Wednesday, March 29, 2017

பாரதிச்சூடி -4

 ஈகை திறன்

                                             

ஈகை திறன் என்பதை பெரும்பாலான தமிழ் வல்லுனர்கள் கொடுக்கும் திறன் என்று அர்த்தம் சொல்லியிருக்கிறார்கள்.

ஈகை என்பது "தன்னிடம் உள்ளதை தானமாக கொடுப்பது" திறன் என்றால் சக்தி அல்லது ஆற்றல் .

அப்படியே அர்த்தம் பண்ணினால் அப்படித்தான் !! யோசிக்க முடியும்.

இந்த செய்யுளை கொடுக்கும் சக்தி என பொருள் கொள்தல் தவறு, பாரதி தன் புதிய ஆத்திச்சூடியை கட்டளை தோரணையில் சொல்கிறான் , "ஈகை திறன் '' என்பதும் கட்டளை வாக்கியமே , அந்த முறையில் இதை அர்த்தப்படுத்தினால் " கொடுப்பது திறன் என்றொரு அர்த்த தொனியில் "ஈகை திறன்" ஒலிக்கிறது. பாரதி அப்படித்தான் சொல்லியிருப்பான்.

பாரதியின் வார்த்தைகளுக்கு விளக்கம் தேட அகராதிகளை புரட்டினால் அவன் பிடிகொடுக்க மாட்டான், அவன் வாழ்க்கையினின்று நாம் அவன் பாடல்களை பொருள் கொள்ள வேண்டும்.

தனக்கே சோறில்லாத பொழுதில் குருவிகளுக்கு அரிசி தூவிக்கொண்டிருக்கும் பாரதி நிச்சயம் கொடுக்கும் நிலைக்கு உயர்ந்து பின் கொடு என்கிற பொருளில் இந்த வரிகளை உச்சரித்திருக்க வாய்ப்பில்லை.

 கொடுப்பதில் ஒரு kick இருக்கிறது என்பதை கொடுப்பதன் திறனை உணர்ந்த நபர்களால் தான் இயலும்., பாரதி அந்த Kick ஐத்தான் சொல்கிறான்.

எதைக்கொடுக்கிறாயோ அதையே பெறுவோம் என்கிறது ஒரு தத்துவம்,  அந்த தத்துவத்தோடும் பாரதி சொல்லும் ஈகை திறனை ஒப்பிட்டு நோக்க முடிகிறது.
கொடுங்கள் அப்பொழுதுதான் பெறுவதற்கான தகுதி உமக்குண்டு என்று சொல்லாமல் சொல்கிறான் பாரதி !

பாரதியின்பொருளாதார நிலை உலகறிந்ததே ! இன்னிலையில் ஒருநாள் பாரதிக்குஅவர் பணிபுரியும் பத்திரிக்கையின் ஆசிரியர் பணம் கொடுக்கிறார், பணத்தோடு தன் நண்பர்களோடு வெளியே வரும் பாரதி பழக்கூடையோடு வாடிய முகத்துடன் அமர்ந்திருக்கும் பெண்ணொருத்தியை காண்கிறான்.என்னம்மா உன் கவலை என்கிறான் "பழமெல்லாம் விக்கல சாமி" என்கிறாள், வைத்திருந்த மொத்த காசையும் கொடுத்து கூடை பழத்தையும் தானே வாங்கிக் கொள்கிறான். பாரதி சொல்லும் ஈகை திறன் என்பது கொடுப்பதற்கேற்ப இருப்பேற்படுத்திக்கொண்டு கொடுக்கும் திறன் அல்ல The power of giving :) , கொடுப்பதால் ஏற்படும் மனநிறைவு காரணமாக உள்ளத்து ஊற்றெடுக்கும் ஆற்றலைப் பற்றியது.

அவன்சொல்வது ஈகைத்திறனை அல்ல ஈகையின் திறனை,ஈகை தரும் திறனை.

கொடுங்கள் நிச்சயம் அதைவிட அதிகமாக பெறுவீர்கள் .

 

Post Comment

9 comments:

  1. நிச்சயமாக....உங்களின் இப்பதிவுகள் என்றும் தொடர என் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. ஈகைத் திறன் குறித்த
    அருமையான சிந்தனை
    இதுவே நிச்சயம் பாரதியின்
    சிந்தனையாக இருக்கச் சாத்தியம்
    பகிர்வுக்கும் தொடர்வும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஈகையின் திறன்....நுணுக்கமாக இருந்தது.

    ReplyDelete
  4. ஹாய் விஜி .நலமா தம்பி ..இந்த பிளாக் அப்டேட்ஸ் எனக்கு வரல்லைமீண்டும் add செய்தென் .ஈகைத்திறனுக்கு அழகான விளக்கம்
    நல்லா இருக்கு பாரதிச்சூடி ..தன்னிடம் அது குறையவாகவே இருப்பினும்இருப்பதையும் கொடுப்பதே ஈகை

    ReplyDelete

  5. We are now less than a month away from the much-discussed fight between Conor McGregor and Floyd Mayweather in what is expected to be the most lucrative prize fight of all time.
    Mayweather vs McGregor Live Streaming

    ReplyDelete
  6. we love your post very much. this is really interesting, ij just wish that it will never get deleted. thanks for sharing it with us
    Groundhog day prediction 2018

    groundhog day movie
    groundhog day full movie
    groundhog day movie online

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....