Monday, November 16, 2015

மழை அதிகாரம்

                                 மழை அதிகாரம்


மழையைப் பழித்தல் 
வேலைக்குப் போக முடியல,
பொழப்ப கெடுத்துருச்சு,
நாசமாய்ப்போற மழை,
மழையால டிராபிக் ஜாம் ஆகிடுச்சு,
சாக்கடை நெரஞ்சுடுச்சு,
ரோட்டுல நடக்க முடியல

நமக்குலாம் மழை தேவையா !,
போய் வேற எங்கயாவது பெய்ய வேண்டியதுதானே !
நாம இப்ப மழைய கேட்டோமா ?!


மழையை வியத்தல்:


 வானிருந்து பூமி வருதலால் அது அமிழ்தம்

                           - அறத்துப்பால் அதிகாரம் 2 .  வான் சிறப்பு

லகில் உயிர் நிலைத்திருப்பதற்கான மூலக் காரணங்களுள் தண்ணீரின் பங்கு கணிசமானது, அதிமுக்கியமானது.

தண்ணீர் - உலகிலும் சரி , உடலிலும் சரி முக்கால்வாசி இடத்தை இதுதான் ஆக்கிரமித்திருக்கிறது.நிலமும் சரி, உடலும் சரி தண்ணீர் போட்ட பிச்சை தான்.

எல்லா வகையிலும் மழை தான் தண்ணீரின் ஆதாரம்..

மழையைப் பொருத்தவரை அசுரத்தனம், அதீதம், அநியாயம், அதிகம் என்றெல்லாம் வரையறைகள் வைப்பது தவறு. பூமியின் தேவைக்கருதி அது பெய்கிறது., உங்களுடைய, என்னுடைய தேவைகருதி அல்ல.

சிலப்பதிகாரத்தின் வாழ்த்துப்பாடலில் இளங்கோவடிகள் மாமழை போற்றுதும் எனப் பாடி மழையை வணங்குகிறார், ( தற்போது தமிழகம் கண்டுகொண்டிருப்பது ஒருவகையில் மாமழை தான். மா.. மழை !).

                                    *****

டந்த சில தினங்களாக முன்பெப்போதும் போலில்லாது மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அநேக இடங்களை மூழ்கடித்து இன்னமும் பெய்துகொண்டிருக்கிறது. சில இடங்களை சிறிதும் இரக்கமின்றி தலைமுழுக தயாராகிக் கொண்டிருக்கிறது.

மழையில் நனைந்தபடி நடத்தல், மழையை ரசித்தபடி தேநீர் பருகுதல், பெய்து தேங்கிய மழைநீரில் காகிதக்கப்பல் விடுதல்... இவையெல்லாம் ரசிப்பதற்கும், நினைப்பதற்கும் அழகாய்த்தான் இருக்கின்றன. ஆனால் உண்மை வேறுவிதமாக வடிவெடுத்திருக்கிறது.

"வேலைக்கு போக முடியல", " பொழப்ப கெடுத்துருச்சு, "நசமாய்ப்போற மழை", " இந்த மழையால டிராபிக் ஜாம் ஆகிடுச்சு, சாக்கடை நெரஞ்சுடுச்சு, ரோட்டுல நடக்க முடியல", ...

அநேக இடங்களில் மழை அழையா விருந்தாளியாக அவமதிக்கப்படுகிறது. நன்றியை தன் வாழ்வின் அங்கமாக கொண்ட தமிழினம் நன்றிகெட்டு எப்படி இப்படி ஆனதென்று தெரியவில்லை. உனக்கு வந்தா தெரியும் என என்னை நீங்கள் கைகாட்டலாம்., எனக்கு கவலையில்லை., மழையைப் பழித்தல் தவறு என்கிற என் கருத்தை நான் மாற்றிக்கொள்ளப்போவதில்லை.

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா ! பெரும்பாலும் நாம் சுயநலமானவர்கள், குடை கொண்டுபோகாத போது , ஒதுங்குவதற்கு இடம் இல்லாதபோது, கொடியில் துணி காயப்போட்டிருக்கும்போது, மாடியில் கருவாடோ,வடகமோ,வற்றலோ உலரும்போது, மழை பெய்ய ஆரம்பித்தால் மழையைப் பழிக்கிறோம்.

வீடுநோக்கி செல்லும் குடையற்ற தினங்களில் நான் வீட்டிற்கு போகும் வரை மழை பெய்ய வேண்டாம் என நினைத்துக்கொள்கிறோம்.

பள்ளி/கல்லூரி நாட்களில் மழையின் காரணமாக விடுமுறை ஆக வேண்டுமென அடைமழை வேண்டி ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம். வேண்டாத தினங்களில் அலுவலகங்கள் மழைக்குள் மூழ்கி விடுமுறை கிடைக்காதா ? என ஏங்குகிறோம்.

நமக்கு உதவுவது மட்டும்தான் நல்லது, என்கிற சித்தாந்தம் நமக்குள் வேர்விட்டு ,கிளைவிட்டு மரமாகி காடாக விரவிக்கிடக்கிறது. எதுவும் உடனுக்குடன் பலன் தர வேண்டும் என்கிற இன்ஸ்டன்ட் கலாச்சார புத்திக்கு மழைநீர் நிலத்திற்குள் சென்று நாளைய சந்த்திக்கு உதவும் என்று சொன்னால் உறைக்கப்போவதும் இல்லை, அவர்கள் அதை நம்பபோவதும் இல்லை.

மாமழை !

சென்னையைப் பற்றி பேசியே ஆக வேண்டும் , சென்னையைப்பற்றி பேசாவிட்டால் இந்த மழைக் கட்டுரை ஜென்ம சாபல்யம் அடையாது. 
இந்திய பெருநகரங்களில் தண்ணீரை மிகக்குறைவாகப் பயன்படுத்தும் புண்ணியபூமி சென்னை என்கிறது ஒரு புள்ளிவிவரம். காரணம் தண்ணீர் சிக்கனம் இல்லை, தண்ணீருக்கான பற்றாக்குறை. பற்றாக்குறையைப் போக்கிக்கொள்ள மக்கள்கூட்டம் ஆழ்துளையிட்டு பூமிக்குள்ளிருக்கும் நீரை உறிஞ்சுகிறது.

தமிழக தலைநகராம் சென்னையில் ஒரு வருடம் குப்பைக்கொட்டியவன் என்கிற முறையில் ஒரு விசயம் சொல்கிறேன். தமிழகத்திலேயே மிக மோசமான குடிநீர் சென்னையில் தான் இருக்கிறது, அதற்கு மெட்ரோ வாட்டர் என புனைபெயர் வேறு !

தண்ணீரை காசுக்கு வாங்கி குடிப்பது கௌரவம் என்னும்  நிலை மாறி சாவைத்தள்ளிப்போடும் சாகசக்கலை என்னும் அளவிற்கு சென்னையின் நிலைமை இருக்கிறது.

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள் ,

சமநிலை என்பது பிரபஞ்ச தத்துவம். 

குறைகிற போது நிறைத்து சமன்செய்ய முயல்வது தான் இயற்கையின் குணம். காற்றழுத்தம் குறைவுபட்டால் அதிகமாக இருக்கும் இடத்திலிருக்கும் காற்று குறைவழுத்தத்தை நோக்கி நகரும், எலக்ட்ரான்களை குறைவு படுத்தினால் மின்னோட்டம் உருவாகி அவை சம்மாகும், நிலத்திற்குள்ளிருக்கும் நீரின் அளவை குறைத்துக்கொண்டே வந்தால் சமப்படுத்த தன்னால் ஆனதை இயற்கை செய்யும்.

மழையே பெய்யாது என நம்பி ! தண்ணீர் வற்றிப்போன ஆறு, குளம் , ஏரி, கண்மாய் என அத்தனையிலும் வீடுகட்டிக்கொண்டு வாழ்கிறோமே ! அந்த இடங்களில் மழை நீர் வந்தால் அது மழையின் பிழை என்று சொல்வது நியாயமா !?

அண்டை மாநிலங்களிடம் நீர் கேட்டு அழுகிறோமே கேரளத்திலும், கர்நாடகத்திலும் மரங்கள் அதிகம் இருக்கின்றன, அங்கே மனிதர்களுக்கு மட்டுமின்றி மரங்களுக்கும் காடுகள் இருக்கின்றன என்பதைப் பற்றியெல்லாம் நாம் யோசிக்கின்றோமா !
                                          *****


  • தமிழகத்தில் காமராசர் ஆட்சிக்குப் பிறகு அணைகளே அமையவில்லையாமே !!
  • பெய்த மழைத் தண்ணீரை வெளியேற்ற அரசாங்கம் என்ன செய்யும் , மோட்டார் போட்டு மறுபடியும் மண்ணுக்குள் அனுப்புமா, வடிகால் அமைத்து கடலுக்கு அனுப்புமா !? வற்றட்டும் என அப்படியே விட்டுவிடுமா !!
  • நிவாரண நிதி என்று எவ்வளவு பணம் கொடுப்பார்கள்
  • வரப்போகும் புயலுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் ?
  • இந்த மழை எப்போது நிற்கும்?

ஏதேதோ எண்ணங்கள் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது ! வீட்டிற்கு வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது,

கட்டுரையை பதிவதற்கு முன் மழையை எட்டிப்பார்த்தேன்..

சர சர குரலில் மறுபடியும் ஒரு மழைத்துளி என்னிடத்தில் பேசியது ...

"வியக்கவும் வேண்டாம், பழிக்கவும் வேண்டாம் .. , நகர மட்டும் கொஞ்சம் இடம் கொடுங்கள். "

அடித்தாலும் அணைத்தாலும் அவள் அன்னை என்போமே மழையும் கூட நம் அன்னை தான் !
ஹையா!! லீவு உட்டாச்சு 



Labels: , , , ,

Tuesday, October 02, 2012

மகான் ! காந்தி மகான் !



காந்தி மகானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ன்று தேசத் தந்தை காந்தியடிகளின் 141வது பிறந்த நாள். அவரை சிலருக்கு பிடிக்கும் ,சிலருக்கு பிடிக்காது.அவர் நல்லவரா? கெட்டவரா? என்று என் நன்பர்கள் பலருடன் நான் விவாதித்திருக்கிறேன் 
அவர் நல்லவரா ? கெட்டவரா ? என்று எனக்கு தெரியாது....
ஆனால் அவர் நிச்சயம் மகாத்மா என்பதை நான் உறுதியாக கூறுவேன்.

அவரை பற்றிய சில தகவல்களை இன்று நாம் தெரிந்து கொள்வோம்.இத்தொகுப்பு ஆனந்த விகடன் வெளியிட்டது.,இன்று இதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.


மகாத்மா காந்தி - 25


  • காந்திஅரிச்சந்திரனின் ரசிகர்சத்திய சோதனையாளர்அரையாடைப் பக்கிரிஅகிம்சைப் போராளி!
  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக 1869 அக்டோபர் 2-ல் பிறந்தார்மகாத்மா காந்தியாக 1948 ஜனவரி 30-ல் மறைந்தார்காந்தியின் பிறந்தநாள் உலகம் எங்கும் சர்வதேச அகிம்சை தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது!
  • காந்தி பிறந்த அக்டோபர் 2-ம் தேதி நாட்டின் மூன்றாவது மற்றும் இறுதி தேசிய விடுமுறைகுடியரசு தினம்சுதந்திரம் தினம் ஆகியவை மற்ற இரண்டு விடுமுறைகள்!
  •     முதன்முதலில் `தேசத் தந்தை’ என்று காந்தியை அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், `மகாத்மா’ என்று அழைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்!
  •     காந்தி தொடங்கிய `இந்தியன் ஒப்பீனியன்’ குஜராத்திஇந்திதமிழ் மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வெளியானது!
  •     தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இவர் வைத்த பெயர்தான் `ஹரிஜன்’ என்பது அதன் பொருள், `கடவுளின் குழந்தைள்’!
  •     `உடற் பயிற்சியின் அரசன் நடைப் பயிற்சி’ என்று சொன்ன காந்திலண்டனில் சட்டம் பயிலும்போதுஒரு நாளைக்கு 10 மைல்கள் நடந்தே சென்று காசை மிச்சப்படுத்திப் படித்தார்!
  •     காந்தி ஒரு துறவியைப் போன்றவர்தான்அனால்அவரிடம் நகைச்சுவை உணர்வுக்குப் பஞ்சமே இருந்தது இல்லை. 1931-ல் லண்டனுக்குச் சென்றபோதுபிரிட்டிஷ் அரசரை முதலும் கடைசியுமாகச் சந்தித்தார் காந்திஆறாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்துவிட்டு பக்கிங்ஹாம் அரண்மனையைவிட்டு அவர் வெளியில் வந்தபோதுஅவரைப் பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டனர்அதில் ஒருவர்இவ்வளவு குறைவான ஆடையுடன் வந்திருக்கிறீர்களே குளிரவில்லையா’ என்று கேட்டார். `எங்கள் இருவருக்கும் தேவையான அளவு ஆடைகளையும் சேர்த்து மன்னரே அணிந்திருந்தார்’ என்று பதில் அளித்தார் காந்தி!
  •     வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போதுகாந்தி சொன்ன வாக்கியம்தான்..... `செய் அல்லது செத்து மடி!’
  •     கொள்கை இல்லாத அரசியல் வேலை செய்யாமல் வரும் செல்வம்மனசாட்சியை ஏமாற்றி வரும் இன்பம்பண்பு இல்லாத அறிவுநியாயம் இல்லாத வணிகம்மனிதம் மறந்த அறிவியல்தியாகம் இல்லாத வழிபாடு’இவை காந்தி குறிப்பிட்ட ஏழு சமூகப் பாவச் செயல்கள்!
  •     தபால் அட்டைகள்தான் உள்ளதிலேயே மிகவும் சிக்கனமான தகவல் தொடர்புச் சாதனம் என்று கருதியவர் காந்தி’!
  •     கடிதங்கள் மிக நேர்த்தியாக மடிக்கப்பட்ட பின்பே உறையில் இட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருப்பார்காரணம்கடிதம் மடிக்கப்பட்டு இருக்கும் முறையிலேயே உங்களைப்பற்றிய அபிப்ராயம் தோன்றிவிடும் என்பார்!’
  •     யாருக்குக் கடிதம் எழுதினாலும் `தங்களின் கீழ்ப்படிந்த சேவகன்’ என்று எழுதியே கடிதத்தை முடிப்பார்!
  •     கிழிந்த துணிகளைத் தானே தைத்துக்கொள்வார்எவ்வளவுதான் வறுமையில் ஒருவர் இருந்தாலும்உடுத்துகின்ற உடைகள் மிகத் தூய்மையாக இருக்க வேண்டும் என்பார்அதை அவரும் கடைப்பிடித்தார்!
  •     ஒவ்வொரு இரவும் நாட்குறிப்பு எழுதும் பழக்கம்கொண்டவராக இருந்தார்அதுதான் பின்னாளில் அவரின் சுயசரிதையாகவும் மலர்ந்தது!.
  •     `சட்ட மறுப்பு இயக்கப் போராட்டத்தைக் கைவிடுங்கள்’ என்று வெள்ளையர்கள் சொன்னபோதுஅதற்கு காந்திதன் 11 அம்சத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால்போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார்அதில் 11-வதாக இருந்த திட்டம், `சுய பாதுகாப்புக்குத் தேவையான வெடி பொருட்களையும் ஆயுதங்களையும் தயாரித்துக்கொள்வதற்கான உரிமம் வழங்குதல்.’ அகிம்சையைப் போதித்தவருக்குள் எப்படி இந்த எண்ணம் உதித்தது என்பது இன்று வரை பலரின் கேள்வி!
  •     எந்த நிலையிலும் ஆங்கிலேயரை உடல் அளவில் காயப்படுத்துவதை அவர் அனுமதிக்கவில்லை. `நாம் அவர்களை எதிர்த்துப் போராடவில்லைஅவர்கள் நம் மீது திணிக்கும் அதிகாரத்தைத்தான் எதிர்க்கிறோம்’ என்று அதற்கு விளக்கமும் அளித்தார்!.
  •     தான் தவறு செய்தால்அதற்காக மெளன விரதம் ஏற்பதும்... பிறர் தவறு செய்தால்அந்தத் தவறு செய்தவர் அதை உணர தான் உண்ணாவிரதம் இருப்பதையும் வாடிக்கையாகக்கொண்டு இருந்தார்இந்த குணம்அவர் தாய் புத்தலிபாயிடம் இருந்து வந்ததாகும்!.
  •     ஆரம்ப காலங்களில்ஆசிரமத்தில் நடக்கும் தினசரி பிராத்தனைக் கூட்டங்களில், `கடவுள் உண்மையானவர்!’ என்று சொல்லிவந்தார்விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, `உண்மையே கடவுள்’ என்று மாற்றிக்கொண்டார்!.
  •     இந்தியாவுக்கு வெளியே முதன்முதலில் காந்தியின் தபால் தலையை வெளியிட்ட நாடு எது தெரியுமாஅவர் தன் வாழ்நாளியில் மிதிக்காத நாடான அமெரிக்காதான் அதுஇது நடந்தது 1961 ஜனவரி 26-ல்!.
  •     ராட்டைச் சக்கரத்துக்கு முன் காந்தி அமர்ந்து இருப்பதுபோல இருக்கும் புகழ்பெற்ற புகைப்படம்மார்கேட் பூர்க் ஒயிட் என்பவரால் பிரபல லைஃப் இதழுக்காக எடுக்கப்பட்டது!.
  •  `என்னிடம் சீடனாக வந்து சேர்ந்த குரு’ என்று காந்தி அழைத்து வினோபா பாவேவைத்தான்!.
  •     மார்டின் லூதர்கிங்தலாய் லாமாஆங் சான் சூகிநெல்சன் மண்டேலா,அடால்ஃபோ பெரேஸ் எஸ்க்யூவெல் ஆகிய ஐந்து உலகத் தலைவர்கள் நோபல் பரிசு பெற்றதற்கு முக்கியக் காரணம்காந்திய வழியைப் பின்பற்றியதுதான் என்று ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்.ஆனால்காந்திக்கு நோபல் பரிசு தரவில்லை!.
  •     இந்தியா சுகந்திரம் அடைந்தபோதுஅதைக் கொண்டாட மறுத்தவர்கள் இரண்டு பேர்ஒருவர் காந்திஇன்னொருவர் தந்தை பெரியார்!.
  •     போர்பந்தரில் பிறந்த காந்தி ஆரம்பித்த சபர்மதி ஆஸ்ரமத்தின் நினைவாகத்தான் `சபர்மதி எக்ஸ்பிரஸ்’ ரயில் விடப்பட்டது.ஆனால், 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்தில் இந்த ரயில் எரிக்கப்பட்டுகுஜராத் கலவரத்துக்கு வித்திடப்பட்டது.காலத்தின் முரண்களில் இதுவும் ஒன்று!.
  •     `கனவில் இருந்து நிஜத்துக்குஇருளில் இருந்து வெளிச்சத்துக்குமரணத்தில் இருந்து அமரத்துவத்துக்கு!’- காந்தி நினைவு மண்டபத்தில் எழுதிவைக்கப்பட்டு இருக்கும் வாசகம் இது!.

பிதாவே! உமக்கு எம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

Labels: , , , , ,

Saturday, September 15, 2012

பவர்ஸ்டாரின் வாழ்க்கை வரலாறு...


பவர் ஸ்டார் பற்றி சமீபத்தில் வெளியாகியிருக்கும் செய்தி இது:


 "வங்கியில் பல கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 65 லட்சம் பெற்றுக்கொண்டு, பல மாதங்கள் ஆகியும் கடன் தொகையையும் வாங்கித்தரவில்லை, கமிஷனையும் திருப்பி தரவில்லை என்று சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பாலசுப்புரமணியன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது

 இதையடுத்து பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதனைத்தொடர்ந்து 15 நாள் காவலில் புழல் சிறையில் பவர் ஸ்டார் அடைக்கப்பட்டிருக்கிறார்."


அனைவருக்கும் வணக்கம்.,

  வர் ஸ்டார் சீனிவாசனை வைத்து மொக்கை போடாத நபர்களே இல்லை என்று அடித்து கூறலாம்.அந்த அளவிற்கு அவர் நமக்கெல்லாம் பழக்கப்பட்டு போன  நபர்.அவரை பிரபல நடிகராக மாற்றியவர்கள் நாம் தான்., இதற்கு சாட்சியாக பேஸ்புக் பக்கங்கள்,இணைய பக்கங்கள்,வலைப்பூக்கள் என பவர் ஸ்டாரின் பவர் இருக்கிறது.
 னக்கு தானே விளம்பரம் செய்து கொண்ட நபர் என்று பலர் இவரை விமர்சிக்கிறார்கள் எனக்கென்னவோ...இவரை பிரபல படுத்தியவர்கள் மக்களாகிய நாம் தான் என்று தோன்றுகிறது .
 சரி விசயத்துக்கு வருவோம் "யார் இவர்?" இவர் எதற்காக இப்படி செய்ய வேண்டும்? "இவர் நல்லவரா? கெட்டவரா?" "இவர் ஏன் கைது செய்யப்பட்டார்? பல கேள்விகளுக்கு விடை தேடி இந்த பதிவில் பயணிப்போம்...

யார் இவர் ?


 சினிமா உலகில் நுழைந்து ஐந்தே ஆண்டுகளில் அதிக அளவு பிரபலமாகி அசத்திய அசாத்திய நபர் இவர்.

  சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்து வருகிறார் ,அண்ணா நகரிலும் இவரக்கு ஒரு வீடு உள்ளது , அண்ணா நகரில் பவர்ஸ்டாருக்கென அலுவலகம் உள்ளது. தன் பெயருக்கு முன் டாக்டர் பட்ட்த்தை சேர்த்து கொள்ளும் இவர் ஒரு அக்கு பஞ்சர் டாக்டர்.
 இவர் மீது போலி டாக்டர் வழக்கு, எய்ட்ஸ்க்கு சிகிச்சை தருவதாக 10 ஆண்டுகளுக்கு முன்பே கோடிக்கணக்கில் மோசடி செய்தது உட்பல பல வழக்குகள்  நிலுவையில் இருக்கிறதாம்!. தற்போதௌ இந்த பட்டியலில் புதிய வழக்கொன்றும் சேர்ந்து கொண்டது.
  ஆரம்பத்தில்  ஊரை ஏமாற்றி  சம்பாதித்த (??) பணத்தைக் கொண்டு பத்து ஆண்டுகளுக்கு வாங்கிப்போட்ட இடங்களில் இரண்டை 40 கோடிக்கு விற்று  அதை வைத்தே பத்து படங்களை எடுத்திருக்கிறார் என்கிறார்கள். இதில் ஒரு இடம் வானகரத்தில் வியாபாரம் ஆனது என்றும், அந்த இடத்தின் முன்பகுதியில் இரண்டாயிரம் சதுர அடியை வைத்துக் கொண்டு, அதில் தற்போது டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஆரம்பித்திருகிறார் என்றும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
  தன் சொந்த தயாரிப்பில் படம் எடுத்து அதில் தானே நடித்து தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்த இந்த ஸ்டார் அரசியலில் குதிக்கவும் பற்பல முயற்சிகள் எடுத்துள்ளார்.
 இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்துவிட்டு பின் கட்சியிலிருந்து விலக்கப்பட்டதாகவும்,அ.தி.மு.க வில் சேர முயன்று சேர இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டாதகவும் தகவல்கள் உள்ளன.

"பவர்" சிறையில் அடைக்கப்பட காரணம் என்ன??


படம் உபயம்:Facebook


  சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தொழிலை மேம்படுத்துவதற்காக ரூபாய் 10 கோடி பணம் கேட்டு நண்பரை அணுகி இருக்கிறார். நண்பர் "பிசினஸ் கன்சல்டிங்" நடத்தி வரும் சினிமா ஸ்டார் பவர் ஸ்டார் சீனிவாசனை தெரியும் என்று கூறி, அவரிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்திருக்கிறார். அண்ணா நகரில் உள்ள பவர் ஸ்டார் அலுவலத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. அதன்பின்னர் பண விசயமாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள பவர்ஸ்டார் வீட்டிற்கு நண்பருடன் பாலசுப்பிரமணியன் இரண்டு முறை சென்றுள்ளார். அப்போது பாலசுப்பிரமணியனிடம் பேசிய பவர்ஸ்டார், சொத்து மதிப்பின் பேரில்தான் நான் பைனான்ஸ் செய்வது வழக்கம் என்று சொல்லி அதற்கான ஆவணங்களை கேட்டுள்ளார்.

 பாலசுப்பிரமணியனும் ஆவணங்களை கொடுத்துள்ளார். அதன்பின்னர் உங்களுக்கு ரூ.10 கோடி கடனை ஒரு வாரத்தில் பெற்றுத்தருகிறேன். ஆனால் டாக்குமெண்ட் வெரிவிக்கேஷன் காரணமாக நீங்கள் ரூ.65 லட்சம் தரவேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே பாலசுப்பிரமணியமும் ரூ.65 லட்சம் கொடுத்துள்ளார்.

 அதன் பிறகு ஒரு வாரம் கழித்து பவார் ஸ்டாரை சந்திக்க அலுவலகம் சென்ற போது அவர் படப்பிடிப்பில் இருப்பதாக அலுவலக ஊழியர்கள் கூறியுள்ளனர். அதன்பின் பாலசுப்பிரமணியம் அண்ணாநகரில் உள்ள அவர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அங்கும் அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. தொலைபேசியிலும்  தொடர்பு கொள்ள முடியவில்லை. வீடு, அலுவலகம், தொலைபேசி என்று மும்முனை போராட்டத்தை போராடி பார்த்துவிட்டு ஓய்ந்து போன பாலசுப்பிரமணியன் கடைசி முயற்சியாக சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை நேரில் சந்தித்தார்.

வர்ஸ்டாரிடம் தான் ஏமாற்றம் அடைந்தது பற்றி மிக விரிவாக மூன்று பக்கத்துக்கு புகார் மனு கொடுத்தார். பணம் கைமாறியதற்கான ஆதாரங்களையும் கொடுத்தார்

 வர் ஸ்டார் மீது உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பேரில் அவர் புழல்  சிறையில் 15 நாள் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்


                                                          

பவர் போன பவர் ஸ்டார்:

 யார் என்ன கேள்வி கேட்டாலும்,கலாய்த்தாலும் (இவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில்) கோப்ப்படாமல்,பொறுமையாக,நிதானமாக சிரித்துக்கொண்டே பதில் சொல்லும் பவர் ஸ்டாரின் பின்னால் இப்படி ஒரு பின்னனி இருக்கும் என்று நாம் யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டோம்.
 பண மோசடி செய்து "கம்பி நீட்ட" முயற்சித்த "பவர் "தற்சமயம் சென்னை புழல் சிறையில் கம்பி எண்ணுகிறார்.

எப்படி இருந்த நான்.. இப்படி ஆயிட்டேன்..

பவர் ஸ்டார்-வாழ்க்கை கூறும் நீதி:

 " கோமாளி போல நடித்து  ஏமாளியாக்க ஒரு கூட்டம் காத்திருக்கிறது எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள் மக்களே !"

வாசகர்களுக்கு ஒரு கேள்வி "பவரு நல்லவரா?,கெட்டவரா?" மறக்காமல் கமென்டில் சொல்லுங்க...
                                                            -விஜயன்

Labels: , , , , , ,