பரதேசி திரைப்படம்- சில குறைகள்
இந்த திரைப்படத்திற்கான திரை விமர்சனத்தை படிக்க கீழுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்...
பரதேசியும்,பாலாவும்,அப்புறம் நானும்
எச்சரிக்கை: திரைப்படத்தை பார்த்தவர்கள் மட்டும் இந்த பதிவை படிக்கவும்...
பரதேசி திரைப்படத்தில் நிறைகளும் நிறையவே உள்ளன ,இருந்தாலும் சில இடங்கள் முன்னுக்கு பின் முரணாகவும்,நெருடலாகவும் இருந்தன...
1.ஒட்டு மொத்த கிராமும் செட் என்பது அப்பட்டமாக
தெரிகிறது.கலை இயக்கமும் ஒளிப்பதிவும் இன்னும் கொஞ்சம் முயற்சித்திருக்க கூடாதா? என்று யோசிக்க
தோன்றுகிறது.
2.ஹீரோயினின் மேக்கப் படுமோசம், செவத்த பொன்ன கருத்த பொன்னாக காட்ட முயன்ற முட்டாள் தனத்திற்கு பதில் கருப்பான ஏதேனும் தமிழ் பெண்ணை அறிமுகம் செய்திருக்கலாமே.ஹீரோயினின் நடிப்பும் அவ்வளவாக சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.சில இடங்களில் முகம் சுழிக்க வைக்கிறது
3.படத்தின் முதல் பாதி முழுக்க அந்த பழங்குடி கிராமத்தை சுற்றியே நகர்கிறது .சந்தோசத்திற்கு குறைவில்லாத கிராம்மாகவே காட்சிபடுத்தப்பட்டிருந்தது, அந்த கிராமத்தின் முகத்தில் கவலை ரேகையோ வறுமை சாயமோ சிறிதும் பூசப்படவில்லை, பின் ஏன் அவர்கள் "கங்கானி" யின் பேச்சை கேட்டு கண் காணத பரதேசம் நோக்கி பரதேசிகளாக நகர்கிறார்கள்

4. 48 நாள் நடை பயணம் என்பது நம்பும்படியாக
இல்லை,அது மட்டுமின்றி இடைவேளைக்கு முந்தைய காட்சியில் நடை பயணத்தின் போது
தன் கிராம வாசி ஒருவர் நடை தளர்ந்து , நா வறண்டு நகர முடியாமல் இறப்பின்
பிடியில் இருந்த சமயம் ஊர்மக்கள் ஒருவர்கூட அந்த ஜீவனை ஏரெடுத்தும்
பார்க்காமல் நகர்வது போல காட்சி
உள்ளது.,கங்காணியின் கொடுமையை கண்முன் கண்டும் ஊரார் கோபம் கொள்ளாமல்.தன்
ஊர்க்காரன் சாவதை வேடிக்கை பார்த்துக்கொண்டே நகர்கிறார்கள்...(கிராமத்து
மக்கள் இரக்கமில்லாதவர்கள், பணத்தாசை பிடித்தவர்கள் என்று எண்ண வைக்கிறார்
இயக்குநர் பாலா)
5.ஆண்டுகள் பல கடந்தும் கரிச்சான் மண்டைகளாக சுற்றும் கிராம மக்களின் தலைமுடி அப்படியே இருப்பதன் ரகசியம் என்னவென்று பிடிபடவில்லை
6.வெள்ளைக்காரனின் ஆசைக்காக சந்தோசமாக ஒத்துப்போகும் தமிழ்ப் பெண்கள் முரணாக தெரிந்தனர்.
7.எஸ்டேட்டிற்குள் நுழந்த உடனேயே அதர்வா கேரக்டர் கடுதாசி போட முடியுமா என்று கேட்பது போல காட்சி உள்ளது கடிதம் போட 2 அனா படித்துக்காட்ட 2 அனா என்றும் மருந்து கலக்கி (போலி டாக்டர்) பதில் தருகிறார். படத்தில் ஒரு இடத்தில் ஹீரோவுக்கு கடிதம் வருகிறது. ஹீரோயினுக்கு குழந்தை பிறந்த பிற்பாடு கடிதம் ஏன் அனுப்ப படவில்லை என்பது குழப்பமாக இருந்தது. (பிறந்த குழந்தை ஆணா பெண்ணா என்று கூட ஏன் அவனுக்கு தெரியவில்லை என்று யோசிக்க தோன்றுகிறது).

8.கடிதப்போக்குவரத்து இருந்தும் தன்
மனைவிக்கு கடிதம் எழுதாத கதாநாயகனும், தானும் எஸ்டேட்டுக்கு வரும் செய்தியை
தன் கனவனுக்கு சொல்லாமல் புறப்பட்டு வரும் கதாநாயகியும் முரணாகவே இருந்தனர்
9.கிருத்தவ டாக்டரின் மதம் பரப்பும் படலத்தை கொஞ்சம் நாகரிகமாக காட்டியிருக்கலாம்
பரதேசி திரைப்படத்தை மொக்கைப்படம் என்று சொல்ல முடியாது,ஆனால் உலகத்தர திரைப்பட வரிசையில் இதை வைக்க முடியாது.நேர்த்தியான கதையமைப்பு,நெருடாத காட்சியமைப்பு,கதை கள ஆராய்ச்சி போன்ற விசயங்களில் கவனம் செலுத்தியிருந்தால் நிச்சயம் இந்த தமிழ் சினிமா உலகத்தரவரிசையில் எட்டிப்பார்த்திருக்கும். Just Miss
தமிழ் சினிமாக்களில் சொல்லப்படாத புதிய விசயம் என்ற வகையில் இயக்குநர் பாலாவுக்கு நாம் பாராட்டு மழை பொழியலாம்.மற்றபடி "பரதேசி" தமிழ் சினிமா டெம்பிளேட் குள் அடைபட்டு கிடப்பதை மறுப்பதற்கில்லை
Labels: சினிமா, தமிழ் சினிமா, திரைவிமர்சனம், பரதேசி குறைகள்