பேஸ்புக்கால் தற்கொலை செய்து கொண்ட பெண் !!!
( இது ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை...)
அனு மற்றும் ரமேஷ், இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக கை கோர்த்து ஒரு மாதமும் 10 நாட்களும் மட்டுமே கழிந்திருந்தது .,இருவருமே படித்தவர்கள், நவயுக ஆண் பெண் பெரும்பான்மையானவர்கள் அனைவருக்கும் இருக்கும் அந்த ஆன்லைன் அக்கவுன்ட் அவர்கள் இருவருக்குமே இருந்தது. ,கணவன் ரமேஷ் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இஞ்சினியர், இவள் திருமணத்திற்கு முன்பு ஈ.சி.ஆர் ரோட்டில் உள்ள தனியார் கம்பேனியில் சூப்பர்வைசராக பணி செய்தவள், திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்வதை நிறுத்திக்கொண்டாள் !!
அந்த சம்பவம் நடக்கும் வரையில் அவர்களது வாழ்க்கை சுமூகமாகத்தான் சென்று கொண்டிருந்தது
ஆணாதிக்கம் என்கிற விசயத்தின் நாகரிக வடிவமாக சில ஆண்கள் தங்கள் மனைவியின் ஆன்லைன் அக்கவுன்ட் அத்தனைக்குமான பாஸ்வேர்டை வாங்கி வைத்துக்கொள்ளும் நடைமுறை தற்காலத்தில் வழக்கத்தில் உள்ளது,ரமேஷ் தன் மனைவியின் பேஸ்புக் பாஸ்வேர்ட் மற்றும் மெயில் பாஸ்வேர்ட் போன்றவைகளை அறிந்து வைத்திருந்தான்,அவ்வப்போது அவள் ஆன்லைன் கணக்குகளில் நுழைந்து அவளை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான் !
அனுவின் பேஸ்புக் அக்கவுன்டிற்குள் நுழைந்து அவளது டைம்லைனை பார்வையால் மேய்ந்து கொண்டிருந்தான் ரமேஷ்
வளரா மனம் கொண்ட வளர்ந்த ஆண்கள் பட்டியலில் ரமேஷ் பெயரும் இருந்திருக்க வேண்டும் ,அன்று அவன் அனுவின் பேஸ்புக் டைம்லைனில் அந்த புகைப்படத்தை பார்த்தபோது அவன் கண்களில் அப்படி ஒரு குரூரம், மனம் முழுக்க கோப நெருப்பு, சந்தேக ராட்சசனிடம் சரண் புகுந்தான் ரமேஷ்.
அந்த புகைப்படத்தில் அனு ஒரு ஆண் நன்பருடன் இணைந்து சிரித்துக்கொண்டிருந்தாள்...
ரமேஷ் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்தான் .
வீடு திரும்பிய ரமேஷ் அனுவிடம் அந்த புகைப்படத்தை காட்டி விசாரிக்கிறான் !!
ரமேஷ்: யாருடி இவன் ??
அனு : இவரு எங்க ஆபீஸ்ல என் கூட வேலை பாத்தவர்
ர: ஆபீஸ்ல வேல பாத்தவரா? என்னடி அவரு
அ: இல்லைங்க அவரு எங்க ஹெட் சூபர்வைசர்
ர: கூட வேலை பாக்குறவன் னா கூட போயி ஒரசிட்டு நிப்பியா
அ: இல்லைங்க எங்க ஆபிஸ்ல பங்க்சன்-அப்ப எடுத்த போட்டோ அதான் எல்லாரும் சேர்ந்து நின்னு போட்டோ எடுத்துக்கிட்டோம் !
ர:எல்லோரும் சேர்ந்து நின்னு எடுத்தீங்க சரி, அதென்ன இவன் கூட மட்டும் தனியா சேர்ந்து ....ம்ம்ம்ம் சொல்டி
அ: அவர் என் ஃப்ரன்ட் ங்க !! அதான்
ர: ஃப்ரண்ட் னா... *****
அ: இத பாருங்க இப்டி எல்லாம் பேசாதீங்க..
ர: அப்டி தான்டி பேசுவேன் **** ****
அ: ...(அழத் துவங்குகிறாள் அனு)
இந்த விவாதத்திற்கு பிறகு ரமேஷ் அனுவின் அம்மா மற்றும் அப்பாவிற்கு போன் செய்து அவர்கள் மகள் பற்றி தவறாக கூறி வைக்கிறான்.
ஆவடி அருகிலுள்ள அனுவின் தாத்தா வீட்டில் சமரச பேச்சுவார்த்தை என்கிற பெயரில் சண்டையை துவங்கி வைக்கிறான் ரமேஷ் !! அனு அழுவதை தவிர எதுவும் செய்ய முடியாமல் அழுதுகொண்டே இருக்கிறாள்.
யார் சொல்லும் சமாதானத்தையும் கேட்க தயாராய் இல்லாத ரமேஷ் அனுவை திட்டியபடியே இருக்கிறான். "இனிமே இவ கூட ஒரு நிமிசம் கூட என்னால வாழ முடியாது..."
எல்லோரும் சேர்ந்து சமாதானம் பேசி அனுவை அவனுடன் அனுப்பி வைக்கிறார்கள்..
அன்று இரவு...
அவள் மனம் முழுக்க ஆயிரமாயிரம் கேள்விகள், ஒரு பெண்ணுக்கு ஆண் நன்பர்கள் இருப்பது தவறா?, அலுவலகத்தில் கூட வேலை செய்யும் ஒருவருடன் சேர்ந்து படம் எடுத்துக்கொள்வது தவறா?...
அழுகைக்குள் தன்னை அழுத்திக்கொண்டு கண்ணீரை கன்னத்தில் வழித்துக்கொண்டு சுவரில் சாய்ந்து அமர்ந்திருக்கிறாள் அனு..
அடுத்தநாள் காலையில் நீயூஸ் பேப்பரில் இப்படி ஒரு செய்தி வெளியாகி இருந்தது!!
வாசகர்களின் கேள்விகள், சந்தேகங்கள்,கருத்துக்கள்,தகவல்கள் வரவேற்க படுகின்றன ., vijayandurairaj30@gmail.com என்ற முகவரிக்கு மெயிலாகவோ, அல்லது கமென்ட் பெட்டியிலோ கேளுங்கள்

இது போன்ற பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி... அடுத்தப்பதிவில் சொல்கிறேன்...
.முந்தைய பதிவுகளை வாசிக்க தலைப்பை க்ளிக் செய்யுங்கள்
2.பாகம்-2 Sharing செய்யும் போது கவனிக்க வேண்டியவை
3.பாகம்-3 பேஸ்புக்கில் உங்கள் படங்கள் திருடப்படுகினறன
4.பாகம்-4 நன்பர்கள் ஜாக்கிரதை
Tweet |
இணையத்தில் பாதுகாப்புடன் உலவ வேண்டும் என்பதை நிறையப் பேர் உணர்ந்தார் இல்லை.
ReplyDeleteகுறிப்பாக பெண்கள் மிக மிக எச்சரிக்கையுடன் இணையத்தை கையாள்வது நல்லது. என்னென்ன செய்யவேண்டும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
ஆமாம் சார் !
Deleteபயனுள்ள தகவல்கள் ஐயா. குறிப்பாக பெண்கள் கவனமுடன் செயல்பட வேண்டியது மிக மிக அவசியம். நன்றி
ReplyDeleteகட்டாயமாக பெண்கள் இணைய உலகில் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!
Deleteநிஜமான சம்பவத்தைக் கூறி எல்லா பெண்களையும் எச்சரித்திருக்கிறீர்கள், விஜயன். என் முக நூல் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
ReplyDeleteஉங்களை இந்த வருடமும் பதிவர் விழாவில் சந்தித்ததில் மகிழ்ச்சி, விஜயன்.
4 parts nalla vilakkam irunthathu aduthu thodaravum. ungalukku nalla varuthu technical vilakka.
ReplyDelete