Sunday, September 30, 2012

ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம்-5

இந்த தொடருக்கு வாசகர்கள் மற்றும் நன்பர்கள் கொடுத்துவரும் தொடர் ஆதரவுக்கு என் நன்றிகள்..

ச்சத்தின் விளைவால் உதயமான ஆர்பா பற்றியும் ,ஆர்பாவின் அன்பளிப்பான ஆர்பாநெட்டின் அசுர வளர்ச்சி பற்றியும் கடந்த பதிவுகளில் பார்த்தோம்.சென்ற கட்டுரையை "அச்சத்தின் காரணமாக அவதரித்த ஆர்பாநெட் தான் வந்த நோக்கத்தை நிறைவேற்றியதா?" என்ற கேள்வியுடன் முடித்திருந்தேன்,க்ளெய்ன் ராக் ' IMP உடன் (இது தான் அந்த கால மோடம்)
எவ்ளோ பெரிய மோடம்!

போர் காலங்களில் இணையம் பாதிக்க படாதா?,அணு ஆயுதங்களின் வீச்சுகளால் ஆர்பாநெட் அழிந்துவிடாதா?,ரஷ்யாவிற்கு பயந்து அமெரிக்கா தயாரித்த ஆர்பாநெட் அணு ஆயுத போர்களின் அக்கப்போர்களை சமாளிக்க வல்லதா?

வாருங்கள் விடை தேடுவோம்….

ணையம் உருவாக போர்சிந்தனை தான் காரணம்,போர்காலங்களில் தகவல் தொடர்பு பாதிக்க படாதிருக்க வேண்டும் என்கிற சிந்தனையில் உதயமானது தான் இணையம்,ஆனால் இணையம் போர்களங்களில் பிழைத்திருக்குமா என்று கேட்டால் அது "நான் அவன் இல்லை " என்று நம்மிடம் சொல்லிக்கொண்டு தப்பித்து விடுகிறது.

இன்னும் கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்...

பனிப்போர் மற்றும் அந்த கால தகவல் தொடர்பு முறைகள் போன்றவற்றை மையமாக கொண்டு பார்க்கும் போது,ஆர்பா நெட் ஒரு அதிசய கண்டுபிடிப்பு தான்.

இது அந்த கால டெலிபோன் இணைப்பு(Series Connection)
ஒவ்வொரு பெட்டியையும் "போன்" ஆக
கற்பனை செய்து கொள்ளுங்கள்
ந்த காலத்தில் தகவல் தொடர்பு தொடர் இணைப்பில் (Series) இணைக்க பட்டிருந்தன, அதாவது ஏதாவதொரு இடத்தில் பாதிப்பு ஏற்பட்டால் ஒட்டு மொத்த தொடர்பும் பாதிக்க படும், இந்த முறையில் ஆர்பா கொண்டு வந்த தகவல் தொடர்பு முறை புதியதான ஒன்றாக ஒரு புரட்சியாககத்தான் இருந்தது.


ணையத்தில் ஏதாவதொரு இணைப்பு அறுபட்டால்,அதன் மற்ற இணைப்புகள் செயல் பாட்டில் இருக்கும்படி, சர்வர்-க்ளெய்ன்ட் இணைப்பு முறையில் கணினிகள் இணைக்கப்பட்டிருப்பதால்,சர்வரில் உள்ள தகவல்களை மற்ற க்ளெய்ன்ட் கணினிகள் எதிலிருந்து வேண்டுமானாலும் பார்வையிட முடியும்.(இது பற்றியெல்லாம் விரிவாக இனிவரும் பதிவுகளில் பார்க்கலாம்).
ஏதாவது ஓரிடத்தில் ஏற்படும் பாதிப்பு ஒட்டு மொத்த தகவல் தொடர்பையும் பாதிப்பதில்லை என்கிற புள்ளியில் சிந்திக்கிற போது இணையம் அது உருவாக்கப்பட்ட நோக்கத்தை நிறைவு செய்கிறது.
தொலைபேசிகளுக்கான இணைப்புகள் போர்களின் போது தகர்க்கப்பட்டாலும்,இணையத்தில் உள்ள முனையங்கள்(NODES) தங்களுக்குள் தகவல் துணுக்குகளாக (DATA PACKETS BOUNCING) தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியும்.ஒவ்வொரு முனையங்களும் (இணையத்தில் இணைந்துள்ள கணினிகள் தான்..) தங்களுக்குள் தகவல்களை அனுப்பிக்கொள்ளவும் பெற்றுக்கொள்ளவும் முடியும்.
தை நாம் மற்றொரு கோணத்திலும் சிந்திக்கலாம்,இணைய இணைப்பு செயற்கை கோள் களின் உதவியுடன் செய்யப்பட்டால் இணைப்புகளுக்கு போர் காலங்களில் கூட பாதிப்பு ஏற்படாது. (??)

பாதிப்பு ஏற்படுமா? ஏற்படதா?

போர்களை கடந்து இணைய இணைப்புகள் நிற்கும் என்று ஒட்டு மொத்தமாக பதில் சொல்வது தவறு.அது போரின் தன்மையை பொறுத்தது,போர் மிக வலிமை மிகுந்ததாக இருக்கும் பட்சத்தில் எதுவும் தப்பாது,சகலமும் சர்வ நாசம்.இணையமாவது,இணைப்பாவது.

ணு ஆயுத போர்களில் இணையம் பிழைத்திருக்கும் என்பது பிழை செய்தி.போர்களின் போது கணினிகளும் அவற்றில் சேகரித்து வைக்கப்பட்ட தகவல்களும் ஆவியாக போய்விடும் ,கணினி இயங்க தேவையான மின்சாரத்தை வழங்கும் மின் நிலையங்களும் அழிந்து போய்விடும்.அது மட்டுமில்லாமல் அணு ஆயுத பிரயோகம் Unprecedented EMP (Electro Magnetic Pulse - ed.) என்றழைக்கப்படும் மின்காந்த அலைகளின் ஆக்கிரமிப்பை ஏற்படுத்தும்.
இந்த அலைகள் நம்மிடம் புலக்கத்தில் உள்ள மின் காந்த அலைகளை அடிப்படையாகக்கொண்டு செயல்படும் அத்தனை கருவிகளையும் செயல்படாமல் முடங்க (Cripples) செய்து விடும் வல்லமை படைத்தது.நாம் தற்காலம் பான்படுத்தும் 90 முதல் 95 சதவீத மின்னனு பொருட்கள் தங்கள் செயல்பாட்டை இந்த EMP காரணமாக நிறுத்திக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தின் இணைப்புகள் கம்பி வழித்தடங்கள் (Cable) மட்டுமின்றி செயற்கை கோள் மூலமாகவும் இணைக்கப்பட்டுள்ளன, இவை மின் காந்த அலைகள் மூலமாக தான் இணைக்கப்படுகின்றன.,அப்படியென்றால் இந்த இணைப்பும் அம்பேல் ...!

ஆக இணையம் போர்களில் பிழைத்திருக்கும் என்பது 99 % பிழையான செய்தி என்பது உறுதி. மீதம் ஒரு சதம் அது உண்மை செய்தி அது போரின் தன்மையை பொறுத்தது....!

அடுத்த பதிவில் இன்னும் சுவரசியாமான பல விசயங்களுடன் உங்களை சந்திக்கிறேன்..

 

Post Comment