Saturday, September 17, 2011

ஜிமெயில் ரகசியங்கள்: -1

ஜிமெயில் ரகசியங்கள்:
(ஒரு ஜிமெயில் அக்கவுன்ட் மூலம் எல்லையில்லாத பெயர்களில் 
போலி ஜிமெயில் முகவரிகளை உருவாக்கும் வித்தை:)





ம்மில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுன்ட்களை பல தேவைகளுக்காக வைத்திருப்போம்.
ஆனால் ஒரே ஜிமெயில் அக்கவுன்ட் மூலம் பல்வேறு அலியாஸ் (alias) ஜிமெயில் முகவரிகளை உருவாக்கும் வாய்ப்பை 'Google-ன் ஜிமெயில் தபால்பெட்டி சேவை' ஏற்படுத்தியுள்ளது என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.

குறிப்பு::இம்முறையில் நாம் உருவாக்கும் புதிய இமெயில் முகவரிகளுக்கு அனுப்பப்படும் தபால்கள்(E-Mail) கூட நம் உண்மையான ஜிமெயில் முகவரிக்கே கிடைக்கும்.

ஒரு ஜிமெயில் முகவரியை பயன்படுத்தி பல்வேறு போலி ஜிமெயில் முகவரிகள் ??


ரகசியம்-1(புள்ளி வித்தை):

 
ங்கள் மெயில் G-Mail முகவரி "username@gmail.com" என்று இருக்கும்.இதை நீங்கள் புள்ளி (full stop or dot) மூலம் பல முகவரிகளாக மாற்ற முடியும்.

உதரணமாக உங்களின் உண்மை முகவரி: "username@gmail.com" எனக் கொண்டால் நீங்கள் கீழ்காணும் முறையில் புள்ளிகளை மாற்றி மாற்றி வைத்து பல முகவரிகளை உருவாக்க முடியும்

போலி முகவரி1:"u.sername@gmail.com"
போலி முகவரி2:"us.ername@gmail.com"
போலி முகவரி3:"use.rname@gmail.com"
போலி முகவரி4:"user.name@gmail.com"
போலி முகவரி5:"usern.ame@gmail.com"
போலி முகவரி6:"userna.me@gmail.com"
போலி முகவரி7:"usernam.e@gmail.com"

ரகசியம்-2 (சேர்ப்பு வித்தை)


உண்மை முகவரி: "username@gmail.com"

username உடன் +(கூட்டல் குறி) மூலம் எந்த வார்த்தையை அல்லது பெயர்களை இணைத்து போலி முகவரிகளை உருவாக்க முடியும்.

போலி முகவரிகள்:"username+some_name@gmail.com"

இம்முறை மூலம்  நீங்கள்
                                                 "username+your lover name@gmail.com"
                                                " username+friend name@gmail.com"
                                                " username+your wife name@gmail.com"
  
என வித விதமான முகவரிகளை உருவாக்கி

உங்களின் அன்பானவர்கள், நன்பர்கள்,காதலி () காதலர் என உங்கள் நெருக்கமானவர்களை அவர்களுக்கென தயாரிக்கப்பட்ட பிரத்யேக ஜிமெயில் முகவரி மூலம் கவர முடியும்.

ரகசியம் -3

மேலே குறிப்பிட்ட இரு வித்தைகளையும் சேர்த்தும் நீங்கள் பயன்படுத்தலாம்...

(.ம்:) "user.name+your lover name@gmail.com"

                                                
குறிப்பு::இம்முறையில் நாம் உருவாக்கும் புதிய இமெயில் முகவரிகளுக்கு அனுப்பப்படும் தபால்கள்(E-Mail) கூட நம் உண்மையான ஜிமெயில்("username@gmail.com") முகவரிக்கே கிடைக்கும்.

ஏதேனும் சந்தேகம் அல்லது கருத்துகள் இருந்தால் Comment ல் தெரிவிக்கவும்

 

Post Comment

3 comments:

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....