(கணிப்பொறி வரலாறு-8)
இந்த
பதிவில் பாதியில் நின்று கொண்டிருக்கும்
ஹாலரித்-ன் கதையை தொடர்வோம்...
சென்செக்ஸ் கணக்கெடுப்பை எளிதாக்க பஞ்சட் கார்ட் களை பயன்படுத்த முடியும் என்கிற தீர்க்க தரிசனத்தை அரசு தரப்பிடம் அறிவித்தார் ஹாலரித், அமெரிக்க அரசாங்கம் 1890 ஆம் வருட சென்செக்ஸ் கணக்கெடுப்பில் ஹாலரித் சொன்ன யோசனையை பிரயோகிப்பதற்கு முன்பாக சோதனை முயற்சியாக நியூயார்க்கில் இருந்த அரசு
நல மையத்தில் (New
York City Board of Health ) கணக்கெடுப்பிற்கு பயன்படுத்தப்பட்ட்து, இந்த சோதனை ஓட்டத்திற்கு பிறகே 1890 ஆம் வருடத்திய சென்செக்ஸில் ஹாலரித்-ன் துளை இடப்பட்ட அட்டைகள் பயன்படுத்தப்பட்டன.
துளை இடப்பட்ட அட்டைகள் மூலம் தகவல் சேகரிப்பும் அட்டவனைப்படுத்துதலும் எப்படி சாத்தியமாயின ??
கணக்கெடுப்பு...
1890 ஆம் வருட சென்செக்ஸ் கணக்கெடுப்பின் போது கணக்கெடுக்கும் நபர் வீடு வீடாக சென்று கேள்விகள் கேட்டு விபரங்களை பேனா மூலம் பேப்பரில் எழுதிக்கொள்ளவில்லை
பேப்பருக்கு மாற்றாக துளையிடப்படாத பஞ்சட் கார்டும் ,பேனாவுக்கு மாற்றாக பேண்டோகிராப் கருவியும் அவர் கையில் இருந்தன
பேண்டோகிராப்:
பேனாவிற்கு பதிலாக பேன்டோகிராப்
பேண்டோகிராப் என்பது துளையிடப்படாத அட்டையில் துளையிடுவதற்கு பயன்படுத்தப்படும் கருவி
பஞ்சட் கார்ட்:
1890 சென்செக்ஸ் கணக்கெடுப்பில் பயன்படுத்தப்பட்ட பஞ்சட் கார்டுகள் 22 நெடு வரிசைகள்(Columns) கொண்டவைகளாகவும் ஒவ்வொரு நெடுவரிசையிலும் 8 துளையிடப்படக்கூடிய இடங்களையும் கொண்டவைகளாக இருந்தன,
1890 அமெரிக்க சென்செக்ஸில் பயன்படுத்தப்பட்ட அட்டை
அவைகள் 3.25 மற்றும் 3.75 இன்ச் நீள, அகலங்களில்
தயாரிக்கப்பட்டன,அக்காலத்திய அமெரிக்க டாலரின் அளவில்,
இந்த அளவில் பஞ்சட் கார்டுகள் தயாரிக்கப்பட காரணம் ஹாலரித் பஞ்சட்
கார்டுகளை பராமரிக்க அமெரிக்க கருவூல பணப்பெட்டிகளை பயன்படுத்தியது தான்.
1880 கால டாலர்
(இதன் பின்பு வந்த அட்டைகளில் வரிசைகளின் எண்ணிக்கைகள் பயன்பாட்டை பொறுத்து மாறுபட்டன) துளையிடப்பட்ட இடத்தை பொறுத்து அவைகள் குறிக்கும் விபரங்கள் மாறுபட்டன. பஞ்சட் கார்டில் போடப்பட்ட துளைகள் கணக்கில் வரும் நபர் ஆணா, பெண்ணா அவர் வயதென்ன போண்ற தகவல்களை குறித்தன.
பேன்டோகிராப் உதவியுடன் அட்டையில் துளைடும் அம்மணி
இம்மாதிரி
ஒரு நாளைக்கு 500 அட்டைகள் வரை கணக்கெடுப்பார்களாம்,
சரி வீடு வீடாக போய் பஞ்சட் கார்ட்-ல் தகவல்களை துளைகளாக குறித்துவிட்டாயிற்று , கணக்கெடுத்த தகவல்களை எப்படி எண்ணினார்கள்,இந்த பஞ்சட் கார்ட் எனப்படும் துளையிடப்பட்ட அட்டைகளின் தனித்துவமே எண்ணும் முறையை எளிதாகவும்,விரைவாகவும் மாற்றியது தான்.
எண்ணும்
எந்திரம் (Tabulating Machine)
அட்டைகளில் துளையிடும் வேலையையும், அதை தரவாரியாக பிரித்து அடுக்கி வைக்கும் வேலையையும் தான் மனிதர்கள், செய்தார்கள்,எண்ணும் வேலையை எந்திரங்கள் செய்தன.
துளையிடப்பட்ட
பஞ்சட் கார்ட்கள் கார்ட் ரீடர் கருவியில் ஒவ்வொன்றாக அடுக்கி வைக்கப்பட்டன.
எண்ணும் எந்திரத்தின் கீழ்பகுதியில் பஞ்சட் கார்டிற்கு ஏற்றமாதிரி டிரம்கள் (Drums) அமைக்கப்பட்டிருந்தன,இந்த
டிரம்கள் பாதரசத்தால் (Mercury) நிறப்ப
பட்டிருந்தன, எந்திரத்தின் மேல்புறத்தில் ஊசிகள் இருந்தன, துளையிடப்பட்ட அட்டைகள் (தகவல்கள் குறிக்கப்பட்ட அட்டைகள்) எண்ணும் சமயத்தில் எந்திரத்தின் நடுவில் வைக்கப்பட்டன.
துளையிடப்பட்ட அட்டைகளில் உள்ள துளைகள் ஊசிகள் மூலம் உணரப்பட்டன , துளை இருக்கும் இடங்களில் ஊசிகள் அட்டைகளை ஊடுருவி கீழ்புறம் இருந்த டிரம்களின் மீது படும், துளைகள் இல்லாத இடங்களில் ஊசிகள் டிரம்களின் மீது படாது,
ஊசிகளுக்கும் ,டிரம்களுக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது,
இப்படித்தான் இயங்கியது "எண்ணும் எந்திரம்")
துளை உள்ள இடங்களில் ஊசிகள் டிரம்கள் மீது படுகிறபோது மின்சுற்று ஒன்று பூர்த்தியாகும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது,
டிரம்களின் மீது ஊசி பட்டு மின் சுற்று முழுமை அடையும் போது டிரம்களின் இடங்களை பொறுத்து
கடிகார வடிவில் இருந்த " எந்திர
எண்ணியில் " (Mechanical counter Dial) ஒரு எண் கூடியது.(டயல்களுக்குள்
ஒரு மின்காந்த சுழலி (Electromagnet motor )மின்சாரம்
கிடைக்கும்போது ,(சென்செக்ஸ் கணக்கெடுப்பில்
பயன்படுத்தப்பட்ட டேபுலேடிங்க் மசினில் 40 Counter டயல்கள்
இருந்தன.
எண்ணும் எந்திரம்
ஒரு
பயிற்சியுள்ள பணியாளரால் ஒரு நிமிடத்தில் 50 -லிருந்து 80 அட்டைகள் வரை கார்ட்
ரீடர் கருவியில் பொருத்த முடிந்தது. இந்த கருவிகளில் நினைவகம் எனப்படும் மெமரியோ, ரிசல்ட்டை அச்செடுக்க பிரின்டரோ கிடையாது , Counter
டயல்களில் காட்டப்படும் ரீடிங்கை காகிதத்தில் குறித்து கொள்ளும்
வகையிலேயே இருந்தது. ஒரு நாளின் முடிவில் இந்த டயல்கள் மீண்டும் ஜீரோவிற்கு செட்
செய்யப்படும்,
கருவியிலிருந்து காகிதத்திற்கு
எழுதப்பட்ட ரீடிங்க் டேலி செய்யப்படும்
மீண்டும் மறு நாளில் ரீடிங்க் எடுக்கும் நபர் விட்ட இடத்தில் இருந்து கணக்கை
தொடர்வார், முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹாலரித்-ன்
டேபுலேடிங்க் மெசின் எண்ணிக்கை எந்திரமாக மட்டுமே இருந்தது,
அதற்கு
பின்பு அறிமுகப்படுத்தப்பட்ட மாடல்கள் கூட்டல், கழித்தல் போன்ற விசயங்களை செய்யும் வகையிலும் , தானாக
பஞ்சட் கார்டுகளை ரீடருக்குள் எடுத்து கொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டன .
IBM
நிறுவனம் அறிமுகப்படுத்திய டேபுலேசன் மெஷிங்களின் பட்டியல்:
வருடம் கருவி பணி
1890
|
சென்செக்ஸ்-டேபுலேடர்
|
எண்ணுதல்
மட்டும், கார்டுகள் Manual Feeding முறையில் கருவிக்குள் செலுத்தப்பட்டன
|
1896
|
ஹாலரித்
இன்டகிரேடிங்க் டேபுலேட்டர்
|
Manual feed, கூட்டல்
மற்றும் எண்ணுதல்
|
1900
|
ஹாலரித் ஆடோமேடிக் Feed
டேபுலேட்டர்
|
முதல் automatic-feed
card reader, 1900 ஆம் வருட சென்செக்ஸில்
பயன்படுத்தப்பட்டது
|
1906
|
ஹாலரித்Type
I Tabulator
|
(Type 090)
Automatic feed; உலோக cabinet; first
wiring panel.
|
1921
|
ஹாலரித்Type III Tabulator
|
(Type 091) பிரின்டருடன்
வந்த முதல் மாடல்
|
192x
|
ஹாலரித்Type 3-S Tabulator
|
கழித்தல்
கணக்கீடுகளை செய்த முதல் மாடல்
|
1928
|
ஹாலரித்Type IV
Tabulator.
|
(Type 301
கார்ட் வகை )
First 80-column-card model.
|
1931
|
Columbia
Difference Tabulator
|
Unique machine
for CU Statistical Bureau
(கொலம்பியா யூனிவர்சிட்டி காக தயாரிக்கப்பட்ட முதல் மாடல்
|
1933
|
IBM Type 285
Tabulator
|
Numeric only
|
1933
|
IBM 401
Tabulator.
|
Alphanumeric.
|
1934
|
IBM 405
Accounting Machine
|
Alphanumeric.
|
1948
|
IBM 402
Accounting Machine
|
Alphanumeric,
|
1949
|
IBM 407
Accounting Machine
|
High-speed
alphanumeric.
|
Tweet |
இத்தனை தகவல்களுடன் தேடி அதுவும் விளக்கத்துடன்... படத்துடன்... உங்களின் தேடலுக்கு பாராட்டுக்கள்... நன்றி...
ReplyDeleteமிக விரிவான தகவல்கள். நாம் இன்று அனுபவிக்கும் வசதிகளின் பின்னணியில் எவ்வளவு உழைப்பு எத்தனை ஆண்டுகளாக செலவிடப்பட்டுள்ளது. படங்களுடன் தந்துள்ள விளக்கனகள் புரியம் வகையில் அமைந்துள்ளன பாராட்டுக்கள் அரிய பணி விஜயன். மொத்தமும் எழுதி முடித்ததும் புத்தகமாக வெளியிட முயற்சி செய்யுங்கள்
ReplyDelete