பேஸ்புக்கும் பெண்களும் பாகம்-2
(பேஸ்புக்கில் உள்ள சேரிங்க் ஆப்சன் கள் ஒரு பார்வை)
பேஸ்புக்கில் பதிவுகளை பதியும்போது கவனிக்கவேண்டிய
எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்:
பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் ,படங்கள், லிங்குகள் என... (உங்கள் மனதில்
இருக்கும் விசயத்தை) பகிரும் போது ,அந்த விசயம் யார்
யாருக்கு தெரியவேண்டும், யார் யாருக்கு தெரியக்கூடாது என்று
நீங்கள் தேர்ந்தெடுக்கும் உரிமையை பேஸ்புக் தருகிறது.
Public:
Public என்கிற ஆப்சனை நீங்கள் தேர்ந்தெடுத்து
உங்கள் Post ஐ பகிரும் போது இணைய உலகில் உலா வரும் யார்
வேண்டுமானாலும், (அவர் உங்களுக்கு தெரியாத நபராக கூட
இருக்கலாம்).அந்த ஸ்டேட்டஸையோ ,பட்த்தையோ பார்க்க முடியும்.
Friends:
இந்த ஆப்சனை செலக்ட் செய்துவிட்டு post செய்யும் போது நீங்கள் பகிர்ந்த அந்த
தகவலை உங்கள் Friend list -ல் உள்ள் நன்பர்கள் மட்டும்
பார்க்க முடியும்.
Only me:
இந்த ஆப்சனுடன் பகிரப்படும் விசயங்கள் உங்கள் டைம்லைனில்
இருக்கும் ஆனால் உங்களுக்கு மட்டும் தெரியும் ,வேறு யாரும் இந்த விசயங்களை பார்க்க முடியாது. இதனால் என்ன
பயன் என்று யோசிக்கிறீர்களா, பேஸ்புக்கில் நீங்கள் படித்த ,பிடித்த ,பயனுள்ள, ரசித்த
விசயங்களை சேகரித்து வைக்க முடியும், பிற்பாடு எப்பொழுது
வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம்.
உங்களோடு மட்டும் (Only me) பகிரப்பட்ட பதிவுகள் மேற்கண்டவாறு இருகோட்டுக்குள் இருக்கும், இந்த கோட்டை தாண்டி இது யாருக்கும் தெரியாது :)
Custom:
இந்த ஆப்சனை நீங்கள் செலக்ட் செய்யும் போது, இன்னும் சில ஆப்சன் கள் உங்களுக்கு
கிடைக்கிறது.
Friends of friends செலக்ட் செய்யும் போது ,உங்கள் பதிவு, உங்கள் Friendlist - ல் உள்ள நன்பர்களுக்கும், அவர்களின்
நன்பர்களுக்கும் சேர்த்து பகிரப்படும்.இதில் யார் யாருக்கு நீங்கள் பகிரும் பதிவு
தெரியக்கூடாது என்கிற ஸ்பெசல் ஆப்சனும் தரப்படுகிறது. நீங்கள் இந்த பட்டியலில்
கொடுக்கும் நபர்களுக்கு நீங்கள் பகிரும் தகவல் தெரியாது.
இங்குள்ள Friends ஆப்சனும் இதே சேவையை தருகிறது.அதாவது நீங்கள் உங்கள் Friend list -ல் உள்ள குறிப்பிட்ட நபர்களை தவிர மற்ற நன்பர்களுக்கு நீங்கள் ஷேர் செய்யும் விசயம் தெரியுமாறு பகிர்ந்து கொள்ள முடியும்.
Specific People or List. என்கிற ஆப்சன் மிக
முக்கியமானது, இதன் மூலம் நீங்கள் உங்கள் பதிவை குறிப்பிட்ட
சில பல நன்பர்களுடனோ, நன்பர்கள் பட்டியலுடனோ பகிர்ந்து கொள்ள
முடியும்.
Share this with என்கிற பெட்டியில்
கொடுக்கப்படும் நபர்களுக்கு மட்டும் உங்கள் பதிவு பகிரப்படும்.
குறிப்பு:
Custom ஆப்சனை பயன்படுத்த நீங்கள்
கீழ்கண்டவாறு செயல்பட வேண்டும்
1. Custom ஆப்சனை செலக்ட் செய்யவும்
2. இதன் பின் வரும் Custom Privacy பெட்டியில் உங்களுக்கு தேவையான ஆப்சனை செலக்ட் செய்து கொள்ளவும்
3. பிறகு "Save
Changes" கொடுக்கவும்
4. அதன்பிறகு Post என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
நமது மொபைல் போன்
களில் SmS Group கள் அமைப்பது மாதிரி பே
ஸ்புக்கில் நமது நன்பர்களை வகைப்படுத்தி பிரித்து வைத்து, குறிப்பிட்ட நபர்களின் பட்டியலோடு மட்டும் குறிப்பிட்ட விசயத்தை பகிர்ந்து கொள்ள முடியும் , இது பற்றி விளக்கமாக அடுத்த பதிவில் பார்க்கலாம்.
ஸ்புக்கில் நமது நன்பர்களை வகைப்படுத்தி பிரித்து வைத்து, குறிப்பிட்ட நபர்களின் பட்டியலோடு மட்டும் குறிப்பிட்ட விசயத்தை பகிர்ந்து கொள்ள முடியும் , இது பற்றி விளக்கமாக அடுத்த பதிவில் பார்க்கலாம்.
வாசகர்களின் கேள்விகள்,கருத்துக்கள்,விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
லேபில்கள் :
பேஸ்புக் டிப்ஸ் தமிழில், பேஸ்புக் செக்யூரிட்டி டிப்ஸ் தமிழில், பேஸ்புக்கும் பெண்களும்,பேஸ்புக் மோசடிகள், பேஸ்புக் எச்சரிக்கை, girls and facebook,facebook safety tips in tamil, tamil moolam facebook tips, facebook security tips in tamil, பேஸ்புக் மூலம் பதிவை பாதுகாப்பாக பகிர்வது எப்படி
Labels: Facebook safety in tamil, girls and facebook, பேஸ்புக்கும் பெண்களும்