அடுத்த பதிவில் பார்ப்போம் !!


வாசகர்களின் கேள்விகள், சந்தேகங்கள்,கருத்துக்கள்,தகவல்கள் வரவேற்க படுகின்றன ., vijayandurairaj30@gmail.com என்ற முகவரிக்கு மெயிலாகவோ, அல்லது கமென்ட் பெட்டியிலோ கேளுங்கள்                                                             
லேபில்கள்:
facebook paathukaappu,facebook safety in tamil, facebook and girls, photo sharing tips for facebook, facebookkum penkalum,vijayan durai, பேஸ்புக்,பேஸ்புக்கும் பெண்களும்,பேஸ்புக் பாதுகாப்பு,பேஸ்புக்கில் பாதுகாப்பாக இருப்பது எப்படி, பெண்கள் பேஸ்புக்கில் படங்களை பகிரும் முன் கவனிக்க வேண்டியவை,விஜயன் துரை, பேஸ்புக் சேப்டி டிப்ஸ் தமிழில், தமிழில் பேஸ்புக், பேஸ்புக் புகைப்பட பகிர்வு  டிப்ஸ், பெண்கள் பாதுகாப்பு,கடற்கரை,கடற்கரை,கடற்கரை,கடற்கரை, விஜயன் துரை


 

Post Comment

5 comments:

 1. அதிகம் செல்வதில்லை... இருந்தாலும் நன்றி...

  ReplyDelete
 2. மிக மிக அவசியமான பதிவு நண்பரே!இந்த பதிவை இலகுவாக அனைவரிடமும் கொண்டு செல்ல,"இணையத்தில் பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்வது எப்படி?" இப்படி இருந்திருந்தால் கூகிளில் தேடுவோரிடம் இந்த பதிவு சீக்கிரம் சென்று சேரும். மேலும் urlஐ மாற்றியமைப்பதின் மூலமும் பதிவு பலப்படும். இது எனது சிறிய seo டிப்ஸ் நண்பரே. "கூகுளில் வாசகர்கள் எப்படி தேடுவார்கள்?" என்பதை கருத்தில்கொண்டு பதிவின் தலைப்பையும், url வடிவத்தையும் அமைப்பது சிறப்பு நண்பரே! அருமையான பதிவு அனைவரிடமும் சென்றுசேரவேண்டும் என்பதால் சொன்னேன் நண்பரே!தொடரட்டும் சிறப்பான சேவை.

  ReplyDelete
 3. ஓரளவு இதெல்லாம் நான் சரியாக தான் கடைபிடிக்கிறேன் என்று நினைக்கிறன்.

  தொடருங்கள், வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. நல்ல தகவல்கள்.... தொடரட்டும்.

  ReplyDelete
 5. Incognito window & Safe browsing - புதிய தகவல்கள். நன்றி.

  ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....